Tuesday, October 1, 2013

வாலை வணக்கம்


" வாலை வணக்கம் " எனும் பாலாம்பிகையின் தமிழ் செய்யுளில் முதல் பகுதியிலேயே, 'ஐம் க்லீம் சௌ' என்ற பாலா பீஜம் உள்ளது, அதன் ந்யாசமும் உள்ளது.
இதயத்தில் "ஐம்" என்றும், புருவ மத்தியில் "க்லீம்" என்றும், சிரஸில் "சௌ" எனவும் குறிப்பிட்டுள்ளதை காண்க.


“ஐந்”தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்

உந்தனித யத்திலுயர

இந்திரவில் சிந்துமொளி இத”கிலீங்” காரமென

இருபுருவ நடுவில்வளர

சந்திரனின் பாலொளிச் “சௌ”மியத் தண்சுடர்

சுந்தரிநின் சிரசில்விரிய

வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு

வாலைதிரி புரையழகியே!


இரண்டாவதில் அம்மையின் யந்திரம் விளக்கப்பட்டுள்ளது.


அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை

ஆதிபரைகோணமொன்றின்

நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக

நங்கைசிவ மங்கைபரையே

மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்

மங்கலை சிவானந்தியே

இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு

வாலைதிரி புரையழகியே!


இந்த வாலை வணக்கப்பாடலின் பல ஸ்ருதி என்னவெனில்,


ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்

அருளொளிருமழகுமுகமும்

தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்

தெளிவொடுன்னுபவர்வாழ்வில்

நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி

ஞானமும்நலமும்வளரும்

ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு

வாலைதிரிபுரையழகியே!

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment