1-9-2024 .. ஞாயிறு
திருநீலக்குடிலிருந்து கும்பகோணம்-காரைக்கால்
சாலயில் 10 கிமீ. தொலைவில் உள்ள(திருநல்லம்)
கோனேரிராஜபுரம் திருக்கோயில் .. 10 நிமிஷ டிரைவ்
திருநீலக்குடிலிருந்து கும்பகோணம்-காரைக்கால்
சாலயில் 10 கிமீ. தொலைவில் உள்ள(திருநல்லம்)
கோனேரிராஜபுரம் திருக்கோயில் .. 10 நிமிஷ டிரைவ்
அருள்மிகு அன்னை அங்கவள நாயகி உடனுறை
அருள்மிகு அய்யன் உமாமகேஸ்வரர் தரிசனம் ..
பூமாதேவி வழிபட்ட ஸ்தலம்
உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை
அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர்
திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில்
அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார
தலமாக விளங்குகிறது.
இங்கு ஈசன் ‘மாப்பிள்ளை சுவாமி’யாக திருக்கல்யாண
கோலத்தில் உற்சவராக எழுந்தருளியுள்ளார். திருமால்
அம்பிகையை தாரை வார்த்து தரும் கோலத்தில் உடன்
எழுந்தருளியிருக்கிறார்.
அருள்மிகு அய்யன் உமாமகேஸ்வரர் தரிசனம் ..
பூமாதேவி வழிபட்ட ஸ்தலம்
உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை
அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர்
திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில்
அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார
தலமாக விளங்குகிறது.
இங்கு ஈசன் ‘மாப்பிள்ளை சுவாமி’யாக திருக்கல்யாண
கோலத்தில் உற்சவராக எழுந்தருளியுள்ளார். திருமால்
அம்பிகையை தாரை வார்த்து தரும் கோலத்தில் உடன்
எழுந்தருளியிருக்கிறார்.
இத்தல மூலவர் உமாமகேஸ்வரர் தேவகுரு
பிரகஸ்பதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். எனவே
இத்தல ஈசனை வழிபட்டால் குருபார்வை கிட்டும்.
இத்தல ஈசனை ‘பூமி நாதன்’ என்றும் அழைக்கிறார்கள்
இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத்
துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர்
அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின்
குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி
சந்நிதி கொண்டு காணப்படுகிறார்.
பிரகஸ்பதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். எனவே
இத்தல ஈசனை வழிபட்டால் குருபார்வை கிட்டும்.
இத்தல ஈசனை ‘பூமி நாதன்’ என்றும் அழைக்கிறார்கள்
இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத்
துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர்
அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின்
குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி
சந்நிதி கொண்டு காணப்படுகிறார்.
இங்குள்ள நடராஜர் சன்னிதி பெருமைவாய்ந்த ஒன்று.
அப்பர்சம்பந்தர் ஆகியோரின் பாடல்பெற்ற திருத்தலம்
அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத
அப்பர்சம்பந்தர் ஆகியோரின் பாடல்பெற்ற திருத்தலம்
அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத
அருள்மிகு நடராஜர் திருக்கோயில்-
ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக நான்கு திருக்கரங்களும்
விரிசடையுமாக, கைரேகைகள் தேமல் மச்சம் என
மனிதருக்கேஉரிய அங்கஅடையாளங்களுடன் திகழும்
சுயம்பு ஸ்ரீநடராஜபெருமான் ஸ்ரீசிவகாமி அம்பாள்
விக்கிரகத் திருமேனி தரிசனம் ..
கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம்
ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில்
உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி
ஒருவரை வரவழைத்து பஞ்சலோக நடராஜர் விக்ரகம்
ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத்
தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட
நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால்,
தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது
பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறைசெய்தாலும்
அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை
சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச்
சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு
கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக
ஒருநாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக
கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில்
ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான்
புலையன் உருவத்தில், கையில் 4 வேதங்களையும்
நாய்களாக பிடித்துக்கொண்டு வந்தார். அவருடன்
அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்
பெருமானை சிறுகுழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி
தோன்றினாள். அவர்கள் இருவரும் வீடுவீடாகச் சென்று
தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி
அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு
தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும்
உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த
சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.
சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற
ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது
தண்ணீர்?’ வேண்டுமென்றால் உலோகக் கூழ்
இருக்கிறது குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம்
நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகி
விட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று
கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும்,
சிவகாமிஅம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள்.
அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப்
பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள்,
உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக்
கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில்ஆழ்ந்தான்.
‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு
செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான்.
சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை
கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட
வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின்
காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே
நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது.
தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும்,
சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய்
குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.
‘இவ்வூர்ஆலயத்தில் உள்ள வைத்தியநாத
சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால்
குணமடையலாம்’ என்று ஈசன்அருளினார். அதன்படி
செய்து மன்னன் குணமடைந்தான். மன்னனின்
வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது
திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில்
மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர்
உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல்
சொல்கின்றது.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து
அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு
அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு
ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு
மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்
No comments:
Post a Comment