Wednesday, November 11, 2015

தக்ஷின காளி दक्षिणकाली



ॐ श्री महाकाली माहालक्ष्मी महासरस्वती देवताभ्यो नमः
ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ:


சகல சித்திகளையும் அருளும் தக்ஷின காளி दक्षिणकाली மந்திரம் ...

ॐ क्रीं क्रीं क्रीं हूं हूं ह्रीं ह्रीं दक्षिणेकालिके क्रीं क्रीं क्रीं हूं हूं ह्रीं ह्रीं स्वाहा॥
om krīṁ krīṁ krīṁ hūṁ hūṁ hrīṁ hrīṁ dakṣiṇekālike
krīṁ krīṁ krīṁ hūṁ hūṁ hrīṁ hrīṁ svāhā ||
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம், ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம், ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

இந்தக் கலியுகத்தில் காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒத்து ஜபித்தால் உடன் பலிதமாகும். காளி எப்போதும் எதிர்நோக்கியுள்ளாள், உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலுக்கு.
மிகவும் சக்தி மிக்க மந்திரம் இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதை உபாஸிக்க, இந்த மந்திரம் 72 தலைமுறை புண்ணியம் செய்தவனுக்கு மட்டுமே கிடைக்கும். இதை தினமும் 108 முறை ஜபம் செய்தால் சாதகனுக்கு உலகில் கிடைக்காத செல்வங்களே இல்லை என்று கூறுகிறது காளிகா புராணம்.

செந்நிற ஆடை அணிந்து செந்நிறப்பூக்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற புஷ்ப மாலை அணிவித்து, சிவப்பு நிற மாலை அணிந்து, சிவப்பு நிற மணி மாலையால் (108) ஜபம் செய்தால், பக்தனுக்கு எல்லா செல்வங்களையும் காளித்தாய் வழங்குவாள் என்று காளி புராணம் தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு மட்டுமே அன்னை காளி செவி சாய்ப்பாள். எனவே தூய மனதுடன், பக்தியுடன் நல்லவை நடக்க மட்டுமே இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

நிவேதனமாக பால் பாயசமும், தூய பசு நெய்யும் அன்னைக்கு படைக்க வேண்டும். காளிக்கு உகந்த நேரம் இரவு. இதை உபாசனை செய்தால் எதிரி அழிவான். வாக்கு பலிதம் உண்டாகும். புலமையும் செல்வமும் பெற்று பெரும் புகழ் அடைவான் அன்னையை உபாசிக்கும் பக்தன்.

*****

" ஓம் பகவதி, என் தேகத்தில் அடி முதல் முடிவரை திருகாளி, உத்திரகாளி, மோடிக்காளி, ரீங்காளி, பிரகாசகாளி, வஜீரக்காளி, ஆகாசகாளி, பூமிக்காளி, ஹரிகாளி, சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா "

" ஓம் சக்தி, உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி, சித்த சக்தி, வாக்கு சக்தி, வசிய சக்தி,
எண்ணிய எண்ணம் எண்ணியபடியே, என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும்,
என்னை நினைத்தோர் என் வசம் ஆகவும், என்சொல் கேட்டு இசைந்தே நடக்க,
நானே நீயாய், நீயே நானாய் செய் "

சத்ருபய சங்கட சர்ப்பதோஷ நாஸினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சித்த சுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய். ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா.

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி, மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி, திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி, எனைக் காத்தருள்வாய மஹாசக்தி.


கிழக்கில் மேற்கில் வாராஹியும்,
தெற்கில் சண்டிகையும், வடக்கில் வைஷ்ணவியும்,
அக்னி திக்கில் அம்பிகையும், வாயு திக்கில் மஹேஸ்வரியும்,
நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும்,
ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும்,
மேலே சாரதையும், கீழே பார்வதியும்,
சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும்,
கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும்.
புஜங்களை ஈசானியும், மார்பையும் நாபியையும் காலிகையும்,
வயிற்றை அபர்ணையும், இடுப்பையும் மூத்திர பையையும் சிவப்ரியையும்,
துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும்,
கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும்,
எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான துர்க்கையும்,
அடியேனையும், அடியேனின் குடும்ப உறுப்பினர்கள் அனனவரையும், அடியேனின் நண்பர்களையும், எப்பொழுதும் காக்க வேண்டும்.
... என்றும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்


॥ नवनागनामस्तोत्रम् ॥

श्रीगणेशाय नमः ।
अनन्तं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् ।. शङ्खपालं धृतराष्ट्रं तक्षकं कालियं तथा ॥ एतानि नवनामानि नागानां च महात्मनाम् ।
सायङ्काले पठेन्नित्यं प्रातःकाले विशेषतः ॥ तस्य विषभयं नास्ति सर्वत्र विजयी भवेत् ॥
॥ इति श्रीनवनागनामस्तोत्रम् सम्पूर्णम् ॥

*****

தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

*****

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


No comments:

Post a Comment