மைசூர் மயிலாடுதுறை ட்ரெயின், பெங்களூர் சிட்டி
ஸ்டேஷன், இரவு ஏழு மணிக்கு .. எட்டரை மணிக்கு
கட்டிண்டுபோன மிளகாப்பொடி தடவிய இட்லி ஆறு
சாப்பிட்டு மோர் குடிச்சுட்டு படுக்கையை போட்டாச்சு ..
செகண்ட்ஏசி .. கார்த்தாலே ஐந்தரைக்கு முழிப்பு
வந்தபோது பாபநாசம் ஸ்டேஷன்ல வண்டி
நின்னுண்டுருந்தது .. ஆறு மணிக்கு கும்பகோணம்
ஸ்டேஷன் .. டாக்ஸி பிடுச்சு ஹோட்டல் ராயாஸ்..
அங்குள்ள அனைவரும் பரிக்ஷ்யம், மூணு தடவை
அங்கு தங்கியுள்ளேன் ..
கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவில்
அமைந்துள்ள பாபநாசம் (108 சிவலிங்க)
இராமலிங்க சுவாமி திருக்கோயில் ..
மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி
பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில்
அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீண்ட மண்டபத்தில் மூன்று
வரிசைகளில் ஓர் வரிசைக்கு 35 லிங்கங்களாகவும்,
மூன்றாம் வரிசையில் 36ம் ஆக 106 லிங்கங்கள் உள்ளன
கருவறையில் மூல லிங்கம் (ராமலிங்கசுவாமி).
கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து
கொண்டு வந்த அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி.
தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான்
சிலை கோவிலின் கிழக்குப்புறத்தில்அமைந்துள்ளது.
ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில்
அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி
விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது.
31-8-2024 சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு நானும்
பார்யாளும் கோயிலுக்குள் நுழைந்தோம். எனது சகோதரன்
ராமச்சந்திரனும் அவனது நண்பர் குடும்பபும் சேர்ந்து
கொண்டனர் .. ஸகலதோஷங்கள் நிவர்த்திக்காக கோயில்
சிவாச்சாரியார் சொன்ன அனைத்து வஸ்துக்களையும்
அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து அவருக்கு தானம்
செய்தோம் .. அவர் சொன்னபடி அருள்மிகு
விநாயகப்பெருமான் சன்னதியில் ஆரம்பித்து 106
லிங்ககளுககும் விளக்கில் திரிபோட்டு எண்ணெய்
ஊற்றிக்கொண்டு நான் வந்தேன் .. பார்யாள்
விளக்கேற்றிக்கொண்டு வந்தாள் .. 107வது அனுமந்த
லிங்கம் சன்னதியிலும் விளக்கேற்றினோம் .. பிறகு
சிவாச்சாரியார் விநாயகப்பெருமான் சன்னதியில்
ஆரம்பித்து 106 லிங்ககளுககும் அனுமந்த லிங்கம்
சன்னதியிலும் அடியேனின், அடியேன் குடும்ப
அங்கத்தினர்கள் அனைவரின் கோத்ரம் நக்ஷ்த்திரம் ராசி
ஷர்மா சொல்லி அர்ச்சனை செய்தார் .. அப்புறம் அம்பாள்
பர்வதவர்த்தினி சன்னதியில் அர்ச்சனை .. மூலவர்
ராமலிங்கசுவாமி (108வது லிங்கம்) சன்னதியில்
விளக்கேற்றி அர்ச்சனை .. கிட்டத்தட்ட மூன்றை மணி நேரம்
12:30 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதான
கூடத்தில் மதிய உணவு .. சுடசுட நல்லசுவையான உணவு
இன்று சக்திமிக்க சனி மஹா ப்ரதோஷம் .. 4:30 மணிக்கு
ஆரம்பம் .. அம்பாள் சன்னதி அருகே துண்டை விரிச்சு
படுத்துண்டாச்சு .. குறைஞ்சது 60 பேர் படுத்துண்டுருப்பா..
தோஷ நிவர்த்தி சடங்குகள் பூரணமடைய கோயில்
வெளிப்ரகாரத்தை 108 முறை சுற்றவேண்டும்.. 3:30
மணிக்கு ஆரம்பிச்சோம் .. நான் 3 தடவைதான் சுற்றினேன்
பார்யாள் 11 தடவை சுற்றினாள்.. 4:30 மணிக்கு
அபிஷேகம் ஆரம்பிச்சு ஆராதனை முடிய 6 மணி ஆகிவிட்டது
ஸகல வினைகளையும் தீர்க்கும், ஸகல பாவங்களையும்
போக்கும், ஸகல ஸௌபாக்யங்களையும் கொடுக்கும்,
சிவபெருமானின் அருட்கடாக்ஷத்தை நமக்கு பெற்றுத்தரும்
சக்திமிக்க சனி மஹா ப்ரதோஷம் அன்று அருள்மிகு சீதா
பிராட்டியார் உடனுறை அருள்மிகு இராமச்சந்திர மூர்த்தி
பூஜை செய்த சிவலிங்க அபிஷேகம் ஆராதனை தரிசிக்கும்
புண்ணியம் .. பூர்வ ஜென்மங்களில் நான் நிறைய
புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் என்றே எனக்கு
தோன்றுகிறது. இல்லா விட்டால் இப்படி ஒரு புண்ணியம்
எனக்கு கிடைத்திருக்க முடியாது.
6:30 மணிக்கு ப்ரஸாதம் .. சக்கரைப்பொங்கல்
புளியோதரை வடை .. நன்னா சாப்டாச்சு .. 8 மணிக்கு
ராயாஸ் திரும்பி படுத்தாண்டுச்சு.
இலங்கையில் ராவணனை சம்ஹாரம் செய்த தோஷம்
அகல ராமபிரான் ராமேசுவரத்தில் சிவபூஜைசெய்து,
தீர்த்தத்தில் நீராடிவிட்டு சீதை, லட்சுமணன், அனுமன்
ஆகியோருடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்த
வழியில் மணற்பாங்கான குடமுருட்டி ஆற்றின் அருகே
பாபநாசத்துக்கு வந்தனர். அப்போது தங்களை ஏதோ
தோஷம் பின் தொடர்வதை உணர்ந்த சீதை அதை
ராமனிடம் கூறினார். அதை கேட்ட ராமன், ராவணனின்
தங்கை சூர்ப்பனகை, அரக்கர்கள் ஆகியோரை சம்ஹாரம்
செய்த தோஷமே தங்களை பின்தொடர்ந்து வருகிறது
என்று கூறி, தோஷம் அகலசிவலிங்கபூஜை செய்வது தான்
உத்தமம் என்று தீர்மானித்தனர். அங்கே வில்வமரம்
இருந்தது. சீதை அனுமனை அழைத்து, நீ காசிக்கு சென்று
சிவலிங்கம் ஒன்றை கொண்டு வருவாயாக என்று
கூறினார். காசிக்கு சென்ற அனுமன் திரும்பி வரும் வரை
சீதை குடமுருட்டி ஆற்றில் மூழ்கி ஈரமணலை எடுத்து
வரிசையாக சிவலிங்கங்களை உருவாக்கினார். ராமன்,
லட்சுமணன் ஆகியோரின் உதவியுடன் சீதை தனது
கரங்களாலேயே 100-க்கு மேற்பட்ட லிங்கங்களை
உருவாக்கினார். அனுமன் காசியில் இருந்து திரும்பும்
முன்னதாகவே பக்தி பரவசத்துடன், வில்வ மரத்தடியில்
சிவலிங்க பூஜையை தொடங்கிவிட்டனர். காசியில்
இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்த அனுமன் அதை
வெளிப்பிரகாரத்தில் வைத்து விட்டார். இங்கு பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ள 107 சிவலிங்கங்களை பக்தர்கள்
வழிபட்டாலும், 108-வது சிவலிங்கமான அனுமந்த
லிங்கத்தையும் வழிபட்டு, பின்னர் அம்பாளை வழிபட்டால்
தான் முழு பலன் கிடைக்கும். தோஷம் நீங்கப்பெறும்.
ராமபிரான் தோஷம் அகல காரணமான இத்தலம்
பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான் அறிந்தவைகளோடுஅங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி
ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்குமிக்க நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
பட உதவி: ஒரு வலைப்பூ பதிவு
No comments:
Post a Comment