Friday, May 31, 2013
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா
...
அம்பாளிடம் சரணாகதி அடைந்து "அம்மா நீயே எனக்கு எல்லாமும்" என்று மனமுருகி வேண்டினால் அன்னையானவள் நிச்சயம் காத்து ரக்ஷிப்பாள். பிரார்த்தனையின் வடிவமே ஸ்தோத்ரங்கள். ஒவ்வொரு ஸ்தோத்திரத்தையும் அதற்குரிய விதிமுறைகளின் படி பாராயணம் செய்தால் நிச்சயம் வாழ்வின் விடிவெள்ளி தோன்றும். நாம் உணரக்கூடிய, வரவேற்றத்தக்க மாறுதல்கள் தென்படும்.
உலக நன்மைக்காக, பெரும் மஹான்களும் ரிஷிகளும் அருளிச் செய்திருக்கும் ஸ்தோத்ரங்கள் ஏராளம். அவை எல்லாவற்றிலும் மணிமகுடமாக கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரத்தை சொல்லலாம். ஏன்? பிற ஸ்தோத்ரங்கள் நாம் நமக்காக பிரார்த்திப்பது. ஆனால் கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம் வயிற்றில் வளரும் தன் கருவிற்காக அன்னை பிரார்த்திப்பது.
இந்த ஸ்தோத்ரத்தின் மகிமை அபாரமானது.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்,
ரிஷி சௌநகரால் இயற்றப்பட்ட மற்றுமொரு கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்.
இவற்றில் சௌநகரால் அருளப்பட்ட ஸ்தோத்ரம் மிகவும் பிரசித்தி பெற்றது.
'ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம்ʼ : (பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர்)
ஸ்ரீ மாத⁴வீ கானனஸ்த்தே க³ர்ப்ப⁴
ரக்ஷாம்பி³கே பாஹீ ப⁴க்தம் ஸ்து²வந்தம் |
( ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவுக்கு பின்னரும்...)
வாபீ தடே வாம பா⁴கே³, வாம தே³வஸ்ய தே³வீ ஸ்தி²தா த்வம்ʼ,
மான்யா வரேண்யா வதா³ன்யா, பாஹி,
க³ர்ப்ப⁴ஸ்த்த ஜந்தூன் ததா² ப⁴க்தா லோகான் . 1 (ஸ்ரீ மாத⁴வீ.... )
ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷாபுரேயா தி³வ்ய,
ஸௌந்த³ர்ய யுக்தா ,ஸுமாங்க³ல்ய கா³த்ரீ,
தா⁴த்ரீ, ஜனீத்ரீ ஜனானாம, தி³வ்ய,
ரூபாம் தயார்த்ராம் மனோஞாம் ப⁴ஜே தாம்ʼ . 2 (ஸ்ரீ மாத⁴வீ.... )
ஆஷாட⁴ மாஸே ஸுபுண்யே , ஸு²க்ர,
வாரே ஸுகந்தே⁴ன க³ந்தே⁴ன லிப்தா,
தி³வ்யாம்ப³ரா கல்ப வேஷா² வாஜ,
பேயாதி யாக்³யஸ்த்த ப⁴க்தைஸ் ஸுத்³ருஷ்டா. 3 (ஸ்ரீ மாத⁴வீ.... )
கல்யாண தா⁴த்ரீம்ʼ நமஸ்யே, வேதீ³,
கா³ட்யஸ்த்ரியா க³ர்ப⁴ ரக்ஷா கரீம்ʼ த்வாம்ʼ,
பா³லைஸ் ஸதா³ ஸேவீதா²ங்க்³ரிம், க³ர்ப்ப⁴
ரக்ஷார்த², மாராது⁴பே தை² ருபேதா²ம். 4 (ஸ்ரீ மாத⁴வீ.... )
ப்³ரஹ்மோத்ஸவே விப்ர வீத்³யாம் வாத்³ய
கோ⁴ஷேண துஷ்டாம் ரதே² ஸன்னிவிஷ்டாம்
ஸர்வார்த்த² தா⁴த்ரீம்ʼ ப⁴ஜேஹம், தே³வ
ப்ருந்தை³ரபீட்³யாம் ஜக³ன மாதரம் த்வாம்ʼ .5 (ஸ்ரீ மாத⁴வீ.... )
ஏதத்² க்ருʼதம் ஸ்தோத்ர ரத்னம், தீ³க்ஷீத²
அனந்த ராமேன தே³வ்யாஸ் ஸூதுஷ்ட்யை.
நித்யம் படேத்²யஸ்து ப⁴க்த்யா ,புத்ரா பௌத்ராதி³ பா⁴க்³யம்ʼ
ப⁴வேத் தஸ்ய நித்யம்ʼ || . 6 (ஸ்ரீ மாத⁴வீ.... )
|| இதி ஸ்ரீ ப்³ரஹ்ம ஸ்ரீ அனந்த ராம தீ³க்ஷீதா விரசிதம் க³ர்ப்ப⁴ரக்ஷாஅம்பி³கா ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம்ʼ ||
ஸ்ரீ க³ர்ப்ப⁴ரக்ஷா அம்பி³கா காயத்ரி மந்த்ர
ஓம்ʼ க³ர்ப்ப⁴ரக்ஷாம்பி³காயை ச வித்³மஹே
மங்க³ல தே³வதா³யை ச தீ⁴மஹி
தன்னோ தே³வீ ப்ரசோத³யாத் |
'ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம்ʼ : ( ரிஷி சௌநகரால் அருளப்பட்டது.)
எஷ்யேஷி பகவன் ப்ரும்ஹன், ப்ராஜா - கர்த்த: ப்ரஜா - பதே
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச- இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...1
அஸ்விநௌ தேவ தேவேசௌ, ப்ரக்ருஹ்ணீதாம் பலிம் த்விமம்
ஸாபத்யாம் கர்பிணீம் ச-இமாம் ச, ரக்ஷதம் பூஜயாSனயா ...2
ருத்ராஸா ஏகாதாஸ ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணந்து பலிம் த்விமம்
யுஷ்மாகம் ப்ரீதயே வ்ருத்தம், நித்யம் ரக்ஷந்து கர்பிணீம் ...3
ஆதித்யா த்வாதஸ ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணீத்வம் பலிம் த்விமம்
யுஷ்மாகம் தேஜஸாம் வ்ருத்த்யா, நித்யம் ரக்ஷத கர்பிணீம் ...4
விநாயக கணாத்யக்ஷ, சிவ புத்ர மஹாபல
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச-இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம்...5
ஸ்கந்த ஷண்முக தேவேஸ புத்ரப்ரீதி விவர்த்தன
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச-இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம்...6
ப்ரபாஸ: ப்ரபவஸ் - ஸ்யாம:, ப்ரத்யூஷோ மாருதோ - Sநல:
த்ருவோதரா தரஸ்சைவ, வஸவோஷ்டௌ ப்ரகீர்த்திதா:
ப்ரக்ருஹ்ணீத்வம் பலிம் ச-இமம், நித்யம் ரக்ஷத கர்பிணீம் ...7
பிதுர் - தேவி பிதுஸ் - ஸ்ரேஷ்டே, பஹு புத்ரி மஹா - பலே,
பூத ஸ்ரேஷ்டே நிஸா வாஸோ, நிர்வ்ருத்தே ஸௌநக - ப்ரியே
ப்ரக்ருஷ்ணீஷ்வ பலிம் ச - இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...8
ரக்ஷ ரக்ஷ மஹா தேவ, பக்த - அனுக்ரஹ - காரக
பக்ஷிவாஹன கோவிந்த, ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...9
ஸ்லோகங்களை ஜபிக்கும் முறை
(கீழே கொடுத்துள்ள வரிசைப்படி, தினமும் 108 முறை ஜபம் செய்வது சிறந்தது)
கருவின்
2 -ம் மாதத்தில் - முதல் 2 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
3 -ம் மாதத்தில் - முதல் 3 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
4 - ம் மாதத்தில் - முதல் 4 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
5 - ம் மாதத்தில் - முதல் 5 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
6 - ம் மாதத்தில் - முதல் 6 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
7 - ம் மாதத்தில் - முதல் 7 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
8 -ம் மாதத்தில் - முதல் 8 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
9 - ம் மாதத்தில் - எல்லா (9) ஸ்லோகங்களை ஜபிக்கவும்
(கருவின் இரண்டாவது மாதத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது இல்லை. கருவுற்றது தெரிந்தது முதலோ, அல்லது இந்த ஸ்லோகம் கிடைத்த உடனேயோ தொடங்கி, அந்த மாதத்திற்கான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதிலிருந்து சுப-ஆரம்பம் செய்யலாம்.)
1. பகவானே! ப்ரம்ஹ தேவனே! மக்களைப் படைப்பவரே ! மக்களைக் காப்பவரே ! (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்
2. அஸ்வினி தேவ தேவர்களே ! நைவேத்யத்துடன் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்வீர் ! இந்தக் குழந்தையோடு கூடிய கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.
3. ஏகாதச ருத்ர தேவர்களே ! உங்களது விருப்பத்திற்காகவும், க்ருபைக்காகவும் செய்யப்பட்ட நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
4. துவாதச ஆதித்ய தேவர்களே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! உங்களது அதீதமான தேஜஸினால் குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
5. விநாயகரே ! கணபதியே ! சிவபெருமான் மைந்தரே ! மஹா பலசாலியே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.
6. கந்தக் கடவுளே ! ஷண்முக தேவனே ! புத்திரர்களிடம் அன்பை வளர்த்துக் கொள்ள அருளுபவரே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
7. ப்ரபாஸர், ப்ரபவர், ஸ்யாமர், ப்ரத்யூஷர், மாருதர், அநலர், த்ருவர், தராதரர் ஆகிய கீர்த்தி மிகுந்த அஷ்ட வஸூ தேவர்களே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.
8. என் முன்னோர்களுக்கும் (பிதுர்களுக்கும்) தேவியாக விளங்கிய தேவியே ! பிதுர்களை எல்லாம் விட சிறப்பு மிக்க அன்னையே ! மக்கள் அனைவரையும் குழந்தைகளாகக் கொண்டு தாயாக விளங்குபவளே ! மிகுந்த ஆற்றல் உடைய பராசக்தியே ! அனைத்திற்கும் (அனைத்துப் பொருள்களுக்கும்) மேலானவளே ! ராத்திரி தேவியாக இருந்து காத்து ரக்ஷிப்பவளே ! தோஷங்களற்ற லலிதா பரமேஸ்வரியே ! சௌநகரால் ப்ரியத்துடனும் பக்தி ஸ்ரத்தையுடனும் பூஜிக்கப்பட்ட மாதாவே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வாயாக ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷித்தருள்வாயாக.
9. மஹாதேவனே ! பக்தர்களுக்கு அருள்புரிபவனே ! காத்தருள்வாய். கருடனை வாகனமாகக் கொண்ட கோவிந்தா ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.
...
வம்ச வ்ருத்திகரம் வம்ச கவசம்
(இதை ஜபிப்பதால் புத்ர லாபமுண்டாகும். கர்ப்ப விச்சித்தி (அபார்ஷன்) ஏற்படும் ஸ்திரீகளும் இதை ஜபிப்பதால் உயிருடன் கூடிய நல்ல புத்ரர்களைப் பெறுவார்கள். பெண்களையே பெறுபவர்களுக்கும் புத்ர லாபம் உண்டாகும். ருதுவாகாத பெண்கள் இதை ஜபித்தால் ருது ஆவார்கள். புத்ர லாபத்தைக் கோரும் ஸ்திரீகள் ஒரு பாத்திரத்தில் தீர்த்தத்தை எதிரில் வைத்துக் கொண்டு இதில் சொல்லியபடி அங்கங்களைக் கையினால் தொட்டு ஏழு முறை இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து ஜலத்தையும் உட்கொள்ளவும். கர்பஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படும் ஸ்திரீகள் சாயங்காலத்தில் மேற்சொல்லியபடி ஏழு முறை ஜபித்து தீர்த்தத்தை சாப்பிட வேண்டும். இதனால் நிச்சயம் வம்சவிருத்தி உண்டாகும்.)
ஸ்ரீ கணேஸாய மந: பகவன் தேவதேவேஸ க்ருபயா த்வம் ஜகத்ப்ரபோ |
வம்ஸாக்ய கவசம் ப்ரூஹி மஹ்யம் ஸிஷ்யாயதேSனக ||
யஸ்ய ப்ரபாவாத்தேவேஸ வம்ஸவ்ருத்திர்ஹி ஜாயதே ||
தேவர்களுக்கு எல்லாம் தேவனும், குற்றமற்றவனும் உலகத்திற்குப் பிரபுவமான ஹே பகவானே! நீ தயவு செய்து சிஷ்யனான எனக்கு எதனுடைய மஹிமையால் வம்ச விருத்தி ஏற்படுமோ அத்தகைய வம்ச கவசத்தைச் சொல்.
ஸூர்ய உவாச -
ஸ்ருணு புத்ர ப்ரவக்ஷ்யாமி வம்ஸாக்யம் கவசம் ஸூபம்
ஸந்தானவ்ருத்திர் யத் பாடாத் கர்ப்பரக்ஷா ஸதா ந்ருணாம்
வந்த்யாபி லபதே புத்ரம் காகவந்த்யா ஸூதைர்யுதா
ம்ருதவத்ஸா ஸபுத்ராஸ்யாத் ஸ்ரவத்கர்ப்பா ஸ்திரப்ரஜா
அபுஷ்பா புஷ்பிணீ யஸ்ய தாரணாச்ச ஸூகப்ரஸூ
கன்யா ப்ரஜா புத்ரிணீஸ்யா தேதத் ஸ்தோத்ர ப்ரபாவத:
பூதப்ரேதாதிஜா பாதா யா பாதா குல தோஷஜா
க்ரஹ பாதா தேவ பாதா பாதா ஸத்ரு க்ருதா ச யா
பஸ்மீபவந்தி ஸர்வாஸ்தா: கவசஸ்ய ப்ரபாவத:
ஸர்வே ரோகா விநஸ்யந்தி ஸர்வே பாலாக்ரஹாஸ்ச யே
(ஸூர்யன் சொல்லுகிறார் :-
ஹே புத்ரனே, எந்த ஸ்தோத்திரத்தைப் படித்தால் ஸந்தான வ்ருத்தியும் எப்பொழுதும் கர்ப்ப ரக்ஷையும் உண்டாகுமோ அத்தகைய மங்களமான வம்ச விருத்தியைக் கொடுக்கும் கவசத்தை சொல்லுகிறேன் கேள்.
இதைப் படிப்பதால் மலடியும் புத்ர பாக்யம் பெறுவாள். கர்ப்பத்திலேயே குழந்தை மரிக்கும் தன்மையுள்ள ஸ்திரீயும் உயிருடன் கூடிய பிள்ளையைப் பெறுவாள். கர்ப்பவிச்சித்தி உள்ளவளும் ஸ்திரமான ப்ரஜையை அடைவாள். மேலும் இதன் மஹிமையால் புஷ்பவதியாகாதவள் புஷ்பவதியாவாள். ஸூக ப்ரசவம் ஏற்படும். பெண்களையே பெற்றெடுப்பவள் புத்ரர்களையும் பெறுவாள்.
மற்றும் இதன் மஹிமையால் பூத ப்ரேதங்களால் ஏற்படும் கெடுதலும் குடும்பத்தில் பெரியோர்களால் ஏற்பட்ட தோஷமும், க்ரஹங்களாலும், தேவர்களாலும், சத்ருக்களாலும் ஏற்படும் பீடைகளும், எல்லா ரோகங்களும், பால க்ரஹங்களும் சாம்பலாகி விடுகின்றன.)
பூர்வே ரக்ஷது வாராஹீ சாக்னேய்யாமம்பிகா ஸ்வயம்
தக்ஷிணே சண்டிகா ரக்ஷேந் நைர்ருத்யாம் ஸவவாஹினீ
வாராஹீ பஸ்சிமே ரக்ஷேத் வாயவ்யாம் ச மஹேஸ்வரீ
உத்தரே வைஷ்ணவீ ரக்ஷே தீஸானே ஸிம்ஹ வாஹினீ
ஊர்த்வம்து ஸாரதா ரக்ஷேததோ ரக்ஷது பார்வதீ
ஸாகம்பரீ ஸிரோ ரக்ஷேன்முகம் ரக்ஷது பைரவீ
கண்டம் ரக்ஷது சாமுண்டா ஹ்ருதயம் ரக்ஷதாச்சிதா
ஈஸானீச புஜௌ ரக்ஷேத்குக்ஷிம் நாபிம் ச காலிகா
அபர்ணாஹ்யுதரம் ரக்ஷேத்கடிம் பஸ்திம் ஸிவப்ரியா
ஊரு ரக்ஷது கௌமாரீ ஜயா ஜானுத்வயம் ததா
குல்பௌ பாதௌ ஸதா ரக்ஷேத் ப்ரஹ்மாணீ பரமேஸ்வரீ
ஸர்வாங்கானி ஸதா ரக்ஷேத் துர்கா துர்கார்த்தி நாஸினீ
(கிழக்கில் வாராஹியும், அக்னி திக்கில் அம்பிகையும், தெற்கில் சண்டிகையும், நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும், மேற்கில் வாராஹியும், வாயு திக்கில் மஹேஸ்வரியும், வடக்கில் வைஷ்ணவியும், ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும், மேலே சாரதையும், கீழே பார்வதியும், சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும், கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும். புஜங்களை ஈசானியும், மார்பையும், நாபியையும், காலிகையும், வயிற்றை அபர்ணையும், இடுப்பையும், மூத்திர பையையும் சிவப்ரியையும், துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும், கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும், எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான துர்க்கையும் எப்பொழுதும் காக்க வேண்டும்.)
நமோ தேவ்யை மஹாதேவ்யை துர்காயை ஸததம் நம:
புத்ர ஸௌக்யம் தேஹி தேஹி கர்ப்பரக்ஷாம் குருஷ்வ ந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐம் ஐம் ஐம் மஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வதீ ரூபாயை நவகோடி மூர்த்யை துர்காயை நம: |
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாஸினி ஸந்தான ஸௌக்யம் தேஹி தேஹி வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் ச ஹரஹர கர்ப்பரக்ஷாம் குரு குரு ஸகலாம் பாதாம் குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம க்ருதாம்ச நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ ரக்ஷ கர்ப்பம் போஷய போஷய ஸர்வோபத்ரவம் சோஷய ஸ்வாஹா ||
அனேன கவசேனாங்கம் ஸப்தவாராபிமந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத் கர்ப்பவதீ த்ருவம்
(மஹாதேவியான துர்க்கா தேவிக்கு எப்பொழுதும் நமஸ்காரம். புத்திர சௌக்யத்தைக் கொடு. கொடு. எங்களுக்குக் கர்ப்ப ரக்ஷையைச் செய்.
ஓம் ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம், ஸ்ரீம், ஸ்ரீம், ஸ்ரீம், ஐம், ஐம், ஐம், மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ ரூபியும், ஒன்பது கோடி மூர்த்தியாயுமுள்ள துர்க்கையின் பொருட்டு நமஸ்காரம்.
ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம், ஹே கடும் பீடையைப் போக்குபவளே, ஸந்தான ஸௌக்யத்தைக் கொடு கொடு. மலடியாயிருத்தலையும், குழந்தைகள் இறந்து போவதையும் போக்க வேண்டும். போக்க வேண்டும். கர்ப்ப ரக்ஷையைச் செய். செய். குலத்தில் உண்டானதும், வெளியில் உண்டானதும், பிறரால் செய்யப்பட்டதும் தன் கர்ம வசத்தால் ஏற்பட்டதுமான எல்லா விதமான பீடையையும் அழித்துவிடு. அழித்துவிடு. எல்லா சரீரங்களையும் காப்பாற்று. காப்பாற்று. கர்ப்பத்தை விருத்தி செய். விருத்தி செய். எல்லாவிதமான உபத்ரவத்தையும் போக்கிவிடு, போக்கிவிடு.
இந்த கவசத்தை பஹிஷ்டையாயிருந்து ஸ்நானம் செய்த மறுதினம் முதல் "சாகம்பரீ சிரோரக்ஷேத்" என்று சொல்லப்பட்டபடி எதிரில் தீர்த்தத்தை வைத்துக் கொண்டு ஏழுமுறை அங்கங்களைத் தொட்டுக் கொண்டும், ஜபித்தும் தீர்த்தத்தை ப்ராசனம் செய்வதால் நிச்சயமாக கர்ப்பவதியாவாள்.)
கர்ப்பபாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜிதாய நிஸாகமே
ஸர்வபாத வினிர்முக்தா கர்ப்பிணீ ஸ்யாந்நஸம்ஸய:
அனேன கவசேனேஹ க்ரந்திதம் ரக்ததோரகம்
கடிதேஸே தாரயந்தீ ஸூபுத்ரஸூகபாகினீ
அஸூதபுத்ரமிந்த்ராணீ ஜயந்தம் யத்ப்ரபாவத:
குருபதிஷ்டம் வம்ஸாக்யம் கவசம் ததிதம் ஸகே
குஹ்யாத் குஹ்யதரம் சேதம் ந ப்ரகாஸ்யம் ஹி ஸர்வத:
தாரணாத் படனாதஸ்ய வம்ஸச்சேதோ ந ஜாயதே
பாலாவினஸ்யந்தி பதந்தி கர்ப்பா ஸ்தத்ராபலா: கஷ்டயுதாஸ்ச வந்த்யா:
பாலக்ரஹைர் பூதகணைஸ்சரோகைர் ந யத்ர தர்மாசரணம் க்ருஹே ஸ்யாத்
(கர்ப்பம் கலைந்து விடும் என்று பய மேற்பட்ட போது, மேற்கண்ட தீர்த்தத்தைப் ப்ராசனம் செய்வதால் ஸ்திரமான கர்ப்பமுடையவளாவாள். ஸாயங்காலத்தில் இக்கவசத்தை ஜபித்து அங்கங்களை புரோக்ஷித்துக் கொண்ட கர்ப்பிணியானவள் எல்லாவித பாதைகளினின்றும் விடுபடுவாள். இதில் ஸந்தேஹமே இல்லை. இக்கவசத்தை முடியிட்ட சிகப்பு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜபித்தால் ஸத்புத்ர ஸூகம் உடையவளாவாள். இதன் மஹிமையால் இந்த்ராணியானவள் ஜயந்தனென்ற புத்திரனை பெற்றெடுத்தாள். ஹே நண்பனே, ரஹஸ்யத்தினும், ரஹஸ்யமானதும் குருவினால் உபதேசிக்கப்பட்டதுமான வம்ச கவசத்தை எங்கும் வெளியிடக்கூடாது. இதைப் படிப்பதால் வம்சத்துக்கு அழிவு ஏற்படாது. எந்த வீட்டில் தர்மானுஷ்டானம் இல்லையோ அங்கு குழந்தைகள் இறக்கிறார்கள். கர்ப்பம் சிதறும். ஸ்திரீகள் மலடிகளாயும், பாலக்ரஹம், பூதகணம், ரோகம் முதலிய கஷ்டங்களால் பீடிக்கப்பட்டவர்களாயும் ஆகிறார்கள். இதனால் க்ருஹங்களில் எப்பொழுதும் நல்ல கார்யங்கள் நடக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.)
|| இதி ஸ்ரீ ஞானபாஸ்கரே வம்சவ்ருத்திகரம் வம்ச கவசம் ஸ்ம்பூர்ணம் ||
...
புத்ரப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம்
॥ पुत्रप्राप्तिकरं महालक्ष्मीस्तोत्रम् ॥
अनाद्यनन्तरूपां त्वां जननीं सर्वदेहिनाम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 1 ॥
नामजात्यादिरूपेण स्थितां त्वां परमेश्वरीम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 2 ॥
व्यक्ताव्यक्तस्वरूपेण कृत्स्नं व्याप्य व्यवस्थिताम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 3 ॥
भक्तानंदप्रदां पूर्णां पूर्णकामकरीं पराम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 4 ॥
अन्तर्याम्यात्मना विश्वमापूर्य हृदि संस्थिताम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 5 ॥
सर्पदैत्यविनाशार्थं लक्ष्मीरूपां व्यवस्थिताम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 6 ॥
भुक्तिं मुक्तिं च या दातुं संस्थितां करवीरके ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 7 ॥
सर्वाभयप्रदां देवीं सर्वसंशयनाशिनीम् ।
श्रीविष्णुरूपिणीं वंदे महालक्ष्मीं परमेश्वरीम् ॥ 8 ॥
॥ इति श्री करवीरमाहात्म्ये पराशरकृतं पुत्रप्राप्तिकरं श्रीमहालक्ष्मीस्तोत्रं संपूर्णम् ॥
|| புத்ரப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் ||
அனாத்³யனந்தரூபாம் த்வாம் ஜனனீம் ஸர்வதே³ஹினாம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 1 ||
நாமஜாத்யாதி³ரூபேண ஸ்தி²தாம் த்வாம் பரமேஸ்²வரீம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 2 ||
வ்யக்தாவ்யக்தஸ்வரூபேண க்ருத்ஸ்னம் வ்யாப்ய வ்யவஸ்தி²தாம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 3 ||
ப⁴க்தானந்த³ப்ரதா³ம் பூர்ணாம் பூர்ணகாமகரீம் பராம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 4 ||
அந்தர்யாம்யாத்மனா விஸ்²வமாபூர்ய ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தாம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 5 ||
ஸர்பதை³த்யவினாஸா²ர்த²ம் லக்ஷ்மீரூபாம் வ்யவஸ்தி²தாம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 6 ||
பு⁴க்திம்ʼ முக்திம் ச யா தா³தும் ஸம்ஸ்தி²தாம் கரவீரகே |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 7 ||
ஸர்வாபயப்ரதா³ம் தே³வீம் ஸர்வஸம்ஸ²யனாஸி²னீம் |
ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 8 ||
|| இதி ஸ்ரீ கரவீரமாஹாத்ம்யே பராச²ரக்ருதம் புத்ரப்ராப்திகரம் ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
...
பா³லரக்ஷா ஸ்தோத்ரம்
बालरक्षा स्तोत्रं
इंद्रियाणि हृषीकेशः प्राणन्नारायणोऽवतु । श्वेतद्बिपपतिश्चितं मनो योगेश्वरोऽवतु ॥
पृश्निगर्भस्तु ते बुध्दिमात्मानं भगवान्परः । क्रीडंतं पातु गोविदः शयानं पातु माधवः॥
व्रजंतमव्याद्वैकुंठ आसीनं त्वां श्रियः पतिः। भुंजानं यज्ञमुक् पातु सर्वग्रहभयंकरः॥
डाकिन्यो यातुधान्यश्च कूष्मांडा येऽर्भकग्रहाः । भूतप्रेतपिशाचाश्च यक्षरक्षोविनायकाः॥
कोटरो रेवती ज्येषठा पूतना मातृकादयाः । उन्मादा ये ह्मपस्मारा देहप्राणेन्द्रियद्रुहः॥
स्वप्न स्वप्नदृष्टा महोत्पाता वृध्दबालग्रहाश्च ये । सर्वे नश्यंतु ते विष्णोर्नामग्रहणभीरवः॥
इति प्रणयवध्दाभिर्गोपीभिः कृतरक्षणम् । पायायित्बा स्तनं माता संन्यवीविशदात्मजम् ॥
इति श्रीबालरक्षास्तोत्रं संपूर्णम् ॥
பா³லரக்ஷா ஸ்தோத்ரம்
இந்த்³ரியாணி ஹ்ரு'ஷீகேஸ² ப்ராண நாராயணோ(அ)வது |
ஸ்²வேதத்³பி³பபதிஸ்²சிதம்' மனோ யோகே³ஸ்²வரோ(அ)வது ||
ப்ரு'ஸ்²னிக³ர்பஸ்து தே பு³த்தி³மாத்மானம்' பக³வான்பர: |
க்ரீட³ந்தம்' பாது கோ³வித³ ஸ²யானம் பாது மாதவ: ||
வ்ரஜந்தமவ்யாத்³வைகுண்ட² ஆஸீனம்' த்வாம்' ஸ்²ரிய: பதி: |
புஞ்ஜானம்' யஜ்ஞமுக் பாது ஸர்வக்³ரஹபயங்கர: ||
டா³கின்யோ யாதுதான்யஸ்²ச கூஷ்மாண்டா³ யே(அ)ர்பகக்³ரஹா: |
பூதப்ரேதபிஸா²சாஸ்²ச யக்ஷரக்ஷோவினாயகா: ||
கோடரோ ரேவதீ ஜ்யேஷ்டா² பூதனா மாத்ருகாத³யா: |
உன்மாதா³ யே ஹ்மபஸ்மாரா தே³ஹப்ராணேந்த்³ரியத்³ருஹ: ||
ஸ்வப்ன ஸ்வப்னத்³ருஷ்டா மஹோத்பாதா வ்ரு'த்த³பா³லக்³ரஹாஸ்²ச யே |
ஸர்வே நஸ்²யந்து தே விஷ்ணோர் நாமக்³ரஹணபீரவ: ||
இதி ப்ரணயவத்தா³பிர்கோ³பீபி: க்ரு'தரக்ஷணம் |
பாயாயித்பா³ ஸ்தனம்' மாதா ஸம்'ன்யவீவிஸ²தா³த்மஜம் ||
இதி ஸ்ரீபா³லரக்ஷா ஸ்தோத்ரம்' ஸம்பூர்ணம் ||
குழந்தைக்கு ஐந்து வயது வரை மிகுந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியாது. அறியா பருவம். எல்லாமே விளையாட்டு. பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே, ஸ்ரீ கிருஷ்ணராக திருஅவதாரம் செய்த போது, அவர் செய்த லீலைகள் தான் எத்தனை... எத்தனை.... 'விஷமக்காரக் கண்ணன்' என்று பாடும் அளவுக்குக் குறும்புத்தனமே வடிவெடுத்தாற்போலிருந்த அந்தப் பரம்பொருளின் லீலா விநோதங்களால், அவரது தாயாகும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு பொழுதெல்லாம் ஒரே கவலைதான். எல்லாம் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே, குழந்தையாக அடைந்த போதும் யசோதை இத்தனை கவலை கொண்டாள் என்றால், சாதாரண மானிடப் பிறவிகளான நாம், நம்முடைய குழந்தைகளை எப்படிக் காப்பது?'. குழந்தை பருவம் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதனால் அந்தப்பருவத்தில் தாய்க்குத்தான் பொறுப்பு மிக அதிகமாகிறது. ஆகவே தன்னுடைய குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பை இவ்வுலகை காக்கும் ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் அளித்து வேண்டுவதான இந்த அற்புதமான ஸ்தோத்ரம் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது. மனதை விஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் ஒருமுகமாக நிலைநிறுத்தி, நம்பிக்கையோடும், பக்தியோடும் தினமும் பாராயணம் செய்தால் நிச்சயமாக பலன் சித்தியாகும். இந்த ஸ்தோத்ரத்தை கர்ப்பகாலத்திலிருந்து குழந்தைக்கு 5 வயது வரை ஜபித்து வரலாம்.
இந்த ஸ்லோகம், ஒரு தாய், ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் பலவாறு துதித்து, தன் குழந்தையைக் காக்க வேண்டுவது போல் அமைந்துள்ளது.
அச்யுதா, கேசவா, நாராயணா, கோவிந்தா என்று மஹாவிஷ்ணுவின் திவ்ய நாமங்களால் ஸ்ரீபதியை அழைத்து தன்னுடைய குழந்தையை பத்து திசைகளிலும் காக்குமாறு வேண்டுகிறாள். பத்து திசைகள் என்றால் எட்டு திசைகளோடு, பூமி, ஆகாயம் இரண்டையும் சேர்த்து பத்து திசைகளாக கருத்தில் கொண்டு பகவானை வேண்டுகிறாள்.
பின்னர் தனித்தனியாக, மஹாவிஷ்ணுவின் திவ்ய ஸ்வரூபத்தின் திருநாமங்களை ஒவ்வொன்றாகத் துதித்து, குழந்தையைக் காக்குமாறு வேண்டுகிறாள். ரிஷிகேசரை குழந்தையின் உடலின் அங்கங்களையும், நாராயணரை ப்ராணனையும், யோகேஷ்வரை மனதையும், ஸ்வேதத்விபதியை சித்தத்தையும், ப்ரூஷ்ணிகர்ப்பரை புத்தியையும், ஸ்ரீ பகவானை ஆத்மாவையும், கோவிந்தரை விளையாடும் பொழுதும், மாதவரை தூங்கும் போதும், யக்ஞ்பாஹூவை உண்ணும் போதும் மற்றும் நவக்கிரஹ பீடைகளிலிருந்தும் காக்குமாறு வேண்டுகிறாள். அசுர சக்திகளிடமிருந்து காக்க தேவி கூஷ்மாண்டாவையும், பூத, பிரேத, பிசாசுகளிடமிருந்து காக்க ஸ்ரீ விநாயகரையும், மனநோய்கள், வலிப்பு போன்றவற்றிலிருந்து காக்க மத்ருகடையர், ஜேஷ்டா, ரேவதி ஆகியோரிடமும் வேண்டுகிறாள்.
...
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா தோற்றம் பற்றிய கதை - STORY OF GARBHARAKSHAMBIKA
Here is the story of Goddess Garbharakshambika (an incarnation of Goddess Parvati) and why she is known as the protector of the womb.
Once there lived a Rishi called Nidhruva who lived with his beautiful wife Vedhika in an Ashram. He spent his life praying to the lord and performing holy rites. They were very happy, except that they didn’t have a child, so they prayed fervently to the lord to be blessed with a child. After many prayers Vedhika became pregnant. Everything was going on well and the couple were eagerly expecting their first born child.
One day Nidhruva left to visit Lord Varuna by travelling through the skies. The rishis in those days had many powers. Vedhika was in the third trimester of her pregnancy, When he was gone, Sage Urdhvapada visited the Ashram. Vedhika was alone in the ashram and since she was in an advanced state of pregnancy and very tired after the daily household chores, she was lying down and taking rest. Vedhika didn't notice the Rishi or hear him, therefore, she failed to respond and unwittingly failed to offer, due hospitality to the guest. Urdhvapada felt terribly insulted and unaware of her pregnancy got incensed at her conduct and cursed her for not paying due respects to him.
He cursed that she should suffer from a disease called “Rayatchu”, as a result of which poor Vedhika was struck with a foul disease, which began to eat into the very vitals of not only herself but also the child in her womb. Vedhika realized the effect of the curse and that the baby in the womb had become disformed because of this curse. The helpless Vedhika fervently prayed for relief to Goddess Parvati who in the plentitude of her mercy appeared before Vedhika, the Goddess offered protection to the embryo by keeping it in a divine pot till it bloomed into a full-fledged child.
The foetus that was saved by Goddess Parvathi develops into a beautiful healthy male child called Naidhruvan, who receives blessings from Lord Shiva (Mullaivana Nathar) and Goddess Parvati. The holy cow Kamadhenu gives its milk to the newborn baby thus blessing and nourishing the baby.
When sage Nidhruva returned and heard what had happened, he was overwhelmed by the grace of the Almighty. He prayed to Lord Shiva (MullaivanaNathar) and Goddess Parvati (Garbharakshambika) that they should shower their blessings to all devotees praying to them.
He fell at the feet of Goddess Parvati and prayed that she should take a permanent abode at the place and continue to offer protection to future generations of women also. Thus we find this prayer being fulfilled even to this day.
Since the Goddess Parvathi appeared in the form of a savior to protect Vedhika’s unborn child, she was known as Shri Garbharakshambika (The one who protects the unborn child or the one who protects the womb)
To this day, pregnant women visiting this temple at Tanjore and praying to Shri Garbharakshambika have a peaceful delivery and it is believed that the Devi takes care of them and vouches safety to women during pregnancy and childbirth, just as she took care of Vedhika.
...
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
வலைப்பதிவர் அனனவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Courtesy: http://kshetrayaatra.blogspot.in/. &. http://sukanya-keralaiyer.blogspot.in/
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment