Monday, December 2, 2013
சப்த கன்னியர்
விநாயகர் சுலோகம் துதி:
சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே :
மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்
சப்த கன்னியர் சுலோகம் துதி:
பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்
ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
குமார வத்ச கௌ மாரீம்
விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
இந்திர ரூப மாதா ஐந்தரீம்
கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்.
- கலிங்கத்துப்பரணி
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்.
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா - ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
1. பிராமி
ரூப லக்ஷ்ணம்:
பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.
பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; எனவே, இவளை வணங்கினாள் குழந்தைப் பேறு கிட்டும். மேலும், உதேபாசித்தால் கலைகளின் அதிதேவதை ஆகையால் கலைஞானம் கிட்டும் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம்!
காயத்ரி :
ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே
மூலமந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:
துதி :
ஹம்ஸயுக்த விமானஸ்தே
பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரி சாம்ப க்ஷரிகே
தேவி அம்பிகே நமோஸ்துதே
...
2. மாகேஸ்வரி
ரூபலக்ஷ்ணம்:
மகேசனின் அம்சமானவள் மாகேசுவரி; ஒரு முகமும் - மூன்று கண்களும் நான்கு கரங்களும் உடையவள். முன் இரு கரங்களை அபய - வரதமாகவும்; பின் இரு கரங்களில் மானையும் மழுவையும் ஏந்தி இருப்பவள். செவ்வண்ணத்தள். இடப வாகனத்தில் மேல் அமர்ந்திருப்பவள், அதையே கொடியாகவும் கொண்டவள்.
தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!
காயத்ரி :
ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.
மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:
துதி :
த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
தேவி நமோஸ்துதே
...
3. கௌமாரி
ரூபலக்ஷ்ணம்:
இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!
காயத்ரி :
ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.
மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம
துதி :
மயூர குக்குட வ்ருதே
பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே
அம்பிகே நமோஸ்துதே.
...
4. வைஷ்ணவி
ரூபலக்ஷ்ணம்:
இவள் விஷ்ணு அம்சி ; மகாலக்ஷிமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர். விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!
காயத்ரி :
ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :
துதி :
சங்க சக்ர கதா சார்ங்க
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.
...
5. வாராஹி
ரூபலக்ஷ்ணம்:
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன், இஉலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!
காயத்ரி :
ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத
மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
துதி :
க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.
...
6. இந்திராணி
ரூபலக்ஷ்ணம்:
இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிற மேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்!
காயத்ரி :
ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
த்யான ஸ்லோகம் :
ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :
துதி :
கிரீடினி மஹா வஜ்ரே
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.
...
7. சாமுண்டி
ரூபலக்ஷ்ணம்:
இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!.
காயத்ரி :
ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;
சூல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, காளீ ப்ரசோத யாத்
த்யான ஸ்லோகம் :
சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;
கபால சூல ஹஸ்தா;
ச வரதாபய பாணிநீ;
ஸிரோமாலா உபவீதா ச
பத்ம பீடோ பரிஸ்திதா;
வ்யாக்ர சர்மாம்பர தரா
வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;
வாம பாத ஸ்திதா, ஸர்வா
ஸவ்ய பாத ப்ரலம்பிதா;
நவாமி சாமுண்டா தேவிம்
மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :
துதி :
தம் ஷட் ராக ரால வதனே
சிரோமாலா விபூஷனே
சாமுண்டே முண்ட மதனே
அம்பிகே நமோஸ்துதே.
...
Great Thanks to " http://neelajothidam.blogspot.in ".
ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment