Sunday, August 30, 2015

நன்மை தரும் நமச்சிவாய நாமம் ..... சிவ பஞ்சாட்சாரம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சிவ பஞ்சாட்சார ஸ்தோத்திரம் ..... ஓம் நமச்சிவாய

நாக உலகத்திற்கரசனாம் வாசுகியை நளினமுற அணிந்தவனும்
தேகமெலாம் வெண்ணீறு உடையவனும்
திரினயணம் கொண்ட திகம்பரனும்
போகமுடி தேவர்க் கீசனும், புனித மகேஸ்வரனும்,
நித்தியனும் ஆகவந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் அடிபணியும் முதல் எழுத்தே 'ந' என்றாகும்.

மந்தாகினி நீரைச் சந்தனமாய் மார்புரம் தரித்தவனும்,
மந்தாரை மலர் பலவாய் வழிபட்ட மகேஸ்வரனும்,
நந்தி தேவ கணத்திற்கெல்லாம் நாயகனாய் வழி நடத்த வந்துதித் தோன்
ஐந்தெழுத்தில் வணங்கும் 'ம' வே இரண்டும் நிலையாகும்.

சிவனையும், உமையவள் கமலமுகம் செம்மையுற மலரவரும் சூரியனுமாய்த் தவ ஞான வேள்வி செய்த தட்சனது யாகமதை அழித்தவனும்,
யுவராஜ நீலகண்டன் காலைக் கொடியுடைவனும் -
ஐந்தெழுத்தில் சிவ ராஜ யோகம் மிகும் 'சி' கரமாகும் சிரம் வணங்கும் மூன்றாவதாகும்.

வரங்கொண்ட மாமுனிவர் வசிஷ்டர் - அகத்தியர் , கௌதமரும்,
தரங்கொண்ட வானுறையும் தேவரும் தலை வணங்கும் கங்கை தனை சிரம் கொண்டும்,
ரவி - மதி - அக்கினியைச் சிவனுடைய
முக்கண்ணாய் ஒளிர விடும் அரண் கொண்ட ஐந்தெழுத்தில் அருள் வடிவாம் 'வ' கரமே நான்காகும்.

யட்ச வடிவினாய், சடை முடி தரித்தவனாய்,
யாண்டும் அழியாத் தெய்வீகப் பேரொளியாய்
மெச்சும் உயர் பிளகவில்லுடையோனாய்
மேவும் திக்கெல்லாம் மேனி நிறை உடை அணிவோனாய்ப்
பட்சமில்லா பரஞ்சோதி சொரூபனாய்ப் பாங்கு நிறை
ஐந்தெழுத்தில் பதிவாகும் அட்சரமாம் 'ய' கரணமய ஐந்தாகும்
அடிபணிவோம், நமச்சிவாய ஓம் .

பல சுருதி:

இவ்வைந்தெழுத்து துதியினை தவ நெறி முறையோடு எவரொருவர் தவறாது சொல்வார் எனில் பவரோக வினை நீங்கிப் பாவமெல்லாம் பறந்தோடச் சிவ போக சாம்ராஜ்யம் சிறப்புற பெற்றுய்வரே.


शिवपञ्चाक्षरस्तोत्रम् ..... (श्री शंकराचर्यकृतं)

नागेन्द्रहाराय त्रिलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगंबराय
तस्मै नकाराय नमश्शिवाय ॥ १ ॥

मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय
नन्दीश्वरप्रमथनाथ महेश्वराय ।
मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय
तस्मै मकाराय नमश्शिवाय ॥ २ ॥

शिवाय गौरीवदनाब्जवृन्द-
सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठायवृषध्वजाय
तस्मै शिकाराय नमश्शिवाय ॥ ३ ॥

वसिष्ठकुंभोद्भवगौतमार्य-
मुनीन्द्रदेवार्चित शेखराय ।
चन्द्रार्क वैश्वानरलोचनाय
तस्मै वकाराय नमश्शिवाय ॥ ४ ॥

यक्षस्वरूपाय जटाधराय
पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगंबराय
तस्मै यकाराय नमश्शिवाय ॥ ५ ॥

पञ्चाक्षरमिदं पुण्यं
यः पठेत् शिवसन्निधौ ।
शिवलोकमवाप्नोति
शिवेन सह मोदते ॥ ६ ॥

No comments:

Post a Comment