Tuesday, October 15, 2013

சிவ கவசம்


அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,
துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்
தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க
எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் ஞானனந்த
வடிவினராகியும் துகளாகிய அணுதன்மையாகியும்
மலைபோலப் பெரியதாகியும் பூமியுமாகியும்
தகுதியுடன் ஆன்ம கோடிகளைத் தாங்குகின்ற கடவுள் இந்த
உலகத்திற்குத் தீங்கு நேரிடாவண்னம் அருள் செய்து என்னைக் காக்கக்கடவர்
குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்
தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்
நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய
விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க.
ஒலிக்கா நின்ற நீருருவம்கொண்டு பயிர்கள்தோறும் பயன்
கொடுத்து இவ்வுலகில் இருக்கும் உயிர்களெல்லாம் தளர்வடையாவண்ணம்
காப்பவனாகிய கடவுள் வரிசை வரிசையாய் வருகின்ற மேகங்கள் சேர்ந்து பெரிய
மலைகளில் மழை பொழியப் பெருக்கெடுத்தோடும் தண்ணீரில் வீழ்ந்து இறவாத
வண்ணம் எங்களைக் காக்கக் கடவர்.
கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்
அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க
யுகத்தின் இறுதியில் எல்லா உலகத்தையும் தெய்வத்
தன்மையுள்ள தீயினால் சாம்பராகச் செய்து, பார்வதி தேவியார்
தாளம் போட நடனமாடும் பரமசிவன் வழியின் நடுவில் வளைந்து
கொள்ளும் தீ வெப்பத்துடன்
வீசுகின்ற சூரைக் காற்றினால் தடைபடாமல் பெரிய கடல் சூழ்ந்த
இவ்வுலகத்தில் எம்மைக்காக்கக் கடவர்.
தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்
மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க
பரிசுத்தமுள்ள முக்கண்களும் ஒளிவிடாநின்ற பொன்னிறமுள்ள நான்கு
திருமுகங்களும் பாய்கின்ற மான்
மழுவினுடன் சொல்லுகின்ற வரதமும் அபயமும்
பொருந்திய திண்ணிய நான்கு புயங்களும் விளங்குகின்ற
மின்னலை யொத்த திருமேனி ஒளியுமுள்ள தற்புருட மூர்த்தியானவர்
கிழக்கு திசையில் எம்மைக் காக்கக் கடவர்.
மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை
கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை
நான்முகம் முக்கண் நீலநள் இருள் வருணம் கொண்டே
ஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க
மான், மழு, சூலம், கோடரி புனையப்பட்ட உருத்திராக்க மாலை,
வளைவான அங்குசம், தீ, தமருகம் என்னும் இவைகளைத் தாங்கிய
செங்கைகளும், நான்கு திருமுகங்களும், முக்கண்களும்,
நீலம் போலச் செறிந்த இருள் நிறமும் கொண்டு இடபத்திலேறி
வருகின்ற அகோரமூர்த்தியானவர் தெற்குத் திசையில் எம்மைக் காக்கக் கடவர்.
திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க
அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக்
கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்
தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க
தாவுகின்ற மானையும் உருத்திராக்க மாலையினையும் இரண்டு கைகள் தாங்கவும்
ஒளிவிடாநின்ற இரண்டு திருக்கைகள் அபய வரதம் தாங்கவும், அழகு நிறைந்த நான்கு
முகங்களும் மூன்று கண்களும் விளங்குகின்ற சத்தியோசாத மூர்த்தியானவர் மேற்குத்
திசையில் எம்மைக் காக்கக் கடவர்.
கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்
பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்
மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க
உதிரம் தோயும்படியான மழுவாயுதத்தையும்,
மானையும், அபய வரதங்களையும் உருத்திராக்க மாலையினையும் சிவந்த நான்கு
திருக்கைகளிலும் தாங்கிச் சாந்தமுடைய நான்கு திருமுகங்களிலும் மும்மூன்று
திருக்கண்களும் பொன்னிற மேனியுமுள்ள வேதங்களால் புகழத் தக்க வாம தேவ மூர்த்தி
வடக்குத் திசையில் காக்கக் கடவர்.
அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்
திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க
அங்குசம், கபாலம், சூலம், அழகிய வரதாபயங்கள், சங்கம்,
மான், பாசம், உருத்திராக்கம், தமருகம் என்னும் இவைகளைப்
பத்துக் கைகளிலும் ஏந்திச் சந்திரனைப் பொல வெண்மை நிறங்கொண்ட
திருமேனியும் ஐந்து திருமுகங்களும் பெற்றுள்ள எங்கள் ஈசான
மூர்த்தியானவர் பெரிய ஆகாயமெங்கும் காக்கக் கடவர்.
சந்திர மவுலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி
மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்
கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி
அந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும்
சந்திர சேகர மூர்த்தியானவர் எங்கள் தலையினையும்,
ஒப்பற்ற நெற்றிக் கண்ணையுடையவரான பாலலோசன மூர்த்தியானவர் நெற்றியினையும்,
வலிமிக்க பகன் என்னும் சூரியனுடைய கண்ணைப் பறித்த மூர்தியானவர் நீண்ட கண்களையும்,
விசுவநாதரானவர் பூங்கொத்தின் மணத்தை அறியதக்க மூக்கினையும்,
வேதமருளிச் செய்த மூர்த்தியானவர் காதுகளையும், கபாலியென்பவர் செவ்விதாகிய
கபோலத்தையும், பரிசுத்தமுள்ள பஞ்சானன மூர்தியானவர் முகத்தையும் காக்கக் கடவர்.
வளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்
களம் அடு பினிகபான கையினை தரும வாகு
கிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்
வளப்பமுள்ள வேதங்களைப் பயில்கின்ற நாவுள்ள மூர்த்தியானவர்
நாவினையும், நீலகண்ட மூர்த்தியானவர் கழுத்தினையும்,
போர்செய்யத் தக்க பினாகம் என்னும் வில்லேந்திய பினாகபாணியானவர் கைகளையும்,
தர்மவாகு என்பவர் விளங்குகின்ற புயங்களையும், தக்கன் யாகத்தை அழித்த
மூர்த்தியானவர் மார்பினையும், நல்ல ஒளியைத் தருகின்ற மேருவில்ல என்னும்
மூர்த்தியானவர் வயிற்றினையும் காமதகன மூர்த்தியானவர் காக்கக் கடவர்.
இடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்
புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்
படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது
விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க
(காமதகன மூர்த்தி) இடையினையும், கணபதி பிதாவாகிய மூர்த்தியானவர் நாவினையும்,
நம்முடைய ஈசுவரனானவர் புடை பரந்த அரையினையும், குபேரன் தோழனாகிய
மூர்த்தியானவர் ஒப்பில்லாத தொடையினையும், பரந்த சகதீசன் முழங்கால்களையும்,
பாய்கின்ற ரிஷபகேதுவான மூர்த்தி கணைக்காலையும், பொருந்திய விமல மூர்த்தியானவர் செவ்விய
பாதத்தையும் தனித்தனி காக்கக் கடவர்.
வருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்
பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்
செருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்
பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க
வேதங்களில் வழங்கப்படுகின்ற பவன் என்னும் திருப்பெயருள்ள
மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், மகேசுவரன் பின்
இரண்டாஞ் சாமத்தும். ஒப்பிலாத வாமதேவர் மூன்றாம்
சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுத மேந்திய திருக்கரத்தையுடைய
திரியம்பகர் நாலாம் சாமத்தும், மிக்க சரீரவன்மையைப் பிணியால் சோர்வுறாதபடி
இடபவாகன மூர்த்தியுமாகத் தனித்தனி காக்கக் கடவர்.
கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க
தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க
பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க
பங்கமில் நாலாம் யாமம் கவுர்¢தன் பதியே காக்க
இரவின் முதற் சாமத்தில் பிறைசூடிய மூர்த்தி காக்கக் கடவர்.
இரண்டாம் சாமத்தில் கங்காதர மூர்த்தி காக்கக் கடவர்.
மூன்றாம் சாமத்தில் சடாமகுட மூர்த்தியானவர் காக்கக் கடவர்.
கெடுதலில்லாத நாலாஞ்சாமத்தில் உமாபதி காக்கக் கடவர்.
அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்
தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு
வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்
நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க
எல்லாக் காலங்களிலும் கால சங்கார மூர்த்தியும் உட்புறத்தில்
ஒப்பற்ற முதற்காரண கர்த்தாவாகிய சங்கர மூர்தியும்,
வெளிப் புறத்துத் தாணு மூர்த்தியும். நடுப்புறத்துத் தூய பசுபதியும்,
மற்றவிடம் எங்கும் நினைப்பதற்கரிய சதாசிவ முர்த்தியுமாகத்
தனித்தனி காக்கக் கடவர்.
நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி
பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத
அற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண்
தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க
நிற்குமிடத்துப் புவன நாதரும், நடக்குமிடத்து நிர்மல மூர்தியும்,
உடலழகினை ஆதி மூர்த்தியும், இருக்குமிடத்து ஒப்பிலாத அற்புதமூர்த்தியாகிய
வேத வேத்தியனும், நித்திரை செய்யுமிடத்துத் தற்பர சிவனும்,
விழிக்கும் போது சாமள ருத்திரனுமாகத் தனித்தனி காக்கக் கடவர்.
மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்
சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க
கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்
பலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க
மலை முதலாகிய துருக்கங்களில் புராரி காக்கக் கடவர்,
காட்டினில் வில்லேந்திய வேட வடிவ மூர்த்தி யானவர் நீங்காமலிருந்து
காக்கக் கடவர். சர்வசங்காரம் உண்டாகும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள்
எல்லாம் நடுங்கும்படி நடனஞ் செய்கின்ற வீரபத்திரரானவர் முழுவதுங் காக்கக் கடவர்.
பல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா
வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி
கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை
வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க
கழுத்து மயிரினையுடைய குதிரைகள் கட்டிய பல தேர்கள், மத நீர் ஒழுகும் யானைகள்,
தாவிச் செல்லுங் குதிரைகள், வில்லேந்திய பதாதியர் யென்னு மிவைகள்
சேர்ந்து நெருங்கிய அளவில்லாதவர்களாய்ப் போரில்
வெற்றிமாலை யணிந்த கூர்மையான கொலை வேலுள்ள பகைவர்களைப்
பார்வதிபாகன் திருக்கரத்தில் இருக்கும் மழுவாயுதம் துணித்துக் காக்கக் கடவர்.
தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்
பைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து
முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்
பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க
படமாகிய தலைகளையுடைய ஆதிசேடன் தாவுகின்ற நீரையுடைய கடலாகிய
ஆடை உடுத்த பூமியைத் தாங்கிய பல தலைகள் தேய்ந்து மூன்று தலைகளைப் படைத்ததை
யொக்கும் பலமும் வெவ்விய தீயையுங்
கொண்ட சூலமானது பொய்த்தொழிலையுடைய கள்வர்களைப்
போர்புரிந்து அழித்து இனிதாகக் காக்கக் கடவர்.
முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள்
அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்
திடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை
உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய்
திரண்ட கல்லையொத்துக் குவிந்த தோளையுடையவனே!
சிங்கம் ஆதியான மிக்கப் பலமுள்ள கொடிய மிருகங்களையெல்லாம்
பினாகம் என்கிற வில்லானது கொல்லக் கடவது என்றிவ்வாறு எல்லாவற்றையும்
இருதயத்தில் உறுதிகொள்ளத் தியானித்துப் பாவங்களை வெல்லும் சிவ கவசத்தை
அணிந்து கொள்வாயானால்.
பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும்
வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்
தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்
பஞ்சமா பாதகங்கள் நீங்கும், பகைகள் கெட்டுப்போம்,
ஒருவருக்கும் பயங்கொள்ளாத இயமனும் உனக்குப் பயந்து
பணிவிடை செய்குவன், கொடிய வியாதிகளுந் தீர்ந்துவிடும்,
தரித்திரம் தொலையும். ஆதலால் இதுவே நமக்கு ஆதாரம் என்று
நீ அணிந்துகொள்ள வேண்டும்.
திருச்சிற்றம்பலம்

 நன்றி: தமிழ்மறை/முக நூல்

Tuesday, October 1, 2013

சிவராத்திரி விரதம் .. சிவதாண்டவம்


1. சிவராத்திரி விரதத்திற்கும், பூஜைக்கும் சௌரமானம், சாந்திரமானம் என்ற பாகுபாடே தேவையில்லை.

2. மாக க்ருஷ்ண சதுர்தசி என்பது பல ஆண்டுகளாக மாசி மாதத்தில் வந்துள்ளபடியால், எப்பொழுதும் மாசி மாதத்தில் தான் சிவராத்திரி ஏற்படும் என்று மக்களிடையே பொதுவான கருத்து ஏற்பட்டு விட்டது


3. ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி சேத் யா சதுர்தசி |

தத்ராத்ரி: சிவராத்ரிஸ்யாத் ஸா பவேத் உத்தமோத்தமா ||

பொருள்: சூரியன் அஸ்தமன நேரத்தில் சதுர்தசி இருக்கக்கூடிய நாளின் இரவே உத்தமமான சிவராத்திரி என காமிக ஆகமம் கூறுகிறது.


4. ப்ரதோஷ வ்யாபிநி க்ராஹ்யா சிராத்ரி சதுர்தசி |

பொருள்: ப்ரதோஷ காலத்தில் த்ரயோதசியும் - சதுர்தசியும் இணைந்தால் அன்றைய இராத்திரி சிவராத்திரியாக ஏற்கத் தக்கது என்பது காமிக ஆகமம்.


5. சிவராத்திரி தோன்றிய காலத்தை ஹஸ்யாத்ரி கண்டம் என்னும் நூல் கீழ்வருமாறு தெரிவிக்கிறது.

மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம் ஆதிதேவோ மஹாநிஸி |
சிவலிங்க மபூத் தத்ர கோடி ஸூர்ய சமப்ரபம் ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் தேய்பிறை சதுர்தசி நடு இரவில் கோடி சூரிய பிராகசத்துடன் சிவலிங்க வடிவில் இறைவன் தோன்றினார்.


6. சிவராத்திரி விரத பலனைக் கூறியுள்ள ஸ்காந்த மஹா புராணத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அர்த்த ராத்ரயுதா யத்ர மாக க்ருஷ்ண சதுர்தசி |
சிவராத்திரி வ்ரதம் தத்ர வாஜிமேத பலம் லபேத் ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் க்ருஷ்ண சதுர்தசியில் மஹா சிவராத்திரி வ்ரதம் அனுஷ்டித்தால் அஸ்வமேத பலன் கிட்டும் என்பதாகும்.

மாக மாத க்ருஷ்ண சதுர்தசியில் தான் நடுஇரவில் லிங்கோத்பவம் ஏற்பட்டது. பால்குணத்தில் அல்ல. இதுகுறித்து சிவாகமம் கூறுவதைப் பார்ப்போம்.


7. காரணாகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ப்ரபூஜயேத் |

ஸந்தான ஆகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ஸுபூஜனம் |

பொருள்: மேற்கூறிய ஆகம வாக்கியங்களின் பொருள், சூரியனானவர் கும்பராசிக்குள் பிரவேசிப்பதற்குள் சௌரமான மகர மாதமான தை மாதத்தில் மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படலாம் என்பதாகும்.


8. தத்திதௌ சிவராத்ரம் ஸ்யாத் மாக மாசே சதுர்தசி |
மாக பால்குணயோர் மத்யே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசி || காரண ஆகமம்

இங்கு சற்று கவனிக்கவும்:

“மாக பால்குனயோர் மத்யே” என்ற வாக்கியத்திற்கு விளக்கம் கூறும்போது காசியில் வசிக்கும் ப்ரும்மஸ்ரீ கணேஸ்வர திராவிட் சாஸ்திரிகள் பல சிவாகம நூல்களை ஆராய்ந்து கூறுவதாவது:

அமாவாசையில் முடியும் சாந்திரமான மாக மாத க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியிலும், பௌர்ணமியில் முடியும் பால்குண மாத க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியிலும் மஹா சிவராத்திரி ஏற்படலாம்.


9. கோகுலாஷ்டமியிலிருந்து 185 ஆவது நாள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

10. மேலும் திதியானது முன் பின் இருப்பினும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய சதுர்தசி மஹா சிவராத்திரி என்பது சாஸ்திர சம்மதம்.

ஆகவே பக்தர்கள் இனிவரும் காலங்களில் மாசி கிருஷ்ண சதுர்தசி வரும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்தியில் விரதம் இருந்து அனுஷ்டித்து வரும்படி கோருகிறோம்.

சுபம்

சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன.

கடைசியில் சிவனின் வாகனமான நதிகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார்.

அப்போது சிவன், ‘நான் எங்கே போய் ஆடுவது?’ என்று கேட்க, ‘என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்’ என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார்.

சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் ‘த்ரயோதசி’ தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது,

அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்தால் சிவபதத்தையடையலாம்.

சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ள எல்லோரும் சிவபதத்தை யடைவர்.
கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம்.
பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும்.
தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும்.
தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும்.
கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம்.
பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை அடையலாம்.
வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை அடையலாம்.
புஷ்பத்தோடு கூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரிய லோகத்தையடையலாம்.
சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும், இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும், தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.

குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும். இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை அடைதல் கூடும்.

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி.

ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்த பாவங்கள், அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், வாயால் பேசிய பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு, சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.
இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்)

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் "ஹைந்தவ திருவலம்" தகவல்களுக்கு மிக்க நன்றி.

பாலாம்பிகா ஸ்லோகம்


வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

வாலை வணக்கம்


" வாலை வணக்கம் " எனும் பாலாம்பிகையின் தமிழ் செய்யுளில் முதல் பகுதியிலேயே, 'ஐம் க்லீம் சௌ' என்ற பாலா பீஜம் உள்ளது, அதன் ந்யாசமும் உள்ளது.
இதயத்தில் "ஐம்" என்றும், புருவ மத்தியில் "க்லீம்" என்றும், சிரஸில் "சௌ" எனவும் குறிப்பிட்டுள்ளதை காண்க.


“ஐந்”தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்

உந்தனித யத்திலுயர

இந்திரவில் சிந்துமொளி இத”கிலீங்” காரமென

இருபுருவ நடுவில்வளர

சந்திரனின் பாலொளிச் “சௌ”மியத் தண்சுடர்

சுந்தரிநின் சிரசில்விரிய

வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு

வாலைதிரி புரையழகியே!


இரண்டாவதில் அம்மையின் யந்திரம் விளக்கப்பட்டுள்ளது.


அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை

ஆதிபரைகோணமொன்றின்

நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக

நங்கைசிவ மங்கைபரையே

மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்

மங்கலை சிவானந்தியே

இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு

வாலைதிரி புரையழகியே!


இந்த வாலை வணக்கப்பாடலின் பல ஸ்ருதி என்னவெனில்,


ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்

அருளொளிருமழகுமுகமும்

தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்

தெளிவொடுன்னுபவர்வாழ்வில்

நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி

ஞானமும்நலமும்வளரும்

ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு

வாலைதிரிபுரையழகியே!

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

அம்பாளின் மகிமை


உலகனைத்துக்கும் தாயாக இருப்பவள் ஸ்ரீகாமாக்ஷி, அவளுடைய குழந்தைகள் தாம் மக்கள் அனைவரும்.
குழைந்தைகளாகிய நாம் அறியாமையால் மற்ற தேவர்களை வழிபட்டாலும் கூட நாம் அவர்களுக்குச் சொந்தமானவர்களாக ஆக முடியுமா? ஒரு குழந்தை அல்லது பசு மற்றவர் வீட்டில் நுழைந்து விட்டதால் அது அவர்களுடையதாகவோ, அரசுடைமையுடையதாகவோ ஆகுமா? அது தன் தாயைத்தானே சேரும்.
இதுபோல நாம் எந்த நிலையிலும் ஸ்ரீகாமக்ஷியின் குழந்தைகள்தாம் என்று அம்பாளின் பெருமையை ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் இவ்விதம் இந்த ச்லோகத்தில் கூறுகிறார்.

மௌட்யாதஹம் சரணயாமி ஸுராந்தரம் சேத்
கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய பவாமி மாத : |
அக்ஞானத : பரக்ருஹம் ப்ரவிசந் பரஸ்ய
ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பசு: கிமு ராஜகீய : ||


ஸ்ரீ லலிதா பரமேச்வரியாக விளங்கும் இவளது கருணை ஏற்பட்டு விட்டால் நமக்கு எல்லாவிதமான ஸௌக்யங்களும் கிட்டும். அந்த நற்பயனைப் பற்றி வர்ணிக்கவே முடியாது. எந்தவிதமான ஸாதனங்களும் இல்லாமலேயே உலகை வென்றுவிட முடியும். இதற்கு உதாரணம் மன்மதன். இவனுக்கு உடலே கிடையாது. இவனது வில் பூவால் ஆனது. வண்டுகள்தான் நாண்கயிறு. பானங்கள் மொத்தம் ஐந்துதான். படைபலம் கிடையாது. வஸந்தகாலம் ஒன்றுதான் துணைவன். மலயமலையின் காற்று இவனது தேர். இவ்வாறு இருப்பினும் இந்த மன்மதன் உலகனைத்திலும் வெற்றி கொள்கிறான். பரமசிவனையும் மயக்குகிறான்.
இதற்குக் காரணம் அம்பாளின் கடைக்கண் அருள்தான் என்று ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் கூறுகிறார்.

தனு: பௌஷ்பம் மௌர்வி மதுகரமயீ பஞ்ச விசிகா :
வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோதனரத : |
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே ||


பரமேச்வரரின் பெருமையும், சிரஞ்ஜீவித் தன்மையும் கூட அம்பாளின் ஸௌபாக்யத்தினால்தான் ஏற்படுகிறது. தேவர்கள் அமிருதத்தை அருந்தியும் கூட விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் மிகவும் கொடிய விஷமாகிய ஹாலாஹலத்தைப் பருகிக்கூட நீலகண்டரான சிவனுக்குக் காலம் முடிந்தது என்ற பேச்சே இல்லை.
இதுவும் அம்பாளின் தாடங்கத்தின் மகிமைதான் என்று ஸௌந்தர்யலஹரி கூறுகிறது.

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யுஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத : |
கராளம் யத் க்ஷ்வேளம் கபளிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மன்யே தவ ஜநநி தாடங்கமஹிமா ||


அம்பாள் இவ்வாறு தன் பதிக்குப் பெருமையை வாங்கித்தந்தாலும் கூட அந்தச் சிறப்பு தனக்கே வேண்டும் என்று எண்ணுவதுமில்லை. பெருமையால் வரும் பட்டத்தை சிவனுக்கே சூட்டினாலும் பேசாமல் இருக்கிறாள். மன்மதனை இரண்டு பேருக்கும் பொதுவான (அர்த்தநாரீச்வரரின் நெற்றிக் கண்ணில் அம்பாளுக்கும் பாதி உரிமை உண்டானதால்) நெற்றிக்கண்தானே எரித்தது? சிவன் தான் மட்டுமே “ஸ்மரரிபு:” என்று பெயர் பெறுவது எப்படி ஸரியாகும்? இதுவாவது போகட்டும்! இடது கால் தானே உதைத்து யமனை ஜயித்தது? அதில் அம்பாளுக்குத் தானே முழுபங்கும் உள்ளது. இதிலும் புகழை ஈச்வரன் அடைவது பொருந்தவே பொருந்தாது. அதில் அவருக்கு என்ன பங்கு உள்ளது? என்று வேடிக்கையாக அம்பாளின் பாதிவ்ரத்யத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்:

ஸாதாரணே ஸ்மரஜயே நிடிலாக்ஷிஸாத்யே
பாகீ சிவோ பஜது நாம யச: ஸமக்ரம்|
வாமாங்க்ரி மாத்ரகலிதே ஜனனி த்வதீயே
கா வா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: ||


கஷ்டகாலங்களில் ஜகன்மாதாவான அம்பாளைத்தான் நாம் பிரார்த்திக்க வேண்டும். கஷ்டகாலத்திலும் தாய்தான் அழைத்தவுடனே கருணை புரிவாள். நல்ல காலத்தில் நினைக்காமல் கஷ்டத்தில் மட்டும் அழைத்தால் மற்றோர் வஞ்சனையாக எண்ணி விடுவர். தாய் அவ்வாறு இல்லாமல் கருணை புரிவாள் என்கிறார் ஒரு பக்தர்:

ஆபத்ஸூமக்ன: ஸ்மரணம் த்வதீயம் கரோமி துர்கே கருணாணவேசி |
நைதச்சடத்வம் மம பாவயேதா: க்ஷுதாத்ருஷார்த்தா: ஜனனீம் ஸ்மரந்தி||


ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் ' ஹைந்தவ திருவலம் ' தகவல்களுக்கு மிக்க நன்றி.

“லகு ஷோடசோபசார பூஜை”


இந்த “லகு ஷோடசோபசார பூஜை” யானது நமது மானஸ பூஜா விதானத்திற்கு மிகவும் உகந்தது என்று எனது குருநாதர் அருளியிருக்கிறார். அவரின் அனுமதியோடு, உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.


1. த்யானம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம்|
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் த்யாயயாமி நம:


2. ஆவாஹனம்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீர் மனபகாமினீம் |
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமேஷ்வம் புருஷானஹம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆவாஹயாமி நம:


3. ஆசனம்.

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதினீம் |
ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்யரத்னமய ஸிம்ஹாஸனாரோஹணம் கல்பயாமி நம:


4. பாத்யம்.

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா-மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ பஹ்வயே ச்ரியம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் பாத்யம் கல்பயாமி நம:


5. அர்க்யம்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ச்ரியம் லோகே தேவஜுஷ்டா-முதாராம் |
தாம் பத்மினிமீம் சரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷாம்ருதம் கல்பயாமி நம:


6. ஆசமனம்.

ஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வனஸ்பதிஸ்த்வ வ்ருக்ஷோத பில்வ: |
தஸ்யபலானி தபஸா நுதந்து மாயாந்த்ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசமனம் கல்பயாமி நம:


7. ஸ்நானம்.

உபைதுமாம் தேவ ஸஹ: கீர்த்திஸ்ச மணிநா ஸஹ |
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் ருத்திம் ததாது மே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நானாவித அபிஷேக வைபவம் கல்பயாமி நம:


8. அலங்காரம்

க்ஷூத்பிபாஸா மலாம் ஜேஷ்டாமலக்ஷ்மீர் நாஸயாம்யஹம் |
அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்ய மஹோன்னத அலங்கார வைபவம் கல்பயாமி நம:


9. ஆராதனம்.

கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் |
ஈஸ்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷ ஆராதனம் கல்பயாமி நம:

(இங்கு பாராயணம் அல்லது மந்த்ர ஜெபம் அல்லது அர்ச்சனை)


10. ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத்க்ருதம் ஜபம் |
ஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திர ||


11. தூபம்.

மநஸ: காம மா ஹுதிம் வாச: ஸத்யமஸீமஹீ |
பசூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யச: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தூபமாக்ராபயாமி, தூபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:


12. தீபம்.

சுர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தீபம் தர்ஷயாமி தீபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:


13. நைவேத்யம்.

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே | நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம பர்கோ தேவஸ்ய தீமஹீ த்யோயோன: ப்ரசோதயாத்

தேவஸவித: ப்ரஸூவ: ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி,
ப்ராணய ஸ்வாஹ: அபானாய ஸ்வாஹ: உதானாய ஸ்வாஹ: ஸமானாய ஸ்வாஹ: ப்ரம்ஹணே ஸ்வாஹ:

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஷட் ரஸோபேத திவ்ய நைவேத்யம் கல்பயாமி நம:
மத்ய மத்யே அம்ருத பானீயம் கல்பயாமி நம:
அம்ருதா அபிதானமஸி நைவேத்யானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:


14. தாம்பூலம்.

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலனீம் |
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர தாம்பூலம் கல்பயாமி நம:


15. கர்ப்பூரஹாரத்தி.

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலினீம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர நீராஜனம் கல்பயாமி நம:
கர்ப்பூர நீராஜானானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம: ரக்ஷாம் தாரயாமி


16. புஷ்பாஞ்ஜலி

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் மனபகாமினீம் |
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோச்வாந் விந்தேயம் புருஷானஹம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்
யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவத
வேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலீம் ஸமர்ப்பயாமி


17. ப்ரதக்ஷிண நமஸ்காரம்.

யா லக்ஷ்மீ ஸிந்து ஸம்பவா பூதிர்தேனு புரோவஸு: |
பத்மாவிஸ்வா வஸுர்தேவி ஸ்தானோ ஜுஷதாம் க்ருஹம் ||

மஹாலக்ஷ்ம்யைச்ச வித்மஹே, விஷ்ணு பத்னைய்ஸ்ச தீமஹி, தன்னோ லக்ஷ்மீ: ப்ரச்சோதயாத்.

ஐம் க்லீம் ஸௌ: பரிவார தேவதா சமேத ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நம:
அன்ந்தானந்த சதஸஹஸ்ர ஸஹஸ்ரகோடி ப்ரதிக்ஷண நமஸ்காரான் கல்பயாமி நம:


18. அபராத க்ஷமாபணம்.

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ | யத்பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம: | தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||


19. பலி

ஸர்வ விக்ன க்ருத்ப்யோ ஓம் ஹ்ரீம் ஹூம் ஃபட் ஸ்வாஹ:


20. ப்ரார்த்தனை

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவசரணௌ மமசரணம் |
காமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |
காமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||

சுபம்

...

ஒரு வலைப்பூ (http://blaufraustein.wordpress.com) பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

லலிதோபாக்யானம்


ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:
க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்


அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்

லலிதோபாக்யானம் ப்ரம்மாண்டபுராணத்தின் கடைசி 40 அத்தியாயங்களைக் கொண்டது ஆகும்.
ஸ்ரீ திரிபுரசுந்தரியான ஸ்ரீ லலிதா பரமேஷ்வரி தேவியின் சரிதையை ஹயக்ரீவருக்கும் அகத்தியருக்கும் நடக்கும் சம்பாஷணையாக கூறுகிறது. இதில் அம்பிகையின் அவதார மகிமையும், பண்டாஸுரனுடன் நடந்த போரும், பண்டாஸுர வதமும், விவரிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ஸ்ரீநகர வர்ணனையும், அம்பிகையின் மந்திர ஜெப தப முறைகளும், ஸ்ரீ சக்ர வழிபாட்டு முறையும், தீக்ஷை விபரமும் காணக்கிடைக்கின்றன.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவருக்கும், ஸ்ரீ தேவி உபாஸகருக்கும் இது ஒரு மிகவும் இன்றியமையாத நூலாகும்.

இந்த லலிதோபாக்யானத்திலிருந்து பெறப்பட்ட கீழ்க்கண்ட புஷ்பாஞ்ஜலியானது, அம்பிகைக்கு மிகவும் பிரியமானது. அம்பிகையின் திரு வாக்கினாலேயே இந்த ஸ்லொகத்தின் பலன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

இது கட்கமாலாவை ஒத்தது ஆயினும் இதற்கு தீக்ஷை ஒரு கட்டாயமானதன்று. சுத்தமான உடலும், மனமும், குருவருளும், பக்தியும் நிஷ்டையும் இதை பாராயணம் செய்ய போதுமானது.

முதலில் குருவந்தனம் ...

எங்கே, எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு உபதேசித்த குருவை ஸாதகன் நினைவு கூர்தல் வேண்டும். பூஜைக்கு முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை, த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்திற்கு முக்கியம் குருவின் தயை என்று கரண ஆகமத்தில் சொல்லப்பட்டிருப்பதை நினைவு கூர்க.

குருவை துதித்த பின்னரே பகவானை அல்லது பகவதியை துதிக்க வேண்டும். பகவான் அல்லது பகவதி அபசாரங்களுக்கு கூட விமோசனம் உண்டு, ஆயின் குரு அபசாரத்திற்கு எந்த விமோசனமும் இல்லை என்று ஸகலாகம ஸங்க்ரஹ ஸ்லோகம் 1027 மூலம் அறியலாம்.
அதிகாண் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை சொல்லியே பூஜைகளை தொடங்கவேண்டும்

குரூர் ப்ரம்மா, குரூர் விஷ்ணு, குரூர் தேவோ மஹேஷ்வர: |
குரு ஸாக்ஷாத் பரப்ரம்ம, தஸ்மை ஸ்ரீ குருவே நம: ||

குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: ||

சதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம: ||


கணநாத வந்தனம் ...

ஓம்கணானாம்த்வாகணபதிஹூம்ஹவாமஹே
கவிம்கவீனாம்உபமச்ரவஸ்தமம் |
ஜ்யேஷ்டராஜம்பிருஹ்மனாம்பிருஹ்மணஸ்பத
ஆன: ச்ருண்வன்னூதிபி: ஸீதஸாதனம் ||

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:


த்யானம்:

சிந்தூராருணவிக்ரஹாம்த்ரிநயனாம்மாணிக்யமௌலீஸ்புரத்
தாராநாயகசேகராம்ஸ்மிதமுகீம்ஆபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யாம்அளிபூர்ணரத்நசஷகம்ரக்தோத்பலம்பிப்ரதீம்
ஸௌம்யாம்ரத்னகடஸ்தரக்தசரணாம்த்யாயேத்பராமம்பிகாம் ||

அருணாம்கருணாதரங்கிதாக்ஷீம்த்ருதபாசாங்குசபுஷ்பபாணசாபாம் |
அணிமாதிபிரவ்ருதாம்மயூகைரஹமித்யேவவிபாவயேபவானீம் ||

இப்படியாக அம்பிகையின் ரூபத்தை சகல பூஷணங்களோடு நம் மனக்கண் முன் நிற்கவைத்து, அம்பிகையே இவ்வெழியோன் அளிக்கும் தன் சக்திக்கு உட்பட்ட, மற்றும் தனக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு செய்யும் பூஜை தனை பேரன்புடன் பரிபூரணம் என ஏற்றுக்கொண்டு, கருணையுடன் அருள் மழை பொழிவாயாக என்று வேண்டிக்கொண்டு, ஆதி சங்கரர் இயற்றிய மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவ பாராயணம் ஒரு முறை ஒரு சந்த்யயில் செய்து, கீழ் கொடுக்கப்பட்டுள்ள புஷ்பாஞ்சலியை சமர்ப்பித்தால், ஒவ்வொரு நாமாவிற்கும் ஓர் ஆயிரம் செந்தாமரை மலர்களை அம்பிகையின் பாதத்தில் சொரிந்த பலன் கிட்டும்.

இங்கு MULTIPLIER ஆக புஷ்பாஞ்சலியும், பூஜையாக மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவமும் இருக்கின்றன. இப்படி செய்யும்போது, ஒரு ஸ்தவம், பல்லாயிரக் கணாக்கான ஸ்தவாஞ்சலியாகிறது அன்றோ! பூஜா பலனும் அதுபோலவே பல ஆயிரக் கணக்கானதாகும்.
ஆயின் ஒரு விஷயம் கவனிக்க, தவறு செய்யின், அதன் பலனும் அப்படியே பல மடங்காகும் என்பதாம்


ஓம் ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், ஐம், க்லீம், ஸெள: ஓம் நம:
த்ரிபுரஸுந்தரி, ஹ்ருதயதேவி, சிரோதேவி, சிகாதேவி, கவசதேவி, நேத்ரதேவி, அஸ்த்ரதேவி,
காமேச்வரி, பகமாலிநி, நித்யக்லிந்நே, பேருண்டே, வந்ஹிவாஸிநி, மஹாவஜ்ரேஸ்வரி, வித்யேஸ்வரி,
பரசிவதூதி, த்வரிதே, குலஸுந்தரி, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வமங்களே, ஜ்வாலாமாலிநி,
சித்ரே, மஹாநித்யே, பரமேஸ்வரி,
மித்ரேசமயி, ஷஷ்டீசமயி, ஓட்யாணமயி, சர்யாநாதமயி, லோபாமுத்ராமயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி,
தர்மாசார்யமயி, முக்தகேசீஸ்வரமயி, தீபகலாநாதமயி, விஷ்ணுதேவமயி, ப்ராபகரதேவமயி,
தேஜோதேவமயி, மநோஜதேவமயி,
அணிமாஸித்தே, மஹிமாஸித்தே, கரிமாஸித்தே, லகிமாஸித்தே, ஈசித்வஸித்தே, வசித்வஸித்தே,
ப்ராப்திஸித்தே, ப்ராகாம்யஸித்தே, ரஸஸித்தே, மோக்ஷஸித்தே,
ப்ராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டே, மஹாலக்ஷ்மி,
ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வவசங்கரி, ஸர்வோந்மாதிநி,
ஸர்வமஹாங்குசே, ஸர்வகேசரி, ஸர்வபீஜேஸர்வயோநே, ஸர்வத்ரிகண்டே,
த்ரைலோக்யமோஹநசக்ரஸ்வாமிநி, ப்ரகடயோகிநி, பௌத்ததர்சநாங்கி,
காமாகர்ஷிணி, புத்யாகர்ஷிணி, அஹங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி, ஸ்பர்சாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி,
ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி, ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி,
பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீராகர்ஷிணி,
குப்தயோகிநி, ஸர்வாசா பரிபூரக சக்ரஸ்வாமிநி, அநங்ககுஸுமே, அநங்கமேகலே, அநங்கமதனே,
அநங்கமதநாதுரே, அநங்கரேகே, அநங்கவேகிநி, அநங்காங்குசே, அநங்கமாலிநி, குப்ததரயோகிநி,
வைதிகதர்சநாங்கி, ஸர்வஸம்க்ஷோபகாரகசக்ரஸ்வாமினி, பூர்வாம்நாயாதிதேவதே, ஸ்ருஷ்டிரூபே,
ஸ்ர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வாஹ்லாதிநி, ஸர்வஸம்மோஹிநி,
ஸர்வஸ்தம்பிநி, ஸர்வஜ்ரும்பிணி, ஸர்வவசங்கரி, ஸர்வரஞ்ஜனி, ஸர்வோந்மாதினி, ஸர்வார்த்தஸாதிகே,
ஸர்வஸம்பத்ப்ரபூரணி, ஸர்வமந்த்ரமயி, ஸர்வத்வந்த்வக்ஷயங்கரி, ஸம்ப்ரதாயயோகிநி, ஸெளரதர்சநாங்கி,
ஸர்வஸெளபாக்யதாயகசக்ரே, ஸர்வஸித்தி ப்ரேதஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியங்கரி, ஸர்வமங்களாகாரிணி,
ஸர்வகாமப்ரதே, ஸர்வதுக்கவிமோசநி, ஸர்வம்ருத்யுப்ரசமநி, ஸர்வவிக்நநிவாரிணி, ஸர்வாங்கஸுந்தரி,
ஸர்வஸெளபாக்யதாயிநி, குலோத்தீர்ணயோகிநி,ஸர்வார்த்தஸாதகசக்ரே, ஸர்வக்ஞே, ஸர்வசக்தே,
ஸர்வைச்வர்யபலப்ரதே, ஸர்வக்ஞானமயி, ஸர்வவ்யாதிநிவாரணி, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே,
ஸர்வாநந்தமயி, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதப்ரதே,
நிகர்ப்பயோகிநி, வைஷ்ணவதர்சநாங்கி, ஸர்வரக்ஷாகரசக்ரேசி, தக்ஷிணாம்நாயேசி, ஸ்திதிரூபே,
வசிநி, காமேசி, மோதிநி, விமலே, அருணே, ஜயநி, ஸர்வேச்வரி, கௌலிநி, ரஹஸ்யயோகிநி,
சாக்ததர்சநாங்கி, ஸர்வரோகஹரசக்ரேசி, பச்சிமாம்நாயேசி, தநுர்பாணபாசாங்குசதேவதே,
காமேசி, வஜ்ரேசி, பகமாலிநி, அதிரஹஸ்யயோகிநி, சைவதர்சநாங்கி, ஸர்வஸித்திப்ரதசக்ரேசி,
உத்தராம்நாயேசி, ஸம்ஹாரரூபே, சுத்தபரே, பிந்துபீடகதே, மஹாத்ரிபுரஸுந்தரி, பராபராதிரஹஸ்யயோகிநி, சாம்பவதர்சநாங்கி, ஸர்வானந்தமயசக்ரேசி,
த்ரிபுரே, த்ரிபுரேசி, த்ரிபுரஸுந்தரி, த்ரிபுரவாஸிநி, த்ரிபுராஸ்ரீ: த்ரிபுரமாலிநி, த்ரிபுராஸித்தே, த்ரிபுராம்ப,
ஸர்வசக்ரஸ்தே,அநுத்தராம்நாயாக்யஸ்வரூபே, மஹாத்ரிபுரபைரவி, சதுர்விதகுணரூபே, குலே, அகுலே, குலாகுலே, மஹாகௌலிநி, ஸர்வோத்தரே, ஸர்வதர்சநாங்கி, நவாஸநஸ்திதேநவாக்ஷரி,
நவமிதுநாக்ருதே, மஹேசமாதவவிதாத்ரு, மந்மத, ஸ்கந்த, நந்தி, இந்த்ர, மநு, சந்த்ர, குபேராகஸ்த்யே,
துர்வாஸ: க்ரோதபட்டாரகவித்யாத்மிகே, கல்யாணதத்வத்ரயரூபே, சிவ சிவாத்மிகே,
பூர்ணப்ரம்ஹசக்தே-மஹாபரமேச்வரி, மஹா த்ரிபுரஸுந்தரி, தவஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!

சுபம்

“நமந்த்ரம்நோயந்த்ரம்ததபிசநஜானிஸ்துதிமஹோ;
நச்சஆவாஹனம்த்யானம்ததபிச்சநஜானேஸ்துதி-கதா: |
நஜானேமுத்ரிஸ்தேததபிச்சநஜானேவிலபனம்;
பரம்ஜானேமாதாஸ்தவதனுசரணம்க்லேஷஹரணம்” ||

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் ' ஹைந்தவ திருவலம் ' தகவல்களுக்கு மிக்க நன்றி.