பரமநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ
சபாபதிநடமே திருநடனம்பர குருநடமே
சிவநடம்அம்பர நவநடமே
நடராஜப் பெருமானின் திருக்கூத்தை எல்லா இடங்களிலும் கண்டுகளிக்கும் பேற்றைப் பெற்ற வியாக்ர பாதரும் பதஞ்சலி முனியும் இந்த அனுகிரகத்தைப் பெற்ற இடமே மீமிசல் கல்யாண ராமர் திருத்தலமாகும். எம்பெருமான் எப்போதும் ராம நாம தாரக மந்திரத்திலேயே லயித்திருப்பதால் ராமர் சிறப்பாக அருளும் தலத்தில் இந்த அனுகிரகத்தை அருளியது பொருத்தம்தானே. மேலும் சீதை பிராட்டி வேண்டிக் கொண்டதன் பேரில் சம்பு நடன அஷ்டக துதியை பதஞ்சலி முனிக்கு அருளிய திருத்தலமும் மீமிசல் திருத்தலமாகும் என்பது பலரும் அறிய வேண்டிய ஆன்மீக இரகசியமாகும்.
சம்பு நடன அஷ்டகம் என்பது கால் இல்லாமல் கொம்பு இல்லாமல் விளங்கும் அற்புத துதி. இதன் பின்னால் அமைந்த ஆன்மீக தாத்பர்யம் சுவையானதாகும்.
நந்தீஸ்வரரும், பிருங்கி முனிவரும் காலும் கொம்பும் இல்லாத பதஞ்சலி முனிவர் எப்படி சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டும் கேட்டும் மகிழ்வார் என்று ஏளனம் செய்யவே, ஸ்ரீ நடராஜரின் பரமானுக்ரஹத்தால், பதஞ்ஜலி வாய் திறந்து பகவானைப் புகழ்ந்து எட்டு ஸ்லோகங்களை, காலும் கொம்பும் இல்லாத சம்பு நடன அஷ்டக துதியைப் பாடி நடராஜ பெருமானை மகிழ்வித்தார்.
அவைகளில் ஒன்றிலாவது ஒரு எழுத்துகூட, காலோ, கொம்போ உடையதல்ல. உதாரணமாக சம்ஸ்க்ருத பாஷையில், ஏதேனும் எழுதும்போது, (கா) (பா) (கூ), (பூ) ஆகியவை போன்ற உயிர்மெய் எழுத்துகளுக்கு கால் போட வேண்டும். (கோ) (போ) போன்ற எழுத்துக்கள் கொம்பு உள்ளவை. பதஞ்ஜலி முனிவர் ஸ்ரீ நடராஜ பெருமானின் நடனத்தை ஒட்டி பாடிய ஸ்லோகங்களில் காலுள்ள எழுத்தோ, கொம்புள்ள எழுத்தோ கிடையாது. பதஞ்ஜலி இயற்றிய ஸ்லோகங்கள்தான் சம்பு நடன ஸ்தோத்திரம் எனப்படும். அதே சமயத்தில் பிருங்கி முனியும், நந்தீஸ்வர மூர்த்தியும் சிவத் தொண்டரான பதஞ்சலி முனிவரை ஏளனம் செய்த தவறுக்குப் பிராயசித்தத்தையும் இத்துதி மூலம் பெற்றுத் தந்தார் பதஞ்சலி முனிவர்.
சம்பு நடன அஷ்டகம் என்பது கால் இல்லாமல் கொம்பு இல்லாமல் விளங்கும் அற்புத துதி. இதன் பின்னால் அமைந்த ஆன்மீக தாத்பர்யம் சுவையானதாகும்.
நந்தீஸ்வரரும், பிருங்கி முனிவரும் காலும் கொம்பும் இல்லாத பதஞ்சலி முனிவர் எப்படி சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டும் கேட்டும் மகிழ்வார் என்று ஏளனம் செய்யவே, ஸ்ரீ நடராஜரின் பரமானுக்ரஹத்தால், பதஞ்ஜலி வாய் திறந்து பகவானைப் புகழ்ந்து எட்டு ஸ்லோகங்களை, காலும் கொம்பும் இல்லாத சம்பு நடன அஷ்டக துதியைப் பாடி நடராஜ பெருமானை மகிழ்வித்தார்.
அவைகளில் ஒன்றிலாவது ஒரு எழுத்துகூட, காலோ, கொம்போ உடையதல்ல. உதாரணமாக சம்ஸ்க்ருத பாஷையில், ஏதேனும் எழுதும்போது, (கா) (பா) (கூ), (பூ) ஆகியவை போன்ற உயிர்மெய் எழுத்துகளுக்கு கால் போட வேண்டும். (கோ) (போ) போன்ற எழுத்துக்கள் கொம்பு உள்ளவை. பதஞ்ஜலி முனிவர் ஸ்ரீ நடராஜ பெருமானின் நடனத்தை ஒட்டி பாடிய ஸ்லோகங்களில் காலுள்ள எழுத்தோ, கொம்புள்ள எழுத்தோ கிடையாது. பதஞ்ஜலி இயற்றிய ஸ்லோகங்கள்தான் சம்பு நடன ஸ்தோத்திரம் எனப்படும். அதே சமயத்தில் பிருங்கி முனியும், நந்தீஸ்வர மூர்த்தியும் சிவத் தொண்டரான பதஞ்சலி முனிவரை ஏளனம் செய்த தவறுக்குப் பிராயசித்தத்தையும் இத்துதி மூலம் பெற்றுத் தந்தார் பதஞ்சலி முனிவர்.
கடைசி ஸ்லோக பலஸ்ருதியைப் படித்தாலே நமக்கு என்ன கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
இத்துதியை தெளிவாக உச்சரித்தல் சற்றே கடினம் என்பதால் மூன்று கால் வாகனமும், பசு பராமரிப்பும் மூன்று கால்கள் உள்ள பிருங்கி முனிக்கும், நான்கு கால்களும் கொம்புகளும் உள்ள நந்தீஸ்வர மூர்த்திக்கும் அவர்கள் சிவ அபராதத்திற்கு பிராயசித்தத்தை அளிக்க வல்லது.
॥ नटराजस्तोत्र ,चरण शृङ्ग रहित (पतञ्जलि) ॥இத்துதியை தெளிவாக உச்சரித்தல் சற்றே கடினம் என்பதால் மூன்று கால் வாகனமும், பசு பராமரிப்பும் மூன்று கால்கள் உள்ள பிருங்கி முனிக்கும், நான்கு கால்களும் கொம்புகளும் உள்ள நந்தீஸ்வர மூர்த்திக்கும் அவர்கள் சிவ அபராதத்திற்கு பிராயசித்தத்தை அளிக்க வல்லது.
॥ நடராஜஸ்தோத்ர ,சரண ஶ்ருʼங்க³ ரஹித (பதஞ்ஜலி) ॥
॥ अथ-चरणशृङ्गरहित-नटराजस्तोत्रम् ॥
॥ அத²-சரணஶ்ருʼங்க³ரஹித-நடராஜஸ்தோத்ரம் ॥
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्
पतञ्जलि दृगञ्जन मनञ्जन मचञ्चलपदं जनन भञ्जन करम् ।
कदम्बरुचिमम्बरवसं परमम्बुद कदम्ब कविडम्बक कगलम्
चिदम्बुधि मणिं बुध हृदम्बुज रविं पर चिदम्बर नटं हृदि भज ॥ १॥
ஸத³ஞ்சித முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம் ஜ²லஜ²லஞ்சலித மஞ்ஜு கடகம்
பதஞ்ஜலி த்³ருʼக³ஞ்ஜந மநஞ்ஜந மசஞ்சலபத³ம் ஜநந ப⁴ஞ்ஜந கரம் ।
கத³ம்ப³ருசிமம்ப³ரவஸம் பரமம்பு³த³ கத³ம்ப³ கவிட³ம்ப³க கக³லம்
சித³ம்பு³தி⁴ மணிம் பு³த⁴ ஹ்ருʼத³ம்பு³ஜ ரவிம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 1॥
हरं त्रिपुर भञ्जनं अनन्तकृतकङ्कणं अखण्डदय मन्तरहितं
विरिञ्चिसुरसंहतिपुरन्धर विचिन्तितपदं तरुणचन्द्रमकुटम् ।
परं पद विखण्डितयमं भसित मण्डिततनुं मदनवञ्चन परं
चिरन्तनममुं प्रणवसञ्चितनिधिं पर चिदम्बर नटं हृदि भज ॥ २॥
ஹரம் த்ரிபுர ப⁴ஞ்ஜநம் அநந்தக்ருʼதகங்கணம் அக²ண்ட³த³ய மந்தரஹிதம்
விரிஞ்சிஸுரஸம்ஹதிபுரந்த⁴ர விசிந்திதபத³ம் தருணசந்த்³ரமகுடம் ।
பரம் பத³ விக²ண்டி³தயமம் ப⁴ஸித மண்டி³ததநும் மத³நவஞ்சந பரம்
சிரந்தநமமும் ப்ரணவஸஞ்சிதநிதி⁴ம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 2॥
अवन्तमखिलं जगदभङ्ग गुणतुङ्गममतं धृतविधुं सुरसरित्-
तरङ्ग निकुरम्ब धृति लम्पट जटं शमनदम्भसुहरं भवहरम् ।
शिवं दशदिगन्तर विजृम्भितकरं करलसन्मृगशिशुं पशुपतिं
हरं शशिधनञ्जयपतङ्गनयनं परचिदम्बर नटं हृदि भज ॥ ३॥
அவந்தமகி²லம் ஜக³த³ப⁴ங்க³ கு³ணதுங்க³மமதம் த்⁴ருʼதவிது⁴ம் ஸுரஸரித்-
தரங்க³ நிகுரம்ப³ த்⁴ருʼதி லம்பட ஜடம் ஶமநத³ம்ப⁴ஸுஹரம் ப⁴வஹரம் ।
ஶிவம் த³ஶதி³க³ந்தர விஜ்ருʼம்பி⁴தகரம் கரலஸந்ம்ருʼக³ஶிஶும் பஶுபதிம்
ஹரம் ஶஶித⁴நஞ்ஜயபதங்க³நயநம் பரசித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 3॥
अनन्तनवरत्नविलसत्कटककिङ्किणिझलं झलझलं झलरवं
मुकुन्दविधि हस्तगतमद्दल लयध्वनिधिमिद्धिमित नर्तन पदम् ।
शकुन्तरथ बर्हिरथ नन्दिमुख शृङ्गिरिटिभृङ्गिगणसङ्घनिकटम्
सनन्दसनक प्रमुख वन्दित पदं परचिदम्बर नटं हृदि भज ॥ ४॥
அநந்தநவரத்நவிலஸத்கடககிங்கிணிஜ²லம் ஜ²லஜ²லம் ஜ²லரவம்
முகுந்த³விதி⁴ ஹஸ்தக³தமத்³த³ல லயத்⁴வநிதி⁴மித்³தி⁴மித நர்தந பத³ம் ।
ஶகுந்தரத² ப³ர்ஹிரத² நந்தி³முக² ஶ்ருʼங்கி³ரிடிப்⁴ருʼங்கி³க³ணஸங்க⁴நிகடம்
ஸநந்த³ஸநக ப்ரமுக² வந்தி³த பத³ம் பரசித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 4॥
अनन्तमहसं त्रिदशवन्द्य चरणं मुनि हृदन्तर वसन्तममलम्
कबन्ध वियदिन्द्ववनि गन्धवह वह्निमख बन्धुरविमञ्जु वपुषम् ।
अनन्तविभवं त्रिजगन्तर मणिं त्रिनयनं त्रिपुर खण्डन परम्
सनन्द मुनि वन्दित पदं सकरुणं पर चिदम्बर नटं हृदि भज ॥ ५॥
அநந்தமஹஸம் த்ரித³ஶவந்த்³ய சரணம் முநி ஹ்ருʼத³ந்தர வஸந்தமமலம்
கப³ந்த⁴ வியதி³ந்த்³வவநி க³ந்த⁴வஹ வஹ்நிமக² ப³ந்து⁴ரவிமஞ்ஜு வபுஷம் ।
அநந்தவிப⁴வம் த்ரிஜக³ந்தர மணிம் த்ரிநயநம் த்ரிபுர க²ண்ட³ந பரம்
ஸநந்த³ முநி வந்தி³த பத³ம் ஸகருணம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 5॥
अचिन्त्यमलिवृन्द रुचि बन्धुरगलं कुरित कुन्द निकुरम्ब धवलम्
मुकुन्द सुर वृन्द बल हन्तृ कृत वन्दन लसन्तमहिकुण्डल धरम् ।
अकम्पमनुकम्पित रतिं सुजन मङ्गलनिधिं गजहरं पशुपतिम्
धनञ्जय नुतं प्रणत रञ्जनपरं पर चिदम्बर नटं हृदि भज ॥ ६॥
அசிந்த்யமலிவ்ருʼந்த³ ருசி ப³ந்து⁴ரக³லம் குரித குந்த³ நிகுரம்ப³ த⁴வளம்
முகுந்த³ ஸுர வ்ருʼந்த³ ப³ல ஹந்த்ருʼ க்ருʼத வந்த³ந லஸந்தமஹிகுண்ட³ல த⁴ரம் ।
அகம்பமநுகம்பித ரதிம் ஸுஜந மங்க³ளநிதி⁴ம் க³ஜஹரம் பஶுபதிம்
த⁴நஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜநபரம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 6॥
परं सुरवरं पुरहरं पशुपतिं जनित दन्तिमुख षण्मुखममुं
मृडं कनक पिङ्गल जटं सनकपङ्कज रविं सुमनसं हिमरुचिम् ।
असङ्घमनसं जलधि जन्मकरलं कवलयन्त मतुलं गुणनिधिम्
सनन्द वरदं शमितमिन्दु वदनं पर चिदम्बर नटं हृदि भज ॥ ७॥
பரம் ஸுரவரம் புரஹரம் பஶுபதிம் ஜநித த³ந்திமுக² ஷண்முக²மமும்
ம்ருʼட³ம் கநக பிங்க³ல ஜடம் ஸநகபங்கஜ ரவிம் ஸுமநஸம் ஹிமருசிம் ।
அஸங்க⁴மநஸம் ஜலதி⁴ ஜந்மகரலம் கவலயந்த மதுலம் கு³ணநிதி⁴ம்
ஸநந்த³ வரத³ம் ஶமிதமிந்து³ வத³நம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 7॥
अजं क्षितिरथं भुजगपुङ्गवगुणं कनक शृङ्गि धनुषं करलसत्
कुरङ्ग पृथु टङ्क परशुं रुचिर कुङ्कुम रुचिं डमरुकं च दधतमं ।
मुकुन्द विशिखं नमदवन्ध्य फलदं निगम वृन्द तुरगं निरुपमं
सचण्डिकममुं झटिति संहृतपुरं परचिदम्बर नटं हृदि भज ॥ ८॥
அஜம் க்ஷிதிரத²ம் பு⁴ஜக³புங்க³வகு³ணம் கநக ஶ்ருʼங்கி³ த⁴நுஷம் கரலஸத்
குரங்க³ ப்ருʼது² டங்க பரஶும் ருசிர குங்கும ருசிம் ட³மருகம் ச த³த⁴தமம் ।
முகுந்த³ விஶிக²ம் நமத³வந்த்⁴ய ப²லத³ம் நிக³ம வ்ருʼந்த³ துரக³ம் நிருபமம்
ஸசண்டி³கமமும் ஜ²டிதி ஸம்ஹ்ருʼதபுரம் பரசித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 8॥
अनङ्गपरिपन्थिनमजं क्षिति धुरन्धरमलं करुणयन्तमखिलं
ज्वलन्तमनलं दधतमन्तकरिपुं सततमिन्द्रमुखवन्दितपदम् ।
उदञ्चदरविन्दकुल बन्धुशत बिम्बरुचि संहति सुगन्धि वपुषं
पतञ्जलिनुतं प्रणवपञ्चर शुकंपर चिदम्बर नटं हृदि भज ॥ ९॥
அநங்க³பரிபந்தி²நமஜம் க்ஷிதி து⁴ரந்த⁴ரமலம் கருணயந்தமகி²லம்
ஜ்வலந்தமநலம் த³த⁴தமந்தகரிபும் ஸததமிந்த்³ரமுக²வந்தி³தபத³ம் ।
உத³ஞ்சத³ரவிந்த³குல ப³ந்து⁴ஶத பி³ம்ப³ருசி ஸம்ஹதி ஸுக³ந்தி⁴ வபுஷம்
பதஞ்ஜலிநுதம் ப்ரணவபஞ்சர ஶுகம்பர சித³ம்ப³ர நடம் ஹ்ருʼதி³ ப⁴ஜ ॥ 9॥
इति स्तवममुं भुजगपुङ्गव कृतं प्रतिदिनं पठति यः कृतमुखः
सदः प्रभुपद द्वितयदर्शनपदं सुललितं चरण शृङ्ग रहितम् ।
सरःप्रभव सम्भव हरित्पति हरिप्रमुख दिव्यनुत शङ्करपदं
स गच्छति परं न तु जनुर्जलनिधिं परमदुःखजनकं दुरितदम् ॥ १०॥
இதி ஸ்தவமமும் பு⁴ஜக³புங்க³வ க்ருʼதம் ப்ரதிதி³நம் பட²தி ய: க்ருʼதமுக:²
ஸத:³ ப்ரபு⁴பத³ த்³விதயத³ர்ஶநபத³ம் ஸுலலிதம் சரண ஶ்ருʼங்க³ ரஹிதம் ।
ஸர:ப்ரப⁴வ ஸம்ப⁴வ ஹரித்பதி ஹரிப்ரமுக² தி³வ்யநுத ஶங்கரபத³ம்
ஸ க³ச்ச²தி பரம் ந து ஜநுர்ஜலநிதி⁴ம் பரமது:³க²ஜநகம் து³ரிதத³ம் ॥ 10॥
॥ இதி ஶ்ரீபதஞ்ஜலிமுநிப்ரணீதம் சரணஶ்ருʼங்க³ரஹித நடராஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
மகான்கள், யோகிகள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கும். பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் நந்தி மூர்ததியின் இரண்டு கொம்புகளுக்கிடையில் நடனமாடி் அனைவருக்கும் திருக்காட்சி அளிக்கிறார். எனவே பிரதோஷ வேளையில் கால்களும் கொம்புகளும் இல்லாத சம்பு நடனத் துதியை ஓதி வந்தால் இரண்டு கொம்புகளும் நான்கு கால்களும் உடைய நந்தியின் மேல் எம்பெருமான் ஆடும் ஆனந்த தாண்டவத்தை நம் உள்ளத்திலேயே தரிசனம் செய்யும் அற்புத பாக்கியத்தைப் பெறலாம். இதுவே ஆதிசேஷ அவதாரமான பதஞ்சலி மூர்த்தியின் பிரார்த்தனையும் ஆகும்.
இதில் காணப்படுபவை யாவும் "குழலுறவு தியாகி" மேலும் "sanskritdocuments" வலைத்தளத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டது. படித்ததில் பிடித்ததை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி.
என் ஆத்மார்த்த குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.
குருவுக்கும் குரு பராபர குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய கெளஸ்துப புருஷாய ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் திருவடியே போற்றி, போற்றி.
.....
No comments:
Post a Comment