Saturday, September 29, 2012

டாக்டர் சிவகடாட்சம் .. Dr N Sivakadaksham



இன்று உலக இருதய தினம் ...

என் இருதயம், இதயத் துடிப்பு இரண்டும் 'சிவ கடாட்சம்'.
ஏன்?
என்னுடைய மருத்துவர் பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சம் அவர்கள்.

Today is World Heart Day ...

Both my Heart and Heartbeat are 'siva kadasham'.
Why?
My Doctor is the world famous Cardiac specialist Dr N Sivakadaksham.

His smiling face and affectionate loving care & brotherly talk are my mental-solace, as well as, heart-solace.

For past 12 years, he maintains my heart. With the lowest 25mg tablet twice a day.




படுபயங்கர பிஸியாக இருக்கிறார் இந்தியாவின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சிவகடாட்சம்.

" அதுதான் கஷ்டமாக இருக்கு... நாங்க பிஸியாக இருந்தா நோய்களெல்லாம் ஓவர்டைம் பண்ணுதுனுதானே அர்த்தம்... அப்படி இருந்தா நல்லதில்லையே... நம்ம உடம்பை நாமேதான் நோய்க்கு பரிசாக் கொடுத்துடறோம்... சில பழக்கங்களால்! " என்று ஜாலியாகப் பேசிய சிவகடாட்சத்திடம் அவருடைய நேரத்தை வீணாக்காமல் ஒரு 20/20 பேட்டியை முடித்தோம்!

யாருக்கு வருது இதயநோய்..?

இதய நோயாளிகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்... மேற்கத்திய நாடுகளில் 60 வயதுக்குப் பிறகு வரும் இதய நோய் இந்தியாவில் 32லிருந்து 50 வயதுக்குள்ளாகவே வந்துவிடுகிறது. இதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். ஆக, 30 ப்ளஸ் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்

என்ன செய்தால் இதயம் பாதிக்கப்படும்?

புகைப்பிடித்தல், புகையிலை பொருட்கள் உபயோகித்து அந்த உமிழ் நீரை விழுங்குவது, மூக்குப்பொடி பழக்கம் இவையெல்லாம் இதய நோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதயநோய் வரும்... பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

அது எப்படி... அவர்களை எப்படி பாதிக்கும்..?

அப்படிப்பட்டவர்கள் ரத்தக் கொதிப்பு, அதிகமான உப்பு, அதிக எடை, ஒபிசிட்டி (உடல்பருமன்), உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான கொழுப்பு உடையவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால் கொழுப்பு கெட்டதா..?

கொழுப்பில், எச்டிஎல் வகை கொழுப்பு & உடலுக்கு நன்மை தரக்கூடியது. இது ஆண்களுக்கு 40 மில்லி கிராமும், பெண்களுக்கு 50 மில்லி கிராமும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு 30 மில்லி கிராமுக்கும் குறைவாகத்தான் இந்தக் கொழுப்பு இருக்கிறது.

தீங்கு விளைவிக்கும் கொழுப்பு எது..?

டிரைக்ளிசரைட்ஸ் வகை கொழுப்பு & உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இது உடலில் அதிகம் சேர்வதால் இதயநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறன. இந்தியாவில் டிரைக்ளிசரைட் கொழுப்பு உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

இந்த கொழுப்பு சேராமல் இருக்க... இதயநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

இதய நோய் வராமல் இருக்க வேண்டுமானால், சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

அப்போ மத்தவங்களுக்கு..?

இப்படி எந்தப் பிரச்னையுமே இல்லாதவர்களுக்குக்கூட இதய நோய் வரும். மருத்துவ துறையில் இதை அசோஸியேட் ரிஸ்க் ஃபேக்டர் என்று அழைக்கிறோம். காரணம், அவர்களுக்கு எதனால் இதயநோய் வருகிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

சரி, இதயநோய் வராமல் இருக்க என்ன செய்வது..?

நிறைய காய்கறி & பழங்கள் நிறைய சாப்பிடுங்க. ஒரு நாளைக்கு சராசரியாக 150லிருந்து 260 கிராம் வரை காய்கறியும் அதே அளவு பழமும் உட்கொள்வதால் இதயத்துக்கு போகும் ரத்தக் குழாய்களில் அடைப்பு வராமல் இருக்கும்.

அப்புறம்..?

தினமும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம். நோய் உள்ளவர்கள் மட்டும்தான் என்று இல்லை, பொதுவாக எல்லோருமே தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அவ்ளோதானா..?

தியானம், யோகா, நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதாலும் இதய நோய் வராமல் தடுக்கமுடியும். இயந்திரத்தனமான வாழ்க்கையால், யாருமே உடற்பயிற்சிக்காக இன்று நேரம் ஒதுக்குவது இல்லை.

உடலைப் பேணினால் போதுமா..?

மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் இதய நோய் வராது. அதற்கு அதிகமான பணிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டென்ஷன் கூடவே கூடாது!

அது தவிர... வேறென்ன செய்யணும்..?

சரியான தூக்கம்... இது ரொம்ப முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியம்.

சரி, இதயநோய் வந்திருப்பதை எப்படி அறிவது?

சாப்பிட்டுவிட்டு நடக்கும்போதோ, கையில் பளுவுடன் நடக்கும்போதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி ஒரு வலி ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்கலாம்.

அது சாதாரண வலியாகக் கூட இருக்கலாமே..?

பலரும் இப்படித்தான் அலட்சியம் காட்டுகிறார்கள்... இப்படிப்பட்ட பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் வெறும் வயிற்றில் நடந்தாலும், பளுவின்றி நடந்தாலும் நெஞ்சை அழுத்துவது மாதிரி வலி ஏற்படத் தொடங்கும். இது நோய் முற்றி வருவதற்கான அறிகுறி.

அப்படி வந்தால் அது அட்டாக்கா..?

சிலருக்கு திடீரென்று வேர்த்து விறுவிறுக்கும், சோர்வடைவார்கள். இது சைலன்ட் ஹார்ட் ஹட்டாக். இந்த வகை தாக்குதலையும் உடனே கவனிக்க வேண்டும்.

நோய் வந்துட்டா என்ன செய்யணும் டாக்டர்..?

இதயத்துக்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் ஒரு குழாயில் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் சுலபமாக அடைப்பை நீக்கிவிட முடியும். இரண்டு மற்றும் மூன்று குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால், பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம்தான் அந்த அடைப்பை நீக்க முடியும்.

ஆபரேஷன்தான் ஒரே தீர்வா..?

ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரையின் மூலமும், அதிலும் முடியாமல் போனால், ஆன்ஜியோபிளாஸ்டி முறையிலும், அதற்கடுத்த நிலையாக அறுவை சிகிச்சை மூலமும் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.

ஆபரேஷன் செய்தால் நடமாடமுடியுமா..?

பலருக்கும் இருக்கும் சந்தேகம் இது. நோயோடு இருக்கும்போது நடமாடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நோய் தீர்ந்த பிறகு ஏன் இந்த சந்தேகம் வருகிறது. உங்கள் உடல்நிலையைப் பொறுத்து உங்களால் எல்லா வேலைகளையும் முன்பு போலச் செய்யமுடியும்.

ஆபரேஷனுக்கு பிறகு என்ன மாறுதல் தேவை..?

ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் அந்தக் காயம் ஆறும் வரையில் ஓய்வாக இருக்கவேண்டும். அதன்பிறகு டாக்டரின் ஆலோசனையின் பேரில் சகஜமாக வாழலாம். ஆனால், அதன்பிறகு தேவையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போறவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பழைய தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும்.

மீண்டும் வருமா இதயநோய்..?

அது உங்கள் நடவடிக்கையைப் பொறுத்த விஷயம்... இதயத்துக்கு தொல்லை கொடுக்காத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் சிக்கலில்லை. முறையான மருத்து மாத்திரைகள், சீரான இடைவெளியில் மருத்துவ ஆலோசனை என்று வாழ்ந்தால் நூறு வயது வாழலாம்!


No comments:

Post a Comment