Thursday, September 24, 2015

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?


லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.

இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது " என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.



அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக்கூறினார் ஹயக்கிரீவர். இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.
அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.

.....

சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.

ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –

ஸ்ரீமாதாவின் அவதாரம்
கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
பண்டாசுர வதம்
மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
குண்டலினீ ரூபம்
பக்த அனுக்ரஹம்
நிர்க்குண உபாசனை
சகுண உபாசனை
பஞ்சப்ரஹ்ம ரூபம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
பீடங்களும், அங்க தேவதைகளும்
யோகினீ தியானம்
விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
சிவசக்தி ஐக்கியம்



மமோ பாத்த ஸ்மஸ்த துரித க்ஷயத்வாரா ந: ஸர்வ-ப்ரதிகூல உப-ஸமனார்த்தம், ஸர்வ கார்யேஷு ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம், சிஞ்தித கார்யாணி ஸஹஸா அப்ரயாஸேன-ஸித்யர்தம், பரம-விஸேஷத: ஸார்வக்ஞத்வ கர்வ-ஸமானார்த்தம் ச்ச, யதா ஸக்தி ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ர பாராயணம் கரிஷ்யே.

ஸ்ரீ வித்யா மஹாசௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரீ, மஹா பரா, பட்டாரிகா, ஸ்ரீ மஹா பராம்பிகாமயீ ஸ்ரீ சுந்தர்யா: பரிபூர்ண க்ருபா கடாக்ஷ பரமானுக்ரஹ, அக்ஷய ஸ்திர, சத்ய: ப்ரஸாத ஸித்யர்தே ஜபே விநியோக::

த்யானம்

ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.


லலிதா சகஸ்ரநாமம் தமிழில் .....

http://tamilslogams.blogspot.in/2011/04/blog-post.html

श्री ललिता सहस्रनाम स्तोत्रम् .....

http://sanskritdocuments.org/doc_devii/lalita.html?lang=sa


.. Shri Lalita Sahasranamavali with meanings ..

http://sanskritdocuments.org/doc_devii/lalita1000.html?lang=sa

.....

இன்றைய விஞ்ஞானம், மனித உடல் மற்றும் ரோகவியலில், ஒட்டுண்ணிகளாலும், தேய்மானங்களினாலும், உடலில் அணுக்கூறு மாறுவதாலேயே வியாதிகள் உருவெடுப்பதாக கூறுகின்றன.

ஆனால், அன்றய ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை கவனித்தோமெனில், அம்பிகை சர்வ ரோகஹர சக்ரேஷ்வரியாகவும், சர்வ ரோக சமனியாகவும், சர்வ ஐஸ்வர்யகரியாகவும் கூறப்பட்டுள்ளது. அப்பலனை பெறுவதற்கு இடப்பட்டுள்ள ஒரே நிபந்தனை “ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்”. அப்படியென்றால், அம்பிகையை, விதிப்படி ஆராதிப்பின், நம்மை பிணிகளிலிருந்தும், முப்பிலிருந்தும், விடுவித்து, இவ்வுலகில் நாம் வாழ தேவையானவற்றையும் அருளுவாள் என்று தானே பொருள்.

.....

தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।
यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை தான்.

மேலும் புகைப்படம் இணையதளம் / வலைத்தளத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டது. வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி. முக்கிய பங்கு "Google Images".

... என்றும் அன்புடனும் அடியேன் ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன்






No comments:

Post a Comment