Friday, November 10, 2017

ஸப்ரஹுமண்ய புஜங்கம் . ॥श्रीसुब्रह्मण्यभुजङ्गम्॥



ஸப்ரஹுமண்ய புஜங்கம்.
இதை எழுதியது ஆதிசங்கர பகவத்பாதர்.

ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக்கண்டு பொறாமைகொண்ட அபிநவகுப்தர் எனும் புலவர் மந்திர ஏவலால் பகவத்பாதர் காசநோயால் வருந்தும்படிச் செய்தாராம். சிவபிரான் ஓரிரவு சங்கரருடைய கனவில் தோன்றி ‘ஜயந்திபுரம்’  (திருச்செந்தூர்) எனும் திருத்தலத்தில் சூரபத்மனை வென்ற ‘ஜய இன்ப வடிவாக’ விளங்கும் எனது குமாரனாகிய செந்தில்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடியநோய் உன்னை அடியோடு விட்டகலும் எனக்கூறித் திருநீறு அளித்தருளினார்.

ஆதிசங்கரரும் தனது யோகசக்தியால் மறுநாள் திருச்செந்தூரை அடைந்து அங்கு ஆதிசேடன் செந்தில்குமரனின் திருவடிகளில் வழிபடுதலைக் கண்டார். உடனே பாம்பு எனும் பொருளைத்தரும் ‘புஜங்கம்’ எனும் பெயரைக்கொண்ட புதுவகையான ஒரு செய்யுள் அமைப்பில் சமஸ்கிருதத்தில் முப்பத்துமூன்று கவிதைகள் கொண்ட ‘சுப்பிரமணிய புஜங்கத்தை’ப் படைத்தார். தமது நோயும் நீங்கப் பெற்றார்.

புஜங்கம்’ என்றால் தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு என்று பொருள்.  இச்சொல் சமஸ்கிருதத்தில் உள்ள ஒருவகைச் செய்யுள் அமைப்பைக் குறிக்கும். இந்த புஜங்கக் கவிதையுள் அமைந்துள்ள சொற்கோவைகள் ஒரு பாம்பானது வளைந்து வளைந்து ஊர்ந்துசெல்வதுபோல இருப்பதனால் இத்தகைய கவிதை அமைப்புக்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது.

இந்நூலில் சுப்பிரமணியக்கடவுளின் பெருமை, உயர்வு, முடிவற்ற தன்மை ஆகியவற்றை இரு விதங்களில் ஆதிசங்கரர் விளக்குகிறார்.
முதலாவது, வெளிப்படையாக நாம் தரிசிக்கும் திருச்செந்தூர்க் கோவிலும் அலைகளை வீசியெறியும் கடலும்  இயற்கையின் பிரம்மாண்டத்தைக் காட்டும். அந்த இயற்கையே இறைவடிவம் கொண்டு விளங்குகிறது.
இரண்டாவது, நமது உள்ளத்தில் குடியிருக்கும் இறைவனின் சக்தி — நம்மை ஆள்வதும், மகிழ்விப்பதும், வழிநடத்துவதும் அவனே என உணர்தல் வேண்டும். மானிடராகிய நமக்கு தோன்றாத்துணையாக என்றென்றும் நிற்பவன் இறைவனே!


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸப்ரஹுமண்ய புஜங்கம்

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹுந்த்
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா காணசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹுருதி தயோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் (2)

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹும் மஹுத்சித்த கேவம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் (3)

யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி பஉத்ரம் (4)

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத்ஸரோஜே குஹும் தம் (5)

கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பார்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ் ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)

மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்
ஜனார்திம் ஹுரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)

லஸத்ஸ்வர்ணகேஹு ந்ருணாம் காமதோEஹு
ஸHமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணபக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸ்ஹுஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் (8)

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே (9)

ஸவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)

புளந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
நமஸ்யாம்யஹும் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)

விதௌக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பகண்டான் த்விஷத்காலதண்டான்
ஹுதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹும்ஸானி சஞ்சத்
கடாக்ஷaவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸHதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸனோ
தவாலோகயே ஷண்முகம் போரு ஹாணி (14)

விசாலேஷH கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷ த்வாதசஸ் வீக்ஷணேஷ
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி (15)

ஸHதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரபருத்யோ ஜகந்நாத தேப்ய
கிடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)

ஸ்புரத்ரத்fன கேயூரஹாராபிராம
ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக
கடௌ பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ (17)

இஹாயாஹி வத்ஸேதி ஹுஸ்தான் ப்ரஸார்யா
ஹுவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹுராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் (18)

குமாரேச ஸJனோ குஹு ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்யாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹுத்வம் (20)

க்ருதாந்தஸ்ய தூதேஷH சண்டேஷகோபா
த்தஹுச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸ
மயூரம் ஸமாருஹுfய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேஸனேக வாரம்
நவக்ரும் க்ஷமோஹும் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷa (22)

ஸஹுஸ்ராண்ட போக்தா த்வயா ஸJரநாமா
ஹுதஸ்தாரக ஸிம்ஹுவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹுருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹும்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)

அஹும் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸத்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸHதத்வம் (24)

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குEஹு ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

களத்ரம் ஸதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நா க்ருEஹு யே மதீயா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார (28)

ம்ருகா பக்ஷணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷfணாக்ர பின்னா ஸதூரே
வநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)

ஜநித் பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹுதே ந கிம் தேவசேனாதி நாத
அஹும் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபாரதம் ஸமஸ்தம் மஹுச (30)

நம கேகினே சத்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய 
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸJனோ (32)

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹும் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)
..........

(தமிழாக்கம் - ஸ்ரீ அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்)

1. தீராத இடர் தீர
என்றும் இளமை எழிலன் எனினும்
இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உ தவும் மங்கள மூர்த்தமதே.

2. புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொள
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

3. திருவடி தரிசனம் கிட்டும்
மயில்மீது ஆர்த்து உ யர்வாக்கிற் பொதிந்து
மனதை கவரும் உ டலான்
பயில்வோர்கள் உ ள்ளக் குகைக் Efகாயில் தங்கி
பார்ப்பவர் தெய்வ மானான்
உ யிராகும் மறையின் பொருளாகி நின்று
உ லகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.

4. பிறவிப் பிணி தீரும்
என்றன் சந்நிதி யடையும் மனிதர்
எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.

5. போகாத துன்பம் போகும்
கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்
தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

6. கயிலை தரிசன பலன் கீட்டும்
என்றன் இருக்கை யறிந்தே யெவரும்
இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.

7. கரையாத பாவம் கரையும்
கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரண மடைகின்றேன்.

8. மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.

9. புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.

10. அக இருள் நீங்கும்
பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

11. ஆபத்து விலகும்
வேடவேந்தன் திருமகள் வள்ள
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

12. ப்ரம்ம ஞானம் கிட்டும்
வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.

13. தாபங்கள் நீங்கும்
சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்
தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு
என்றும் உ தயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருணை முகத்திற் கெதிராமோ.

14. அமுத லாபம் ஏற்படும்
அன்னம் அசைதல் போல் நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உ தடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கர் ஆறும் தாமரை
நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

15. கிருபா கடக்ஷம் கிட்டும்
விண்ணிலும் விரிந்த கருணை யதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதாந் உ னக்கெய்தும்.

16. இஷ்டசித்தி ஏற்படும்
மறைகள் ஆறு முறை யோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உ டலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

17. சத்ருபயம் போகும்
இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ
நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உ யர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா,
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.

18. ஆனந்தம் ஏற்படும்
வருக குமரா, அரு கெனவே
மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே
பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்
முத்தே, இளமை வடிவுடைய
ஒரு சேவகனே, கந்தா, நின்
உ பய மலர்த்தாள் தொழுகின்றேன்.

19. கர்மவினை தீரும் குமரா, பரமன் மகிழ் பாலா,
குகனே, கந்தா, சேனாபதியே,
சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா, எம்
குறைகள் தீர்க்கும் வேலவனே,
அமரில் தாரகன் தனை யழித்தாய்
அடியன் என்னைக் காத்திடுக.

20. திவ்ய தரிசனம் கிட்டும்
தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே.

21. எமபயம் தீரும்
காலப் படர்கள் சினம்கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உ யிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து
பயமேன் என்னத் தோன்றுகவே.

22. அபயம் கிட்டும்
கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.

23. கவலை தீரும்
அண்ட மனைத்தும் வென் நங்கே
ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ
தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனக் கொல்லுத லாகாதோ?

24 & 25. மனநோய் போகும்
துன்பச் சுமையால் தவிக்கிறேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உ ன்னை நாடித் தொழு வதால்
ஊமை, நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

25. கொடிய பிணிகள் அபஸ் மாரம்
குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம்
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள்
குமரா உ ன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன்v மாயம் போலப் பறந்திடுமே.

26. சராணாகதி பலன் கிட்டும்
கண்கள் முருகன் தனைக் காணக்
காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும்
பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உ டலும் குற்றேவல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்.

27. வரம் தரும் வள்ளல்
முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள்
தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று
கருணை வடிவைக் காண்கிலனே.

28. குடும்பம் இன்புறும்
மக்கள் மனைவி சுற்றம் பசு
மற்ற உ றவினர் அனை வோரும்
இக்கணத் னெfனுடன் வசித்திடு வோர்
யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்
குமரா எமக்குக் கதிநீயே.

29. விஷம், நோய் போகும்
கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உ டலில் தோன்றி வுடன்
கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உ ன்றன் வேல் கொண்டு
நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரௌஞ்ச கிரி பிளந்த
முருகா வருக, முன் வருக.

30. குற்றம் குறை தீரும்
பெற்ற குழந்தை பிழை பொறுக்கும்
பெற்றோர் உ லகில் உ ண்டன்றோ
உ ற்ற தேவர் தம் தலைவா,
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக்
குறை யில்லாமல் காத்தருள்க.

31. ஆனந்தப் பெருமிதம்
இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கம் வணக்கமதே.

32. வெற்றி கூறுவோம்
ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்
காசினி மீதில் நிச் சயமே.
..........

Sri Subrahmanya Bhujangam is a hymn is addressed to Lord Subrahmanya, the presiding deity of Tiruchendur. Adi Sankara composed this hymn of thiry three verses, in the peculiar Bhujanga metre, noted for its sinuous movement like that of a serpent.

The hymn is full of piety, spiritual exaltation and ecstasy. It also reveals the efficacy of praise, prayer and meditation on Subrahmanya. This hymn is considered as an eulogy of extraordi­nary merit.

Sankara calls upon all seekers to share his wondrous experience and joy in adoring the Lord who is the absolute ruler over all cosmic forces. He is the heroic leader of the celestial hordes. He is also the Indweller, Guha.

The poem holds out the hope that those who chant it daily with devotion shall win his grace, bestowing a life of plenitude and final beatitude. Sri Sankara’s purpose is to guide every seeker to God realisation, which is the grand finale of human existence.

In this hymn Sankara reveals the splendour, glory and Infinity of Subrahmanya at two levels. One is external and the other is internal. The sacred shrine at Tiruchendur framed by hills and facing the sea with huge waves lashing its shore, represents the external power. And then there is the Indweller in each one of us, who is the over seer, permitter, Lord, Enjoyer and the Ruler. He represents the internal power who is the nearest and dearest friend of mankind.


॥श्रीसुब्रह्मण्यभुजङ्गम्॥

सदा बालरूपापि विघ्नाद्रिहन्त्री
महादन्तिवक्त्रापि पञ्चास्यमान्या ।
विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे
विधत्तां श्रियं कापि कल्याणमूर्तिः ॥१॥

Though a mere child, he annihilates mountainous obstacles. Though endowed with an elephant’s face, he is most dear to Siva, the Panchasya (which word also means a lion.) He is sought after by gods, such as Brahma and Indra. May the benevolent Lord known by the name Ganesha bless me with wealth.

न जानामि शब्दं न जानामिचार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥२॥

I neither know the sound nor sense. Neither prose nor poetry. Yet when the One Intelligence glows in my heart, with his six shining faces, words cascade from my mouth so effortlessly.

मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम् ।
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् ॥३॥

The peacock mounted lord is the secret shrouded in the mystic formula. His body captivates our minds with its beauty. He is resident in the mighty souled men. I serve the guardian of the worlds, the deity of brahmins, object of Vedas and the dear son of Mahadeva.

यदा सन्निधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्ति पुत्रम् ॥४॥

“When men reach my abode on the shores of this sea, they have already crossed the life’s sea of strife.” Thus the lord seems to proclaim from his coastal shrine. I praise this sacred Son of the Divine Mother.

यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गा
स्थैवापदः सन्निधौ सेवतां मे ।
इतीवोर्मिपङ्गक्तीर्नृणां दर्शयन्तं
सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥५॥

‘Tides arise in the sea, glide towards the shore and then break into froth and foam. So too my devotees’ dangers shall vanish.” The Lord seems to say so. May I ever meditate on him in the core of my heart.

गिरौ मन्निवासे नरा येऽधिरूढा-
स्तदा पर्वते राजते तेऽधिरूढाः ।
इतीव ब्रुवन् गन्धशैलाधिरूढः
स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥६॥

May the lord of six faces ever bring me joy. Seated on the Gandhamadana mountain, he declares that those who have climbed to his hill shrines, have scaled the silver hills, the Kailas, as well.

महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥७॥

I seek Guha the lndweller, abiding on Mount Sugandha, nestled on the shores of the mighty sea–the favourite of seers, the absolver of ills, shining in peerless splendour.

लसत्वर्णगेहे नृणां कामदोहे
सुमस्तोमसंछन्नमाणिक्यमञ्चे ।
समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं
सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥८॥

From his golden home, seated on the cot of emerald, sprinkled with fragrant flowers, outshining the splendour of a thousand suns, he doles out to the beseeching mortals all they desire. I contemplate on this Karttikeya, the lord of the celestials.

रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे
मनोहारिलावण्यपीयूषपूर्णे ।
मनःषट्पदो मे भवत्क्लेशतप्तः
सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥९॥

May my mind like a tired wandering bee settle down and revel on Thy roseate lotus feet, soft, captivating and dripping with nectar.

सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां
क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।
लसद्धेमपट्टेन विद्योतमानां
कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥१०॥

I meditate on your waist clad in golden apparel, girdled with jingling bells, and a golden belt.

पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग्-
स्तनालिङ्गनासक्तकाशमीररागम् ।
नमस्यामहं तारकरे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥११॥

Embraced by the hunter lass, your chest is glowing with saffron, You are ever intent on the welfare of your devotees. Here is my obeisance.

विधौकॢप्तदण्डान्स्वलीलाधृताण्डा-
न्निरस्तेभशुण्डान्द्विषत्कालदण्डान् ।
हतेन्द्रारिषण्डाञ्जगत्राणशौण्डान्
सदा ते प्रचण्डाञ्श्रये बाहुदण्डान् ॥१२॥

I trust your mighty arms strong like the elephant’s trunk. They subdue enemies, take care of the worlds, and chastise arrogant Brahma.

सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः
समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।
सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीना-
स्तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥१३॥

If only the wintry moons are ever full without waxing and waning, and never setting, and without the dark spots marring the beauty, I would then fain compare them to your six lovely faces.

स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्च-
त्कटाक्षावलीभृङ्गसंघोज्ज्वलानि ।
सुधास्यान्दिबिम्बाधराणीशसूनो
तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥१४॥

I would low to gaze at your six lotus faces amidst the swan-like smiles shedding dark glances like a string of bees, with their ruddy nectarine lips.

विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्त्रं
दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।
मयीषत्कटाक्षः सकृत्पातितश्चे-
द्भवेते दयाशील का नाम हानिः ॥१५॥

Your 12 expansive eyes with elongated lashes shed rays of benevolent grace. Even if a particle of that glance falls on me, I am blessed. And pray tell me, what do you lose?

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा
जपन्मन्त्रमीशो मुदा चिघ्रते यान् ।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥१६॥

“My Child! You have sprung out of me. May you live long.” So saying, Thy father chants the mantra six times in your ears and lovingly caresses your heads. O Lord of the Universe! Your crowned heads bear the burden of the worlds. Obeisance to you!

स्फुरद्रत्नकेयूरहाराभिराम-
श्चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।
कटौ पीतवासाः करे चारु शक्तिः
पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः ॥१७॥

May the son of the destroyer of triple cities stand before me. A necklace of emerald and gold adorns his neck. His cheeks glitter with the dazzling ear rings. Apparelled in yellow silken cloth, He stands holding a shining spear.

इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या-
ह्वयत्यादराच्छंकरे मातुरङ्कात् ।
समुत्पत्य तातं श्रयन्तं कुमारं
हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम् ॥१८॥

When Siva beckons him saying, “Come here, my son!” endearingly, the child Kumara at once jumps from the mother’s lap and tightly embraces his father. My obeisance to that loving babe.

कुमारेशसूनो गुह स्कन्द सेना-
पते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्
प्रभो तारकरे सदा रक्ष मां त्वम् ॥१९॥

O Kumara! Son of Lord Siva! O Indweller! Commander of celestial hordes! O wielder of lance and mounted on peacock! Lover of hunter’s daughter and remover of the ills of devotees. O Foe of the Titan Taraka! Be Thou my solace.

प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे
कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं
द्रुतं मे दयालो भवाग्रे गुहं त्वम् ॥२०॥

When all my senses leave, when I am bereft of movement and lose my power of cognition, when my voice is choked due to phlegmatic throat, when fear grips me, when I prepare myself for the final journey, forsake me not, O Lord! Stand fast by me.

कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपा-
द्दह च्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥२१॥

When the dire servitors of Death, threaten me saying, “Burn him, break him, smite him, “please mount your peacock and rush to me in a trice, and bid me, “Fear not”, comfortingly.

प्रणम्यासकृतपादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो पार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा ॥२२॥

I fall at your feet constantly and supplicate for your protection at the time of my death. I will not be able to vocalise my plight then. Do not tarry even a second.

सहस्राण्डभोक्ता त्वया शूरनामा
हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः ।
ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं
न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥२३॥

You have killed Surapadma, the enjoyer of a thousand worlds. You destroyed Taraka and Simhavaktra. Can’t you cure me of a single affliction of mine? What can I do and where can I go?

अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान् दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा क्लृप्तबाधं
ममाधिं दुतं नाशयोमासुत त्वम् ॥२४॥

I am always grief-stricken. You are the saviour of the afflicted. I ask none else. My grief comes in the way of my devotion. O Son of Uma! Dispel this gloom that gnaws at my heart.

अपस्मारकुष्टक्षयार्शःप्रमेह-
ज्वरन्मादिगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्यक्षणात्तरकारे द्रवन्ते ॥२५॥

Epilepsy, leprosy, consumption, diabetes, piles, fever, psychosis, colic, all these dire diseases take to heels, the moment they come across Thy sacred ashes.

दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति-
र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥२६॥

May my eyes see your benign form. May my ears hear your fabled fame. May my tongue ever utter your purifying names. May my hands do your deeds, and may my body be engaged in your service. Thus dedicated, may all my thoughts ever merge in Thee.

मुनीनामुतहो नृणां भक्तिभाजा-
मभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने
गुहाद्देवमन्यं न जाने न जाने ॥२७॥

We find Devas everywhere ready to give favours to sages and devotees. But I know of no other deity who blesses even the lowliest outcaste.

कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा
नरो वाथ नारी गृहे ये मदीयाः ।
यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं
स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥२८॥

O Lord! My wife, my children, kinsmen, chattel, servitors, my household, whatever is mine, let them endear themselves to you. May they hold Thee ever in remembrance.

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टा-
स्तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशैले ॥२९॥

O Lord,you who pierced the Krauncha Mount, would you destroy, by your sharp spear, the birds, beasts, wild insects, and bodily ailments that afflict my limbs?

जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते च किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥३०॥

O Commander of the heavenly hordes! Do not parents forgive their erring sons? You are the father of the universe, lama mere child. Forgive all trespasses.

नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्चाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥३१॥

Obeisance to your mount, the peacock, to the ram, to your spear, to your banner bearing the cock, to the sea you are facing and to the seashore. Adoration to Thee. O Lord Skanda, again and again.

जयानन्दभूमञ्जयापारधाम-
ञ्जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्द सिन्धो जयाशेषबन्धो
जय त्वं पिता मुक्तिदानेशसूनो ॥३२॥

O Bliss Absolute! Hail O Shoreless Beyond! O Lord of undented fame! Hail O Form of Delight! Victory to Thee, O Ocean ofjoy! O Kinsman of all! May you be ever victorious, O Saviour and Son of Siva!

भुजङ्गाख्यवृत्तेन क्लृप्तं स्तवं यः
पठेत्भक्तियुक्तो गुहं संप्रणम्य ।
स पुत्रान्कलत्रं धनं दीर्घमायु-
र्लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः ॥३३॥

Whoever chants this hymn composed in the Bhujanga metre, with due devotion and prostrations to Guha, thelndweller, to him will be Vouchsafed, a good mate, progeny, wealth and longevity. In the end he will be united with Skanda.

॥ श्रीसुब्रह्मण्यभुजङ्गं सम्पूर्णम् ॥
.....

அடியேனால் கீழ்கண்ட வலைத்தளம் பதிவுகள் படித்து திரட்டிய ஆன்மீக விஷயங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து எழுதி இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி.


4 comments:

  1. ஸ்ரீ சிவபக்கிரி அண்ணா நமஸ்காரம். தங்களின் இந்த ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் தமிழாக்கம் பகிர்ந்து கொண்டமைக்கு. இந்த ஸ்ரீ சூரசம்ஹாரம் கந்தசஷ்டி சமயத்தில் காணக்கிடைத்து பாராயணம் செய்து பொருள் புரிந்து உள்ளத்தில் உணர்ந்து அனுபவித்து குமரன் அருள் பெற்று பாக்யம் அடைந்தேன். இப் பிறப்பின் பொக்கிஷம் பெற்றேன். பிறவிப்பிணி தீர்த்து அருளி ஆட்கொள்ள ஐயன் ஸ்ரீ சுப்பிரமணியனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .. GREAT THANKS

      Delete
  2. Om Guruvin karunai🙏

    ReplyDelete