Saturday, June 1, 2013

ஸ்ரீ அம்பாள் ஸ்தோத்திரம்

...
ஸ்ரீ துர்வாஸஸ்ஸால் செய்யப்பட்ட 'ஆர்யாத்விசதீ' என்றும், 'லலிதா ஸ்தவரத்னம்' என்றும் சொல்லப்பட்ட ஸ்தோத்ரத்திலிருந்து எடுக்கப்பட்ட சுலோகங்கள்.
இதைப் படிப்பதனால் தோஷங்கள் விலகும். ஜாதகத்தில் சந்திரன், சுக்ரன், ராகு இவர்கள் நீசர்களாக இருந்தால் அதனால் அறியப்பட்ட தோஷங்கள் விலகும்.

இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பதின் பலனை ஸ்ரீ அம்பாள் தான் கூறுவதற்குத் தகுதி என்று ஸ்ரீ துர்வாஸஸ்ஸு கூறியிருக்கிறார். பேச்சில் திக்கலிருந்தால் விலகும்.



வந்தே கஜேந்த்ரவதனம் வாமாங்காரூட வல்லபாஸ்லிஷ்டம்
குங்கும பராக ஸோணம் குவலயினீ ஜாரகோரகாபீடம் ||

இடது மடியிலுள்ள தனது பத்னியாகிய வல்லபா தேவியினால் ஆலிங்கனம் பண்ணப்பட்டவரும், செங்கழனீர் புஷ்பத்தை மலரச் செய்யும் சந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரும், குங்குமத்தூள் போன்ற சிவந்தவருமான ஸ்ரீ மஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

லலிதா பாது ஸிரோ மே லலாடமம்பா ச மதுமதீரூபா
ப்ருயுக்மம் ச பவானீ புஷ்பஸரா பாது லோசனத்வந்த்வம் ||

எனது சிரஸ்ஸை லலிதாதேவி ரக்ஷிக்க வேண்டும். மதுமதியின் உருவங் கொண்ட ஸ்ரீஅம்பிகை நெற்றியைக் காக்க வேண்டும். பவானீயானவள் எனது இரண்டு புருவங்களையும் ரக்ஷிக்க வேண்டும். புஷ்பங்களை பாணமாகக் கொண்ட ஸ்ரீஅம்பாள் இரண்டு கண்களையும் காக்க வேண்டும்.

பாயாந் நாஸாம் பாலா ஸுபகா தந்தாம்ஸ்ச ஸுந்தரி ஜிஹ்வாம்
அதரோஷ்டமாதி ஸக்தி சக்ரேஸீ பாது மே சிரம் சிபுகம் ||

பாலையானவள் என்னுடைய மூக்கையும், பற்களை சௌபாக்யம் வாய்ந்த அம்பிகையும், நாக்கை ஸுந்தரியும் (அழகு வாய்ந்தவளும்), கீழ் உதட்டை ஆதிசக்தியும், முகவாய்க் கட்டையை சக்ரேஸியும் வெகுகாலம் ரக்ஷிக்க வேண்டும்.

காமேஸ்வரீ ச கர்ணௌ காமாக்ஷீ பாது கண்டயோர்யுகளம்
ஸ்ருங்கார நாயிகா வ்யாத்வதனம் ஸிம்ஹாஸனேஸ்வரீ ச களம் ||

காதுகளை காமேச்வரியும், இரண்டு கன்னப்ரதேசங்களை காமாக்ஷியும், ஸ்ருங்கார நாயகியானவள் முகத்தையும், ஸிம்மாஸனேச்வரியானவள் கழுத்தையும் ரக்ஷிக்கட்டும்.



ஸ்கந்தப்ரஸுஸ்ச பாது ஸ்கந்தௌ பாஹு ச பாடலாங்கீ மே
பாணீ ச பத்மநிலயா பாயாதனிஸம் நகாவலீர் விஜயா ||

ஸ்ரீ ஸ்கந்தனுடைய தாயானவள் என்னுடைய இரண்டு தோள்களையும், கைகளை பாடலாங்கியும், கர தலங்களை பத்மத்தில் வஸிப்பவளும் (பத்ம நிலயா என்றவளும்), நகங்களின் வரிசையை விஜயயானவளும் எப்போதும் ரக்ஷிக்கட்டும்.

கோதண்டினீ ச வக்ஷ: குக்ஷிம் சாவ்யாத் குலாசலதனூஜா
கல்யாணீ ச வலக்னம் கடிம் ச பாயாத்கலாதரஸிகண்டா ||

மார்பை கோதண்டினீயும், வயிற்றைப் பர்வதராஜ குமாரியும், கல்யாணியானவள் மத்ய பாகத்தையும், சந்திர பிம்பத்தை சிரோ பூஷணமாகக் கொண்டவள் இடுப்பையும் ரக்ஷிக்கட்டும்.

ஊருத்வயம் ச பாயாதுமா ம்ருடானீ ச ஜானுனீ ரக்ஷேத்
ஜங்கே ச ஷோடஸீ மே பாயாத்பாதௌ ச பாஸஸ்ருணிஹஸ்தா ||

உமையானவள் எனது இரண்டு தொடைகளையும், ம்ருடானீயானவள் இரண்டு முழங்கால்களையும், ஜங்கப் பிரதேசத்தை ஷோடசியும், பாசம், ஸ்ருணி இவைகளை தரித்த அம்பாள் கால்களையும் ரக்ஷிக்க வேண்டும்.

ப்ராத: பாது பரா மாம் மத்யான்ஹே பாது மணிக்ருஹாதீஸா
ஸர்வாண்யவது ச ஸாயம் பாயாத் ராத்ரௌ ச பைரவீ ஸாக்ஷாத் ||

பராபட்டாரிகை காலையிலும், நடுப்பகலில் மணிமயமான கிருஹத்தற்கு நாயகியும், சாயங்காலத்தில் சர்வாணியும், இரவில் ஸாக்ஷாத் பைரவியும் (வாராஹியும்) என்னை ரக்ஷிக்கட்டும்.



பார்யாம் ரக்ஷது கௌரீ பாயாத் புத்ராம்ஸ்ச பிந்துக்ருஹபீடா
ஸ்ரீவித்யா ச யஸோ மே ஸீலம் சாவ்யாச்சிரம் மஹாராக்ஞி ||

என்னுடைய பத்னியை கௌரியானவள் ரக்ஷிக்கட்டும். எனது புத்ரர்களை பிந்துக்ருஹத்தில் அமர்ந்தவள் ரக்ஷிக்கட்டும். எனது கீர்த்தியை ஸ்ரீவித்யையும், எனது நடத்தையை மஹாராஜ்ஞியானவளும் எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும்.

பவனமயி பாவகமயி க்ஷோணீமயி ககனமயி க்ருபீடமயி
ரவிமயி ஸஸிமயி திங்மயி ஸமயமயி ப்ராணமயி ஸிவே பாஹி ||

காற்று, அக்னி, பூமி, ஆகாசம், ஜலம், ஸூர்யன், சந்திரன், திக்குகள், காலன், பிராணன் என்ற இந்த எல்லா உருவமாயும் கொண்ட ஹே சிவே (ஓ மங்களகரே) என்னைக் காக்க வேண்டும்.

காளி கபாலினி ஸூலினி பைரவி மாதங்கி பஞ்சமி த்ரிபுரே
வாக்தேவி விந்த்யவாஸினி பாலே புவனேஸி பாலய சிரம் மாம் ||

காளி, கபாலினி, சூலினி, பைரவி, மாதங்கி, பஞ்சமி, த்ரிபுரை, வாக்தேவி, விந்த்யவாஸினி, பாலை, புவனேஸ்வரி என்ற பல பெயரை உடைய ஹே அம்பிகையே என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்.

அபிநவ ஸிந்தூராபாமம்ப த்வாம் சிந்தயந்தி யே ஹ்ருதயே
உபரி நிபதந்தி தேஷாமுத்பல நயனாகடாக்ஷ கல்லோலா ||

எவர்கள் தனது ஹ்ருதயத்தில் புதிதான குங்குமம் போல் சிவந்த நிறமுள்ள தங்களை த்யானம் செய்கின்றார்களோ அந்த பக்தர்களின் பேரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கடாக்ஷை அலைகள் எப்போழுதும் விழுந்து கொண்டிருக்கும்.



வர்காஷ்டகமிலிதா பிர்வஸினீமுக்யா பிராவ்ருதாம் பவதீம்
சிந்த்யதாம் ஸிதவர்ணாம் வாசோ நிர்யாந்த்யயத்நதோ வதனாத் ||

அ, க, ச, ட,த, ப, ய, ச என்ற வர்க்காஷ்டகங்களோடு கூடிய வசினீ முதலியவர்களால் சூழப்பட்ட வெண்மை நிறமான தங்களை த்யானம் பண்ணுகிறவர்களுடைய முகத்திலிருந்து அழகிய சொற்கள் வெளி வருகின்றன.

கனகஸலாகா கௌரீம் கர்ண வ்யாலோல குண்டலத் விதயாம்
ப்ரஹஸிதமுகீம் ச பவதீம் த்யாயந்தோ யே த ஏவ பூதனதா: ||

பொன் கம்பி போன்ற நிறமுடையவளும், இரண்டு காதுகளிலும் அசங்குகின்ற குண்டலங்களை உடையவளும், சிரித்த முகத்தை உடைய தங்களை எவர்கள் தியானம் செய்கிறார்களோ அவர்கள் பூமியில் வஸிக்கும் குபேரர்கள் ஆவார்கள்.

ஸீர்ஷாம்போருஹமத்யே ஸீதளபீயூஷ வர்ஷிணீம் பவதீம்
அனுதினமனுசிந்தயதாமாயுஷ்யம் பவதி புஷ்கலமவன்யாம் ||

சிரஸ்ஸின் நடுவில் சீதமான அம்ருதத்தை வர்ஷித்துக் கொண்டிருக்கும் தங்களை தினந்தோறும் த்யானிப்பவர்களுக்கு அளவற்ற ஆயுள் இவ்வுலகில் உண்டாகிறது.

மதுரஸ்மிதாம் மதாருண நயனாம் மாதங்ககும்பவக்ஷோஜாம்
சந்த்ரா வதம்ஸினீம் த்வாம் ஸவிதே பஸ்யந்தி ஸுக்ருதின: கேசித் ||

மதுரமான சிரிப்பை உடையவளாயும், மதத்தினால் சிவந்த கண்களை உடையவளாயும், யானையின் சிரஸ்ஸு போல் கடினமான ஸ்தன பாரத்தை உடையவளாயும், சந்திர கலையை தரித்தவளுமான தங்களை புண்யசாலிகளான சில உபாஸகர்கள் தனது பக்கத்திலேயே காண்கின்றனர்.



லலிதாயா: ஸ்தவரத்னம் லலிதபதாபி ப்ரணீதமார்யாபி:
ப்ரதிதினமவனௌ படதாம் பலானி வக்தும் ப்ரகல்பதே ஸைவ ||

லலிதமான பதங்களுடைய ஆர்வா விருத்தத்தில் செய்யப்பட்ட ஸ்ரீலலிதா தேவியின் ஸ்தோத்ர ரத்னமாகிய இந்த ஸ்துதியை இவ்வுலகில் நித்யம் படிப்பவர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை சொல்வதற்கு அந்த லலிதா தேவியே தகுதி உள்ளவளாக ஆகிறாள்.

தமிழ் உரை : சேங்காலிபுரம் ப்ரம்ஹஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்

சுபம்


Courtesy: http://kshetrayaatra.blogspot.in/

2 comments: