Thursday, June 27, 2013

சித்த மருத்துவ குறிப்பு

...

மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து காலில் ஆணி பாய்ந்த இடத்தில் கட்டி வர காயம் குணமாகும்.

ஓமத்துடன் பூண்டு பொடி செய்து போட்டு கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.

மாதுளம் பூவை கசாயம் செய்து குடித்து வர வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட தொப்பை குறையும்.

தாமரை இலை, பூ உலர்த்தி தூள் செய்து காபி போல் பருகி வர இருதயம் பலம் பெறும். இரத்தம் சுத்தம் அடையும். ஞாபக சக்தி பெருகும்.

குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குடல் புண் குணமாகும்.

10 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி தீரும். குடல் புழுக்கள் மடியும்.

மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அறைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.

கசகசா, வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு பொடித்து தேன் விட்டு 5 கிராம் பாலுடன் காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.

ப்ப்பாளிப்பாலை வாய் மற்றும் நாக்கில் உள்ள புண்ணிற்கு தடவி வர வாய்புண் குணமாகும்.

காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடுத்து வர பக்கவாதம் குணமாகும்.

பச்சை இஞ்சி சாறு தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர தலை சுற்றல் குணமாகும்.

எலுமிச்சை சாற்றால் கைகளை கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக்கொண்டால் மருதாணி சிவப்பாக பிடிக்கும்.

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

கை கால் உணர்வு இல்லாமல் இருந்தால் 50 கிராம் வேப்ப எண்ணெயில் கட்டி கற்பூரம் ஊறவைத்து தினசரி காலையில் எழுந்தவுடன் உணர்வு இல்லாத இடத்தில் சூடு பறக்க தேய்த்து வர உணர்வு திரும்பும்.

மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து தேக்கரண்டி தேன், வென்னீர் அல்லது பாலில் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

செம்பருத்தி பூவை நீரில் போட்டு அரைமணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.

இரண்டு இஞ்சித்துண்டுகளை இடித்து சாறு பிழிந்து வைத்து தெளிந்த நீரை கீழே ஊற்றி அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர பருக்கள் மூன்று நாட்களில் குணமாகும்.

சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து தயிருடன் கலந்து குடிக்க வயிற்று உப்பசம், பேதி குணமாகும்.

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

உளுந்தம் பருப்பை மாவாக நன்கு அரைத்து பால் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கஞ்சியாக காய்ச்சி காலை வேளைகளில் பருகி வர இதயம் பலம் பெறும். உடல் உறுதியாகும்.

வாழைப்பழத்தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

சுண்டைக்காய் வத்தலை பொடி செய்து பவுடராக்கி சமையலில் சேர்த்து வர சளி, கபம் கரையும்.
மாதுளம் பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை ரணம் நீங்கும்.

முட்டையின் வெண் கருவை பஞ்சில் தேய்த்து முகம், கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் மெதுவாக துடைக்க முகச்சுருக்கம் நீங்கும்.

நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

முருங்கைப்பூக்களை பசும்பாலில் போட்டு காய்ச்சி 41 நாட்கள் தொடர்ந்து குடித்து வர தேகம் கட்டமைப்பு பெறும். தாது விருத்தியாகும்.

வெள்ளைப்பூண்டு, வெற்றிலைக்காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வென்னீரில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளின் மாந்தம் குறையும். சளி தொல்லை நீங்கும்.

சோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.

ஆண்டுக்கு ஒரு முறை மருதாணி இடுவதால் மனக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு சேர்த்து, வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து காலில் கட்ட, எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டாயிருந்தாலும் வெளியேறி விடும்.

கை கால் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சரிசம்மாக தடவி வரவும்.

நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் கலந்து குழப்பி தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

உடல் இளைக்க சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், செவ்வியம், சித்தரத்தை, உப்பு சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும். அரிசியை வறுத்து தூள் செய்து ஏற்கெனவே தூள் செய்த பொடியுடன் சேர்த்து சாப்பிட்டு வர உடம்பு துரும்பாக இளைத்துப்போகும்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றுப்புண்ணையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப்பழம். தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும்.

கரிசலாங்கண்ணி வேர் கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் தேங்கும் கழிவு நீர்களை வெளியேற்ற உதவுகிறது.

மரிக்கொழுந்து இலையும் நில ஆவார இலையும் சம அளவு அரைத்து தலைக்கு தடவி வர செம்பட்டை முடி கருமையாகும்.

நல்லெண்ணெயில் சுண்ட வத்தலை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 1 கரண்டி சுடு சோற்றில் 2 உருண்டை சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும்.

பன நுங்கை மேல் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.

காரட், பீட்ரூட் சாப்பிடுவதால் மஞ்சள் காமாலையை தவிர்க்கலாம்.

மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி சாப்பிட்டால் வரட்டு இருமல் குணமாகும்.

வாழைப்பூவை சமையலில் வாரம் ஒருமுறை சேர்த்து வர வயிற்றுப்புண் குணமாகும்.

கானா வாழை, வேர், தண்டு, இலை இவைகளுடன் அருகம்புல் சம்மாக சேர்த்து அரைத்து கொட்டை பாக்கு அளவு எடுத்து பாலில் கலந்து கொடுக்க இரத்த பேதி குணமாகும்.

உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி ப்ப்பாளிக்காய் சாப்பிட வேண்டும்.

கீழாநெல்லி செடியை கழுவி சுத்தம் செய்து அப்படியே மைய அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை இரண்டு நாளில் குணமாகும்.

வெற்றிலையுடன் சிறிது ஓமத்தை சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.

வாதநாரயண இலையைக் காய வைத்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.

எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத்தலைவலி தீரும்.

அதிமதுரம் வில்லை அளவு துண்டு பால் விட்டு அரைத்து தலையில் தடவி 25 நிமிடம் கழித்து வெந்நீரில் 3 வாரம் குளித்து வந்தால் தலைபேன் போகும்.

வெங்காயச்சாறு, இஞ்சி ரசம், முருங்கைப்பட்டை சாறு தனித்தோ சேர்த்தோ தினமும் சாப்பிட ஆஸ்துமா கட்டுப்படும்.

ஆடாதொடை இலையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி உத்தடம் கொடுக்க கழுத்துப்பிடிப்பு குணமாகும்.

ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை 40 கிராம் 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக வற்றும் வரை காய்ச்சி இருவேளை குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளைப்படுதல் குணமாகும்.

உடல் சதை பிடிக்க 3 மாதம் தொடர்ந்து பூசணி சாப்பிடவும். உடல் மெலிய மந்தாரை வேரை நீர் விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தவும்.

கசகசாவை எருமை தயிரில் அரைத்து இரவு படுக்கப்போகுமுன் தினசரி தடவி வந்தால் முக சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.

பிராயன் மரப்பட்டையில் தைலம் செய்து அதில் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் தேய்த்து வர பல் நோய் குணமாகும்.

பச்சை மூங்கில் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி நீர் விட்டு மைய அரைத்து செருப்பு கடியின் மீது தடவி வர குணமாகும்.

கற்றாழை சாறையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணைய் விட்டு சூடு படுத்தி பூசி வர நகசுத்தி குணமாகும்.

புரசவிதை, வாயுவிளாங்கத்தை பவுடராக்கி நெல்லிக்காய் பவுடர் சேர்த்து தேன் அல்லது வெண்ணெயுடன் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் வாழலாம்.

நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வர எலும்பு காய்ச்சல் குணமாகும்.

வசம்பு தூளை தேங்காயெண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி சிரங்கு குணமாகும்.

வல்லாரை கீரையை பசும்பாலில் அவிய விட்டு உலர்த்தி பொடியாக்கவும். இந்த பொடியை வாரம் ஒருமுறை பால், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் வராது.

கடுக்காய் வேர், பட்டை, இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை அரை கரண்டி பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர தொழுநோய் குணமாகும்.

நெல்லெண்ணெயில் வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கற்பூரம் போட்டு காய்ச்சி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு விட்டு வர காதுவலி குணமாகும்.

வெற்றிலையை நறுக்கி தேங்காயெண்ணெயில் காய்ச்சி சிவந்தவுடன் இறக்கி ஆற வைத்துக்கொள்ளவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் நின்று போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டு பிசைந்து கூழாக்கி உட்கொள்ள மார்பு வலி குணமாகும்.

கண்ணாடித்துண்டால் காயம் ஏற்பட்டால் வாழைப்பழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்துக்கட்ட ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.

பேர்ரத்தை, நிலவேம்பு சம அளவு சேர்த்து அரைத்து நீரில் சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும்.

அதிமூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், உடம்பு குடைச்சல், வாதம், சுவாசக்காசம், கபநோய், இருமல் ஆகியவற்றிற்கு முள்ளங்கி நல்லது.

முசுமுசுக்கை இலையை வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, மூச்சு திணறல் குணமாகும்.

மந்தாரை இலையுடன் கொத்தமல்லி, இஞ்சி, உளுந்து, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட்டு வர வாந்தி நிற்கும்.

அரசமரக்கொழுந்து, ஆலமரக்கொழுந்து, அத்திமரக்கொழுந்து மூன்றையும் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து சாப்பிட இரத்த மலப்போக்கு நிற்கும்.

விளாம்பழம் தொடர்ந்து சாப்பிட கல்லீரல் நோய் குணமாகும்.

வெள்ளரிப்பிஞ்சு இருதய நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.

பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் ஒட்டி வைத்தால் வலி குணமாகும்.

இரவில் தலையணையில் செம்பருத்தி இலைகளை வைத்து படுத்து வந்தால் தலைப்பேன்கள் ஒழியும்.

திப்பிலி, சுக்கு, எள் மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனுடன் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். மூல நோய்க்கு துத்திக்காய் மிகவும் நல்லது.

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில் சாப்பிட்டவுடன் வென்னீரில் தேன் கலந்து குடித்து வர ஞாபக சக்தி அதிகமாகும்.

கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டு வலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றை மூக்கில் நுகர தும்மல் வந்து மூளைக்காய்ச்சல் கிருமி வெளியேறும்.

வெள்ளைப்பூண்டை கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.

தும்பை இலைச்சாறு எல்லா விஷக்கடிகளுக்கும் சிறந்த்து.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்குப்பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேக வைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தாலும் முடி உதிர்வு நிற்கும். பேன் நீங்கும்.

நல்ல சுண்ணாம்பில் விளக்கெண்ணெய் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

தினமும் 5 ஆவாரம்பூ அல்லது 1 கோவை பழம் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மூளை பலம் பெற எலுமிச்சை பழம் மிகவும் நல்லது.

விளாம்பூக்களை சுத்தம் செய்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி உள்ளுக்கு சாப்பிட்டு வர எலி விஷம் நீங்கும்.

தீப்புண்ணால் தோலின் நிறம் மாறி வெள்ளையாக இருந்தால், வேப்பம்பட்டை கஷாயம் செய்து பாட்டிலில் வைத்து குலுக்கி வரும் நுரையை வடு மீது தடவி வர தோல் பழைய நிறம் பெறும்.

காலில் முள் குத்திய இடத்தில் முள்ளை எடுத்த பின் வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அணலில் வாட்டி சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி பறந்து விடும்.

நாவல் பழம் வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை ஆற்ற வல்லது.

கருந்துளசி இலைச்சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வர கபக்கட்டு வெளியேறும்.

சௌசௌ சாப்பிடுவதால் எலும்புகளுக்கு உறுதியும், பற்களுக்கு பலமும், ஜீரண சக்தியும் கிடைக்கறது.
வாழைப்பூ வாரம் ஒருமுறை சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

நாயுருவி வேரை அரைத்து கோலி குண்டு அளவு உருட்டி 15 நாள் சாப்பிட்டு வர வெறிநாய் கடி குணமாகும்.

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 4 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

கருணைக்கிழங்கு வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் மூலம் கட்டுப்படும்.

கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டால் அக்காலங்களில் ஏற்படும் உடல் சோர்வை நீக்கி பலம் பெறும்.

இரவு படுக்குமுன் பேரிச்சம்பழம், பால் சாப்பிட்டு வர உடல் புஷ்டியாகும்.

ஞாபக சக்தி பெருக பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி சிறந்தவை.

வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு எடுத்து, அந்த சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் காக்காய் வலிப்பு குணமாகும்.

மருதாணி பூவை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து தொடர்ந்து தேய்த்து வர வழுக்கைத்தலையில் முடு வளரும்.

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் வென்னீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழவு நோய் குணமாகும்.

இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திப்பழம் சிறந்த்து. அத்திக்காய் உதட்டில் வெடிப்பு, உதட்டுப்புண்ணுக்கு சிறந்த்து.


(இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.)



No comments:

Post a Comment