Wednesday, November 4, 2015

சிவ சக்தி

.....

சிவம் எதற்கும் ஒரு மூலம் இவன். எதுவும் இவனுள் அடங்கும். எங்கும் இவன் இருப்பான். எவையும் இவனிடமிருந்தே பெறப்பட்டது. மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் இவனே. இவனே கூனி குறுகி, தம் எல்லா ஆற்றலையும் ஒரு சிறு புள்ளியில் வைத்து, பிறகு அதே அச்சிறு புள்ளி தம்மை விரிவாக்கி அண்ட சராசரமாக விஸ்வரூபம் எடுத்து தம்மை எங்குமாக வியாபிக்கும் தன்மையும் இவனே. இவனே மாற்றம். ஒன்றதை மற்றொன்டாக மாற்றிக்கொண்டே எதற்கும் ஒரு நிலையை நிரந்தரமாக தர மாட்டான். இவன் ஒருவனே நிலையானவன்.

இவனே அகம். இவனே பிரம்மன். இவனே விஷ்ணு. இவனுள் இருந்துதான் மற்ற அனைத்து தெய்வங்களும். இவனை இவனுள் உணரும் ஒரு பயணத்தில் ஒரு கட்டம் தான் நாம் காணும் எந்த ஒரு ஜடமும் எந்த ஒரு உயிரும். இவனை இவனே உணர்வது தான் முழுமை.

இவன் தந்த மனதால், இவன் நாமம் புகழ் பாடி, இவன் நாமம் உணர்ந்து, நெகிழ்ந்து, இவனை இவனுள் உணர, உருவாகும் ஒரு பேரானந்தம். முழுமை, தெளிவு, அமைதி, வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பேரின்பநிலை.

இவனை இந்த மனத்தால் நன்கு ஆழ்ந்து உணர உணர, ஒரு காட்டாற்று வெள்ளம் போல் பீரிட்டு எழும் ஒரு பேரின்பம், சொல்வதறியா ஒரு சுகம்.

சதா சர்வமும் இவனே. சர்வகோடி சர்வமும் இவனே.



சிவமோ ஆழ்ந்தஅமைதி, இவனின் ஆற்றல் எங்கே தொடங்கும் எங்கே முடியும் என்று எவரும் அறியார். ஆனால் சக்தியோ சுழன்று சுழன்று பல்வேறு ஆற்றல்களை உருவாக்கி அனைத்து இயக்கத்திற்கும் மூலதனமாகி பிரமிக்க வைக்கிறாள். இவள் இன்றி எதுவும் இயங்காது. இவள் அனுக்கிரமின்றி மானுட வாழ்வில் எந்த ஒரு ஜஸ்வரியமும் கிட்டாது. இவளின் அருட்பார்வை பட்டால் தான் மங்களம் உண்டாகும். இவளின் கடைக்கண் பார்வை ஒரு துளி பெற்றால் தான், அவர்களுக்கு சர்வகலைகளுக்கும் வல்லமை ஆகும் சக்தி பெறுகிறார்கள். இவளை சூழ்ந்துள்ள சக்தியோ ஒரு ஆகர்ஷனசக்தி, ஒரு இயங்கு சக்தி, சுழலவைக்கும் சக்தி. சக்தியின் அலைகள் எங்கெங்கும் வியாபித்து கிடக்கின்றது.

இந்த ஓட்டு மொத்த சக்தியின் ஒரு முழு வடிவமே தாய், சக்தி, அம்பாள், ஈஸ்வரி, ராஜராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, ஸ்யாமளா தேவி போன்ற பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறாள்.


..... எனக்குப் பிடித்த, என்னைச் சிந்திக்க வைத்த சில பகுதிகள். வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.



No comments:

Post a Comment