Saturday, January 10, 2026

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

श्रीमच् छङ्करभगवतः शिव पञ्चाक्षर नक्षत्र माला स्तोत्रं

ஶ்ரீமத் சங்கரபகவத: (ஆதிசங்கரர்) அருளிய 

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

ஆதிசங்கரர் நக்ஷத்திரங்களின் எண்ணிக்கையைக்

கொண்டு 27 ஸ்லோகங்களில் சிவபெருமானின் 

பெருமையை விளக்குகிறார்

ஒவ்வொரு ஸ்லோகத்தின் நான்கடிகளிலும் ‘நமச்சிவாய

என்று கூறுவதால் 108முறை இம்மந்திரத்தை உச்சரிக்கும்

புண்ணியம் கிடைக்கும் வகையில் இந்த ஸ்தோத்திரத்தை

அமைத்திருக்கிறார்.


श्रीमदात्मने गुणैकसिन्धवे नमः शिवाय 

धामलेशधूतकोकबन्धवे नमः शिवाय | 

नामशेषितानमद्भवान्धवे नमः शिवाय 

पामरेतरप्रधानबन्धवे नमः शिवाय ||  ||


ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நமசிவாய  

தாமலேசதூ தகோகபந்தவே நமசிவாய |

நாமசேஷிதாநமத் பவாந்தவே நமசிவாய  

பாமரேதரப்ரதானபந்தவே நமசிவாய ||


பரமாத்மாவாகவும் குணப்பெருங்கடலாகவும் உள்ன 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

எவனுடைய ஒளிக்கீற்றினால் சூரியனே ஒதுக்கப்

படுகின்றானோ அந்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

நிலையற்ற உலகவாழ்வாகிற பாழுங்கிணறு எவனுடைய 

பக்தர்களுக்கு இல்லை என்று ஆகிவிடுகிறதோ 

அந்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

மெய்ஞானம் பெற்ற மேன்மக்களுக்கு தலையாய 

சுற்றமாய் இருக்கிற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


कालभीतविप्रबालपाल ते नमः शिवाय   

शूलभिन्नदुष्टदक्षफाल ते नमः शिवाय | 

मूलकारणाय कालकाल ते नमः शिवाय   

पालयाधुना दयालवाल ते नमः शिवाय ||  ||


காலபீதவிப்ரபாலபால தே நமசிவாய  

சூலபின்னதுஷ்டதக்ஷபால தே நமசிவாய |

மூலகாரணாய காலகால தே நமசிவாய   

பாலயாது நா தயாலவால தே நமசிவாய ||


யமனைக்கண்டு அஞ்சிய அந்தணச் சிறுவனைக் காத்த

(மார்க்கண்டேயனை) சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்

எவனுடைய சூலத்தினால் கொடிய தக்கனுடைய தலை

பிளக்கப்பட்டதோ அந்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்

அனைத்திற்கும் மூலகாரணனாயும்

காலனாகிற யமனுக்கும் காலனாகவும் இருக்கும் 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

அருளுக்கிருப்பிடமானவனே இன்றே காத்தருள்

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 


इष्टवस्तुमुख्यदानहेतवे नमः शिवाय  

दुष्टदैत्यवंशधूमकेतवे नमः शिवाय | 

सृष्टिरक्षणाय धर्मसेतवे नमः शिवाय  

अष्टमूर्तये वृषेन्द्रकेतवे नमः शिवाय ||  ||


இஷ்டவஸ்து முக்யதான ஹேதவே நமசிவாய  

துஷ்ட தைத்யவம்ச தூமகேதவே நமசிவாய |

ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்மஸேதவே நமசிவாய  

அஷ்டமூர்த்தயே வ்ருஷேந்த்ரகேதவே நமசிவாய ||


வேண்டிய பொருளை சிறப்பாகத் தருவோனாகிய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

கொடிய அரக்கர் குலத்தை அழிக்கும் நெருப்பாக 

இருக்கின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்;

சிருஷ்டித் தொழிலையும் காத்தல் தொழிலையும் செய்து 

கொண்டு அறநெறியெனும் பாலமாக அமைந்துள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்;

(நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம்இயமானன்

சந்திரன்சூரியன் ஆகியஎட்டு உருவங்களைக் 

கொண்டவனாயும் இடபக்கொடியை உடையவனாயும் 

உள்ள சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.


आपदद्रिभेदटङ्कहस्त ते नमः शिवाय   

पापहारिदिव्यसिन्धुमस्त ते नमः शिवाय | 

पापदारिणे लसन्नमस्तते नमः शिवाय   

शापदोषखण्डनप्रशस्त ते नमः शिवाय ||  ||


ஆபதத்ரிபேதடங்கஹஸ்த தே நமசிவாய

பாபஹாரிதிவ்யஸிந்துமஸ்த தே நமசிவாய |

பாபதாரிணே லஸந்நமஸ்ததே நமசிவாய  

சாபதோஷ கண்டனப்ரசஸ்த தே நமசிவாய ||


இன்னலெனும் மலையை வெட்டித் தள்ளும் உளியாகிற

அபயகரத்தை உடைய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்;

பாவங்களைப் போக்கும் ஆகாய கங்கையைத் 

தலையிலுடைய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

பாவங்களைப் போக்குகின்றவனாயும்நமநமஎன்று 

தொடர்ந்து வணங்கப்படுகின்றவனாயும் உள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்;

சாபங்களால் ஏற்படும் குற்றங்களைக் கடிவதில் புகழ் 

மிக்கவனான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.


व्योमकेश दिव्यभव्यरूप ते नमः शिवाय   

हेममेदिनीधरेन्द्रचाप ते नमः शिवाय | 

नाममात्रदग्धसर्वपाप ते नमः शिवाय   

कामनैकतानहृद्दुराप ते नमः शिवाय ||  ||


வ்யோமகேச திவ்யபவ்யரூப தே நமசிவாய  

ஹேமமேதிநீதரேந்த்ரசாப தே நமசிவாய|

நாமமாத்ரதக்தசர்வபாப தே நமசிவாய  

காமனை கதானஹ்ருத்துராப தே நமசிவாய ||

ஆகாயத்தையே செஞ்சடையாக உடையவனும்

திவ்யமங்கள ரூபனாயும் உள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

பொன் மலையாகிற மேருவை வில்லாக உடைய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

எவனுடைய பெயரைச் சொன்ன மாத்திரத்தில் 

அனைத்துப்பாவங்களும் பொசுக்கப்படுகின்றனவோ 

அந்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; . 

பொருள் வேட்கையிலே நாட்டம்கொண்ட இதயத்தோரால்

அடையமுடியாத அச் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.


ब्रह्ममस्तकावलीनिबद्ध ते नमः शिवाय   

जिह्मगेन्द्रकुण्डलप्रसिद्ध ते नमः शिवाय | 

ब्रह्मणे प्रणीतवेदपद्धते नमः शिवाय   

जिंहकालदेहदत्तपद्धते नमः शिवाय ||  ||


ப்ரம்ஹ மஸ்தகாவலீநிபத்த தே நமசிவாய  

ஜிம்ஹகேந்த்ரகுண்டலப்ரஸித்த தே நமசிவாய |

ப்3ரம்ஹணேப்ரணீத வேதபத்34தே நமசிவாய  

ஜிம்ஹகாலதே3ஹதத்தபத்3தே நமசிவாய ||


பிரமனின் மண்டையோடுகளை மாலையாக அணிந்துள்ள

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்

சிறந்த நாகங்களை குண்டலமாக அணிவதில் 

பிரசித்தனான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.

பிரம்மாவின் பொருட்டு வேத நெறிமுறையை வகுத்த 

சிவனுக்கு வணக்கம்கோணல் புத்தியுள்ள யமனுடைய 

உடலைக் காலாலுதைத்த சிவபெருமானுக்கு நமஸ்காரம்.


कामनाशनाय शुद्धकर्मणे नमः शिवाय 

सामगानजायमानशर्मणे नमः शिवाय | 

हेमकान्तिचाकचक्यवर्मणे नमः शिवाय 

सामजासुराङ्गलब्धचर्मणे नमः शिवाय ||  ||


காமநாசனாய சுத்3கர்மணே நமசிவாய

ஸாமகா3 ஜாயமானசர்மணே நமசிவாய |

ஹேமகாந்தி சாகசக்யவர்மணே நமசிவாய

ஸாமஜாஸுராங்க3லப்3சர்மணே நமசிவாய ||


காமனைக் காய்ந்தவனும் தூய்மைப்படுத்தும் 

செயல்களைச் செய்கின்றவனுமான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.

சாமவேத கானத்தால் மகிழ்கின்ற 

சிவனுக்கு வணக்கம்பொன்னொளியின் 

மினுமினிப்பால் சூழப்பட்ட 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.

கஜாசுரனின் அங்கத்தினின்றும் பெறப்பட்ட தோலை 

அணிந்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


जन्ममृत्युघोरदुःखहारिणे नमः शिवाय 

चिन्मयैकरूपदेहधारिणे नमः शिवाय | 

मन्मनोरथावपूर्तिकारिणे नमः शिवाय 

सन्मनोगताय कामवैरिणे नमः शिवाय ||  ||


ஜன்மம்ருத்யுகோ4ரது2ஹாரிணே நமசிவாய

சின்மயை கரூபதே3ஹதா4ரிணே நமசிவாய |

மன்மனோரதா2வபூர்த்தி காரிணே நமசிவாய

ஸன்மனோக3தாய காமவைரிணே நமசிவாய ||


பிறப்பிறப்பென்னும் கோரமான துக்கத்தைப் 

போக்குகின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

ஞானமே உருவான உடலைத் தாங்கியுள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

எனது எண்ணத்தை நிறைவேற்றுகின்ற 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

நன்மக்களின் உள்ளத்தில் உறைபவனும் மன்மதனின் 

எதிரியுமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


यक्षराजबन्धवे दयालवे नमः शिवाय 

दक्षपाणिशोभिकाञ्चनालवे नमः शिवाय | 

पक्षिराजवाहहृच्छयालवे नमः शिवाय 

अक्षिफाल वेदपूततालवे नमः शिवाय ||  ||


யக்ஷராஜப3ந்த4வே 3யாலவே நமசிவாய

3க்ஷபாணிசோபிகாஞ்சனாலவே நமசிவாய |

பக்ஷிராஜவாஹஹ்ருச்சயாலவே நமசிவாய

அக்ஷபா2 வேதபூததாலவே நமசிவாய ||


குபேரனுக்குச் சுற்றமாயும் அருள்புரிவோனாயுமுள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

வலது கரத்தில் விளங்கும் பொற்குடுவையை உடைய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

கருடவாகனனாகிய திருமாலின் இதயத்தில் 

சயனித்திருக்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

நெற்றிக்கண்ணையும்வேதமோதுவதால் புனிதமான 

வாயையும் பெற்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


दक्षहस्तनिष्ठजातवेदसे नमः शिवाय 

अक्षरात्मने नमद्बिडौजसे नमः शिवाय | 

दीक्षितप्रकाशितात्मतेजसे नमः शिवाय 

उक्षराजवाह ते सतां गते नमः शिवाय || १० ||


3க்ஷஹஸ்தநிஷ்டஜாதவேத3ஸே நமசிவாய

அக்ஷராத்மனே நமத்3பி3டெள3ஜஸே நமசிவாய |

தீ3க்ஷிதப்ரகாசிதாத்மதேஜஸே நமசிவாய

உக்ஷராஜவாஹதேஸதாம் 3தே நமசிவாய ||


வலக்கரத்தில் அழலேந்திய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

நித்திய பரமாத்மாவும் இந்திரனால் வணங்கப்

பெற்றவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தீக்கை பெற்றவர்களிடத்தே தன் பேரொளியைப் 

பிரகாசிக்கச் செய்யும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்;

இடப வாகனனும்நன்மக்களுக்குப் புகலிடமாயும்

இருக்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்.


राजताचलेन्द्रसानुवासिने नमः शिवाय 

राजमाननित्यमन्दहासिने नमः शिवाय | 

राजकोरकावतंस भासिने नमः शिवाय 

राजराजमित्रताप्रकाशिने नमः शिवाय || ११ ||


ராஜதாசலேந்த்3ரஸா நுவாஸினே நமசிவாய

ராஜமானநித்யமந்தஹாஸினே நமசிவாய |

ராஜகோரகாவதம்ஸ பா4ஸினே நமசிவாய

ராஜராஜமித்ரதாப்ரகாசினே நமசிவாய ||

வெள்ளியங்கிரியின் பக்கலில் வசிக்கின்ற 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; பிரகாசிக்கின்றவனும் 

என்றும் புன் சிரிப்புடன் கூடியவனுமான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

சந்திரப்பிறையைத் தலையில் சூடியவனான 

ஒளிபொருந்திய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

குபேரனிடம் நட்பிலே பிரகாசிக்கும் 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


दीनमानवालिकामधेनवे नमः शिवाय 

सूनबाणदाहकृत्कृशानवे नमः शिवाय | 

स्वानुरागभक्तरत्नसानवे नमः शिवाय 

दानवान्धकारचण्डभानवे नमः शिवाय || १२ ||


தீ3னமானவாலிகாமதே4னவே நமசிவாய

ஸூனபா3 தா3ஹக்ருத்க்ருசானவே நமசிவாய

ஸ்வாநுராக4க்தரத்னஸாநவே நமசிவாய

தா3னவாந்தகாரசண்ட3பா4னவே நமசிவாய ||


இரக்கத்திற்குரிய மக்கட் சமூகத்திற்கு காமதேனுவாக 

விளங்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

மலர்க்கணைகளை உடைய (மன்மதனைஎரியூட்டிய 

அக்கினியாய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தன்னிடத்து அன்பு செலுத்தும் பக்தர்களுக்கு மேரு மலை

போன்றிருக்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

அரக்கரெனும் இருளைப் போக்கும் சூரியனாக விளங்கும்

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


सर्वमङ्गलाकुचाग्रशायिने नमः शिवाय 

सर्वदेवतागणातिशायिने नमः शिवाय | 

पूर्वदेवनाशसंविधायिने नमः शिवाय 

सर्वमन्मनोजभङ्गदायिने नमः शिवाय || १३ ||


ஸர்வமங்க3ளாகுசாக்3ரசாயிநே நமசிவாய

ஸர்வதே3வதாக3ணாதிசாயிநே நமசிவாய |

பூர்வதேவநாசஸம்விதா4யிநே நமசிவாய

ஸர்வமன்மனோஜப3ங்கதா3யிநே நமசிவாய ||


'ஸர்வமங்களாஎன்னும் பார்வதி தேவியின் 

மார்பகத்திலே சயனித்துக் கொண்டிருக்கும் 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

எல்லா தேவதை கணங்களுக்கும் மேம்பட்டவனான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; அசுரகுலத்தை 

அழித்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

காமத்தின் விளைவுகளனைத்தையும் முறியடிக்கின்ற

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


स्तोकभक्तितोऽपि भक्तपोषिणे नमः शिवाय 

माकरन्दसारवर्षिभाषिणे नमः शिवाय | 

एकबिल्वदानतोऽपि तोषिणे नमः शिवाय 

नैकजन्मपापजालशोषिणे नमः शिवाय || १४ ||


ஸ்தோகப4க்திதோsபி 4க்தபோஷிணே நமசிவாய

மாகரந்த3ஸார வர்ஷிபா4ஷிணே நமசிவாய |

ஏகபி3ல்வதா3னதோSபி தோஷிணே நமசிவாய

நைகஜன்மபாபஜால சோஷிணே நமசிவாய ||


சிறிதளவு பக்தி இருந்தாலும் அத்தகைய பக்தர்களைப் 

போஷிக்கின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தேன்ரசத்தைப் பிலிற்றும் இன்சொல்லை உடைய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; ஒரு வில்வத்தை 

அளித்தாலும் அதனால் மகிழ்கின்ற 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

அனேக பிறப்புக்களில் சேர்ந்த பாபக்கூட்டத்தை வற்றச் 

செய்யும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


सर्वजीवरक्षणैकशीलिने नमः शिवाय 

पार्वतीप्रियाय भक्तपालिने नमः शिवाय | 

दुर्विदग्धदैत्यसैन्यदारिणे नमः शिवाय 

शर्वरीशधारिणे कपालिने नमः शिवाय || १५ ||


ஸர்வஜீவரக்ஷணைகசீலினே நமசிவாய

பார்வதீப்ரியாய 4க்தபாலினே நமசிவாய |

துர்வித3க்34தை3த்ய ஸைந்ய தா3ரிணே நமசிவாய

சர்வரீசதா4ரிணே கபாலினே நமசிவாய ||

எல்லா உயிர்களையும் காப்பதையே நெறியாகக் கொண்ட 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

பார்வதியிடத்தில் பிரியமுள்ளவனும் பக்தர்களைக் 

காத்தருள்பவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

கொடிய அசுர சேனைகளை அழித்த 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

இரவின் நாயகனான சந்திரனையும்கபாலத்தையும் 

தரித்துள்ள சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


पाहि मामुमामनोज्ञदेह ते नमः शिवाय 

देहि मे वरं सिताद्रिगेह ते नमः शिवाय | 

मोहितर्षिकामिनीसमूह ते नमः शिवाय 

स्वेहितप्रसन्न कामदोह ते नमः शिवाय || १६ ||


பாஹி மாம் உமாமனோஜ்ஞதே4 தே நமசிவாய

தேஹி மே வரம் ஸிதாத்3ரிகே3ஹதே நமசிவாய |

மோஹிதர்ஷிகாமினீஸமூஹ தே நமசிவாய

ஸ்வேஹிதப்ரஸந்ந காமதோ3 தே நமசிவாய ||


உமையோடு கூடியதான அழகிய தேகத்தை உடையவனே 

என்னைக் காப்பாற்றுசிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்

வெண் (பனிமலையில் வசிப்போனேஎனக்கு 

வரமருள்வாய்சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

ரிஷிபத்தினிக் கூட்டத்தை மோகமறச் செய்தவனே

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

நீர் விரும்பியதை யெல்லாம் முடிப்பதனால் 

பிரசன்னனாயிருக்கிறீர்வேண்டியதையெல்லாம் 

தருகின்றவனாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


मङ्गलप्रदाय गोतुरङ्ग ते नमः शिवाय 

गङ्गया तरङ्गितोत्तमाङ्ग ते नमः शिवाय | 

सङ्गरप्रवृत्तवैरिभङ्ग ते नमः शिवाय 

अङ्गजारये करेकुरङ्ग ते नमः शिवाय || १७ ||


மங்க3ளப்ரதா3 கோ3துரங்கதே நமசிவாய

3ங்க3யா தரங்கி3தோத்தமாங்கதே நமசிவாய

ஸங்க3ரப்ரவ்ருத்தவைரிப4ங்க3தே நமசிவாய

அங்கஜாரயே கரேகுரங்க3தே நமசிவாய ||


விரைவாகச் செல்லும் இடபத்தை உடையவனே

மங்களத்தைத் தருபவனான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

கங்கையின் அலைபாயும் முடியை உடையவனே

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

போரில் ஈடுபட்ட எதிரிகளை ஒடுக்கியவனே

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

மன்மத விரோதியேமானேந்திய கையனே

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


ईहितक्षणप्रदानहेतवे नमः शिवाय 

आहिताग्निपालकोक्षकेतवे नमः शिवाय | 

देहकान्तिधूतरौप्यधातवे नमः शिवाय 

गेहदुःखपुञ्जधूमकेतवे नमः शिवाय || १८ ||


ஈஹிதக்ஷணப்ரதா3 ஹேதவே நமசிவாய

ஆஹிதாக்னிபாலகோக்ஷகேதவே நமசிவாய

தே3ஹகாந்திதூ4தரெளப்யதா4தவே நமசிவாய

கே3ஹது2புஞ்ஜதூ4மகேதவே நமசிவாய ||

வேண்டியதை அக்கணத்திலேயே தரவல்லவனாகிய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தீயோம்பவோரைக் காப்பவனும் 

இடபக்கொடியோனுமாகிய

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தனது தேககாந்தியினால் வெள்ளி உலோகத்தை 

வெல்லக்கூடிய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

இல்வாழ்வின் துக்கத் தொகுதியினை அழிக்கும் தீயாகிய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


त्र्यक्ष दीनसत्कृपाकटाक्ष ते नमः शिवाय 

दक्षसप्ततन्तुनाशदक्ष ते नमः शिवाय | 

ऋक्षराजभानुपावकाक्ष ते नमः शिवाय 

रक्ष मां प्रपन्नमात्ररक्ष ते नमः शिवाय || १९ ||


த்ர்யக்ஷ தீ3னஸக்த்ருபாகடாக்ஷ தே நமசிவாய

3க்ஷஸப்ததந்து நாசத3க்ஷ தே நமசிவாய |

ருக்ஷராஜபா4நுபாவகாக்ஷ தே நமசிவாய

ரக்ஷ மாம் ப்ரபந்நமாத்ர ரக்ஷ தே நமசிவாய ||


முக்கண்ணனேஎளியவருக்கு நன்மை பயக்கும் 

வண்ணம் திருவருட் பார்வையை நல்கும் 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தக்கன் வேள்வியை அழிப்பதில் சமர்த்தனான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

சந்திரன் சூரியன்அக்கினி ஆகியவற்றை (முக்

கண்களாக உடைய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

சரணடைந்த மாத்திரத்தே காத்தருளுகின்றவனே

என்னைக் காத்தருள்வாயாக

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


न्यङ्कुपाणये शिवङ्कराय ते नमः शिवाय 

सङ्कटाब्धितीर्णकिङ्कराय ते नमः शिवाय | 

कङ्कभीषिताभयङ्कराय ते नमः शिवाय 

पङ्कजाननाय शङ्कराय ते नमः शिवाय || २० ||


ந்யங்குபாணயே சிவங்கராய தே நமசிவாய

ஸங்கடாப்3தி4தீர்ண கிங்கராய தே நமசிவாய |

கங்கபீ4ஷிதாப4யங்கராய தே நமசிவாய

பங்கஜாநநாய சங்கராய தே நமசிவாய ||


மானைக் கையில் தாங்குபவனேமங்களத்தைச் 

செய்கின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

இடரெனும் கடலைக் கடத்துவிப்பதில் பணியாளெனப் 

பணியாற்றும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

யமனிடம் அஞ்சுவோருக்கு அபயம் தருகின்ற 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; தாமரை போன்ற 

அழகிய முகத்தை உடையவனும் நல்லனவற்றையே 

செய்பவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


कर्मपाशनाश नीलकण्ठ ते नमः शिवाय 

शर्मदाय वर्यभस्मकण्ठ ते नमः शिवाय | 

निर्ममर्षिसेवितोपकण्ठ ते नमः शिवाय 

कुर्महे नतीर्नमद्विकुण्ठ ते नमः शिवाय || २१ ||


கர்மபாசநாச நீலகண்டதே நமசிவாய

சர்மதா3 வர்யப4ஸ்ம கண்ட2தே நமசிவாய |

நிர்மமர்ஷிஸேவிதோபகண்டதே நமசிவாய

குர்மஹே நதீர் நமத்3வகுண்டதே நமசிவாய ||


கருமமெனும் பாசத்தை நாசம் செய்பவனும் 

திருநீலகண்டனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்

சுகத்தை அளிப்பவனும் மன்மதன் சாம்பலை கண்டத்தில் 

அணிந்தவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

'எனதுஎன்ற பற்றற்ற ரிஷிகளால் அருகேயிருந்து 

சேவிக்கப்படுகின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

வணங்குவோரிடத்து சோம்பலின்றி (அருள்பவனாக

உள்ளவனேஉமக்கு வணக்கம் பல 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்


विष्टपाधिपाय नम्रविष्णवे नमः शिवाय 

शिष्टविप्रहृद्गुहाचरिष्णवे नमः शिवाय | 

इष्टवस्तुनित्यतुष्टजिष्णवे नमः शिवाय 

कष्टनाशनाय लोकजिष्णवे नमः शिवाय || २२ ||


விஷ்டபாதி4பாய நம்ரவிஷ்ணவே நமசிவாய       சிஷ்டவிப்ரஹ்ருத3கு3ஹாசரிஷ்ணவே நமசிவாய |இஷ்டவஸ்துநித்யதுஷ்டஜிஷ்ணவே நமசிவாய 

கஷ்டநாசனாய லோகஜிஷ்ணவே நமசிவாய ||

 

தேவலோகத்ததிபனும் விஷ்ணுவால் வணங்கப்

படுகின்றவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர்களின் இதயக்குகையில் 

சஞ்சரித்துக் கொண்டிருக்கும் 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

வேள்வியில் இட்ட பொருளை ஏற்று என்றும் 

மகிழ்கின்றவனும் அனைத்தையும் வென்றவனுமான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

இடர்களைவோனும் உலகியலை வென்றவனுமான 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


अप्रमेयदिव्यसुप्रभाव ते नमः शिवाय 

सत्प्रपन्नरक्षणस्वभाव ते नमः शिवाय | 

स्वप्रकाश निस्तुलानुभाव ते नमः शिवाय 

विप्रडिम्भदर्शितार्द्रभाव ते नमः शिवाय || २३ ||


அப்ரமேய தி3வ்யஸுப்ரபா4வதே நமசிவாய

ஸத்ப்ரபன்னரக்ஷணஸ்வபா4 தே நமசிவாய |

ஸ்வப்ரகாச நிஸ்துலானுபா4 தே நமசிவாய

விப்ரடி3ம்ப43ர்சிதார்த்3ரபாவ தே நமசிவாய ||

அளவிடற்கரியனும்திவ்யமான நற்பெருமை

யுடையவனுமான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

அடைக்கலமடைந்த நல்லோர்களைக் காக்கும் இயல்பை 

உடைய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

சுயம்பிரகாசமாயும் இணையற்ற வீரியம் உடையவனாயும் 

இருக்கிற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

அந்தணச் சிறுவனுக்கு (மார்க்கண்டேயனுக்கு

அருட்பான்மை காட்டிய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்


सेवकाय मे मृड प्रसीद ते नमः शिवाय 

भावलभ्यतावकप्रसाद ते नमः शिवाय | 

पावकाक्ष देवपूज्यपाद ते नमः शिवाय 

तावकाङ्घ्रिभक्तदत्तमोद ते नमः शिवाय || २४ ||


ஸேவகாய மே ம்ருடப்ரஸீததே நமசிவாய

பா4வலப்4 தாவகப்ரஸாததே நமசிவாய |

பாவகாக்ஷ தேவபூஜ்யபாததே நமசிவாய

தாவகாங்க்4ரி 4க்த 3த்தமோததே நமசிவாய ||


கருணாமூர்த்தியேஅடியேனாகிய எனக்கு அருள்புரிய 

வேண்டும்சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

பக்தியினால் பெறக்கூடியது உமது அருள்

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; அக்கினிக் 

கண்ணனேதேவர்கள் வழிபடும் திருவடியுடையோனே

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

தங்கள் திருவடிப்பேற்றினால் பக்தர்களை 

மகிழ்விப்பவனேசிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


भुक्तिमुक्तिदिव्यभोगदायिने नमः शिवाय 

शक्तिकल्पितप्रपञ्चभागिने नमः शिवाय | 

भक्तसङ्कटापहारयोगिने नमः शिवाय 

युक्तसन्मनःसरोजयोगिने नमः शिवाय || २५ ||


பு4க்தி முக்தி தி3வ்யபோ4கதா3யினே நமசிவாய

சக்திகல் பிதப்ரபஞ்சபா4கி3னே நமசிவாய

4க்தஸங்கடாபஹாரயோகி3னே நமசிவாய

யுக்தஸந்மனஸ்ஸரோஜயோகி3னே நமசிவாய ||


இம்மையின்பம்முக்தியின்பம்தேவலோக இன்பம் 

ஆகியவற்றை அருளும் சிவபெருமானுக்கு நமஸ்காரம்;

தனது மாயா சக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சத்தை

உடையவனான சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

பக்தர்களின் இடர்களைப் போக்குவதில் ஈடுபட்டுள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 

யோக நெறியில் நிற்கும் மேன்மக்களின் மனமாகிற 

தாமரையில் பொருந்தியிருக்கும் 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


अन्तकान्तकाय पापहारिणे नमः शिवाय 

शन्तमाय दन्तिचर्मधारिणे नमः शिवाय | 

सन्तताश्रितव्यथाविदारिणे नमः शिवाय 

जन्तुजातनित्यसौख्यकारिणे नमः शिवाय || २६ ||


அந்தகாந்தகாய பாபஹாரிணே நமசிவாய

சந்தமாய 3ந்திசர்மதா4ரிணே நமசிவாய |

ஸந்ததாச்ரிதவ்யதாவிதா3ரிணே நமசிவாய

ஜந்துஜாதநித்யஸௌக்2யகாரிணே நமசிவாய ||


கூற்றுவனுக்கும் கூற்றுவனாயும் பாபத்தைப் 

போக்குகின்றவனாயுமுள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

மேலான மக்கள் சொரூபனாயும் யானைத்தோலை 

தரிக்கின்றவனாயுமுள்ள 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

என்றும் தன்னிடம் புகலடைவோரின் துன்பத்தைப் 

போக்குகின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

எல்லா உயிர் வர்க்கங்களுக்கும் என்றும் நலம் புரிகின்ற 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


शूलिने नमो नमः कपालिने नमः शिवाय 

पालिने विरिञ्चिमुण्डमालिने नमः शिवाय | 

लीलिने विशेषरुण्डमालिने नमः शिवाय 

शीलिने नमः प्रपुण्यशालिने नमः शिवाय || २७ ||


சூலினே நமோ நமகபாலினே நமசிவாய

பாலினே விரிஞ்சிமுண்டமாலினே நமசிவாய |

லீலினே விசேஷருண்டமாலினே நமசிவாய

சீலினே நம : ப்ரபுண்யசாலினே நமசிவாய ||


சூல மேந்தியவனே வணக்கம்கபாலமேந்திய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்; 

காத்தற்றொழிலைச் செய்பவனேபிரமனின் ஓட்டுமாலை 

யணிந்த சிவபெருமானுக்குநமஸ்காரங்கள்; 

திருவிளையாடல் புரிகின்றவனேவிசேடமான 

கபந்தமாலை யணிந்த சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்

சீலம் பொருந்திய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்;

மிகுதியும் புண்ணியசாலியாகிய 

சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள். 


शिवपञ्चाक्षरमुद्राचतुष्पदोल्लासपद्यमणिघटिताम् | 

नक्षत्रमालिकामिह दधदुपकण्ठं नरो भवेत्सोमः || २८ ||


சிவபஞ்சாக்ஷரமுத்3ரா சதுஷ்பதோ3ல்லாஸ

 பத்3யமணிக3டிதாம் |       

நக்ஷத்ரமாலிகாம் இஹ 34து3பகண்ட2ம் 

நரோ பவேத்-ஸோம: ||


எந்த ஒரு மனிதன் சிவபஞ்சாக்ஷரமான 'நமசிவாயஎனும்

மந்திரத்தை முத்திரையாக ஒவ்வொரு அடியிலும் 

கொண்டதும்இரத்தினங்கள் போன்ற (இருபத்தேழு

பாக்களால் அமைக்கப்பெற்றதுமான இந்த நக்ஷத்திர 

மாலையை தனது கண்டத்தில் அணிகின்றானோ 

அவன் உமையொரு பாகனான சிவனே ஆவான்.

வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த 

விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்,

இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி 

ஏற்றியுள்ளேன்.   பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் 

தெரிவித்துக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment