Friday, September 7, 2012

ஸ்ரீஅகத்திய மகரிஷி ...


சித்தர்கள் திருவடிக்கே சரணம்
ஓம் ஸத்குருபாதம் போற்றி!
ஓம் நவகோடி சித்தர்பாதம் போற்றி!

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி ...

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத

அகத்தியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம:
-----

பதினாறு போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
-----

அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்க ....

மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

...

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!

காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.

பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.

ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.

குளித்தபின் உணவு உண்ணுங்கள்.

பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.

பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.

வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள். ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.

மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.

பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.

கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.

மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.

பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி

வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.

லுங்கி, கைலி அணியாதீர்கள். வறுமை வாட்டும். வேஷ்டியே நல்லது. நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.

வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள். இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.

புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.

அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.

மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.

குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.


அகத்தியரின் சில அறிவுரைகள்!

உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது. அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல். கணவன் மனைவி பிரிய வேண்டி வரும்.

சாலி கிராமத்தில் பல வகைகள் உண்டு. இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாளிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது. அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும். ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்ஹாரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்ஹர் சாளிக்ராமமாக மாறியது. அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டி சுவராக்கி விடும். கெட்ட ஆவிகள் கொடிகட்டி பரக்க ஆரம்பிக்கும்.

ஒரு மனிதனுக்கு ஜாதகம் என்பது, எப்போது கருவாக உருவாகிறானோ அப்பொழுதே ஜாதகம் கணிக்க பட்டாயிற்று. அது தான் உண்மையான ஜாதகம். ஆனால், இதை பிரம்மாவும், சித்தர்களும் தான் அறிவார்கள். பிறந்த நேரப்படி ஜாதகம் என்பது மனிதர்கள் எழுதுவது. அது உண்மையான ஜாதகம் அல்ல.

ஒரு திருமணத்தில் தாலி என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. அதை செய்யும் முறை ஒன்று உண்டு. வீட்டிற்கு பொற்கொல்லரை அழைத்து வந்து, ஒரு அருமையான நன்னாளில், சந்திராஷ்டமம் இல்லாத நாளில், அஷ்டமி, நவமியைத் தவிர்த்து விடியற்காலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில் தங்கத்தை உருக்கி, இதற்கு பிறகே திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

இந்த அவசர கால உலகத்தில் அனைவரும் கடையில் சென்று தயார் படுத்தப்பட்ட தாலியை வாங்குகிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று சொல்லி போவார்கள். அந்த நாள் அந்த கல்யாண தம்பதியர் இருவருக்கும் உகந்த நாளா என்று பார்க்கவேண்டும். கடையில் நல்ல நாள் பார்த்து வாங்கிய தாலியை பூசையில் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லது கோவிலில் கொடுத்து பூசை செய்ய வேண்டும். அப்படி செய்தால், ஏதேனும் தோஷம் இருந்தால் அது விலகிவிடும்.

நாம் அறியாமலே சில தவறுகளும் நடக்கும். கவனமாக இருக்கவேண்டும். திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்கும் அந்தணர், அதைப் புனிதப் பொருளாக எண்ணி, கையில் வைத்து கிழக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை சொல்லிய பின்பு, மணமகனிடம் கொடுக்கவேண்டும். தாலி தொலைந்து விடக் கூடாது என்பதற்காக அதை அந்தணர் இடுப்பில் சொருகி கொள்ளக் கூடாது. உண்மையில், புனிதமான பொருட்களை மார்புக்கு கீழே வைத்துக் கொள்ளக்கூடாது, என்பது விதி. இடுப்புக்கு கீழே சொருகிவிடும் தாலியில், வியர்வை படும் சாத்தியங்கள் அதிகம். வியர்வை ஒளிக்கற்றை தாலியின் புனிதத்தை கெடுத்து விடும்.

.....

இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.



No comments:

Post a Comment