Saturday, October 31, 2015

16 வகை உபசார பூஜை மந்திரங்கள்

.....

“லகு ஷோடசோபசார பூஜை” ...


1. ध्यानं .. த்யானம் .. தியானம் (திருவுருவைத் தியானித்தல்)

நான்முகன் திருமால் உருத்திரன் மயேசன் நால்வரும் கால்களே யாக
மேன்மரு பலகை சதாசிவனாக மேவுசிம் மாசனந் தன்னில்
தேன்மலர் கரும்புவில் பாசமங் குசமும் திருக்கரங் கொண்டுவீற் றிருக்கும்
பான்மைசேர் சக்தி பராபரை லலிதை பதமலர் மனத்தினுற் பதிப்பாம்.

ॐ हिरण्य-वर्णां हरिणीं, सुवर्ण-रजत-स्त्रजाम्। चन्द्रां हिरण्यमयीं लक्ष्मीं, जातवेदो म आवह।।
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் | சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् ध्यायामि ।। ध्यायामि ध्यानं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் த்யாயயாமி நம:



2. आवाहन .. ஆவாஹனம் (பூஜிக்கும் இடத்துக்கு எழுந்தருள வேண்டுதல்)

அன்னையே லலிதா தேவி! அருவமாய்ப் பிரம்ம மாக
மன்னியே என்றும் எங்கும் மாஞான வானாய் நிற்கும்
உன்னையே பூசித் துய்ய உன்னினோ முருவம் தன்னில்
என்னையாட் கொள்ள விங்கே எழுந்தருள் புரிவாய் நீயே.

तां म आवह जातवेदो लक्ष्मीमनपगामिनीम् । यस्यां हिरण्यं विन्देयं गामश्वं पुरुषानहम् ॥
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீர் மனபகாமினீம் | யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமேஷ்வம் புருஷானஹம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् आवाहयामि ॥ आवाहयामि आवाहनं समर्पयामि
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆவாஹயாமி நம:



3. आसनं .. ஆஸனம் (அமர வேண்டி இருக்கை அளித்தல்)

ஐந்தொழில் புரியும் ஈசர் ஐவரும் தாமே சேர்ந்து
மைந்துடைப் கனக ரத்ன மகாசிம்மா சனமா யுள்ளார்
ஐந்தொழு படியோ டொன்றும் அதற்குள் அதன்மீ தேறி
உய்ந்திட யாங்க ளுட்கார்ந் துவப்புட விருப்பாய் தாயே

अश्वपूर्वां रथमध्यां हस्तिनादप्रबोधिनीम् । श्रियं देवीमुपह्वये श्रीर्मा देवी जुषताम् ॥
அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதினீம் | ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् आसनं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்யரத்னமய ஸிம்ஹாஸனாரோஹணம் கல்பயாமி நம:



4. पाद्यं .. பாத்யம் (திருப்பாதங்களை நல்ல நீர் கொண்டு அலம்புதல்)

வேதங்கள் சிலம்பாய் ஆர்க்கும் மேன்மைசேர் மலர்போன்றுள்ள
பாதங்கள் அலம்ப நல்ல பாத்தியத் தீர்த்தம் கொண்டு
பாதங்கள் அலம்பி நல்ல பட்டினால் துடைத்துவிட்டேன்
ஏதங்கள் அகலும் வண்ணம் ஏற்றருள் புரிவாய் தாயே

कां सोस्मितां हिरण्यप्राकारामार्द्रां ज्वलन्तीं तृप्तां तर्पयन्तीम् । पद्मे स्थितां पद्मवर्णां तामिहोपह्वये श्रियम् ॥
காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா-மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ பஹ்வயே ச்ரியம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् पादोयो पाद्यं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் பாத்யம் கல்பயாமி நம:



5. अर्घ्यं .. அர்க்கியம் (திருக்கரங்களை அலம்புதல்)

மலர்களை ஒத்த கைகள் வதனமும் சுத்தி செய்ய
மலர்கமழ் அர்க்ய தீர்த்தம் மகிழ்வுடன் அளித்தேன் ஏற்று
பலர்புகழ் அருளாம் செல்வ பாக்கியம் பெற்று வாழ
மலர்தலை உலகிற் செய்வாய் மண்புறும் லலிதா தேவீ !

चन्द्रां प्रभासां यशसा ज्वलन्तीं श्रियं लोके देवजुष्टामुदाराम् । तां पद्मिनीमीं शरणमहं प्रपद्येऽलक्ष्मीर्मे नश्यतां त्वां वृणे ॥
சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ச்ரியம் லோகே தேவஜுஷ்டா-முதாராம் |
தாம் பத்மினிமீம் சரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् अर्घ्यं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷாம்ருதம் கல்பயாமி நம:



6. आचमनीयं .. ஆசமனம (அருந்துவதற்கு நீர் சமர்ப்பித்தல்)

ஆசமனம் செய்ய நல்ல அமுதம் போல் தீர்த்தம் தந்தேன்
பாசமலம் போக்கி மேலாம் பதத்தினை அருள்வாய் கையில்
பாசமுமங் குசமும் வில்லும் பாணமும் கொண்டசக்தீ !
ஈசர்தமக் கெல்லாம் ஈசீ ! எழிற்பரா பரையே போற்றி.

आदित्यवर्णे तपसोऽधिजातो वनस्पतिस्तव वृक्षोऽथ बिल्वः । तस्य फलानि तपसानुदन्तु मायान्तरायाश्च बाह्या अलक्ष्मीः ॥
ஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வனஸ்பதிஸ்த்வ வ்ருக்ஷோத பில்வ: |
தஸ்யபலானி தபஸா நுதந்து மாயாந்த்ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् आचमनीयं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசமனம் கல்பயாமி நம:



7. शुद्धोदक स्नानं .. ஸ்நானம்

கங்கையே முதலாம் மிக்க கடவுள்மா நதிகள் தீர்த்தம்
தங்கமா கலசம் தம்மில் தகுமணம் மதுவும் சேர்த்தே
அங்கமின் படையும் வண்ணம் ஆடநீர் அபிஷேகித்தோம்
எங்களை ஆண்டு கொள்வாய் ஈஸ்வரீ லலிதா தேவீ !

उपैतु मां देवसखः कीर्तिश्च मणिना सह । प्रादुर्भूतोऽस्मि राष्ट्रेऽस्मिन् कीर्तिमृद्धिं ददातु मे ॥
உபைதுமாம் தேவ ஸஹ: கீர்த்திஸ்ச மணிநா ஸஹ | ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் ருத்திம் ததாது மே ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् शुद्धोदक स्नानं नानाविध अभिषेक स्नानं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நானாவித அபிஷேக வைபவம் கல்பயாமி நம:



8. नानालङ्कारञ्च .. அலங்காரம்

மணியணி மகுடம் சுட்டி மகிழ்மூக் குத்திகாதில்
அணியுறுந் தோடு தொங்கல் அட்டிகை பதக்கம் முத்தும்
மணிகளும் கோத்த மாலை மாங்கல்யமுதலா யுள்ள
அணிகல மெல்ல மேற்றே அருள்புரி லலிதா தேவீ !

क्षुत्पिपासामलां ज्येष्ठामलक्ष्मीं नाशयाम्यहम् । अभूतिमसमृद्धिं च सर्वां निर्णुद मे गृहात् ॥
க்ஷூத்பிபாஸா மலாம் ஜேஷ்டாமலக்ஷ்மீர் நாஸயாம்யஹம் | அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् नाना आभरणानि समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்ய மஹோன்னத அலங்கார வைபவம் கல்பயாமி நம:



9. ஆராதனம்

गन्धद्वारां दुराधर्षां नित्यपुष्टां करीषिणीम् । ईश्वरींग् सर्वभूतानां तामिहोपह्वये श्रियम् ॥
கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் | ஈஸ்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम्
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷ ஆராதனம் கல்பயாமி நம:

(இங்கு பாராயணம் அல்லது மந்த்ர ஜெபம் அல்லது அர்ச்சனை)

ओं भवस्य देवस्य पत्न्यै नमः । ओं शर्वस्य देवस्य पत्न्यै नमः । ओं ईशानस्य देवस्य पत्न्यै नमः । ओं पशुपतेः देवस्य पत्न्यै नमः ।
ओं उग्रस्य देवस्य पत्न्यै नमः । ओं रुद्रस्य देवस्य पत्न्यै नमः । ओं भीमस्य देवस्य पत्न्यै नमः । ओं महतो देवस्य पत्न्यै नमः ॥

அருளுப தேசம் செயுமவ ருள்ளே குருவடி வாயிருந் தருள்வாய் போற்றி
வக்கிர துண்டரின் வடிவாய் விளங்கி விக்கின விநாசம் செய்வாய் போற்றி
வாக்கினில் வாணி வடிவாய் இருந்து வாக்கு வன்மையை அருள்வாய் போற்றி
பல்வகை நன்மையும் இன்பமும் பயக்கும் செல்வம் அருளும் செல்வியே போற்றி
பழமையை ஒழித்துப் புதுமையைப் பெற்றிட அழிவுசெய் சக்தியாம் அபர்ணையே போற்றி
அறுமுகன் வடிவாய் அசுரர் குழவினைச் செறுதல் செய்யும் தேவியே போற்றி
சிவனெனும் வடிவாய்த் தேவீநீ யமர்ந்து பவமதை யறுப்பாய் பரையே போற்றி
திருமால் உருவாய் திகழ்ந்திடுந் தேவீ கருமேக மென்னும் கருணையே போற்றி
இராமரின் உருவாய் இராவணற் செற்றுத் தராதலங் காத்த தருணீ போற்றி
கண்ணனின் உருவாய் வேய்ங்குழல் ஊதி அண்ணல் கீதையை அருளினாய் போற்றி
வாராகி யென்னும் சேனா பதினியாய்த் தேராரை அழிக்கும் தெய்வமே போற்றி
மந்திர நாயகி சியாமளை என்னும் மந்திரி ணியாகிய மகதீ போற்றி
ஐந்தொடு நாண்கா வரணங் களிலுறை மைந்துடை யோகினி கணமே போற்றி
சசக்ர ராஜமாம் ஸ்ரீ சக்கரத்தினில் செக்கர்போன் றொளிரும் சிவையே போற்றி
கலிகளை அகற்றக் கருணையா லுருவாய் லலிதையாய் வந்த நலிவிலாய் போற்றி
அருவமாய் எங்கும் அனைத்திலும் நிறைந்த பிரமமே உள்ளப் பிரகாசமே போற்றி .....16

ஓம் நமோ பகவதி, ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி, ஸர்வ சத்ரு சம்ஹாரிணி, ஸர்வ பூத நிர்நாசினி, ஸகல துரித நிவாரிணி, ஸகல ராக்ஷச ஸம்ஹாரிணி, தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸம்பத் கௌரி தேவி, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்ய நமோ நமஹ:



10. ஸமர்ப்பணம்

ஈசுரர் தேவர் இருடி கள் மனிதர்
பாசுர மாகிய பருதி சந்திரன்
மொய்ம்புடைச் சக்திகள் முடிவிலா உயிர்கள்
ஐம்பெரும் பூதம் அனைத்துமாய் இருந்தும்
அல்லா துயர்ந்த அன்னையே லலிதா !
பொல்லாமை யில்லா நல்லாய் நாமம்
பதினாறு சொல்லிப் பாமலர் பொழிந்தேன்
பொதுவிலா தருள்வாய் போற்றி போற்றி


குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத்க்ருதம் ஜபம் |
ஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திர ||



11. धूपं .. தூபம்

குங்குலியம் தசாங்கம் சேர்ந்த குலசாம் பிராணித் தூபம்
இங்குநீ முகரத் தந்தோம் எழில்மிகும் லலிதா தேவீ !
எங்களுள் ளத்தி லுள்ள எண்ணங்கள் முடியு மாறு
கங்குக்கண் ணோக்கம் செய்வாய் கருணைவா ரிதியே போற்றி

मनसः काममाकूतिं वाचः सत्यमशीमहि । पशूनां रूपमन्नस्य मयि श्रीः श्रयतां यशः ॥
மநஸ: காம மா ஹுதிம் வாச: ஸத்யமஸீமஹீ | பசூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யச: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् धूपमाघ्रापयामि॥ धूपानन्तरं आचमनीयं समर्पयामि॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தூபமாக்ராபயாமி, தூபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:



12. दीपं .. தீபம்

தெளிவுடை வாணி செல்வி தெறுசக்தி சேர்ந்தா லொப்ப
ஒளியொடு சுடரும் சூடும் ஒன்றிய தீபம் தன்னை
நளினநூல் திரியை யிட்டு நறுநெய்யை ஊற்றி ஏற்றி
களியுடை லலிதா தேவீ ! காட்டினேன் அருள்வாய் ஏற்று


சுர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् दीपं दर्शयामि॥ दीपनन्त्रं आचमनीयं समर्पयामि।
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தீபம் தர்ஷயாமி தீபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:



13. नैवेद्यं .. நைவேத்யம்

நால்வகை அன்னம் ஆறு நாச்சவை உடைய வாகப்
பால்வகைப் பழமும் சேர்த்துப் படைத்தனன் ஏற்றுக் கொண்டு
நூல்வகை எல்லாம் ஓர்ந்த நுண்ணறி வுடையே னாகக்
கால்வணங் கென்னைச் செய்வாய் கல்யாணீ லலிதா தேவீ !

आपः सृजन्तु स्निग्धानि चिक्लीत वस मे गृहे । नि च देवीं मातरं श्रियं वासय मे कुले ॥
ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |. நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||

ॐ भुर्भुवःस्वः ॐ तत्सवितुर्व्वरेण्ण्यम्भर्ग्गो देवस्य धीमहि ॥ धियोयोनः प्प्रचोदयत् ॥
देवसवितः प्रसुव। सत्यंत्वर्तेन परिषिञ्चामि। अमृतोपस्तरणमसि॥
ॐ प्राणाय स्वाहा ॥ ॐ अपानाय स्वाहा ॥ ॐ व्यानाय स्वाहा ॥ ॐ समानाय स्वाहा ॥ ॐ उदानाय स्वाहा ॥ ॐ ब्रह्मेणे स्वाहा॥
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹீ த்யோயோன: ப்ரசோதயாத் ||
தேவஸவித: ப்ரஸூவ: ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி ||
ப்ராணய ஸ்வாஹ: அபானாய ஸ்வாஹ: உதானாய ஸ்வாஹ: ஸமானாய ஸ்வாஹ: ப்ரம்ஹணே ஸ்வாஹ:


ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् महानैवेद्यं निवेदयामि । नैवेद्यं समर्पयामि ॥
मध्ये मध्ये अमृतपानीयं समर्पयामि । अमृतापिधानमसि । नैवेद्यानन्तरं आचमनीयञ्च समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஷட் ரஸோபேத திவ்ய நைவேத்யம் கல்பயாமி நம:
மத்ய மத்யே அம்ருத பானீயம் கல்பயாமி நம: அம்ருதா அபிதானமஸி நைவேத்யானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:



14. ताम्बूलं .. தாம்பூலம்

பாக்குகுங் குமப்பூ லவங்கம் பச்சைகற்பூரம் ஏலம்
ஊக்குகஸ் தூரி ஜாதி உவப்புறு கத்தக் காம்பு
நோக்குவெற் றிலையிற் சேர்த்து நுடக்கியே வைத்து வீடி
ஆக்கிய தாம்பூ லத்தை அளித்தனம் லலிதாம் பாளே !

आर्द्रां पुष्करिणीं पुष्टिं सुवर्णां हेममालिनीम् । सूर्यां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो म आवह ॥
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலனீம் | ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् कर्पूरताम्बूलं समर्पयामि॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர தாம்பூலம் கல்பயாமி நம:



15. कर्पूरनीरजनम् .. கர்ப்பூரஹாரத்தி

பங்கயா சனன்மால் திங்கள் பவளவார் சடையான் ஏசு
கங்கைமா வாணி துர்க்கை கணபதி முதலோராய
இங்குமா வுலகோர் போற்றும் ஈசர்க்கட் கெல்லாம் ஆன்மா !
துங்கநற் கர்ப்பூரத்தால் ஜோதியா ரத்தி செய்தேன்

आर्द्रां यः करिणीं यष्टिं पिङ्गलां पद्ममालिनीम् । चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो म आवह ॥
ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலினீம் |. சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् कर्पूरनीरजनम् दर्शयामि नमः ॥ रक्षां धारयामि । नीराजनानन्तरं आच्मनीयं कल्पयामि॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர நீராஜனம் கல்பயாமி நம: கர்ப்பூர நீராஜானானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம: ரக்ஷாம் தாரயாமி.



16. मन्त्रपुष्पं .. மந்திர புஷ்பாஞ்சலி

கொடியினிற் செடியிற் றருவிற் குளத்தினிற் பூக்கும் பூவில்
கடி கமழ் வாசப் பூக்கள் கழிசெம்மை நிறமாம் பூக்கள்
விடியுமுன் னெடுத்து வைத்து விமலைமந் திரமும் கூட்டி
அடிவரை முடியிற் றூவி அஞ்சலி செய்தே னாள்வாய்

तां म आवह जातवेदो लक्ष्मीमनपगामिनीम् । यस्यां हिरण्यं प्रभूतं गावो दास्योऽश्वान्विन्देयं पुरुषानहम् ॥
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் மனபகாமினீம் | யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோச்வாந் விந்தேயம் புருஷானஹம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् मन्त्रपुष्पं समर्पयामि ॥
योपां पुष्पं वेद। पुष्पवान् प्रजावान् पशुमान् भवति।
चन्द्रमा वा अपां पुष्पम्। पुष्पवान् प्रजावान् पशुमान् भवति।
य एवं वेद। योपामायतनं वेद। आयतनवान् भवति॥
वेदोक्त मन्त्रपुष्पं समर्पयामि ॥
समस्त मन्त्र, राजोपचार, देवोपचार, भक्त्युपचाराञ्च समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்
யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
வேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலீம் ஸமர்ப்பயாமி

சுவர்ண புஷ்ப தக்ஷிணை
பூஜையின் பலனை யெல்லாம் பூர்ணமாய் அடைவதற்காய்
தேசுறு சுவர்ண புஷ்ப தெக்ஷிணை அளித்தேன் ஏற்றே
ஈசர்கள் யாவ ருக்கும் ஈசியாம் லலிதா தேவீ !
மாசுகள் எல்லாம் போக்கி மாண்பருள் செய்வாய் தாயே !



17. प्रदक्षिणा नमस्कारान् .. ப்ரதக்ஷிண நமஸ்காரம்.

பிரபஞ்ச மெல்லா மாகிப் பின்னுமப் பாலு முள்ள
பிரம்மமே லலிதா தேவீ ! பிரதக்கிண முன்னைச் செய்தேன்
சிரம்முதற் கரத்தாற் காலால் சினைகளால் செய்த பாவம்
திரம்பெறா தழியு மாறு செய்கநீ செகதம் பாளே !

தலையொடு கையும் காலும் தகுமுரம் வயிறு தானும்
நிலமிசைப் படியுமாறு நினைவொடு துதியும் பாடி
மலர்தரு கண்களாலே வடிவினைப் பார்த்தும் எட்டு
நலமுறும் அங்கத் தாலே நளினியே ! வணக்கம் செய்தேன்

யா லக்ஷ்மீ ஸிந்து ஸம்பவா பூதிர்தேனு புரோவஸு: | பத்மாவிஸ்வா வஸுர்தேவி ஸ்தானோ ஜுஷதாம் க்ருஹம் ||

महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमही । तन्नो लक्ष्मीः प्रचोदयात् ॥
மஹாலக்ஷ்ம்யைச்ச வித்மஹே, விஷ்ணு பத்னைய்ஸ்ச தீமஹி, தன்னோ லக்ஷ்மீ: ப்ரச்சோதயாத்.

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् अनन्तकोटि प्रदक्षिणा नमस्कारान् समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: பரிவார தேவதா சமேத ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நம:
அன்ந்தானந்த சதஸஹஸ்ர ஸஹஸ்ரகோடி ப்ரதிக்ஷண நமஸ்காரான் கல்பயாமி நம:



18. அபராத க்ஷமாபணம்.

பூசையும் அறியேன் உன்னைப் புகழ்தலும் அறியேன் உன்பால்
நேசமும் இல்லேன் நிற்கு நேரிலாக் கருணை யுள்ளாய்
ஆசையால் லலிதா தேவீ ! அறிந்தவா செய்தேன் பூஜை
ஈசருக் கெல்லாம் ஈசீ ! ஏற்றருள் செய்வாய் நீயே

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर । यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ | யத்பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா | தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம: | தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||



19. बलिदानम् .. பலி

ॐ ह्रीं सर्वविघ्नकृद्भ्यः सर्वभूतेभ्यो हुं फट् स्वाहा।.
ஸர்வ விக்ன க்ருத்ப்யோ ஓம் ஹ்ரீம் ஹூம் ஃபட் ஸ்வாஹ:



20. ப்ரார்த்தனை.

ஈசரும் தேவர் சித்தர் இருடிகள் முனிவர் சக்தி
மாசரும் யோக ரெல்லாம் மகிமைசேர் லலிதையுன்னைப்
மசைசெய் திஷ்டசித்தி புகழொடு பெற்றா ரென்றால்
ஆசைகொண் டுன்னைப் போற்றும் அடியவர் அடையா துண்டோ !

वन्दिताङ्घ्रियुके देवि सर्वसौभाग्यदायिनि। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि॥

உன் பாதங்களைப் பற்றுகின்றேன். என் பாவங்களைப் போக்கிடுவாய், என் நாவில் உன் நாமம் தினந்தோறும் நான் துதிக்க எந்நாளும் எழுந்தருள்வாய், அகிலேழும் காத்திடுவாய், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி தாயே.

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவசரணௌ மமசரணம் |
காமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |
காமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||

॥ शुभमस्तु ॥. சுபமஸ்து



தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

*****
இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை தான்.
அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
*****

1 comment: