Wednesday, August 12, 2015

Back in the Saddle


 

After 17 months, back in the Saddle.

இன்று முதல் என்னுடைய வலைப்பூ பதிவு தொடர்கிறது ....

நான் தொடங்கும் சகல காரியங்களிலும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர், ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறேன்.

ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ ஆறுமுக பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ வாலாம்பிகா எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ மாந்துறைக்கருப்பர் எனக்கு மங்களம் தந்தருள்க.

என்னைக் காக்கும் விநாயகனே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி - குருவுக்கும் குருவான பெரிய குரு, ஆதி குரு.
ஸர்வேஸ்வரா, உனக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

பரமகுருவான நந்திதேவர் திருவடிகள் சரணம்.

ஸ்ரீமாதா லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷி திருவடிகள் சரணம்.

என் குலகுரு சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.
குருவுக்கும் குரு பராபர குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய கெளஸ்துப புருஷாய ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் திருவடியே போற்றி, போற்றி.

என்னை பெற்ற தாய் தந்தை போற்றி போற்றி.


அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். Salutations to all my Blog-Readers.

... என்றும் அன்புடனும் அடியேன் ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன் 

No comments:

Post a Comment