பாதாள செம்பு முருகன் கோவில் ….
வாழ்க்கை சில நேரங்களில் ஒரு சுழல் போல ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்திற்கு இடையே ஒரு சிறு அமைதியைத் தேடி, நானும் என் சகோதரனும் மேற்கொண்ட ஒரு மின்னல் வேகப் பயணம் தான் இந்த திருத்தலம்.
பெங்களூருவின் நெரிசலில் இருந்து திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உறையும் அந்த செம்புக் குமரனை நோக்கிப் புறப்பட்டோம். செப்டம்பர் 22 அன்று இரவு 7:30 மணிக்கு நம்மயாத்ரி. ஆட்டோ ஏறி சிட்டி ஸ்டேஷன் பேக்கேட் 8:15க்கு ரீச் ஆனேன். வழிநெடுக நல்ல மழை. சகோதரன் 8:45க்கு வந்தான். 9:15 மணிக்கு மைஸூர் தூத்துக்குடி ட்ரெயின் வந்தது.
ட்ரெயின் கிளம்பி ஒரு மணி நேரம் கழித்து படுக்கை போட்டாச்சு. லோயர் பெர்த். மறுநாள் காலை 6:30க்கு திண்டுக்கல் ஸ்டேஷன்ல இறங்கியாச்சு.
பலதடவை இந்த ஸ்டேஷன் வழியாக போயிருக்கேன். வாழ்க்கையில் முதல் தடவை திண்டுக்கல் ஸ்டேஷன்ல இறங்கினேன்.
டாக்ஸி பிடுச்சு ஒரு லாட்ஜ்க்கு போனோம். குளித்துமுடிச்சு தமிழ் பாரம்பரிய உடை அணிந்து அங்கேயுள்ள உணவகத்தில் பிரக்பஸ்ட். பொங்கல் வடை. மல்லேஸ்வரம் கையேந்திபவன் பொங்கல் வடை ஆயிரம் தடவை உயர்வு.
ஆட்டோ ஏறி புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் கோவில் விஜயம். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் (பழனி) செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள இந்தத் தலம் மிகவும் தனித்துவமானது.
கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 15 அடி உயரம் கொண்ட காவல் தெய்வமான சங்கிலி கருப்பு கம்பீரமாக பிரம்மாண்டமாக நின்றுகொண்டு இருக்கிறார். உலகத்திலேயே முருகன் கோவிலில் சங்கிலி கருப்பன் சிலை இருப்பது இங்கு மட்டும்தான்.
முன்மண்டபத்தில் செல்வவிநாயகர் அமர்ந்துள்ளார்.
முருகன் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. 18 படி கொண்ட குகை. 9 படி இறங்கியதும் ஒரு சிறிய மண்டபத்தில் கிழக்கு நோக்கி காலபைரவர் காட்சி தருகிறார். பைரவர் அனைத்து கோவில்களிலும் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு கிழக்குநோக்கி காட்சி தருகிறார்.
அடுத்த 9 படி இறங்கியதும் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது. பாதாள கருவறையில், செம்பு உலோகத்திலான முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபயமுத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். பொதுவாக முருகனின் வேல் வலதுகை புறம் இருக்கும். ஆனால் இங்கு உள்ள முருகனின் வேல் இடது கை புறமாக இருப்பது இன்னும் சிறப்பு.
இந்த சிலைக்கு முன்பு திருக்கோவிலூர் சித்தர் பூஜித்த முருகன் சிலை உள்ளது.
( பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறுஅவதாரமாக, திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறார். போகர் சித்தரையும், அவருடைய சீடர் புலிப்பாணியையும்nமானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் வசித்து வந்திருக்கிறார். இவர், 1½ அடி உயரத்தில் முருகன் சிலையை தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம் போன்ற பஞ்சலோகத்தால் வடிவமைத்து பாதாளஅறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்துள்ளார். )
பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்புமுருகன்' என்ற பெயர். செம்பு (Copper) அதிகளவில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செம்பு என்பது செவ்வாய் கிரகத்தின் உலோகம். இது நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தையும், நரம்பு மண்டலத்தையும் சீராக்கும் வல்லமை கொண்டது.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 18 வகையான அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. நறுமணம் கமழும் இந்த விபூதி தீராத வியாதிகளையும், மன உளைச்சலையும் நீக்கக்கூடிய ஒரு அருமருந்தாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பொதுவாக இந்த விபூதி கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே வழங்கப்படும்.
பூமிக்கு அடியில் இருக்கும் அந்த குளிர்ச்சியான கருவறையில் முருகனைத் தரிசிப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம். இந்த கோவிலில் நாம் முருகனை இறங்கி சென்று தரிசித்து விட்டு ஒரு ஏற்றமான பாதையில் வருவது சிறப்பானது. அது நம் வாழ்க்கைக்கும் ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. கீழே இருப்பவர்களை முருகன் வாழ்க்கையில் தூக்கி உயரத்தில் விடுவதாக அர்த்தம் என்கிறார்கள்.
கோவிலின் முன்பாக அருகே குளம் போல் நீர் நிரம்பி உள்ள இடத்தில் ஜலகண்டேஸ்வர் நமக்கு காட்சி தருகிறார்,
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக சொல்லப்படுவது கருங்காலி, செங்கருங்காலி மாலைகள்.
கருங்காலி மாலைகளை முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். பஞ்ச பூதங்களின் துணைகிடைக்கும். எதிர்மறை சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் சொத்துகள்சேரும். கல்வி ஞானம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடுஅடையும். ரத்த அழுத்தம் சீராகும் என்று நம்பப்படுகிறது. இதேபோல் பூஜை செய்யப்பட்ட நெல்லிக்காய் பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் தரப்படும் கருங்காலி மாலையை உங்கள் கழுத்தில் அல்லது உங்கள் கைகளில் எப்போதும் அணிந்தவாறு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே வந்து சேரும் என்கிறார்கள். இந்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலையை நாம் அணிந்திருக்கும் போது எப்படிபட்ட கெட்ட சக்திகள் ஆக இருந்தாலும் நம்மை நெருங்க முடியாது. இந்த சக்திகளை எல்லாத்தையும் நல்ல சக்திகளாக மாற்றக்கூடிய சக்தி இந்த கருங்காலி மரத்திற்கு உண்டு.
இதை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்களுடன் கூடிய மனிதர்கள் உங்களிடம் வந்தால் கூட அந்த கெட்ட எண்ணங்களை தவிர்த்து விட்டு உங்களிடம் நல்லபடியாக பேசுவார்கள் என்று இந்த மாலையை அணிந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த மரம்தான் இந்த கருங்காலி. இந்த கருங்காலி மாலையை முதில் இந்த பாதாள செம்பு முருகன் கோவிலில் தான் அறிமுக படுத்தினார்கள்.இங்கு கொடுக்கப்படும் மாலை மிகவும் பிரபலமானது.
அந்த காலத்துப் போர் வீரர்களுக்கும் மற்றும் இந்த காலத்தின் இராணுவ வீரர்களுக்கும் இந்தகோவிலில் பரிவட்டம் கட்டி முதன்மை மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து வந்தால் நினைக்கும் காரியங்கள் எல்லாம் கைகூடிவரும் என இங்கு வந்து பயன் அடைந்த பலர் கூறுகிறார்கள். இந்த கோவிலில் நவகிரகங்களால் நமக்கு உண்டாகக்கூடிய தோஷங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த பாதாள செம்பு முருகன்போக்கி விடுவார். செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகன் திகழுகிறார் அதனால் அரசுவேலையில், காவல்துறை சம்பந்தமான வேலைகள், ராணுவம் சம்பந்தமான வேலைகளில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு வேண்டி இங்கு வந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். அவர்களுக்குவேண்டிய பலனும் உடனே கிடைக்கிறது என்பதால் பல அதிகாரிகள் இந்த கோவிலுக்கு படைஎடுத்து வருகின்றனர் கூறுகிறார்கள்
ஒன்பது மணிக்கு வந்தோம். 2மணி நேரம் கோவிலில் இருந்தோம். நாங்கள் அங்கு கழித்த அந்த இரண்டு மணிநேரமும் ஒரு தியான நிலை போன்ற அமைதியைத் தந்தது.. 11க்கு கிளம்பி வந்தோம். சிறிது ஓய்வுக்கு பின் லஞ்ச். லெமன் சாதம் தயிர் சாதம். உண்ட உணவை குறை சொல்லக்கூடாது.
4 மணிக்கு கிளம்பி திண்டுக்கல் ஸ்டேஷன். Tejas Express to Trichy Junction. ஏ2பியில்டிபன். யூபெர் மூலம் திருச்சி ஏர்போர்ட். என்ன ஒரு பிரமாண்டமான விமான நிலையம். அழகுஅழகான பெரிய சிற்பங்கள், கண்கவரும் வேலைப்பாடுகள். போட்டோ எடுக்கவில்லை. மிகப்பெரிய மனக்குறை.
இண்டிகோ, நாற்பது நிமிடங்களில் பெங்களூரு.
ஆனால் இல்லம் வந்துசேர டாக்ஸி எடுத்தது 90 நிமிடங்கள்.
ஒரு நாள் பயணமாக இருந்தாலும், பல காலத்திற்குத் தேவையான ஆற்றலை இந்தத் தலம் எங்களுக்கு வழங்கியது.
நானும் இரண்டு கருங்காலி மாலைகளை முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துவந்து என் இரு புதல்வர்களுக்கும் கொடுத்து அவர்களை அணிய செய்துவிட்டேன்.
Pathala Sembu Murugan Temple ..
Some journeys aren’t measured in miles, but in the peace they leave behind.
This September, my brother and I embarked on a lightning-fast, 24-hour spiritual "sprint" from Bangalore to Dindigul. To The enigmatic Pathala Sembu Murugan Temple in Ramalingampatti, a place where divinity resides deep beneath the earth.
Our adventure began on the night of the 22nd. We boarded the overnight train from Bangalore, the rhythmic clatter of the tracks setting the stage for the quiet morning ahead. Reaching Dindigul at dawn, we checked into a local lodge to freshen up, and before the city could fully wake up, we were in an auto-rickshaw heading toward the mountains.
The temple is nestled against the backdrop of the Western Ghats, near the famous Palani Hills. But unlike the hilltop temples Murugan is known for, this one is unique. "Pathala" means netherworld or underground, and "Sembu" refers to copper—the sacred metal of the deity here.
At the entrance stands a majestic 15-foot Sangili Karuppasamy, carved from a single stone, guarding the spiritual treasures within.
The Mystique of the Underground Sanctum
Walking into the temple, you feel an immediate shift in energy. The heart of the temple—the Sanctum Sanctorum—is located 16 feet underground in a natural cave-like setting.
It is said that the 1.5-foot idol of Lord Murugan was installed by Thirukovilur Siddhar, a disciple (and believed reincarnation) of the legendary Sage Bogar.
Unlike the stone idols elsewhere, this one is made of Panchaloha (five metals), with copper being the predominant element.
We spent nearly two hours there, descending into the cool, quiet depths. In that subterranean silence, the chaos of Bangalore felt worlds away.
The Sacred Souvenirs: Vibhuti & Karungali
You don't leave Pathala Sembu Murugan empty-handed; you leave with "medicine" for the soul.
The 18-Herb Vibhuti - This isn't your ordinary sacred ash. The temple is famous for its Herbal Thiruneeru, prepared using 18 different medicinal herbs (including Vilva, Tulsi, and various sacred flowers). It is said to strengthen the nerves and clear negative "Doshas." Interestingly, it’s only given in small quantities to be applied immediately—a true "divine prescription."
The Karungali Malai (Black Ebony Wood) - The temple is a hub for Karungali. This dense, black wood is synonymous with Lord Murugan (representing the planet Mars). Wearing a Karungali Malai blessed at the Lord’s feet is believed to:
Absorb negative vibrations and radiation.
Bring success in business and career.
Provide mental clarity and "earth" your energy.
After a soul-stirring morning, it was back to the lodge for a quick lunch and then a dash to the Dindigul station. We caught a train to Trichy, hopped on a flight, and within 40 minutes, we were touching down in Bangalore.
The scent of the herbal Vibhuti and the weight of the Karungali Malai reminded us that we were bringing a piece of the "Pathala" peace into our home.







No comments:
Post a Comment