Tuesday, April 29, 2025

ஷேத்ர யாத்திரை .. திருமங்கலக்குடி

 ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (5)

1-9-2024 .. ஞாயிறு

தேப்பெருமாநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள

திருமங்கலக்குடி திருக்கோயில்.. 20 நிமிஷ டிரைவ் 

அருள்மிகு அன்னை மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு அய்யன்

பிராணநாதேஸ்வரர் தரிசனம் .. பிராணன்தந்த பிராணவரதேஸ்வரர்

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை .. 

மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம்பஞ்சமங்கள ஷேத்திரம்

தலத்தின் பெயர் மங்களக்குடிதல விநாயகர் மங்கள விநாயகர்

அம்பாள் மங்களாம்பிகைதீர்த்தம் மங்கள தீர்த்தம்

விமானம் மங்கள விமானம்.


சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்வழக்கமாக லிங்கத்தின் பாணம்

ஆவுடையார் (பீடம்உயரத்தைவிட சிறியதாக இருக்கும்ஆனால் 

இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட

உயரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்புஅகத்தியர் இத்தலத்திற்கு 

வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம்

இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருக்கின்றது

அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான்

மலர் வைத்து பூஜித்தார்.

அன்னை மங்களாம்பிகை தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வலது

கையில் தாலிக்கொடியுடன்காட்சி தருகிறாள்.  அம்பாளை வழிபடும்

பெண்களுக்கு தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது

இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில்

திருமணம் நடைபெறும்திருமணம் நடைபெற்ற பெண்கள்தீர்க்க 

சுமங்கலியாக வாழ்வார்கள்என்பது ஐதீகம்

ஜாதகங்களில் சொல்லப்படும் தோஷங்களில் கடுமையானது 

மாங்கல்ய தோஷம்அந்ததோஷத்தைப் போக்கி வளமான வாழ்வை 

அளிப்பவர் இந்த மங்களாம்பிகை.


முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர்

அரசனுக்குத் தெரியாமல் தான்கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் 

கோயில் கட்டினார்செய்தியறிந்து வெகுண்ட அரசன் அமைச்சரைச்

சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான்அலைவாணர் தனது 

மரணத்துக்குப் பின் தனதுஉடலை திருமங்கலங்குடிக்கு எடுத்துச் 

செல்லும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவரது ஆட்கள்

அவ்வண்ணமே எடுத்துச் சென்றனர்அமைச்சரின் மனைவி

மங்களாம்பிகையிடம் சென்று தன் கணவனை உயிரோடு திருப்பித்

தர வேண்டுமென மன்றாடி வேண்டினாள்அம்மன் அருளால்

திருமங்கலங்குடிக்குள் அமைச்சரது உடல் எடுத்துவரப்பட்டதும் 

அவர் உயிர் பெற்று எழுந்தார்இந்நிகழ்வின் காரணமாகவே 

கோவிலின் சுவாமி பிராணநாதேசுவரர் என்றும் அம்மன் மாங்கல்ய

பாக்கியமளித்ததால் மங்களாம்பிகை எனவும் பெயர் கொண்டுள்ளனர்

என்பது தொன் நம்பிக்கை.


மற்றொரு புராணத்தின் படிநவக்கிரகங்களுக்கு விதியை மாற்றும் 

அதிகாரம் இல்லாததால்காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த 

தொழுநோயை நவக்கிரகங்கள் தடுத்து நீக்கியதற்காக அந்நோய் 

கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார்பிரம்மா

அவர்களை திருமங்கலக்குடிக்குச் சென்று கோள் வினை தீர்த்த 

விநாயகர் (கிரகங்களின் பாவங்களைப்போக்கிய விநாயகர்

பிரார்த்தனை செய்து அவர்களின் பாவங்களிலிருந்து விடுபடச் 

சொன்னார்.  இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது.

நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கியருளிய பெருமான் 

திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணநாதேசுவரர்

ஆகவே திருமங்கலக்குடியில் பிராணநாதேசுவரரையும் 

விநாயகரையும் வழிபட்ட பிறகுதான்சூரியனார் கோவிலுக்குச் 

சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்

இத்தலம் ஒரு சிறந்த குஷ்டரோக நிவர்த்தித் தலம் ஆகும்

நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்கவெள்ளெருக்கு இலையில்

தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதால் இந்தக் கோவிலில்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது

உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக 

படைக்கப்படுகிறதுபித்ருதோஷம் உள்ளவர்கள்முன்னோர்களுக்கு

முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள்இத்தலஇறைவனுக்கு தயிர்

சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்


உள்சுற்றில் 11 சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன

வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த 

விஷயங்களை நான் அறிந்தவைகளோடுஅங்கொன்றும்

இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். 

பதிவர்களுக்குமிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்


No comments:

Post a Comment