Friday, September 7, 2012

பதினெண் சித்தர்கள் ...


சித்தர்கள் திருவடிக்கே சரணம்
ஓம் ஸத்குருபாதம் போற்றி!
ஓம் நவகோடி சித்தர்பாதம் போற்றி!

கவுதமர்,அகத்தியர்,சங்கரர்,வைரவர்,மார்க்கண்டர்,வன்மீகர்,உரோமர்,புசண்டர்,சட்டைமுனி,நந்தீசர்,திருமூலர்,காலாங்கிநாதர்,மச்சமுனி,புலத்தியர்,கருவூரார்,கொங்கணர்,போகர்,புலிப்பாணி என்பது பதினெட்டு சித்தர்களில் ஒரு வரிசை.

திருமூலர்,ராமதேவர்,கும்பமுனி,இடைக்காடர்,தன்வந்திரி,வான்மீகி,கமலமுனி,போகநாதர்,மச்சமுனி,கொங்கணர்,பதஞ்சலி,நந்திதேவர்,போதகுரு,பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி,சுந்தரானந்தர்,குதம்பையர்,கோரக்கர் என்பது பதினெண் சித்தர்களில் இதுவும் ஒரு வரிசையாகும்


"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலைகாப்பு;
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ;
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர்பாதங் காப்பு ;
அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ;
அன்பே உருவாக்கும்அகப்பேய் பாதங் காப்பு ;
பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ;
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ;
கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ;
தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்டதேரையர் பாதங் காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ;
போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ;
நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ;
பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ;
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ;
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ;

காப்பான கருவூரார் , போகநாதர்கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே "


நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
-----

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

ஓம் சப்தநாதாய வித்மஹே
சப்தவேதாய தீமஹி
தந்நோ சப்தகந்தலிங்க சித்புருஷ ப்ரசோதயாத்
-----

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்.

ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்.

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்.

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்.

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி ப்ரசோதயாத்.

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்.

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்.

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்.

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்.

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்.

-----

சதுரகிரியின் பெருமைகளை விளக்கும் பாடல்

நிலவும் பதினெண் சித்தரெனும் நீர்மைக் கும்பன் முதலாகக்
குலவும் பெருமைக் கோரக்கர் ஈறாக் குறிக்குன் தவமுனிவர்
உலவும் மேன்மை தனைக் கொண்டே உமைதன் பாகன்
கலவும் சதுரகிரிப் பெருமை கனிய உரைப்போம் காசினிக்கே!
------

காகபுஜண்டரின் கர்மசித்தி மூலமந்திரம்:

"ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டமகரிஷி ப்யோம்
நமஹ நமஹ வசியவசிய ஸ்ரீபாதுகாம் பூஜையாமே! தர்ப்பயாமே!"

காகபுஜண்டரின் ஞானசித்தி மூலமந்திரம்:

"ஞானானந்தமயம் தேவம் நிர்மல படிகாத்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
காகபுஜண்டம் உபாஸ்மகே!"
------

இவை அனைத்தும் படித்து திரட்டிய தகவல்.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.



1 comment:

  1. இதில் சங்கரர் குறிப்பிட்ட உள்ளரே அது யார்? ஆதி சங்கரர் என்றால் பெயரை நீக்கவும். ஆசிவக சித்தர் மரபினருக்கும் சங்கரருக்கும் தொடர்பே கிடையாது.
    சங்கரர் பிராமண கோட்பாடு ஒரு அறிவற்ற .ஆன்மீக வாதி அவ்வளவுதான் .
    உங்கள் ஆன்மீக சிந்தனையும் எழுத்தையும் மதிக்கிறேன்.பிரமாணர் அல்லதா
    சமுகமே சித்தர் மரபினர்.

    ReplyDelete