Saturday, November 14, 2015

श्री गणेश पञ्चरत्न स्तोत्रम् ... கணேச பஞ்ச ரத்னம்



ஸ்ரீசங்கரபகவத்பாதர் இயற்றிய கணேச பஞ்சரத்னம்
श्रीशङ्करभगवतः श्रीगणेशपञ्चरत्नस्तोत्रं
Sri Ganesha Pancharatnam by Sri Adi Sankara Baghvad Pada

இந்தத் தோத்திரத்தை ஆதி சங்கரர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அங்கிருந்த விநாயகர் சிலையன்றின் முன்னிலையில் பாடினார். அவர் பாடப் பாட அந்த நர்த்தன விநாயகர் ஆடினாராம். அப்படித்தான் அந்தப் பாடலின் ஐதீகம்.

மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதி வாயிலின் வழியாக உள்ளே சென்றோமானால் அஷ்ட சக்தி மண்டபம் இருக்கும். அதைத் தாண்டியவுடன் ஒரு பெரிய மண்டபத்தில் ஏராளமான பூக்கடைகள் தென்படும். அதற்கும் அப்பால் ஒரு கோபுரவாசல். அதைத் தாண்டிச் சென்றால் ஒரு ஆறுகால் மண்டம இருக்கும். மிக அழகிய தூண்களில் உயிரோட்டமுள்ள சிலைகள் இருக்கும். இங்குதான் குறவன் குறத்தி சிலை என்ற புகழ்பெற்ற சிலைகள் இருக்கின்றன. இந்த மண்டபத்துக்கும் அடுத்தாற்போல இன்னொரு கோபுரவாசல். அதையும் தாண்டிச் சென்றால் பொற்றாமரைக் குளம் வரும். அந்தக் கோபுர வாசலின் இருபக்கங்களிலும் விநாயகர், முருகன் சன்னிதிகள் இருக்கின்றன. விநாயகர் சன்னிதியில் இருப்பவர் நர்த்தன விநாயகர். அவர்தான் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்னத்துக்கு ஏற்றவாறு ரசித்து ஆடியவர் என்று கர்ணபரம்பரைக் கதை சொல்கிறது.



मुदाकरात्तमोदकं सदाविमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासिलोकरञ्जकम् ।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥ १॥

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

Mudaa-Karaatta-Modakam Sadaa Vimukti-Saadhakam
Kalaa-Dhara-Avatamsakam Vilaasi-Loka-Rakssakam |
Anaayakai[a-E]ka-Naayakam Vinaashitebha-Daityakam
Nata-Ashubha-Ashu-Naashakam Namaami Vinaayakam ||1||

மகிழ்ச்சியுடன் கரத்தில் மோதகத்தைக் கொண்டுள்ளவர்
தம்மை வழுத்துபவர்களுக்கு எப்போதும் முக்தியைக் கொடுப்பவர்
சந்திர கலையைத் தலைல் தரித்திருப்பவர்
தம்முடைய பக்தியில் திளைத்து மகிழ்ச்சியாக இருக்கும் பக்தர்களைக் காப்பவர்
தங்களைப் பாதுகாக்கக்கூடிய தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்
கஜாசுரனைக் கொன்றவர்.
தம்மை வணங்குபவர்களின் பாவங்களை எப்போதும் நாசம் செய்பவர்
அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Who Holds the Divine Joy in His Hand as Modaka (a sweetmeat) and Who Always strives to Accomplish the Liberation of His Devotees towards that Divine Joy,
Who Holds the Digit of the Moon as His Ornament and with a Joyful Spirit Protects the World,
Who is without any Master but is Himself the only Master for His Devotees, and Protects them by Destroying the (inner) Demons,
To those who Surrender to Him, He Destroys the Inauspicious tendencies Quickly; I Salute Sri Vinayaka and surrender to Him.



नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥ २॥

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

Nate[a-I]tara-Ati-Bhiikaram Navo[a-U]dita-Arka-Bhaasvaram
Namat-Sura-Ari-Nir-Jaram Nata-Adhika-Apad-Uddharam |
Sure[a-Ii]shvaram Nidhi-[I]ishvaram Gaje[a-Ii]shvaram Ganne[a-Ii]shvaram
Mahe[a-Ii]shvaram Tama-Ashraye Paraatparam Nir-Antaram ||2||

தம்மை வணங்காதவருக்கு அடிக்கடி பயத்தைக் கொடுத்துத் தடுத்தாட்கொள்பவர்.
உதய கால சூரியனைப்போல் விளங்குபவர்
தம்மை வணங்கும் தேவர்களின் விரோதிகளான அசுரர்களை அழிப்பவர்.
தம்மை வணங்குபர்களை ஆபத்துக்களைலிருந்து காப்பாற்றுவர்.
தேவர்களின் தலைவர், நவநிதிகளுக்கும் அதிபதி;
யானைகளுக்கு அதிபதி, கணங்களுக்கெல்லாம் நாதராக இருப்பவர்.
மஹா ஈஸ்வரனாக விளங்குபவரும் பரத்தும் பரமாக இருப்பவரும் ஆகியவர்.
அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
To those who do not Bow down to God out of arrogance, He takes a Frightening form; His benign form is however like a Newly-Risen Sun,
Who is always Fresh without any Decay, and is Saluted Reverentially by the Devas and the Devoted Persons; Who Extricates those who Surrender to Him from Difficult Calamities,
Who is the God of the Devas, Who is the God of Prosperity, Who is the God with an Elephant Face and Who is the God of the Ganas (celestial attendants),
Who is the Great God; To His Refuge, Who is Superior than the Best, I Continually place myself in devotional surrender.



समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥ ३॥

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

Samasta-Loka-Shamkaram Nirasta-Daitya-Kun.jaram
Dare[a-I]taro[a-U]daram Varam Varebha-Vaktram-Akssaram |
Krpaa-Karam Kssamaa-Karam Mudaa-Karam Yashas-Karam
Manas-Karam Namas-Krtaam Namas-Karomi Bhaasvaram ||3||

அனைத்து உலகங்களுக்கெல்லாம் சுகத்தைக் கொடுக்கக்கூடியவர்
அசுர யானையாகிய கஜாசுரனை அழித்தவர்
அனைத்து உலகங்களையெல்லாம் தமது வயிற்றுக்குள் வைத்து, காப்பாற்றுபவர்.
உத்தமமானவர்; சிறந்த யானை முகத்தோன்; அழிவற்றவர்.
கிருபை செய்பவர், பிழைகளை மன்னிப்பவர்; பொறுப்பவர்;
கிருபை கொண்டு அவர்களின் மனத்தை நல்வழியில் திருப்பி அவர்களுக்கு மகிழ்ச்சியையும் கீர்த்தியையும் மேன்மையையும் உண்டாக்குபவர்.
அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Who is the Auspicious Power behind All the Worlds and Who Removes the Mighty (inner) Demons,
Whose Huge Body signifies Prosperity and Boon-Giving and Whose Most Excellent Face reflects His Imperishable Nature.
Who Showers Grace, Who Showers Forgiveness, Who Showers Joy and who Showers Glory to His Devotees,
Who Bestows Intelligence and Wisdom to those Who Salute Him with Reverence; I Salute His Shining Form.



अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥ ४॥

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

Akincana-[A]arti-Maarjanam Cirantano[a-U]kti-Bhaajanam
Pura-Ari-Puurva-Nandanam Sura-Ari-Garva-Carvannam |
Prapan.ca-Naasha-Bhiissannam Dhananjaya-[A]adi-Bhuussannam
Kapola-Daana-Vaarannam Bhaje Puraanna-Vaarannam ||4||

தம்முடைய பக்தர்களின் ஏழ்மையை நாசம் செய்பவர்,
அநாதியாக விளங்கும் வேதங்களின் மந்திரங்களால் பூஜிக்கப்படும் சிறப்புமிக்கவர்,
திரிபுரங்களை நாசம் செய்த சிவன்; அவருடைய மூத்த மகன்,
அசுரர்களின் கர்வத்தை அடக்குபவர்,
பிரபஞ்சத்தை அழிக்கக்கூடிய காலனுக்கு பயத்தைக் கொடுப்பவர்,
அர்ஜுனன் முதலானவர்களால் பூஜிக்கப்பட்டவர்,
கபோலத்தில் மத நீர் பெருகியோடப்பெற்றவர்,
புராதனமான முதல்வனாகிய யானை உருவனை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Who Wipes out the Sufferings of the Destitutes who take His Refuge; Who is the Receptacle of the Words of Praises of the Ancients,
Who is the Former Son (the latter being Kartikeya) of the Enemy of Tripurasuras (i.e. Lord Shiva), and Who Chews down the Pride and Arrogance of the Enemies of the Devas,
Who wields Terrible Power to Destroy the delusion of the Five Elements constituting the World (from the mind of His Devotees); Who Himself is Adorned with the Powers (behind the Five Elements) like Fire etc,
From Whose Cheeks flow down the Juice of Grace; Salutations to Him Whose Praise similarly flows down like Juice from the Puranas.



नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥ ५

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

Nitaanta-Kaanta-Danta-Kaantim-Antaka-Antaka-[A]atmajam
Acintya-Ruupam-Anta-Hiinam-Antaraaya-Krntanam |
Hrd-Antare Nirantaram Vasantam-Eva Yoginaam
Tam-Eka-Dantam-Eva Tam Vicintayaami Santatam ||5||

அழகிய பல்வரிசையும் தந்தமும் தருகின்ற பிரகாசத்தையுடையவர்,
காலனுக்குக் காலனாகிய சிவன்; அவனுடைய மகன்,
மனதால் சிந்திக்கமுடியாத அளவுக்கு அப்பாற்பட்ட உருவத்தை உடையவர்; நாசமற்றவராகிய அவர், வழிபடுவோரின் எல்லா விக்கினங்களையும் நாசம் செய்பவர்,
யோகியர்களின் இருதயதிற்குள் அந்தரங்கமாக நிரந்தரமாக வசிப்பவர்,
ஒரே தந்தத்தையுடையவராகிய கணேசரை மட்டுமே எப்போதும் சிந்திக்கிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Whose Beautiful Form of Ekadanta is very much Dear to His Devotees, and Who is the Son of the One (referring to Lord Shiva) Who Put an End to (i.e. restrained) Antaka (i.e. Yama).
Whose essential Form is Inconceivable and without any Limit, and which Cuts through the Obstacles of His Devotees,
Who Continually Abides in the Cave of the Heart of the Yogis.
I Continually Reflect upon Him, the Ekadanta (another name of Sri Vinayaka).



महागणेश्पञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रगायति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥ ६॥

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

Mahaa-Gannesha-Pan.ca-Ratnam-Aadarenna Yo[ah-A]nvaham
Prajalpati Prabhaatake Hrdi Smaran Ganne[a-Ii]shvaram |
Arogataam-Adossataam Su-Saahitiim Su-Putrataam
Samaahita-Ayur-Asstta-Bhuutim-Abhy-Upai[a-E]ti So[ah-A]ciraat ||6||

மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த தோத்திர நூலை யார் தினந்தோறும் அதிகாலையில் விழித்தெழுந்தவுடன் மகாகணபதியை இருதயத்தில் நினைத்து இருத்திக்கொண்டு பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் விரைவிலேயே எல்லாப் பிணிகளிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல கவித்துவத்தையும் நன்மக்களையும் நீண்ட ஆயுளையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அடைகிறார்கள்.

(Salutations to Sri Vinayaka)
Those who Read the Great Ganesha Pancharatnam (five Jewels in praise of Sri Ganesha) with Devotion and Utter this in the Early Morning Contemplating on Sri Ganeshvara in their Hearts will get Free from Diseases and Vices, will get Good Spouses and Good Sons, and with it He will get Long Life and the Eight Powers soon.

*****

மிக்க நன்றி : வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment