Tuesday, November 12, 2013
ராமன், ராமபத்ரன், ராமசந்திரன்
வேதங்களுக்கெல்லாம் ஆதாரமான ராமன், ராமபத்ரன், ராமசந்திரன், ரகு வம்சத்திலேயே சிறந்த நாயகன், சீதபதியான ஸ்ரீராமனுக்கு என் நமஸ்காரங்கள்.
श्रीराम राम रघुनन्दन राम राम
श्रीराम राम भरताग्रज राम राम।
श्रीराम राम रणकर्कश राम राम
श्रीराम राम शरणं भव राम राम ॥
श्रीरामचन्द्रचरणौ मनसा स्मरामि
श्रीरामचन्द्रचरणौ वचसा गृणामि।
श्रीरामचन्द्रचरणौ शिरसा नमामि
श्रीरामचन्द्रचरणौ शरणं प्रपद्ये ॥
माता रामो मत्पिता रामचन्द्रः
स्वामी रामो मत्सखा रामचन्द्रः।
सर्वस्वं मे रामचन्द्रो दयालु-
र्नान्यं जाने नैव जाने न जाने ॥
-
ஸ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஸ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம|
ஸ்ரீராம ராம ரணகர்கஸ² ராம ராம
ஸ்ரீராம ராம ஸ²ரணம் ப⁴வ ராம ராம ||
ஸ்ரீராமசந்த்³ரசரணௌ மனஸா ஸ்மராமி
ஸ்ரீராமசந்த்³ரசரணௌ வசஸா க்³ருணாமி|
ஸ்ரீராமசந்த்³ரசரணௌ ஸி²ரஸா நமாமி
ஸ்ரீராமசந்த்³ரசரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே ||
மாதா ராமோ மத்பிதா ராமசந்த்³ர:
ஸ்வாமீ ராமோ மத்ஸகா² ராமசந்த்³ர:|
ஸர்வஸ்வம் மே ராமசந்த்³ரோ த³யாலு-
ர்னான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே ||
-
ஸ்ரீ ராமா ராமா ரகு நந்தனா ராமா ராமா.
ஸ்ரீ ராமா ராமா பரதனுக்கு மூத்தவனே ராமா ராமா.
ஸ்ரீ ராமா ராமா தலை சிறந்த போர் வீரனே ராமா ராமா.
ஸ்ரீ ராமா ராமா உன்னைச் சரணடைகிறேன் காப்பாய் ராமா ராமா.
ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களை நான் மனதால் த்யானிக்கிறேன்.
ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைப் பற்றி நான் வாக்கால் ஜபம் செய்கிறேன்.
ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைச் சரணடைந்து எனக்கு பாதுகாப்பு வேண்டுகிறேன்.
என் தாயாக ஸ்ரீ ராமன் இருக்கிறார்
என் தந்தையாக ஸ்ரீ ராமன் இருக்கிறார்.
என் தெய்வமாக ஸ்ரீ ராமன் இருக்கிறார்
என் நண்பனாக ஸ்ரீ ராமன் இருக்கிறார்.
தயாள குணம் கொண்ட ஸ்ரீ ராமனே எனக்கு எல்லாமாகவும் இருக்கிறார்.
அவனைத் தவிர எனக்கு வேறு ஏதும் தெரியவேத் தெரியாது.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment