Tuesday, July 23, 2013

கண நாயகப்பெருமான்



சக்தி அம்சமாகவே பிறந்து, சகல ஜீவராசிகளையும் தன்னுள் வைத்து, தம்மை நாடி வந்து வணங்குபவரை நழவாமல் காத்தருளும் கண நாயகப்பெருமான் எங்கள் முதற்கடவுளே முதல் சக்தி உபாசகர் ஆவார். கண நாதனுக்கு ஆடம்பரங்களை விட எளிமையான ஆணால் உன்மையான பக்தியே விரும்பி ஏற்பார். எவ்வீத வழிபாடுமுறைகளிலும் ஆனைமுகத்தனுக்கே முதல் பூஜை அனைத்தும். அவனின்றி அசையாது ஒரு அனுவும். ஏன் அவ்வாறு , கருணையே வடிவான தாய் கருணாம்பிகையின் புதல்வனல்லவா அதானல்தான் புவணேஸ்வரி அவனை தொழும் அன்பர்களின் குறை நீக்கி வளம் அருளுகின்றாள். அம்மையை காண வந்த சிவபெருமானை அனுமதிக்காத காரணத்தால் , ஈசன் சிறுபிள்ளை என்று சிவகணங்களை அனுப்பி வைத்தார் அனைவரும் தோல்வியுற்று எம்பெருமானிடம் கூற, அனைத்தையும் அறிந்த ஆடலரசன் அப்பிள்ளையின் சக்தியினை உலகுக்கு தெரிவிக்க , அச்சிறுவனின் சிரம் கொய்தார். அன்னை பாரசக்தி தன் குழந்தையின் நிலையறிந்து கோப விசுரூபமாக எழுந்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கியது. முவரும் தோன்றியும் அம்மா அமைதி கொள்ளவில்லை. அது ஏன்?? கண நாயகன் அந்நிலைமையுலும் அம்மையே வணங்கிய நிலையிலயே இருந்தார் அதுதான். எல்லாம் அறிந்த ஈசன் மாற்று வழியாக முதலில் கண்ணுக்கு தெரியும் உயிரின் தலையினை கொய்து வர காக்கும் கடவுள் விஷ்னுவிடம் கூற, அவ்வாறு திருமால் செல்லும் வழியில் கண்ணுக்கு தென்பட்ட கஜத்தின் தலையினை சுதர்சன் சக்கரம் கொண்டு கொய்தார். (அந்த சுதர்சன் சக்கரம் பைரவ பெருமான், திருமாலின் தவத்தில் மகிழ்ந்து திருவிற்குடி என்ற தலத்தில் அருளியது) அத்தலையினை கணநாதனுக்கு பொருத்தி பல்வேறு வரங்களையும் தந்தருளினார்கள்.அதன்பிறகே பராசக்தி சாந்தசொரூபமானாள். தன் சிரசினை கொடுத்து ஒரு உயிருக்கு முக்தியளித்த கருணைகடவுள் எங்கள் கற்பக விநாயகர்.
சக்தி உபாசனை சித்தியாக முயற்சி செய்யும் அன்பர்கள் முதலில் விநாயப்பெருமானை நினைந்து , மகிழ்ந்து மனம் உருகி வணங்கினால் அம்மாவின் அருள் எளிதில் கிட்டும்.


எளிய வாசியோக சித்தி முறை :
அரசமரம் ஒண்றே இரவும் பகலும் ஆக்ஸிஜன் வெளியிடும், அதனால் அதனை அரசமரம் என்கிறோம். அரசமரத்தை வலம்வரும் பொழுது நமது வாசி சீரடையும். வலம்வந்து தோப்பு கரணம் இடும் பொழுது நம்மனுடைய மூலாதார சக்கரம் அவிழ்ந்து மேல் நோக்கி செல்லும். இம்மூலாதரத்திற்க்கு அதிபதி விநாயகப்பெருமானே. அவரவர் வினைபயன் இம்மூலாதரத்தில் பதியப்பட்டுள்ளது. அவ்வாறு மேல்நோக்கி வரும் சக்தியினை நம் தலையில் குட்டி கொள்வதன் மூலம் , சக்தி எங்கு வர வேண்டும் என்ற இலக்கை தெரிவிக்கின்றோம். இதனால் சக்த்தியானது அடுத்த நிலை சக்கரங்களை கடந்து சகஸ்ரத்திற்கு வரும். இவ்வாறு தொடர்ந்து அரச மரத்தடியில் உள்ள விநாயகப்பெருமான் ஆலயதிற்கு சென்று ஒன்பது மடங்கில் வலம் வந்து வணங்கி தலையில் குட்டி , தோப்பு கரணம் போட்டு வந்தால் நாளடைவில் குன்டலினி சக்தி உங்களுக்கு எழும்பும்.

... ஆன்மிக செம்மல் சகஸ்ரவடுகர்





No comments:

Post a Comment