Tuesday, February 7, 2017

இனியாவது நல்ல காலம் பிறந்து ...



பதிமூன்று மாதங்களுக்கு பின் ... வலைப்பூ தொடர்கிறது.

இன்று 64வது ஜன்ம நட்சத்திர பிறந்தநாள்.  மிருகசீரிடம் .. मृगशी॒र्॒षे

மிருகசீரிடத்துக்குரிய திருமுறை:  பாடியவர்:-திருநாவுக்கரசர்

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

सोमो॒ राजा॑ मृगशी॒र्॒षेण॒ आगन्न्॑। शि॒वं नक्ष॑त्रं प्रि॒यम॑स्य॒ धाम॑।
आ॒प्याय॑मानो बहु॒धा जने॑षु। रेतः॑ प्र॒जां यज॑माने दधातु।
यत्ते॒ नक्ष॑त्रं मृगशी॒र्॒षमस्ति॑। प्रि॒यꣳ रा॑जन् प्रि॒यत॑मं प्रि॒याणा᳚म्।
तस्मै॑ ते सोम ह॒विषा॑ विधेम। शन्न॑ एधि द्वि॒पदे॒ शं चतु॑ष्पदे ॥ 
ஸோமோ ராஜா ம்ருʼகஶீர்ஷேண ஆகன்ன்। ஶிவம் நக்ஷத்ரம் ப்ரியமஸ்யதா⁴ம ।
ஆப்யாயமானோ பஹுதா ஜனேஷு। ரேத: ப்ரஜாம் யஜமானே ததாது।
யத்தே நக்ஷத்ரம் ம்ருʼகஶீர்ஷமஸ்தி । ப்ரிய ராஜன் ப்ரியதமம் ப்ரியாணாம்।
தஸ்மை தே ஸோம ஹவிஷா விதேம। ஶன்ன ஏதித்விபதே ஶம் சதுஷ்பதே ॥ 



என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் - ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் - திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். 

என் குலகுரு சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ  காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய  ஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.
குருவுக்கும் குரு பராபர குரு  ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய‌  கெளஸ்துப புருஷாய  ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் திருவடியே போற்றி, போற்றி.

ஈன்றெடுத்த தாய் தந்தையின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒருவருக்கு பெற்ற தாயை விட பெரிய உறவு யாரும் இல்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால், சுடச்சுட தேங்காய் burfi செய்துகொடுத்து என்னை ஆசிர்வதித்து ஆனந்தப்பட்டுருப்பாள்.

இவாளுக்குல்லாம் ன்னுடைய ஜன்ம நக்ஷ்ட்ரம் ஞாபகமில்லை.  அவாவாளுக்குள்ளாம் அவாஅவா வேலை.  சகதர்ம பத்தினிக்கே ஞாபகமில்லை.  அப்புறம் எப்படி என்கூட பிறந்தவர்களும், எனக்கு பிறந்தவர்களும்??

ஸர்வேஸ்வரா, என்ன கர்மாவோ. ஜென்மம் எடுத்துவிட்டேன். அம்மை அப்பன் அருளால், நலமாக திருப்தியாக இருக்கிறேன். பக்தி செலுத்தி கரை ஏற மட்டும் விதி. அதை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரி.

ஸ்ரீ பரமேஸ்வரா,  அடியேன் திருப்தியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்நாள் முழுவதும்  மகிழ்ச்சியுடன் வாழ உன் பாதங்களைப் பற்றுகின்றேன். என்னை காத்திடுவாய் ஸர்வேஸ்வரா. எல்லாம் சிவமயம், எங்கும் சிவமயம், எதிலும் சிவமயம்.





No comments:

Post a Comment