
கடன்கள் நீங்கி செல்வம் பெருக வசிஷ்ட மகரிஷியால் கூறப்பட்ட தாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம்
விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய
கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காத ராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ சிவாய
பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸீந்ருத்யகாய
தாரித்ரிய் துஹ் கதஹநாய நமஹ சிவாய
சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலேஷணாய மணிகுண்டலமண்டி தாய
ம்ஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய
பஞ்சாநநாய பாணிராஜவிபூஷணாய
ஹோமாம்சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய
பானுப்ரியாய பவஸாக ரதாரணாய
காலாந்தகாய கமலாஸநபஜிதாய
நேத்ரத்ரயாய சுபலஷண லக்ஷிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய
ராமப்ரியாய ரகுநாதவரதப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவதாரணாய
புண்யேஷீ புண்ய பரிதாய ஸீரார்சிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய
முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வருஷபேச்வரவாஹநாய
மாதங்க சர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய
வசிஷ்டேநக்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வ ரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ரபவுத்ராதி வர்த்தனம்
த்ரிஸந்த்யம் யஹ படேந்நித்யம் ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்
இதி ஸ்ரீ வஸிஷ்டவிரசிதம்
தாரித்ரிய தஹநசிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

இந்த பஞ்சாட்சர கோத்திரத்தை விடியற்காலையில் படித்தால் தெய்வ சக்தி கிட்டும். இந்த மந்திரத்தை லிங்கம் வைத்து பாராயணம் செய்தால் கல்வி, ஞானம் மேன்மை கூடும். ஐதீகம் சிவனே கண்முன் தோன்றுவார் என்பது. மந்திரத்திலேயே சக்தி வாய்ந்த மந்திரம்.
அராவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசுவரதன் தான் விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம்
அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த
நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேன்
கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்
நந்தியுள்ள ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்
மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான
மகாரமாய் உருக் கொள் வோனை மனங்கொளத்துதிக் கின்றேனே த
க்கனின் யாகம் தன்னைத் தகர்த்து சாட்சாயனியின்
மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்
தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்
சிகாரமாய் உருக் கொள் வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே
வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் த
வத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்
சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை
வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே.
யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட
கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை
தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய
யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.

சித்தி தருநாதன்
தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன்
முத்திப்பெருநாதன்
ஞானப் பிரகாசன் உண்மைதருநாதன்
நம்குருநாதன்.
ஆன்மாவை பிறப்பிலிருந்து சித்தியடையச்செய்யும் சொக்கநாதன்
தெற்கே இருக்கக்கூடிய கமலாயத்தில்(திருவாரூர்) இருக்கும் தியாகராஜ நாதன்
பர உலகத்துக்கு அழைத்துச் செல்லும் பக்தியை பெற்று தரும் சிதம்பர நாதன்
நமக்கு வேண்டிய முக்தியை அளிக்கவல்ல அண்ணாமலை நாதன்
ஒளி பொருந்திய ஞானத்தையும் வாழ்க்கையின் உண்மைநிலையை உணர்த்திடும் ஆலமர்ந்த நாதன் நம் தக்ஷிணாமூர்த்தி குருநாதன்.

ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய்
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும்.

ஓம் சேவே ஸ்ரீமஹாலிங்கம் சிவாலிங்கிதம்
சில பயனுள்ள சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி
திருவாசகம்(சிவபுராணம்) பாடல்கள்
http://copiedpost.blogspot.in/2012/01/blog-post_8952.html
-----
தட்சிணாமூர்த்தி வழிபாடு
http://copiedpost.blogspot.in/2012/01/blog-post_5539.html
No comments:
Post a Comment