Saturday, April 26, 2025

ஷேத்ரயாத்திரை கும்பகோணம் 2024 (2)

 1-9-2024 .. ஞாயிறு

ஹோட்டல் ராயாஸ்லிருந்து காலை எட்டு மணிக்கு 

நானும் பார்யாளும் கிளம்பினோம் .. பரிக்ஷ்யமான 

டாக்ஸியும் டிரைவரும் ..  கும்பகோணத்திலிருந்து 

மன்னார்குடி சாலையில் 11 கிமீ தொலைவில்  

வலங்கைமான் அருகில் அமைந்துள்ள ஆவூர் 

பசுபதீஸ்வரர் திருக்கோயில் .. 30 நிமிஷ டிரைவ் 

திருக்கோயிலில் அருள்மிகு அன்னை மங்களாம்பிகை

பங்கஜவல்லி உடனுறை அருள்மிகு அய்யன்

பசுபதீஸ்வரர் தரிசனம் இங்குள்ள இரு அம்பிகைகளில்

மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை 

செய்யப்பட்டதுபங்கஜவல்லி அம்பாள்இதுவே 

பழமையானது. (தேவாரத்தில்'பங்கயமங்கை விரும்பும் 

ஆவூர் ' என்று வருகிறதுஆனால் இங்குச் சிறப்பு 

மங்களாம்பிகை சந்நிதிக்கே)

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு (பசு)

பிரமனின் அறிவுரைப்படி இங்கு வந்து பசுபதீஸ்வரரை 

பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத்தலம் ஆவூர்.

ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள 5 பைரவ மூர்த்திகள் 

தரிசனம் .. அசிதாங்க பைரவர், குருபைரவர், சண்ட 

பைரவர், கால பைரவர், உன்மத்த பைரவர் .. நான்கு 

மூர்த்திகள் மேற்கு நோக்கியும்ஒரு மூர்த்தி வடக்கு 

நோக்கியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலம் . இந்த

பஞ்சபைரவரை வழிபடஅனைத்து துன்பங்களும் நீங்கி

பிதுர் தோஷம் நிவர்த்தியாகும்.


ஆவூர்லிருந்து காரைக்கால் சாலயில் 30 கிமீ 

தொலைவில் உள்ள திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர்

திருக்கோயில் .. 45 நிமிஷ டிரைவ் 

அருள்மிகு அன்னை ஒப்பிலாமுலையாள் உடனுறை 

அருள்மிகு அய்யன் நீலகண்டேசுவரர் தரிசனம் .. 

அருள்மிகு அநூபமஸ்தனி உடனுறை அருள்மிகு 

அய்யன் மனோக்ஞநாத சுவாமி .. மூலவர் சன்னதியின் 

இடப்புறத்தில் இரு அம்மன் சன்னதிகள் உள்ளன

முதல் சன்னதியில் தவக்கோலம்மையும்இரண்டாவது 

சன்னதியில் அழகாம்பிகையும் உள்ளனர்


பரலோக நடனக் கலைஞரான ஊர்வசியுடன் 

இணைந்தபோது செய்த பாவங்களிலிருந்து விடுபட

பிரம்மாவால் வழிபடப்பட்ட லிங்கம் .. 


மார்க்கண்டேயர் தன் ஆயுளை நீட்டிக்க வேண்டி 

வழிபடப்பட்டலிங்கம் .. 

மார்க்கண்டேயர் திருநீலக்குடி வந்து கடுமையாக 

விரதம் அனுஷ்டித்து சிவபெருமானை தியானிக்க

சிவனார் அவர் முன் தோன்றிஅந்த தலத்தில் என்றுமே

பதினாறு வயதுடைய இளைஞனாகவே இருக்கட்டும் 

என வரம் அளித்தார்மார்க்கண்டேயரும் அங்கேயே 

தங்கி சிவனை வழிபட்டு வந்தார்.

இத்தலத்தில் அதிசயம் என்ன என்றால் இங்குள்ள 

நீலகண்டேஸ்வரர் ஆலகால விஷத்தை உண்டதினால் 

அவர் தொண்டையில் தங்கி இருந்த அந்த விஷத்

தன்மையைக் குறைக்க நல்லெண்ணை லிங்கத்தின் 

மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள்அத்தனையும்

சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது

அதிசயமாக உள்ளதுநாள் பூராவும் எண்ணை

அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணையையும் 

லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுகிறது


தொடரும் அதிசயம் என்ன என்றால், எத்தனை 

எண்ணை ஊற்றி அபிஷேகம் செய்தாலும்அதை

துணியினால் துடைப்பது இல்லைதண்ணீர் ஊற்றி 

அலம்புவது இல்லைஊற்றப்படும் எண்ணையும் கீழே 

வழிவதே இல்லைலிங்கமே அதை உறிஞ்சி விடுகிறது

மறுநாள் சென்று பார்த்தால் எண்ணெய் ஊற்றிய 

அடையாளமே தெரியாமல் லிங்கம் உலர்ந்து 

காணப்படும்அபிஷேகம் செய்யப்படும் எண்ணைய் 

அனைத்தும் எங்கு சென்று மறைகின்றது என்பது 

இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை

எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே

இருந்தாலும் சிவலிங்கம் வழுவழுப்பாக இருப்பதற்கு

மாற்றாக சொர சொரப்பாகவே உள்ளதுஅங்குஉள்ள

லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த எண்ணையை 

உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் 

என்பது நம்பிக்கைமூலவருக்கு அபிஷேகம் செய்யும்

எண்ணெய் பாணத்திற்கு உள்ளே சென்றுவிடும்

அம்பாளே சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக 

ஐதீகம்

சூரியனை மையமாகக் கொண்டு அனைத்து

கோள்களின்இயக்கத்தையும் பிரதிபலிக்கும்வகையில்

இக்கோயிலின் நவக்கிரக அமைப்பு உள்ளது.

தலவிருட்சம் ஐந்து இலை வில்வ மரம்.

மிருத்யு தோஷம்ராகு தோஷம் ஆகியவற்றை 

நிவர்த்திக்கும் தலம்.

திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சோழநாடு 

காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவஸ்தலம்.


வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து 

அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு

அங்கொன்றும்இங்கொன்றுமாக சேர்த்து இங்கு 

ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். 

பதிவர்களுக்குமிக்க நன்றியைத் தெரிவித்துக் 

கொள்கிறேன்.

படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்

No comments:

Post a Comment