Saturday, November 7, 2015

சப்த கன்னியர் ... सप्तमातरः



ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி

ब्राह्मी माहेश्वरी कौमारी वैष्णवी वाराही तथेन्द्राणी चामुण्डा

Brahmi, Maheshwari, Kowmaari, Vaishnavi, Vaaraahi, Indraani, Chaamundi


சிவன் அந்தகாசுரனுடன் போரில் ஈடுபட்ட போது, அந்தகாசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து 'யோகேசுவரி' என்ற சக்தியைத் தோற்றுவித்தார்.

அவள் 'மாகேசுவரி' என்ற சக்தியை உருவாக்கினாள். அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் தனது அம்ச இந்திராணியையும் ; முருகன் தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி தனது அம்ச வராகியையும்; யமன் தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர்.

..... வராகபுராணம்


ब्राह्मी माहेश्वरी चैव कौमारी वैष्णवी तथा । वाराही च तथेन्द्राणी चामुण्डा सप्तमातरः ॥

Salutations to the Seven Mothers ...
Goddesses Brahmmi (SarasvatI, the wife of Lord Brahma), MaheshvarI (the wife of Lord Shiva), KaumarI, Vaishnavi (LakshmI, the wife of Lord Vishnu), Varahi, Indrani (wife of Lord Indra) and Chamundi.


அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள். மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.


சப்த கன்னியர் சுலோகம் துதி:

பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ்மாணீம்
ஈஸ்வரீரர் பமாம் மகேசீம்
குமாரவத்ச கௌமாரீம்
விஷ்ணு அம்ச வைஷ்ணவீம்
வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
இந்திர ரூப மாதா ஐந்தரீம்
கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
த்யாயேத் சப்தமாத நமஸ்துதே.


மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்.

- கலிங்கத்துப்பரணி


கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்.

- குமர குருபர சுவாமிகள்



பிராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.

காயத்ரி மந்திரம் :

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

Brahmi : (Bija Mantra is "Aam")
She is the creative force of Lord with Shining golden body. She symbolizes creativeness in all forms of knowledge. She has four hands, holding Kundam, Akshaya Paathiram (Alms Vessel), Japa Maala (Rosary), and ladle (used for pouring oil into Yagna Gunda). Her vaahanaa (Vehicle) is Anna bird and Her flag carries that bird symbol. She displays Varadha and Abhaya Mudras.
Shri Brahmi is Kaama Naashinya, meaning She is the destroyer of kaama or desires and She bestows Her worshippers with innate ability to transcend worldly desires.


மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம் வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

Maheshwari: (Bija Mantra is "Iim")
She is the activating force of Lord Shiva with shining white color body. She has three eyes and four hands, holding Trishul (Trident) and Udukkai (Drum creating Brahma Thaala). Her vaahanaa is Bull and it is also symbolized in Her flag.
Shri Mahe'shwari is Krodha Naashinya, meaning She is the destroyer of krodha or anger and She bestows Her worshippers with ability to transcend anger.


கவுமாரி

அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும் உமையுமாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும்.

தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம: ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத்.

Kowmaari: (Bija Mantra is "Hoom")
She is the activating force of Lord Muruga (Subramania or Kaarthikeya). She has 4 hands displaying Varadha Mudra and Abhaya Mudra, and holds Spear (Vel) as weapon. Her vaahana is peacock, which is also symbolized in Her flag.
Shri Kowmaari is Lobha Naashinya, meaning She is the destroyer of Lobha or greed and She bestows Her worshippers with ability to transcend greed.


வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம: ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.

Vaishnavi: (Bija Mantra is "Room")
She is the activating force of Lord Vishnu with four hands displaying Varadha and Abhaya Mudras and holding Shanku Chakra (Conch Wheel). Her vaahana is Garuda – White necked Eagle, which is also symbolized in Her flag.
Shri Vaishnavi is Moha Naashinya, meaning She is the destroyer of Moha or Ignorance.


இந்திராணி

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம: ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்:

Indraani: (Bija Mantra is "Aim")
She is the activating force of Lord Indra. She displays Varadha and Abhaya Mudras and holds Vachchirapadai. Her vaahanaa is Elephant.
Shri Indraani is Maatsarya Naashinya, meaning She is the destroyer of Maatsarya or Jealousy.


வராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும், தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.

தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் உக்ர ரூபாயை வித்மஹே தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி தந்நோ வாராஹீ ப்ரசோதயாத்.

ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்:

Vaaraahi: (Bija Mantra is "Loom")

She is the activating force of Lord Yamaa (The Lord of death), who has four hands displaying Varadha and Abhaya Mudras and holding Dhanda, Sword, Gada, Shanku (Conch), Plough, Chakra (Wheel), Bhoomi (Earth), and Lotus flower. Her vaahana is Buffalo.
Shri Vaaraahi is Mada Naashinya, meaning She is the destroyer of Mada or Self-Pride.


சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே. சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே. இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு, நமக்குத் தேவையான சகல பலங்கள் ,சொத்துக்கள், சுகங்களைத் தருவாள்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேத
நிஷண்ணசுவா!

ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம: ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்:

Chaamundi: (Bija Mantra is "Houm")
She has one of Her foot pressed on the demon (representing the demonic nature / characteristics of human) and displays Varadha and Abhaya Mudras. Clothed in the hide of a tiger, She has eight shoulders and carries Soolam (Trishul – Trident), Kadkam, Ambu (Arrow) and Chakra (Wheel) on one side and Paasam (Noose), Palakai (plate), Sarngam, and Shanku (Conch) on the other side.
Shri Chaamundi is Paapa Naashinya, meaning She is the destroyer of Paapa or Sins.

.....

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।. यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.




No comments:

Post a Comment