Friday, April 19, 2013

கருப்பன் காப்பாத்துவான் ...



திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் பேருந்து சாலையில், இடது புறமாக, ஆங்கரைக்கு சற்று முன்பாக மாந்துறை என்ற ஊரும், அங்கு ஒரு சிவன் கோயிலும் உள்ளன.

ஸ்ரீ மாந்துறை சிவன் கோயில் வாசலில் சற்றே தள்ளி ஆலமரக்கருப்பர் ஸ்வாமிக்கு தனியே கோயில். மிகவும் சக்தி வாய்ந்த கோயில். நிறைய சிறப்புகள் உண்டு. ஆலமரத்தடி கருப்பருக்கு முன்பிரும்மாண்டமான இரண்டு குதிரைகள். (ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு). நிறைய வேல்கள் குத்தியிருப்பார்கள்.

இந்தக்கருப்பருக்கு பொரி, பொட்டுக்கடலை, நாட்டுச்சக்கரை, சர்க்கரைப்பொங்கல், சரக்கு என்ற சாராயம், சுருட்டு முதலியன படையல் உண்டு.

வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது லால்குடியிலிருந்து திருச்சிக்கு வரும் சிப்பாய்கள் போலீஸார் உள்பட, யாரும் காலில் செருப்பு அல்லது பூட்ஸ் உடன் இந்தக் கோயிலைக்கடக்க மாட்டார்களாம். அவ்வாறு கடந்தால் முதுகில் சாட்டைஅடி விழுமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த கருப்பர்.

வாழ்க்கையில் Steadyயாக இருக்க வேண்டும் என்பதற்காக கருப்பருக்கு வேல் வாங்கி பிரதிஷ்டை செய்வது வழக்கம்.

கருப்பருக்கு கருப்பிலோ, சிவப்பிலோ பட்டுத்துணி சாத்துவது வழக்கம். அனைத்து வேல்களுக்கு எலுமிச்சம்பழம் குத்தி வைப்போம்.

இந்தக் கருப்பர் கோயில் ஆலமரத்தடி மண் மிகவும் விசேஷமானது. அதை எப்போதும் வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.

எங்கு சென்றாலும், பஸ், ரயில், விமானப்பயணங்களில் இந்த மண்ணில் சிறிதளவு எங்களுடன் லக்கேஜில் வரும்.

இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் பயமே இருக்காது.இந்த மண்ணுக்கு அவ்வளவு மகிமை.

இந்த மண்ணுடன் பயணம் செல்வதால் நம்மைப்பாதுகாக்க அந்தக்காவல் தெய்வமான கருப்பண்ணஸ்வாமியும் நம்முடன் வருவதாக ஒரு நம்பிக்கை.


கருப்பன் காப்பாத்துவான் ...

"கருப்பன் "எங்கேயும் இருப்பான்...கூடவே இருக்கான். கூடவே இருப்பான்.."

" எங்க போறதுன்னாலேயும் கூடவே வருவான்...வர்றான்."

எங்கள் குடும்பத்தில் பரம்பரையாக எல்லாப்பெரியவர்களும் வழங்கும் சொற்கள்.


No comments:

Post a Comment