Sunday, February 19, 2017

மகாலட்சுமி ஸ்துதி


சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க  ஏதுவாக எளிமைப்படுத்தி  இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தினம் கூறி வழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

தினமும் பூஜை  அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

மகாலட்சுமி ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

                         "சுபமஸ்து"

... ஒரு  முகநூல் பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். பதிவருக்கு மிக்க நன்றி.

Saturday, February 18, 2017

Platform for Meeting & Mingling ...

..

An Upanayanam Function becomes a Platform for Meeting & Mingling.

My Father's brother's son Prakash's son Aditya's Upanayanam Function has become a huge Platform for me to meet and mingle with all relatives at One Go.

The Function was held on Thursday, 16/02/2017, at Velacherry Chennai.

To attend the Function, me and Usha along with my two bros Sam & Ramesh left Bangalore by Chennai Mail on 15th. After a very long gap of 15 years, travelled in Sleeper Class.  Though Lower Berth could not sleep well and by the time sleep started engulfing, the train reached Central Station.  PayTM and Über are very useful.  No need to fight with Madras autowalas.  Pre paid taxis are very costlier than Ola & Über.  Me Usha Sam took Über to Velacherry and Ramesh took train to Nanganallur.


We reached the Hall at 5.10 in the morning. Only Five were at the Hall. Jana authai, Sundu Chithappa, Akila & Prakash with Aditya.  On entering the Hall, had hot coffee.  After Pranams to Authai and Chithappa, had bath and put the traditional attire of Veshti and slack shirt.

Rajesh and Venkatesh peeped in. The Function started at 5.40 with just 10 of us and two Vadhyars.

By 7 am, people started coming in.  

Meeting and mingling started.

Goma authai, my Father's kadaikutty sister, with her 1st daughter in law Kanchana and 2nd son Balu.  Balu's son Abhi. 
Akila's Parents.
Cousin Ganesan's wife Meenakshi and her son Karthick.
Bros Ramesh, Suresh, Satish and Suresh's son Narayanan.
Akila's brothers and their family.

Breakfast. Kesari, Idli, Vadai, Pongal. With Thengai chutney and sambar.
Except sweet, none is up to the mark. Vadai is worst. No softness at all.

Cousins Gopalan and Ganesan.
Authimber Narayanaswamy Iyer, cousin Murali and Balu wife Priya.
Meena authai, Thangam chithi, cousin Ravi, his wife Rama & son Akash.
Cousin Raghu, his wife Annapoorna and their son.
Cousin Tiruppur GK's daughter Pattu.

Saradha chitthi's elder bro "meesai" Kothandaram.  I respect him a lot.
Saradha chitthi's sister and another sis husband 'auto Chithappa'.
Kanchana's Parents.
Priya's Parents. Priya's father Viswanathan is my closest friend since 1975. Spic buddy.
Me and Vichu exchanged a lot of things. Shared our feelings. 

Lunch. Lot of varieties but nothing is to be mentioned as tasty. 

Again a round of exchanging pleasantries with known and unknown guests.

By 1.30 pm, left for Nanganallur with Usha Pattu and Narayanan in Paatu's car.  

To bro Suresh flat.  Kala and Rajeswari.  Raji is in dejected mood. 
A nap from 2pm to 3.30 pm.  Had a strong coffee.

By Über to Central station with Usha and bro Ramesh.

Shatabdi to Bangalore.  Usha me Ramesh in one Row. Left 5.30 pm.
Eatables started coming in.
First, sonpapdi bread samosa with coffee.
Then, bread sticks with soup.
Then, dinner came but skipped it. Took only curd.
Then, ice cream.
Reached Cantonment around 11.30 pm. An hour delay.
Me Usha by Über to PWP.  Ramesh to Ulsoor by auto.

Arrived sweet home at 11.45 pm.  Sleep.

One of the very few Best Days in Life. A Remarkable & Unforgettable Day.

Great Thanks to God.  And to Akila & Prakash for creating this Platform.


Monday, February 13, 2017

பிரம்ம முஹூர்த்தம்

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் ...

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது.

ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும். இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது. அவையாவன :

1. रुद्र मुहुर्त .. ருத்ர முஹுர்த்தம் .. 06.00AM – 06.48AM

2. आहि मुहुर्त .. ஆஹி முஹுர்த்தம் .. 06.48am –07.36am

3. मित्र मुहुर्त .. மித்ர முஹுர்த்தம் .. 07.36am – 08.24am

4. पित्रु मुहुर्त .. பித்ரு முஹுர்த்தம் .. 08.24am – 09.12am

5. वसु मुहुर्त .. வசு முஹுர்த்தம் .. 09.12am – 10.00am

6. वाराह मुहुर्त .. வராஹ முஹுர்த்தம் .. 10.00am – 10.48am

7. विश्वेदेवा मुहुर्त .. விச்வேதேவாமுஹுர்த்தம் .. 10.48am – 11.36am

8. विधि मुहुर्त .. விதி முஹுர்த்தம் .. 11.36am – 12.24pm

9. सुतमुखी मुहुर्त .. சுதாமுகீ முஹுர்த்தம் .. 12.24pm – 01.12pm

10. पुरुहूत मुहुर्त .. புருஹூத முஹுர்த்தம் .. 01.12pm – 02.00pm

11. वाहिनी मुहुर्त .. வாஹிநீ முஹுர்த்தம் .. 02.00pm – 02.48pm

12. नक्तनकरा मुहुर्त .. நக்தனகரா முஹுர்த்தம் .. 02.48pm – 03.36pm

13. वरुण मुहुर्त .. வருண முஹுர்த்தம் .. 03.36pm – 04.24pm

14. अर्यमन् मुहुर्त .. அர்யமன் முஹுர்த்தம் .. 04.24pm – 05.12pm

15. भग मुहुर्त .. பக முஹுர்த்தம் .. 05.12pm – 06.00pm

16. गिरीश मुहुर्त .. கிரீச முஹுர்த்தம் .. 06.00pm – 06.48pm

17. अजपाद मुहुर्त .. அஜபாத முஹுர்த்தம் .. 06.48pm – 07.36pm

18. अहिर्बुध्न्य मुहुर्त .. அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் .. 07.36pm – 08.24pm

19. पुश्य मुहुर्त .. புஷ்ய முஹுர்த்தம் .. 08.24pm – 09.12pm

20. अश्विनी मुहुर्त .. அச்விநீ முஹுர்த்தம் .. 09.12pm – 10.00pm

21. यम मुहुर्त .. யம முஹுர்த்தம் .. 10.00pm – 10.48pm

22. अग्नि मुहुर्त .. அக்னி முஹுர்த்தம் .. 10.48pm – 11.36pm

23. विधात्ऱ् मुहुर्त .. விதாத்ரு முஹுர்த்தம் .. 11.36pm – 12.24am

24. कण्ड मुहुर्त .. கண்ட முஹுர்த்தம் .. 12.24am – 01.12am

25. अदिति मुहुर्त .. அதிதி முஹுர்த்தம் .. 01.12am – 02.00am

26. जीव/अम्र्त मुहुर्त .. ஜீவ/அம்ருத முஹுர்த்தம் .. 02.00am – 02.48am

27. विश्णु मुहुर्त .. விஷ்ணு முஹுர்த்தம் .. 02.48am – 03.36am

28. द्युमद्गद्युति मुहुर्त .. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் .. 03.36am – 04.24am

29. ब्रह्म मुहुर्त .. பிரம்ம முஹுர்த்தம் .. 04.24am – 05.12am

30. समुद्रम् मुहुर्त .. சமுத்ரம் முஹுர்த்தம் .. 05.12am – 06.00am

மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்மமுகூர்த்தமாகும்.

இவற்றுள் 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும்.

... ஒரு முகநூல் பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். முகநூல்  பதிவருக்கு மிக்க நன்றி.

Tuesday, February 7, 2017

இனியாவது நல்ல காலம் பிறந்து ...



பதிமூன்று மாதங்களுக்கு பின் ... வலைப்பூ தொடர்கிறது.

இன்று 64வது ஜன்ம நட்சத்திர பிறந்தநாள்.  மிருகசீரிடம் .. मृगशी॒र्॒षे

மிருகசீரிடத்துக்குரிய திருமுறை:  பாடியவர்:-திருநாவுக்கரசர்

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

सोमो॒ राजा॑ मृगशी॒र्॒षेण॒ आगन्न्॑। शि॒वं नक्ष॑त्रं प्रि॒यम॑स्य॒ धाम॑।
आ॒प्याय॑मानो बहु॒धा जने॑षु। रेतः॑ प्र॒जां यज॑माने दधातु।
यत्ते॒ नक्ष॑त्रं मृगशी॒र्॒षमस्ति॑। प्रि॒यꣳ रा॑जन् प्रि॒यत॑मं प्रि॒याणा᳚म्।
तस्मै॑ ते सोम ह॒विषा॑ विधेम। शन्न॑ एधि द्वि॒पदे॒ शं चतु॑ष्पदे ॥ 
ஸோமோ ராஜா ம்ருʼகஶீர்ஷேண ஆகன்ன்। ஶிவம் நக்ஷத்ரம் ப்ரியமஸ்யதா⁴ம ।
ஆப்யாயமானோ பஹுதா ஜனேஷு। ரேத: ப்ரஜாம் யஜமானே ததாது।
யத்தே நக்ஷத்ரம் ம்ருʼகஶீர்ஷமஸ்தி । ப்ரிய ராஜன் ப்ரியதமம் ப்ரியாணாம்।
தஸ்மை தே ஸோம ஹவிஷா விதேம। ஶன்ன ஏதித்விபதே ஶம் சதுஷ்பதே ॥ 



என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் - ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் - திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். 

என் குலகுரு சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ  காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய  ஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.
குருவுக்கும் குரு பராபர குரு  ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய‌  கெளஸ்துப புருஷாய  ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் திருவடியே போற்றி, போற்றி.

ஈன்றெடுத்த தாய் தந்தையின் பாத கமலங்களுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒருவருக்கு பெற்ற தாயை விட பெரிய உறவு யாரும் இல்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால், சுடச்சுட தேங்காய் burfi செய்துகொடுத்து என்னை ஆசிர்வதித்து ஆனந்தப்பட்டுருப்பாள்.

இவாளுக்குல்லாம் ன்னுடைய ஜன்ம நக்ஷ்ட்ரம் ஞாபகமில்லை.  அவாவாளுக்குள்ளாம் அவாஅவா வேலை.  சகதர்ம பத்தினிக்கே ஞாபகமில்லை.  அப்புறம் எப்படி என்கூட பிறந்தவர்களும், எனக்கு பிறந்தவர்களும்??

ஸர்வேஸ்வரா, என்ன கர்மாவோ. ஜென்மம் எடுத்துவிட்டேன். அம்மை அப்பன் அருளால், நலமாக திருப்தியாக இருக்கிறேன். பக்தி செலுத்தி கரை ஏற மட்டும் விதி. அதை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரி.

ஸ்ரீ பரமேஸ்வரா,  அடியேன் திருப்தியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்நாள் முழுவதும்  மகிழ்ச்சியுடன் வாழ உன் பாதங்களைப் பற்றுகின்றேன். என்னை காத்திடுவாய் ஸர்வேஸ்வரா. எல்லாம் சிவமயம், எங்கும் சிவமயம், எதிலும் சிவமயம்.