Wednesday, February 21, 2018

அருள்மிகு தக்ஷின காசி காலபைரவர் ...


அருள்மிகு தக்ஷின காசி காலபைரவநாத ஸ்வாமி ஆலயம், பேரரசன் அதியமான் நெடுமாறன் அஞ்சியால் சுமார் 1200 வருஷங்களுக்கு முன் ஸ்தாபிக்கட்ட பழமையான திருக்கோவில். காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு இரண்டாவது இடமாக இந்த ஸ்தலம் அமைந்துள்ளதுஇது பரிகார ஸ்தலம்


மஹாசிவராத்திரிக்கு நாலு கால அபிஷேகம் ஆராதனைகளில் கலந்துகொண்டு, காலை 6:30 மணிக்கு ஹோட்டல் அதியமான் பேலஸ்க்கு வந்து தங்கி ரெஸ்ட் எடுத்தோம். எட்டு மணி அளவில் எழுந்து குளித்து இட்லிவடை சாப்பிட்டுவிட்டு ரூமை காலிபண்ணி ஆட்டோபிடித்து ( über Ola கிடையாது ) ஆனந்தவல்லியின் பெற்றோர்கள் இல்லத்திற்கு வந்தோம். சிறிது நேரம் கழித்து ஆட்டோபிடித்து நான் பார்யாள் ஆனந்தவல்லியின் தாயார் அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலுக்கு பயணம்.




தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தர்மபுரியிலேர்ந்து 12KM தூரத்திலுள்ள அதியமான்கோட்டை என்ற இடத்தில் ரோடை ஒட்டியே இந்த ஆலயம் இருக்கிறது. இராஜகோபுரம், பிரகாரம் எதுவும் இல்லை. சாதாரண மண் தரைதான். வாகனங்கள் உள்ளே வருகின்றன


முதலில் துவஜஸ்தம்பம், அதன் அருகில் ஒரு சிறிய மண்டபத்தில் பைரவவாகனம் ( நாய் ) கர்பகிரஹத்தை நோக்கி நின்றுகொண்டுருக்கிறார்




மஹாமண்டபத்தை கடந்து அர்தமண்டபத்திற்குள் நுழைந்தால், அர்தமண்டபத்தின் மேற்சுவற்றின் அடிக்கூறை ஒன்பது பகுதிகளாக சரியாக பிரிக்கப்பட்டு நவகிரஹகங்களின் சக்ரங்கள் அங்கு கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. சூர்யபகவானின் சக்கரம் நடுவில் அமைக்கப்பட்டு இதர கிரஹங்களின் சக்ரங்கள் அதைச்சுற்றி உள்ளது. இந்த சக்கரங்களின் கீழ் நடந்துதான் காலபைரவநாத ஸ்வாமியை தரிசிக்க முடியும்


கர்பகிரஹத்தின் வாயிலில் நந்திதேவர் இருக்கிறார். நந்தியின் பின் ஒரு கல்மேடை இருக்கிறது. விளக்கு ஏற்ற வசதியாக இருக்கும். இந்த கல்மேடையின் ஒருபக்க சுவற்றில் ஸ்ரீ விநாயகப்பெருமானின் திருஉருவம் செதுக்கப்பட்டுள்ளது. சிவன்கோவில் மாதிரி, விநாயகரும் நந்தியும் இருப்பது ஒரு அபூர்வம்தான்




மூன்றடி உயரமுள்ள காலபைரவநாத ஸ்வாமி தலையிலே அக்னி பிழம்பினை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும், கழுத்தினிலே கபால மாலையுடனும், பூனூல் அணிந்தும், அரைஞான் கயிறாக பாம்பினை முடிந்தும், கால்களிலே சலங்கினை கொண்டும், வலது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் திரிசூலத்துடனும், இடது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும், அசுர சோன வாகனம் என்று சொல்லக்கூடிய நாய் வாகனத்தோடு, பத்மபீடத்தில் தெற்கு நோக்கி நிர்வாணமாக நின்றுகொண்டு அருள்புரியும் அற்புத திருக்காட்சிஅவர் முகம் மிக சாந்தமாகவும் அமைதியாகவும் இருக்கிறது

அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷன பைரவர், சம்ஹார பைரவர் என்ற எட்டு பைரவர்களையும், 12 ராசிகளையும் 27 நட்சத்திரங்களையும் உள்அடக்கி கொண்டுள்ளார் இந்த காலபைரவநாத ஸ்வாமி.


தலைசிறந்த பரிகாரத் திருத்தலமாக அமைந்துள்ள இவ்வாலய காலபைரவர் காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்கள் அனைத்தும் காலபைரவர் ஆளுகைக்கு உட்பட்டதேஇந்த காலசக்ரத்தினை இயக்கும் பரம்பொருளே காலபைரவர்எனவே இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சனைகளும் மன சங்கடங்களும் நீங்கப்பெற வகையில் அமைந்த புராதன திருக்கோவில் ஆகும்எல்லாவிதமான வழிபாட்டிற்கும் கைமேல் பலன் கிடைக்கும்இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம்


தரிசனத்தை முடித்து வெளியேவந்தால், மஹாமண்டபத்திற்க்கு வெளியே துவஜஸ்தம்பத்திற்கு பின் தனிக்கூறையுடன் ஆறடி உயரமுள்ள ஒரு ஜெயின் முனியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பார்ஸ்வநாத  தீர்தங்கர சுவாமி என்று எழுதப்பட்டுள்ளது. ஏன் எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை




தேய்பிறை அஷ்டமி திதியில் 18 முறை பிரதக்ஷணம் செய்தால், கோள்களின் பாதிப்பு அறவே குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள்


ராஜ்யத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள் தீர்க்கவேண்டி அரசவையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் இதற்கான சங்கடங்களை தீர்ப்பதற்கான பரிகாரங்களை பேரரசன் அதியமான் கேட்டுக்கொண்ட போது, ஜோதிடர்கள் ஆருடம் பார்த்து அவரிடம் கூறியது:


சகலவிதமான கஷ்டங்களும் குழப்பங்களும் நீங்க, ஸ்ரீ காலபைரவருக்கு தனி ஆலயம் ஸ்தாபிக்கவேண்டும். காசி சென்று, கங்காமாதாவுக்கு பூஜை செய்து, கங்கை கரையில் இருக்கும் கற்களில் சிலை செய்வதற்கேற்ற ஒரு கல்லை தேர்ந்துஎடுத்து, காசியிலுள்ள காலபைரவர் சிலைமாதிரியே அங்கேயே சிலைவடித்து, பின் அதற்குண்டான சகலவித அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து, இங்கே தகடூர் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யவேண்டும். மேற்க்கூரையில் நவகிரகங்களின் யந்திரங்களை சரிசமமாக பிரதிஷ்டை செய்யவேண்டும். பைரவவாகனமான நாயுடன், நந்தியம்பெருமானின் சிலையும் பிரதிஷ்டை செய்யவேண்டும். காசியிலுள்ளபடி ஸ்வாமிசிலை தெற்குநோக்கி பிரதிஷ்டை செய்யவேண்டும்.


அவ்வாறே ஆலயம் அமைத்து, காலபைரவநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த பேரரசன் அதியமானது மனசங்கடங்களும், பிரச்சனைகளும் நீங்கப்பெற்று அவர் சென்ற இடமெல்லாம் ஜெயம் கண்டார்அன்றிலிருந்து காலபைரவரை தன் குல தெய்வமாகவே வணங்கியும் வழிபட்டும் வந்தார்மேலும் தன் கோட்டை சாவி மற்றும் கஜான சாவி என அனைத்தும் காலபைரவரிடத்து பாதுகாத்து வந்தார். அதுமட்டுமில்லாமல் அவரின் வீரவாளினை அனுதினமும் காலபைரவரின் திருப்பாதங்களில் வைத்து காலையும் மாலையும் பூஜை செய்து எடுத்து சென்றார்


அதனால் அவரின் ஞாபகச் சின்னமாக வாள் இன்றும் கூட இத்திருகோவிலில் அமைந்த காலபைரவரின் திருக்கரங்களில் அமைந்து உள்ளது.





ஒரு முறை பிரதக்ஷணம் செய்து, ஆட்டோபிடித்து இல்லம் திரும்பினோம். திரும்பவும் தலைவாழை விருந்தோம்பல். 1 மணி அளவில் தர்மபுரி ஸ்டேஷன் வந்தோம். ஆனந்தவல்லியின் தகப்பனார் வழியனுப்ப ஸ்டேஷனுக்கு வந்தார். நல்ல உள்ளம் படைத்த வெளிப்படையான மனிதர்


2:45 மணிக்கு Coimbatore-Kurla Express.  5:15க்கு Cantonment ஸ்டேஷனிலே இறங்கினோம். über பிடித்து வெலிங்டன் பார்க். Home, Sweet Home.


Adhiyaman Palace Hotel, Dharmapuri 





No comments:

Post a Comment