Tuesday, January 13, 2026

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் (தமிழ் உரையுடன்)

சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தின் அக்ஷரங்களை வரிசைக் கிரமமாக ஒவ்வொரு ஸ்லோகத்தின் முதலெழுத்தாக அமைத்துச் செய்த ஸ்தோத்திரம்.

சிவபெருமானின் பஞ்சாக்ஷரமானநமசிவயஎன்னும் மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு ஸ்லோகம் உள்ளது


தினமும் விடியற் காலையில் ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் தெய்வ அருள் கிட்டும். சிவலிங்கம் வைத்து பாராயணம் செய்து வந்தால் எல்லா பேறுகளும் கிட்டும். சிவபெருமானே நேரில் தோன்றுவார்

ஸ்தோத்திரங்களில் மிக சக்தி வாய்ந்தது இந்த ஸ்தோத்திரம்


नम: शिवाय।। ஓம் நம சிவாய

ஐந்தெழுத்து மந்திரத்ததை வேண்டிய அளவு செபம் செய்த பின்பு சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் தான் முழுபலனும் கிட்டும்.


ஆதி குரு சங்கராச்சாரியார் சிவபெருமானின் ஆசிகளைப் பெறுவதற்கு இயற்றப்பட்ட‌ மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும் இந்த சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்! யாரொருவர் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை சிவனுக்கு அருகில் உச்சரிக்கிறாரோ, அவர் சிவபாதம் சேர்ந்து பேரின்பத்தில் திளைப்பார்.


नागेंद्राराय त्रिलोचनाय       நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய

भस्मांगरागाय महेश्वराय।   பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |

नित्याय शुद्धाय दिगंबराय   நித்யாய ஷுத்தாய திகம்பராய

तस्मै नकाराय नमः शिवाय. தஸ்மை -காராய நம: சிவாய || 1 ||


அரவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசுவரதன் தான்

விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம்

அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த

நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேனே.


நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே

‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பஞ்சாக்ஷரங்களில் முதலான நகார ரூபியுமான அந்த சிவனுக்கு நமஸ்காரம்.


मन्दाकिनी सलिला चंदना कर्षितया 

नंदीश्वर प्रमथनाथ महेश्वराय। 

मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय 

तस्मै मकराय नमः शिवाय ।। 


மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய 

நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய

மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய 

தஸ்மை -காராய நம: சிவாய || 2 ||


கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்

நந்தியுள்ள ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்

மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான

மகாரமாய் உருக் கொள்வோனை மனங்கொளத் துதிக்கின்றேனே.


மந்தாகினி நதிநீர் கொண்டு வணங்கப்பட்டு, அரைத்த சந்தனம் பூசப்படுபவனே, நந்தியால் வணங்கப்படும் தேவனே, பூதகணங்களாலும் வணங்கப்படும் தலைவனே மகேஸ்வரனே, மந்தாரை மலரையும் இன்னும் பல மலர்களையும் கொண்டு வணங்கப்படுபவனே 

‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பஞ்சாக்ஷரத்தின் இரண்டாவது எழுத்தாகிய மகாரத்தினால் பூஜிக்கப்பட்டவருமான அந்த சிவபிரானுக்கு எனது நமஸ்காரம்.


शिवाय गौरी वदनब्ज वृंदा சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த

सूर्याय दक्षध्वर नाशकाय। ஸூர்யாய தக்ஷா-த்வர நாஷகாய |

श्रीनीलकण्ठाय वृषध्वजाय ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷ-த்வஜாய

तस्मै शिखराय नमः शिवाय ।।தஸ்மை சி-காராய நம: சிவாய || 3 ||


தக்கனின் யாகம் தன்னைத் தகர்த்து தாட்சாயனியின்

மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்

தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்

சிகாரமாய் உருக்கொள்வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே.


தாமரை முகத்தாள் கௌரியின் முகம் மலர காரணமான அதிகாலை சூரியனைப் போன்றவனே, மங்களகரமானவனே, தக்ஷணின் யாக அர்ப்பணத்தை அழித்தவனே, காலகூட விஷத்தால் நீல நிறமாகிய கழுத்தை உடையவனே, காளைக்கொடியை உடையவனே

சிகர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பஞ்சாக்ஷரத்தின் மூன்றாவது எழுத்தாகிய சிகார ரூபமாயுமிருக்கின்ற அந்த பரமேச்வரனுக்கு எனது நமஸ்காரம்.


वशिष्ठ कुम्भोद्भव गौतमैर्य   வஸிஷ்ட கும்போத் பவ கௌதமார்ய

मुनीन्द्र देवारचित्त शेखराय। முனீந்த்ர தேவார்சித ஸேகராய |

चन्द्रार्क वैश्वानर लोचनाय   சந்த்ரார்க்க வைஸ்வா நர லோசநாய

तस्मै वक्राय नमः शिवाय ।।தஸ்மை வா-காராய நம: சிவாய || 4 ||


வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல்

தவத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்

சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை

வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே.


வசிஷ்டர், அகஸ்தியர், கௌதமர் போன்ற மாமுனிவர்களாலும், வானுறை தேவர்களாலும் வணங்கப்படுபவனே, பிரபஞ்சத்திற்கே மகுடமாக இருப்பவனே, சந்திரன், சூரியன். அக்னியைத் தனது மூன்று கண்களாகக் கொணடவனே

வாகார அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பஞ்சாக்ஷரத்தின் நான்காவது எழுத்தாகிய வகாரமாயும் விளங்கும் பரமசிவனை நான் பணிகிறேன்.


यज्ञस्वरूपाय जटाधाराय        யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய

पिनाकहस्ताय सनातनाय।      பிநாக ஹஸ்தாய ஸநாதநாய |

दिव्याय देवाय दिगंबराय        திவ்யாய தேவாய திகம்பராய 

तस्मै यकाराय नमः शिवाय ।। தஸ்மை -காராய நம: சிவாய || 5 ||


யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட

கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை

தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் பரராம் துய்ய

யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.


தியாகத்தின் திருவுருவானவனே, சடை முடி தரித்தவனே

ஆதியும் அந்தமும் இலாதவனே, திரிசூலம் ஏந்தியவனே, தெய்வீகமானவனே, ஒளி பொருந்திய மேனியனே, நாற்திசைகளையும் ஆடையாக அணிந்தவனே

கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்!

பஞ்சாக்ஷரத்தின் ஐந்தாவது எழுத்தான யகாரமாயுமிருக்கின்ற அப்பரமசிவனுக்கு நான் அடிபணிகின்றேன்.


பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் : படேத் சிவ ஸன்னிதௌ |

சிவ லோகம் அவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||


இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தை சிவன் சந்நிதியில் யார் அர்த்தத்துடன் கூறுகிறாரோ அவர் சிவனின் இருப்பிடத்தை அடைந்து அவருடன் வாழ்வார்.  


ஒம் நமசிவாயசொன்னால் சித்தர் தரிசனம் கிடைக்கும்.

காலை மாலை இருவேளைஒம் நமசிவாயசொல்ல சொல்ல நாற்றுக்கிடையே களை பறித்து எரியப்படுவது போல், தூய ஆத்மாவின் உன்னத தன்மையை மாசுபடுத்தும் கர்மவினை பதிவுகள் ஒவ்வொன்றாக பிடுங்கி  ஏறியப்படுகின்றன.


ஒம் நமசிவாயஎனும் எழுத்துக்கள் ஒரு சாதரண எழுத்துக்கள் அல்லஈடுபாடு கொண்டு தொடர்ந்து உச்சரிக்க நல்ல அதிர்வுள்ள அலைகளை உச்சரிப்பவர் உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் சுழலசெய்கிறதுயாரொருவர் தொடர்ந்து ஈடுபாடுடன் சிவ மந்திரத்தை உச்சரிகிறார்களோ அவர்கள் கர்மவினை பதிவுகள்  அன்றுமுதல் வேரறுக்கப்படுகின்றனநம்மைசுற்றி எப்பொழுதும் இந்த மந்திரம் ஒரு அதிர்வு அலைகளை தந்து கொண்டேயிருக்கும்.  அங்கிங்கெனாதபடி எங்கும், எங்கெங்கும் வியாபித்திருக்கும்


எம் பெருமானே, ஈசனே, நின் பொற்பாதங்களில் சரணாகதி

சரணாகதி, சரணாகதி.

எல்லாம் நீ போட்ட  பிச்சையே, எல்லாம் நினது திருவருளே.

எதற்கும் மூலம் சிவம் எனும் ஆற்றலே.

சிவமெனும் சக்தியேசிவமே யாவும்.

எங்கும் சிவமே, எதிலும் சிவமே.

சிவமே உம்முள்ளும், சிவமே எம்முள்ளும்.

நடக்கும் அனைத்தும் சிவனின் கருணையால்

சிவத்தின் சிவ மூலத்தில் எழுதிவைக்கப்பட்ட 

சிவனின் அன்புஅலைகளால். ஆட்சிசெய்வது 

சிவனின் தார்மீக அலைகள்.

சிவமின்றி எதுவும் இல்லை.

எங்கெங்கும் சிவம். சிவமயம், சிவ ஒளி, சிவ நாமம்

சிவ மந்திரம், சிவ அதிர்வு, சிவ தரிசனம்.

எல்லாம் சிவமே. அனைத்தும் சிவமே.


வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்

பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்


No comments:

Post a Comment