Saturday, March 10, 2018

என் குல குருபீடம் ... காஞ்சி மடம்




பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பம் பின்பற்றும் மடம் ஸ்ரீ காஞ்சி மடம்; எங்கள் குலகுரு காஞ்சிமட பீடாதிபதி.


குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி.


இது பற்றி நான் படித்த சில குறிப்புகளை இங்கே எனது வலைப்பூவில் ( blogpost ) பதிவிடுகிறேன்.  


...



श्रीमत् परमहंस परिव्राजकाचार्यस्य श्री गोविन्द भगवत्पूज्यपाद शिष्यस्य श्रीमच् छङ्करभगवतः

ஶ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யஸ்ய

ஶ்ரீ கோவிந்த பகவத்பூஜ்யபாத ஶிஷ்யஸ்ய ஶ்ரீமத் சங்கரபகவத


ஆதிசங்கர பகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு, மோக்ஷபுரி என போற்றப்படும், காஞ்சி மாநகரத்தை வந்தடைகிறார், அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார்; தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார்.


அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- 


பிறந்தது-- கலி வருடம் 2593(கி.மு 509);; 


சந்நியாசம் மேற்கொண்டது-- கலி 2603(கி.மு 499); 


த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது-- கலி 2611(கி.மு 491); 


சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தார்-- 

கலி 2616(கி.மு 486); 


பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2617(கி.மு 485); 


சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார் ---கலி 2618(கி.மு 484);


ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கினார்--- கலி 2620(கி.மு 482); 


ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தார்--கலி 2625(கி.மு477);; 


இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார். அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:- 

முக்தி லிங்கம்--கேதார்நாத்

வர லிங்கம்--நேபாளம்

போக லிங்கம்--சிருங்கேரி மடம்

மோக்ஷ லிங்கம்--சிதம்பரம்

யோக லிங்கம்--காஞ்சி காமகோடி மடம்;



1. ஆதி சங்கரபகவத்பாதாள் அவர்களே காஞ்சி மடத்தின் ஸ்தாபகர்; இங்கு அவர் ஸர்வக்ஞ பீடத்தின் தலைமையை ஏற்றார்.

அங்கு அப்போது வந்திருந்த ப்ரம்மதேசத்தை சேர்ந்த சிறுவனின் மேதாவிலாசத்தைக் கண்டு, அவனை தனது சீடரின்(சுரேஸ்வரரின்) கீழ் பாடம் பயிலச் சொல்லி, பிறகு அவரே சுரேஸ்வரருக்கு, பிறகு பீடம் ஏறினார்; அவருக்கு ஆதிசங்கரரே "ஸர்வக்ஞாத்மன்" என பெயர் சூட்டினார்.


ஆதிசங்கரர் தனது சிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டார்; அதே போல் காஞ்சி மடத்திற்கு அதிபதியாகிறவர்கள் ப்ரம்மசரியத்திலிருந்து நேராக சந்நியாசம் பெறவேண்டும்; அவர்களின் எல்லோருடைய திருநாமத்துடன் "இந்திர சரஸ்வதி" சேர்க்கப்படும்.


2 ஸ்ரீ சுரேஸ்வர:- 

இவர் மஹிஸ்மதியை சேர்ந்தவர்

மந்தனமிஸ்ரர் என்ற பெயரில் வாதிட்டு தோற்று, ஆதிசங்கரரின் சீடரானார்

இவர் காஞ்சியில் முக்தி அடைந்தார்--கி.மு 407;

இவர் எழுதிய நூல்கள் வாதிக, நைஷ்கர்ம்ய சித்தி

இவரின் சிலை காமகோடிபீடத்திலுள்ளது

தினமும் அவருக்கு பூஜை செய்வர்

இன்றும் மந்தனமிஸ்ர அக்ரஹாரம் காஞ்சியிலுள்ளது;


3. ஸ்ரீஸர்வக்ஞாத்மன்:- 

தாமிரபரணி தீரத்திலிருந்து வந்தவர்

ஏழு வயதில் சந்நியாசம் பெற்றார்;

ஸ்ரீ சுரேஸ்வரரின் கீழ் பாடம் பயின்றவர்;

இவர் எழுதிய நூல்கள்--ஸர்வக்ஞ விலாசம், சம்க்ஷேப ஸரீரகா;

காஞ்சியில் கி.மு 364ல் முக்தியடைந்தார்;


4. ஸ்ரீஸத்யபோதேந்திர சரஸ்வதி:- 

இவர் சேர நாட்டை சேர்ந்தவர்

இவரும் சங்கரரின் பாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார்;

காஞ்சியில் கி.மு268ல் முக்தியடைந்தார்;


5. ஸ்ரீஞாநேந்திர சரஸ்வதி:- 

இவர் எழுதிய நூல் "சந்திரிகா";

காஞ்சியில் கி.மு 205ல் முக்தியடைந்தார்;


6. ஸ்ரீசுத்தானந்தேந்திரசரஸ்வதி:- வேதாரண்யத்தை சேர்ந்தவர்

காஞ்சியில் கி.மு 124ல் முக்தியடைந்தார்;


7. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- 

சேரநாட்டை சேர்ந்தவர்

சங்கர பாஷ்யத்திற்கு உரை எழுதியவர்; காஞ்சியில் கி.மு 55ல் முக்தியடைந்தார்;


8. ஸ்ரீகைவல்யானந்த யோகேந்திரசரஸ்வதி:- 

திருப்பதியை சேர்ந்தவர்

காஞ்சியில் கி.பி 28ல் முக்தியடைந்தார்;


9. ஸ்ரீக்ருபா சங்கரேந்திரசரஸ்வதி:- 

ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;

ஆதிசங்கரரின் ஷண்மத ஸ்தாபனத்தை உறுதிபடுத்தி அதை சீரிய முறையில் மக்களுக்கு அளித்தார்;

பக்தி மார்க்கத்தை எளியமுறையில் செய்ய உதவினார்;

விந்திய பர்வதத்தில் கி.பி 69 ல் முக்தியடைந்தார்;


10. ஸ்ரீசுரேஸ்வரசரஸ்வதி:-- 

மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்

காஞ்சியில் கி.பி 127ல் முக்தியடைந்தார்;


11. ஸ்ரீசிவானந்த சித்கணேந்திரசரஸ்வதி:- 

கர்நாடகத்தை சேர்ந்தவர்

விருத்தாசலத்தில் கி.பி 172ல் முக்தியடைந்தார்;


12. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(I):- 

பாலாற்றங்கரையிலிருந்து வந்தவர்

சேஷாசல மலையில் கி.பி 235ல் முக்தி அடைந்தார்;


13. ஸ்ரீசத்சித் கணேந்திரசரஸ்வதி:- 

கடிலம் தீரத்திலிருந்து வந்தவர்

அவதூதராக வாழ்ந்தவர்

காஞ்சியில் கி.பி 272ல் முக்தியடைந்தார்;;


14. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- 

ஆந்திர நாட்டை சேர்ந்தவர்

உக்ரபைரவரை அடக்கியவர் என்பர்

அகஸ்திய மலையில் கி.பி 317ல் முக்தியடைந்தார்;


15. ஸ்ரீகங்காதரேந்திரசரஸ்வதி:- 

ஆந்திர நாட்டை சேர்ந்தவர்

அகஸ்தியமலையில் கி.பி 329ல் முக்தியடைந்தார்;


16. ஸ்ரீஉஜ்வல சங்கரேந்திரசரஸ்வதி:- 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்

காஷ்மீரம் அருகிலுள்ள காலாபுரியில் கி.பி367ல் முக்தியடைந்தார்;


17. ஸ்ரீசதாசிவேந்திரசரஸ்வதி:- 

காஷ்மீரத்தை சேர்ந்தவர்

நாசிக் அருகிலுள்ள த்ரயம்பகத்தில் கி.பி 375ல் முக்தியடைந்தார்;


18. ஸ்ரீயோகபிலக சுரேந்திரசரஸ்வதி:- 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்

உஜ்ஜயினில் கி.பி 385ல் முக்தியடைந்தார்;


19. ஸ்ரீமார்த்தாண்ட வித்யாகணேந்திரசரஸ்வதி:- 

கோதவரி தீரத்தில் கி.பி 398ல் முக்தியடைந்தார்;


20. ஸ்ரீமூக சங்கரேந்திரசரஸ்வதி:- 

வானசாஸ்திர வல்லுநர்

காஞ்சிகாமாட்சியின் கடாக்க்ஷத்தால் பேசியவர்

கோதவரி தீரத்தில் கி.பி 437, முக்தியடைந்தார்;


21. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(II):- 

வடகர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;

காசியில் கி.பி 447ல் முக்தியடைந்தார்;


22. ஸ்ரீ போதேந்திரசரஸ்வதி:- 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்; ஜகந்நாதக்ஷேத்ரத்தில் கி.பி 481ல் முக்தியடைந்தார்;


23. ஸ்ரீசச்சித் சுகேந்திரசரஸ்வதி:- 

ஆந்திரவிலுள்ள ஸ்ரீகாகுலத்தை சேர்ந்தவர்; சுப்ரஹமண்ய பக்தர்

ஜகந்நாதக்ஷேத்ரமருகில் கி.பி 512ல் முக்தியடைந்தார்;


24. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- 

கர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்

இவர் கொங்கணத்திலேயே வாழ்ந்தார்

ரத்னகிரியில் கி.பி 527ல் முக்தியடைந்தார்;


25.ஸ்ரீசச்சிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- 

ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர்

கோகர்ணத்தில் கி.பி 548ல் முக்தியடைந்தார்;


26. ஸ்ரீப்ரஞான கணேந்திரசரஸ்வதி:- 

பெண்ணாற்றங்கரையை சேர்ந்த ஊர்

காஞ்சியில் கி.பி 565 ல் முக்தியடைந்தார்;;


27. ஸ்ரீசித் விலாசேந்திரசரஸ்வதி:-

ஹஸ்தகிரியை சேர்ந்தவர்(ஆந்திராவிலுள்ளது); 

காஞ்சியில் கி.பி 577ல் முக்தியடைந்தார்;


28. ஸ்ரீமஹாதேவ வேலேந்திரசரஸ்வதி:- 

ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தை சேர்ந்தவர்

கி.பி 601, காஞ்சியில் முக்தியடைந்தார்;


29. பூர்ண போதேந்திரசரஸ்வதி:- 

காஞ்சியில் கி.பி 618ல் முக்தியடைந்தார்;


30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி:- 

காஞ்சியில் கி.பி 655ல் முக்தியடைந்தார்;


31. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- 

கடிலம் நதியிலுள்ள கிரமாத்தை சேர்ந்தவர்;

காஷ்மீர மன்னனால் போற்றப்பட்டவர்;

காஞ்சியில் கி.பி 668, முக்தியடைந்தார்;


32. ஸ்ரீசிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- 

காய்ந்த சருகுகளை உண்டே வாழ்ந்தவர்

கி.பி 672ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


33. ஸ்ரீ சச்சிதாநந்தேந்திரசரஸ்வதி:- 

ஆந்திராவை சேர்ந்தவர்;

கி.பி 692ல் முக்தியடைந்தார்;


34. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(III):- 

வேகவதி நதிக்கரையிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்

காஞ்சியில் கி.பி 710ல் முக்தியடைந்தார்;


35. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- 

வேதாசலத்தை சேர்ந்தவர்

சஹ்யமலையில் கி.பி 737ல் முக்தியடைந்தார்;


36. ஸ்ரீசித் சுகாநந்தேந்திரசரஸ்வதி:- 

பாலாற்றங்கரையை சேர்ந்த கிராமம்

கி.பி 758ல் கஞ்சியில் முக்தியடைந்தார்;


37. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- 

சிதம்பரத்தில் கி.பி 795ல் முக்தியடைந்தார்;


38. ஸ்ரீஅபிநவ சங்கரேந்திரசரஸ்வதி:- 

சிதம்பரத்தை சேர்ந்தவர்;

எல்லோராலும் போற்றப்பட்டவர்;

தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்;; 

காஷ்மீரநாட்டில் பீடமேறியவர்

கி.பி 840ல் இமாலயத்தில்(ஆத்ரேய மலையில்) முக்தியடைந்தார்;


39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திரசரஸ்வதி:-

கி.பி 873ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


40. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- 

கர்நாடகத்தை சேர்ந்தவர்

கி.பி 915ல் முக்தியடைந்தார்;


41. ஸ்ரீ கங்காதரேந்திரசரஸ்வதி:- 

கர்நாடகத்தை சேர்ந்தவர்;

கி.பி 950ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


42. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- 

கி.பி 978ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


43. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- 

துங்கபத்திரா தீரத்தை சேர்ந்தவர்

காஞ்சியில் கி.பி 1014ல் முக்தியடைந்தார்;


44. ஸ்ரீபூர்ண போதேந்திரசரஸ்வதி:- 

கர்நாடகத்தை சேர்ந்தவர்;

கி.பி 1040. காஞ்சியில் முக்தியடைந்தார்;


45. ஸ்ரீபரம சிவேந்திரசரஸ்வதி:- 

காஞ்சியில் கி.பி 1061ல் முக்தியடைந்தார்;


46ஸ்ரீசந்திரானந்த போதேந்திரஸ்ரஸ்வதி:- 

கதாசரித சாகரத்தை எழுதியவர்

கி.பி 1098ல் அருணாசலக்ஷேத்ரத்தில் முக்தியடைந்தார்


47. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(IV):- 

மிகவும் போற்றப்பட்டவர்

அருணாசல க்ஷேத்திரத்தில் கி.பி 1166ல் முக்தியடைந்தார்;


48. ஸ்ரீஅத்வைதாநந்த போதேந்திரசரஸ்வதி:- 

பெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்

கி.பி 1200ல் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்;


49. ஸ்ரீமஹா தேவேந்திரசரஸ்வதி:- 

தஞ்சாவூரை சேர்ந்தவர்;

கடில நதி தீரத்தில் கி.பி 1247ல் முக்தியடைந்தார்;


50. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- 

இவரும் கடில நதிதீரத்தில் கி.பி 1297ல் முக்தியடைந்தார்;


51. ஸ்ரீவித்யா தீர்த்தேந்திரசரஸ்வதி:- 

பில்வாரண்யத்தை சேர்ந்தவர்

கி.பி 1385ல் இமாலயத்தில் முக்தியடைந்தார்;


52. ஸ்ரீ சங்கராநந்தேந்திரசரஸ்வதி:- 

திருவடைமருதூரை சேர்ந்தவர்

கி.பி 1417ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


53. ஸ்ரீபூர்ணாநந்த சதாசிவேந்திரசரஸ்வதி:-

நாகாரண்யத்தை சேர்ந்தவர்;

கி.பி 1498ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


54. ஸ்ரீவ்யாசாசல மஹாதேவேந்திரசரஸ்வதி:- 

காஞ்சியை சேர்ந்தவர்;

கி.பி 1507ல் வ்யாசாசலத்தில் முக்தியடைந்தார்;


55. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- 

தென்னாற்காடு மாவட்டைத்தை சேர்ந்தவர்

கி.பி 1524ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


56. ஸ்ரீசர்வக்ஞ சதாசிவபோதேந்திரசரஸ்வதி:- 

வடபெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்

கி.பி 1539ல் ராமேஸ்வரத்தில் முக்தியடைந்தார்;


57. ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி:- 

பம்பாதீரத்தை சேர்ந்தவர்;

மஹான் சதாசிவப்ரம்மேந்திராளின் குரு;; 

கி.பி 1586ல் திருவெண்காட்டில் முக்தியடைந்தார்;


58. ஸ்ரீஆத்ம போதேந்திரசரஸ்வதி:- 

விருத்தாசலத்தை சேர்ந்தவர்;

இவர் சதாசிவப்ரம்மேந்திராளை குருரத்னமாலிகாவை எழுத சொன்னவர்;

கி.பி 1638ல் தென்பெண்ணாற்றங்கரையில் முக்தியடைந்தார்;


59. ஸ்ரீபகவன்நாம போதேந்திரசரஸ்வதி:- 

காஞ்சியை சேர்ந்தவர்

நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை எடுத்துரைத்தவர்

கி.பி 1692ல் கோவிந்தபுரத்தில் (கும்பகோணமருகில்) முக்தியடைந்தார்;


60. ஸ்ரீஅத்வைதாத்ம ப்ராகசேந்திரசரஸ்வதி:- 

கி.பி 1704ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;


61. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- 

கி.பி 1746ல் திருவொற்றியூரில் முக்தியடைந்தார்;


62. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(V):- 

இவர் காலத்தில் தான் போரினால். மடத்தை கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது

கி.பி 1783ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;


63. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- 

கும்பகோணத்தை சேர்ந்தவர்;

கி.பி 1813; கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;


64. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(VI):- 

இவர் கோவிந்த தீக்ஷதர் வம்சத்தை சேர்ந்தவர்

கி.பி 1851ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;


65. ஸ்ரீசுதர்சன மஹாதேவேந்திரசரஸ்வதி:- 

திருவடைமருதூரை சேர்ந்தவர்;

கி.பி 1891ல் இளையாத்தங்குடியில் முக்தியடைந்தார்;


66. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(VII):- 

உடையம்பாக்கத்தை சேர்ந்தவர்;

கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;


67. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- 

ஏழுநாட்களே பீடத்தில் இருந்தார்;

கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;


68. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி.

சிரம படுபவர்களுக்கு, சௌகர்யம் உள்ளவர்கள் மூலம் நேரடியாக உதவி செய்தவர்

கருணைக் கடல்... இன்னும் பல தர்ம காரியங்கள் மற்றும் ஹிந்து தர்மம் காக்க அரும்பாடுபட்டவர்.

அழிவின் விளிம்பில் இருந்த பல கோவில்களை, தகுந்த நபர்களைக் கொண்டு, மீண்டும் அந்த ஆலயங்களை கும்பாபிஷேகம் செய்து வைத்தவர்.

மஹா பெரியவா என்று, இன்றும் பக்தர்களால்

அன்புடன் அழைக்கப்படுபவர்.

சத்குரு என்று மக்களால் அழைக்கப்பட்டவர் / அழைக்கப்படுபவர்.

3 - ஜனவரி - 1994-ல் முக்தி அடைந்தார்.


69. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி

சங்கர மடத்தின் சார்பாக பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனை நிறுவ முக்கிய பங்காற்றியவர்.

28 - பிப்ரவரி - 2018- ல் முக்தி அடைந்தவர்


70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி

தற்போது உள்ள பீடாதிபதி...


.....



ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ புதுபெரியவா, ஸ்ரீ பாலபெரியவா என மூன்று குருமார்களையும் தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது.




குலகுரு சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ  காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய  ஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.


ஒரு சன்னியாசி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்துவிட்டு, இன்றும் அரூபமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது பெரியவர்.


ஸ்ரீ மகா பெரியவா திருவடியே போற்றி போற்றி

ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகள் சரணம்.


தென்னாடுடைய  சங்கராச்சார்ய ஸ்வாமிகள் போற்றி, எந்நாட்டவர்க்கும் குருதேவா போற்றி.


ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர,

ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர.

No comments:

Post a Comment