.....
ॐ नमो भगवते रुद्राय । ॐ नम: शिवाय।।
ॐ नमः शिवाय, शिवाय नमः ॐ .. ஓம் நம சிவாய, சிவாய நம ஓம்
காலை மாலை இருவேளை "ஒம் நமசிவாய ... ॐ नमः शिवाय" சொல்ல சொல்ல நாற்றுக்கிடையே களை பறித்து எரியப்படுவது போல் தூய ஆத்மாவின் உன்னத தன்மையை மாசுபடுத்தும் கர்மவினை பதிவுகள் ஒவ்வொன்றாக பிடுங்கி ஏறியப்படுகின்றன.
"ஒம் நமசிவாய ... ॐ नमः शिवाय" ஒரு சாதரண எழுத்துக்கள் அல்ல. ஈடுபாடு கொண்டு தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க நல்ல அதிர்வுள்ள அலைகளை உச்சரிப்பவர் உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் சுழலசெய்கிறது. யாரொருவர் தொடர்ந்து ஈடுபாடுடன் சிவ மந்திரத்தை உச்சரிகிறார்களோ அவர்கள் கர்மவினை பதிவுகள் அன்றுமுதல் வேரறுக்கப்படுகின்றன. நம்மைசுற்றி எப்பொழுதும் இந்த மந்திரம் ஒரு அதிர்வு அலைகளை தந்துகொண்டேயிருக்கும்.
இதை உணர்ந்தால் மனம் நிம்மதி பெரும், அமைதி பெரும். இன்றைய காலகட்டங்களுக்கு தகுந்தார் போல நமது வாழ்வியல் நிகழ்வுகள் சீராக இயங்க ஒத்துழைப்பும், யாருமே தர இயலாத ஒரு தீர்வும் தரும். இறை அலைகள் சூழ சூழ மாயை அலைகள் விலகி தடை அகன்று செல்லும் வழியை மிக அழகாக உணர்த்தும். அதன் தாத்பரியத்தை நன்கு உணர்ந்து வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெறவேண்டும்
மனதை மெல்ல மெல்ல சிவத்தை நோக்கி, அன்பின் அலைகளை நோக்கி, செலுத்த செலுத்த, ஒரு சிறிய அமைதி தென்படும். அவ்வாறே அதன் மூலம் நோக்கி செல்ல செல்ல ஒரு காட்டாறு வெள்ளம் போல் உருத்திரண்ட சக்தி ஒன்று அழைத்துச்செல்லும். அந்த உருத்திரண்ட சக்தியை நன்கு உள்வாங்கி, அப்படியே நம்முள் நிலைத்திருக்க பழக பேரானந்தம் கவ்விக்கொள்ளும்.
எங்கெங்கும் விரியும் பிரபஞ்ச நாயகனின் ஆற்றல், அன்பின் அலைகள் நிறைந்த செறிவு, ஈர்ப்பு எனும் ஆற்றல், காரிருள் கட்டுக்கடங்கா ஆற்றல், இவனுள் உள்ள அன்பே இத்தனை ஈர்ப்பிற்கும் காரணம். இந்த ஈர்ப்பு அலைகளை தினந்தோறும் உணரவில்லையெனில் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற ஒரு ஏக்கம். ஏனெனில் அந்த அளவுக்கு இவன் நம்முள் பிண்ணிப்பிணைந்துள்ளான். இவன் இல்லை எனில் பஞ்ச பூதங்கள் இல்லை, பஞ்ச பூதங்கள் இல்லை எனில் நாம் இல்லை. சூட்சுமமாகிய சிவத்தில் மூழ்க மூழ்க தம் நிலை கரைந்து ஒன்றுமில்லாமல் போகிறது.
சிவனைபற்றி நினைக்கும்போதே எத்தனை அன்புஅலைகள்.
பரிசிப்பது, எத்தனை சுகம் இறைவா.
எம்முள் நிந்தன் அன்பு கலந்தஅலைகள் மெல்லமெல்ல கரைந்து ஆட்கொள்கிறதே., இறைவா.
மாபெரும் பிரபஞ்ச ஆற்றலே, அணுவிலும் சிறியோனே, கற்பனைக்கும் அப்பாலும் விரிந்துகொண்டேஇருக்கும் ஆழ்ந்து அகண்ட பிரபஞ்சமே, காரிருள் சூழ்ந்த பேரருளே, .வெட்டவெளியே, சங்கினும் தூய வெண்மை நிறமுடையோனே, பேரொளியே, எங்கும் நீக்கமற நிறைந்தோனே, எம்நாயகனே, எம்முள் என்றும் உம் திவ்ய தரிசனம் காண வழிவகை செய்யுங்கள் இறைவனே.
..... அருளாளர்களின் கூற்றுகளை படித்து உணர்ந்து, அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்து, அவை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை.
Sunday, October 25, 2015
ஒம் நமசிவாய ..... ॐ नमः शिवाय
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment