ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒருவருக்கு பெற்ற தாய் தந்தையை விட பெரிய உறவு யாரும் இல்லை என்று உலகிற்கு உணர்த்திய முன்னவர், மூத்தவர், முழுமுதற்க் கடவுள்.
இவர்தான் வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர்.
” திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.”
மலர்களை கையில் எடுத்துக்கொண்டு பிள்ளையருக்கு அர்ச்சனை செய்யவும்.
1. ஓம் ஆனைமுகத்தானே போற்றி
2. ஓம் பார்வதி மைந்தனே போற்றி
3. ஓம் சங்கரன் புதல்வா போற்றி.
4. ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
5. ஓம் ஐந்துக் கரத்தனே போற்றி
6. ஓம் அறுகம்புல் உகப்பாய் போற்றி
7. ஓம் ஒற்றை கொம்பனே போற்றி
8. ஓம் அன்பர்க்கு அன்பனே போற்றி
9. ஓம் ஒவைக்கு அருளியவா போற்றி
10. ஓம் வினைகளை வேரறுப்பாய் போற்றி
11. ஓம் எருக்கம் பூமாலை அணிவோய் போற்றி
12. ஓம் இடையூறுகளை களையும் இறைவா போற்றி
13. ஓம் ஓங்கார வடிவே போற்றி
14. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
15. ஓம் அண்டங்களை ஆள்வாய் போற்றி
16. ஓம் வளமெல்லாம் தருவாய் போற்றி
ஊதுபத்தி, தீபம் காட்டவும்.
இரண்டு வாழை பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவை வைத்து அமுதூட்டவும்.
பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்குக் காட்டவும்.
பாடல் பாடவும்.
”பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடுதனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.”
வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேட்கை தணிவிப்பான் - வினாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து."
முழுமுதற்க் கடவுளான ஸ்ரீ விநாயகர் அனனவருக்கும் மங்களத்தைத் தந்தருள்க.
No comments:
Post a Comment