Wednesday, September 25, 2013
படைவீட்டு வாரப்பாடல்கள்
ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான்.
கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.
உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்
'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
"சரவணன்' என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்' என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப்பொய்கை' என்பர்.
...
ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் Sasithara Sarma (Swiss) தகவல்களுக்கு மிக்க நன்றி.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Tuesday, September 24, 2013
வேல் பந்தனம்
மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.
இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.
“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’
இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி, முருகனின் அருள் விரைவில் கிட்டும்.
சிதம்பரத்தில், சிவகங்கை குளக்கரை மண்டபத்தில், முருகனின் வேல் பந்தனம் எனும் தமிழ் மந்திர எழுத்துக்கள் கொண்ட மந்திர அமைப்பு வரையப் பட்டுள்ளது. எதிரிகளின் இடத்திற்கு செல்லும்போது, காப்பு எனும் கவசம் அணிந்து செல்வது போர் முறை. அதேபோல் மந்திர காப்பு கவசமாக இந்த வேல் பந்தனம் நம்மைக் காத்து, வெற்றியளிக்கும் என்பது ஐதீகம்.
...
ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
ஷிவகவசம் & சிவ ஆரத்தீ
அமோகஷிவகவசம் .....
ஓம் நமோ பகவதே ஸதாஷிவாய
ஸகலதத்த்வாத்மகாய ஸகலதத்வவிஹாராய ஸகலலோகைககத்ரே ஸகலலோகைகபத்ரே
ஸகலலோககைகஹத்ரே ஸகலலோககைககுரவே ஸகலலோகைகஸாஇணே
ஸகலநிகமகுஹ்யாய ஸகலவரப்ரதாய ஸகலதுரிதார்த்திபஞ்ஜநாய
ஸகலஜகதபயம்காராய ஸகலலோகைகஷங்கராய
ஷஷாங்கஷேகராய ஷாஷ்வத நிஜாபாஸாய நிர்குணாய
நிருபமாய நீரூபாய நிராபாஸாய நிராமாய நிஷ்ப்ரபஞ்ஜாய
நிஷ்கலங்காய நிர்த்வந்த்வாய நிஸ்ஸங்காய நிர்மலாய நிர்கமாய
நித்யரூபவிபவாய நிருபமவிபவாய நிராதாராய
நித்யஷுத்தபரிபூர்ணஸச்சிதானந்தாத்வயாய
பரமஷாந்தப்ரகாஷதேஜோருபாய ஜய ஜய மஹாருத்ர மஹாரௌத்ர
பத்ராவதார து:கதாவதாரண மஹாபைரவ காலபைரவ
கல்பாந்தபைரவ கபாலமாலாதர
கட்வாங்ககங்கசர்மபாஷாங்குஷடமருஷூலசாபபாணகதாஷக்திபிந்திபால
தோமரமுஸலமுத்கரபட்டிஷபரஷுபரிகபுஷுண்டீஷ்தக்னீசக்ர
ஆதிஅ அயுத பீஷணகர ஸஹஸ்ரமுக தம்ஷ்ட்ராகரால
விகடாட்டஹாஸவிஸ்பாரிதப்ரஹ்மாண்டமண்டலநாகேந்த்ரகுண்டல
நாகேந்த்ரஹார நாகேந்த்ரவலய நாகேந்த்ரசர்மதர ம்ருத்யுஞ்ஜய
த்ர்யம்பக த்ரிபுராந்தக விரூபாஅ விஷ்வேஷ்வர விஷ்வருப
வ்ருஷபவாஹன விஷபூஷண விஷ்வதோமுக ஸர்வதோ ரஅ ரஅ மாம்
ஜ்வல ஜ்வல மஹாம்ருத்யுபயமபம்ருத்யுபயம் நாஷய நாஷய
விஷஸர்பபயம் ஷமய ஷமய சோரபயம் மாரய மாரய மம
ஷத்ரூனுச்சாடயோச்சாடய ஷூலேன விதாராய விதாராய கங்கேன
சிந்தி சிந்தி கட்வாங்கேன விபோதய விபோதய முஸலேன நிஷ்பேஷய
நிஷ்பேஷய பாணை ஸம்தாடய ஸம்தாடய ரஆம்ஸி பீஷய பீஷய
பூதாநி வித்ராவய வித்ராவய
கூஷ்மாண்டவேதாலமாரீகணப்ரஹ்மராஅஸாந் ஸம்த்ராஸய ஸம்த்ராஸய
மாமபயம் குரு குரு வித்ரஸ்தம் மாமாஷ்வாஸயாஷ்வாஸய
நரகபயாந்மாமுத்தாராயோத்தாரய ஸம்ஜீவய ஸம்ஜீவய உத்த்ருட்ப்யாம்
மாமாப்யாயயாப்யாயய து:காதுரம் மாமானந்தயானந்தய
ஷ்வகவசேன மாமாச்சாதயாச்சாதய த்ர்யம்பக ஸதாஷிவ
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே .
இதி ஸ்ரீஸ்காந்தே மஹாபுராணே ஏகாஷீதிஸாஹஸ்ரயாம் த்ருதீயே
ப்ரஹ்மோத்தரகண்டே அமோகஷிவகவசம் ஸம்பூர்ணம்.
சிவ ஆரத்தீ
ஸர்வேஷம் பரமேஷம் ஸ்ரீபார்வதீஷம் வந்தேஹம் விஷ்வேஷம் ஸ்ரீபன்னகேஷம் .
ஸ்ரீஸாம்பம் ஷம்பும் ஷிவம் த்ரைலோக்யபூஜ்யம் வந்தேஹம் த்ரைநேத்ரம் ஸ்ரீகம்டமீஷம் .. ௧..
பஸ்மாம்பரதரமீஷம் ஸுரபாரிஜாதம் பில்வார்சிதபதயுகலம் ஸோமம் ஸோமேஷம் .
ஜகதாலயபரிஷோபிததேவம் பரமாத்மம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௨..
கைலாஸப்ரியவாஸம் கருணாகரமீஷம் காத்யாயனீவிலஸிதப்ரியவாமபாகம் .
ப்ரணவார்சிதமாத்மார்சிதம் ஸம்ஸேவிதரூபம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௩..
மன்மதனிஜமததஹனம் தாஷாயனீஷம் நிர்குண குணஸம்பரிதம் கைவல்யபுருஷம் .
பக்தானுக்ரஹவிக்ரஹமானன்தஜைகம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௪..
ஸுரகம்காஸம்ப்லாவிதபாவனனிஜஷிகரம் ஸமபுஷிதஷஷிபிம்பம் ஜடாதரம் தேவம் .
நிரதோஜ்ஜ்வலதாவானலனயனபாலபாகம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௫..
ஷஷிஸுர்யனேத்ரத்வயமாராத்யபுருஷம் ஸுரகின்னரபன்னகமயமீஷம் ஸம்காஷம் .
ஷரவணபவஸம்புஜிதனிஜபாதபத்மம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௬..
ஸ்ரீஷைலபுரவாஸம் ஈஷம் மல்லீஷம் ஸ்ரீகாலஹஸ்தீஷம் ஸ்வர்ணமுகீவாஸம் .
காஞ்சீபுரமீஷம் ஸ்ரீகாமாஷீதேஜம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௭..
த்ரிபுராந்தகமீஷம் அருணாசலேஷம் தஷிணாமுர்திம் குரும் லோகபுஜ்யம் .
சிதம்பரபுரவாஸம் பஞ்சலிங்கமுர்திம் வந்தேஹம் ஷிவஷங்கரமீஷம் தேவேஷம் .. ௮..
ஜ்யோதிர்மயஷுபலிங்கம் ஸங்க்யாத்ரயனாட்யம் த்ரயீவேத்யமாத்யம் பஞ்சானனமீஷம் .
வேதாத்புதகாத்ரம் வேதார்ணவஜனிதம் வேதாக்ரம் விஷ்வாக்ரம் ஸ்ரீவிஷ்வநாதம் .. ௯..
.....
இதில் காணப்படுபவை யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. Fotos are culled from Google Images.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Sri Ramananda Saraswathi Swamigal
...
Humble Salutations to the Lotus Feet of Sri Ramananda Saraswathi Swamigal of Sri Chakra RajaRajeswai Peetam
Humble Salutations to the Lotus Feet of Sri Ramananda Saraswathi Swamigal of Sri Chakra RajaRajeswai Peetam
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Friday, September 20, 2013
Fotos .. Sathuragiri
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
முருக மந்திரம்
ஸ்கந்தர் மூலமந்திரம்: " ஓம் ஸ்ரூம் ஸ்கந்தாய நம: "
சுப்பிரமணியர் மூலமந்திரம்: " ஓம் ஸௌம் ஸுப்ரமணியாய நம: "
குமாரர் மூலமந்திரம்: " ஓம் க்ரூம் குமாராய நம: "
குஹர் மூலமந்திரம்: " ஓம் ஸூம் ஸ்வாமி குஹாய நம: "
சரவணபவர் மூலமந்திரம்: " ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: "
ஷண்முகர் மூலமந்திரம்: " ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நம: "
வள்ளிதேவி பீஜம்: " ஓம் வ்ரீம் மகாவல்யை நம: "
தேவசேனா பீஜம்: " ஓம் ஹ்ரீம் தேவசேனாயை நம: "
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.
சரவண பவ ஓம்
ஸ்கந்த காயத்ரீ மந்திரம்:
ஓம் கார்த்திகேயாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நஸ்கந்த: ப்ரசோதயாத்.
அதி சூட்சும முருக மந்திரம்:
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
" ஓம் ஐம் ரீம் வேல் காக்க காக்க "
இது பாம்பன் சுவாமிகள் அருளிய அதி அற்புதம் வாய்ந்த கவச மந்திரம்.
முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும். பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும்.
ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்.
புத்தியும் நீ ! முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச்
சத்தியும் நீ ! சிவமாய் எங்குமாய் நின்ற சர்வமுகச்
சித்தியும் நீ ! அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
முத்தியும் நீ ! அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே !
-- அகத்தியர்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள்; மெய்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும்
நாமங்கள்; முன்புசெய்த
பழிக்குத் துணைஅவன் பன்னிரு
தோளும்; பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும் செங்
கோடன் மயூரமுமே.
-கந்தரலங்காரம்
... இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Thursday, September 19, 2013
சதுரகிரி தரிசனத்தின் மேன்மை - போகர்
போகர் சித்தர் அவர்கள் சதுரகிரி தரிசனத்தின் மேன்மையை பாடுகிறார்:
அறைகின்றே நேன்பதொரு தோனிப்பாரை
யதன்வழியே யாற்றினுல்லே சென்றாயானால்
நிறைக்கிறேன் கோரக்கர் குண்டாவுண்டு
நிச்சயமா யதனருகே கைதானொன்று
மறைகிறே நின்றதொரு மறைபுப்போட்டு
மைந்தருடன் கோரக்க ரதிலேவாழ்வார்
உரைகின்றே னென்றுசொல்லி உயரசென்றா
ளுத்தமனே பெருந்துரட்டி இளைக்காடாமே .
ஆமென்ற காடகத்தின் நடுவேசென்றா
லங்கைமே சாதிக்காய் தோப்புண்டப்பா
சேமென்ற செம்பாறை நடுவேயுண்டாஞ்
சேரவே சுனைஉண்டு பச்சைவர்ணம்
நாமென்ற குகையொன்று தெற்கேபார்த்து
நாதக்க ளோடுசட்ட முனிஉமுண்டு
ஓமென்ற கோயிலுக்கு வடக்குமாகும்
உற்றதோறு தோப்பிலந் தோப்புக்கானே.
காணப்ப குளுராத தோப்பினுள்ளே
கருநீலச் சுனையொன்று நெல்லியுண்டு
பூணப்பா குகையுண்டு பெண்களுண்டு
புகழாக நாமுமங்கே இருப்போம்பாரு
தோணப்ப சஞ்சீவி மூலிஎல்லாந்
துலையாம லதிருக்குந் தோணாதப்பா
நீணப்பா லிங்கத்து மேற்கேகேளு
நிலையான குகையுண்டு கிழக்கிற்றானே.
தானென்ற சுனையதிலே குகைதானொன்று
தாசித்த கஞ்சாவு மிகுதியுண்டு
தேனென்ற சுந்தரா நந்தருண்டு
திறமான மைந்தர்களு மவேற்கேயுண்டு
கானென்ற பலாவடிர் கருப்பனுண்டு
கண்ணெதிரே யொருபோது சென்றாயானால்
மானென்ற பாறையொன்று குருகேயுண்டு
மகத்தான பாதைஇல் சுனைமூன்றாமே
ஆமடா குகையொன்று உள்ளேய்போகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கர்ற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்ப்பமீந்தார்
உயர்ந்ததொரு தைலமெல்லா மங்கேஈந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
நல்லதொரு தைலமெல்லா மூடினேனே
மூடினேன் கருப்பனயுங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்கேல்லாம்
தேடினே நேன்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து இருக்குமிடஞ் செப்புமென்றேன்
ஆடினே னட்டமா சித்தெல்லா
மவரவரு மங்கிருந்துச் சித்திபெற்றார்
கூடினே நாயெரம்பேர் தங்களோடே
குடிஇருந்த நர்சதுர கிரயுமாச்சே.
ஆச்சுதடா சஞ்சீவி மலயுமாகு
மதில்வீசுங் காற்றுவிறு காதமட்டும்
வாச்சுதடா விதன்தெர்கே சார்வோன்றுண்டு
வல்லசித்த ரதிலுருப்ப ரைந்துபேர்தான்
சாச்சுதடா சிவகிரிக்கு வடமேற்காகச்
சாடான மலையொன்று வுயரவோமெத்த
நீச்சுதடா காடொன்று நிலையாக்காடு
நிசமான தெப்பமொன்று குகயுமொன்றே
ஓன்றான குகைக்குள்ளே சித்தர்நூறு
வுறவாக வதிலிருப்பா ருகந்துபாரு
கன்றான சவரிமலை தன்னிர்கேளு
கறப்பான சித்தர்கள் ஆயிரம் பேருண்டு
நன்றான பாறையொன்று மூலிஉண்டு
நலமான குகை ஒன்று கீழேபோகும்
அன்றான சுனயுமுண்டு நதியும்உண்டு
வதன்கிழக்கே மலையொன்று மறிந்துபாரே
பாரப்பா வம்மளைமேர் பதினைந்துபேர்கள்
பரிவான விலக்குமியைப் பூசித்தோர்கள்
வேறப்பா வவர்களுக்கோ சித்துமெத்த
விரைவாக வதிலிருந்து தெற்கேகேளு
ஆர்பா திரிகூட மலைதானொன்று
வாச்சரியங் திருமூல ரதிலேவாசம்
பேரப்பா பிள்ளைகளு மனேகமுண்டு
பிசகாதே வதின்தேற்கார் ற்றோரங்கலே.
கேளப்பா வுயர்ந்ததோறு மலைதானுண்டு
கெடியான கும்பமது போலேகாணும்
வாளப்பா வம்மலைக்கு மப்பார்கேளு
வல்லவதின் வடபுரமாய்க் கடிகைசென்றால்
நீளப்பா பாறையொன்று பூங்காவொன்று
நிசமாக வதனருகே தெப்பமுண்டு
கேளப்பா சொல்லவில்லை மங்கைதானுங்
குளித்தமஞ்சள் வாசமது வீசுந்தானே.
தானென்ற சுனையொன்றில் மஞ்சநீராத்
தானுரைந்து நிற்குமடா பாருபாரு
மானென்ற கங்கைதனைக் கண்டாயானால்
மருத்தொன்று நினையாமற் பாதம்வீழ்வாய்
ஏனென்று மென்னவித மென்றுங்கேட்ப்பார்
வெளியனுக்கு வகஸ்தியரருள் வேண்டுமென்பாய்
கோனென்ற சித்தர்குகை காட்டுவிப்பார்
குடியாக வாயிரம்பேர் தோணும்பாரே
பாரப்பா வவர்களைநீ கண்டாயானார்
பரிவுடனே பாதமதைப் பணிந்துநிர்ப்பாய்
ஆரப்பா வென்றுசொல்லி உன்னைக்கேட்பா
ரகஸ்தியரை காணவந்தே நென்றுகூறு
சாரப்பா வவர்நூலின் சார்பைஎன்பார்
சார்ந்திருதே நென்நூலை யொன்றுசொல்லி
காரப்பா கனகமென்ற பொருளைக்காட்டிக்
காசினிர் போயெரென்று செப்புவாரே
செப்பவா ரதைவேண்டே நெனமருதுச்
செயமான வகச்தியரைக் காணக்கேளு
ஓப்பியே கற்பமெல்லா முனக்குவீந்து
வுன்னுடைய தேகமதைச் சித்திசெய்து
அப்புவார் மௌனமதை தீட்சைசெய்து
அகஸ்தியற்கண் முன்பாகச் சேர்பாரப்பா
நப்புவார் சந்தோஷ மாகப்பூசி
நலமான சித்திகளு மருளுவாரே
அருளுவார் கவனமுதற் கபயமியாவு
மாச்சரிய மஷ்டசித்து முடநேயீவார்
பொருளதுவாய் முடிந்ததேல்லாங் கேட்டுக்கொள்ளு
போட்டிருக்கு மிடங்கேட்டு வந்துசேரு
தெருளுவார் சித்தறேல்லாங் கூடிவந்து
தேவியுட பூசைசெய்து மௌனங்கேட்ப்பார்
சருளுவா ருன்னையவர் சருவிவந்தார்
சாஷ்டாங்கம் பண்ணியே வந்துசேரே
சேருமென் மூலியது வதிகமுண்டு
ஜெயமான காத்தடிக்க சனனம்போகுஞ்
காருமென்ற கமண்டலத்தின் ஜலமும்போகுங்
கரையோரம் நின்றதொரு மூலிமெத்த
பேருமென்ற தாம்பிரவர்ணிக் கரையோரமெல்லாம்
பெரியோர்கள் கூட்டமடா பேசொணாது
ஏறுமென்ற தாம்பிரவர்ணி எழுகாதஞ்ச்செல்லும்
யோன்சொல்வே நெக்கியங்க லதிகம்பாரே
பாரென்ற தண்ணீரிர் ராம்பிரமுண்டாம்
பரிவான வயசெம்பு போலேகாணும்
வேரென்ற பொதிகையா மத்தியமாகும்
விளைந்ததொரு செப்பதுதா நுலாவிநிர்க்கும்
வாரென்ற வடக்குதிரி கூடமாகும்
வல்லதொரு மேற்க்குமிரு காதமாகும்
தேரேன்ற தென்முகந்தான் கடிகைபத்து
திறமான கிழக்கேழு காதமுன்டே
உண்டான பொதிகைக்கு வடக்கேயப்பா
வுயர்ந்ததொரு மூலவர்க்கச் சித்தர்கூட்டம்
நன்றடா நாகமலைப் பொதிகைமட்டும்
நாலுசகஸ் திரம்பேர்கள் வடவாற்கூட்டம்
அன்றடா வந்சுதலைப் பொதிகைதன்னி
லாயிரம்பே ரவர்பிள்ளை யதிலேயுண்டு
விண்டடா வீசானம் வென்சதுரகிரியல்
விளங்குசித்த ரொருநூறு பேராம்பாரே
பாரப்பா விந்திரனார் திக்குதன்னில்
பகரரிய பச்சையா ரோன்றுன்டப்பா
நேரப்பா வுண்ணாகுக்குச் சித்தருண்டு
நிறைவாகத் தைலத்தார் கிணறோன்றுண்டு
சீரப்பா சாத்தாவின் கோயிலுக்கு மேற்கே
சிறந்ததொரு மலைமேலே மலைதானொன்று
கூறப்பா சுனைமூன்று வெதிரேயுண்டு
குகையொன்று தென்முகமா இருக்கும்கானே
காணப்ப வெண்ணா வலைந்தாருண்டு
கருவான சுனையருகே மூலியுண்டு
சோணப்பா சுனைதனின் மண்டலமேமூழ்க
தோன்றுமடா வப்பவல்லோ மூலிதானும்
வீணப்பா சொல்லவில்லை மூலிதன்னில்
விதமான மூலிதன்னைச் சுனைநீராட்டி
பேணப்பா பழக்காஎ னளவுகொண்டார்
பேச்சுமில்லை மூச்சுமில்லை யடங்குன்தானே
தானென்ற தேகமெல்லாம் விரிந்துபோகுன்
தாப்பாம லூநேல்லாம் மடிந்துபோகும்
வானென்ற பயறுடனே சிருபயருன்காச்சி
வல்லதொரு பஞ்சிஇனால் வாயில்ஊட்ட
நானென்ற தேகமது பச்சையாகும்
நல்லதொரு வடுத்தசுனை ஸ்நானம்பண்ணு
கானென்ற கமண்டளநீர் நதிதானப்பா
காயசித்தி இதனாலே கண்டுக்கொள்ளே
கண்டுபார் ரத்தகர் ராழயுண்டு
கருநீலக் கொடிவேலி யதனருகேயுண்டு
உண்டுபார் குகையதிலே தெற்கேசென்றால்
உயர்ந்ததொரு நம்பிமலை யுண்டுபாரு
சென்றுபார் மலைமேலே நம்பிகோவில்
ஜெயமான கோவிலிக்கு மேற்கேசென்றால்
அன்றுபார் காதமதர் கப்பாலாக
வாச்சரியம் பாறைஎன்று வட்டமாமே
ஆமென்ற பாறைலே குழிதானுண்டு
வதுதனிலே கெந்தகத்தின் தைலமுண்டு
வேனென்ற தைலமதைச் செம்பிற்ரேய்க்க
விளைந்ததடா தங்கமது வயசுபத்தாய்
வாமென்ற தைலத்துக்கு வடுகன்காவல்
வல்லதொரு விருக்ஷமது வதிலேயுண்டு
தாமென்ற குகைஉண்டு சித்தருண்டு
தப்பாமல் லொருநூற்றுப் பத்துபேரே
பேராக வதிளிருவர் பெரியோரப்பா
பிசகாதே நாற்ப்பதுதான் முழமேயாகும்
ஆரான வகஸ்தியற்கு முன்னேயுண்டு
வாஇஎரத்தெந் காதமொரு மூச்சிற்செல்ல
வீரான குளிகையொன்று விருக்குமப்பா
விதமான கமண்டலமுங் கன்னியோடு
வாரான விபிஈஷனந்தான் வைத்ததாகும்
வகையாக நிதானித்தால் தோணும்பாரே
தோணப்பா தங்கக்கொடி தானுண்டு
துலங்கவே யதன்கீழ்மா வலியும்நூறாம்
காணப்பா வின்னமோ ராச்சரியமுண்டு
களங்கமற்ற மைந்தானோ தரியவாங்கு
ஆணப்பா மண்டூக வேந்தாவென்று
வதிலிருப்பான் கொங்கணவன் பிள்ளைகேளு
நீணப்பா வருநூற்றி யைம்பதேழ்பேர்
நிலையாக வதிலிருப்பார் நயந்துகேளே
கேளப்பா மஎந்திரத் தினப்பாலாகக்
கெடியான நதியொன்று மூலிகயுமொன்று
வாளப்பா வங்கிருந்து மேலேசென்றால்
வழியான சோதிப்புல் சோதிவிருக்ஷம்
ஆளப்பா வதன்வழியே சென்றாயான
லாச்சரிய மங்குமொரு குகைதானுண்டு
நீளப்பா கிழக்குமுக மாகக்கானும்
நிலையான கருநெல்லி நிற்குந்தானே
தானென்ற குகைஎர் கொங்கணவர் தாமுங்
தப்பாம லிருப்பர்கமன் டலமுங்க்கொண்டு
வேனென்ற நிருமன்னா மலைதானொன்று
விளங்கியதோர் குகையொன்று மேற்கேபாரு
வானென்ற சங்கிலிச் சித்தரெல்லாம்
வாழ்ந்திருக்குங் குகையதுதான் பிளந்துபாரு
ஊனென்ற பேர்கலுந்தா நேரப்போகா
ஊனமிலாக் கதனிகளு வேயலாமே
ஆமென்ற விக்குகைஇ நடுவேயப்பா
வாச்சரியச் சுனையொன்று வதிகம்பாரு
வேமென்ற சுனையருகே வெண்சாரையுண்டு
வேகுசுருக்குத் தாடகைமா மலையைகேளு
நாமென்ற சுனையொன்று கற்றோட்டியென்று
நல்லசுனைக் கரையோர மால்போனிற்கும்
வாமென்ற தொட்டிஎலே சைத்தந்தன்னில்
மகத்தானவக் கினிநக்ஷத் திரத்திர்பாரே
பாரப்பா தைலமது சிவந்துகாணும்
பதனமாய்ச் சீசாவி லடைத்துக்கொண்டு
காரப்பா காசிடைதா நுல்லேகொண்டால்
கதிரவனா ருள்ளவரை இருக்கும்பாரு
சாரப்பா தேகமது சட்டைதல்லுங்
சஞ்சார வெண்சாரை யங்கேகாணும்
வீரப்பா வதர்கடுக்கக் குகைதானொன்று
விதமான சித்தர்கள் நானூறுபேரே
பேரான மருந்துமா மலைதனிலே யொன்று
பெரிதான சுனையொன்று பாறையொன்று
வாறான வடமுகமாய்க் கைதானொன்று
வல்லசித்த ரன்பதுபே ரதிலேயுண்டு
வீரான தைலம் பாஷானமுண்டு
விதமான மூலிஎல்லா மதிலேயுண்டு
கூறான பொன்மலைதான் மேற்கேயுண்டு
குடிஇருப்பா ராயிரம்பேர் சித்தர்தானே
தானென்ற கற்குழிதான் கிணறுபோலத்
தப்பாம லதிளிருபார் கெவுளிபோல
வானென்ற பிள்ளையார் மலைதானொன்று
வடிந்திருக்குங் கல்மதங்கள் வெள்ளிபோலாம்
கானென்ற வர்மலையில் மலைதானொன்று
கர்கதவன் திறந்திருக்குங் கண்டுபாரு
நானென்ற ராமதேவ ரங்கேஉண்டு
நலமான மண்டலமும் நதிதாநோன்றே
ஒன்றான வைந்துபத்துச் சித்தருண்டு
வுத்தமனே யுதகசன்ஜீவிக் கிணறுமுண்டு
வென்றான வதன்வடக்கே கருமலைதானொன்று
விளங்கியதோர் சித்தர்களுஞ் சதந்தானுண்டு
அன்றான பொதிகைக்கு வாய்விலப்பா
வாச்சரியம் மலைசெம் மலைதானாமே
நன்றான போகளுந்தா னாயிரம்பேர்
நம்முடைய கருவூரார் பிள்ளைதானே
தானென்ற சூடன்மலை யோன்றிலப்பா
தப்பாமற் சித்தர்பத்துப் பேர்தானுண்டு
வேனென்ற விராமேச்வறாரு மருகிற்றானும்
விதமான கந்தமா தனமுமுண்டு
வாவென்ற வசிட்டருட பிள்ளையப்பா
வல்லவர்க லன்பத்தி யொருபேராரும்
ஊனென்ற வுவருப்பு வதிலேயுண்டு
வுத்தமனே நாரதமா மலைஇர்கேலே
கேளப்பா நாரதமா மலைஇற்றானுங்
கெடியான சுனையொன்று வதற்குலப்பா
வாளப்பா குகைவாச லுல்லேசென்றால்
வல்லதொரு வெண்கலத்தார் கதவுமுண்டு
நாளப்பா நாரதரு மதிலேவாழ்வார்
நற்புதல்வ ரறுபத்து நால்வரோடும்
நீளப்பா வெள்ளைஊர் தனிலேகேளு
நிஜமான வுப்புவாடைக் காரமமே
காரமென்ற தென்மேற்கே பிரான்மலைதானொன்று
கனமான சித்தரதிர் பதினாருண்டு
வீரமென்ற வெம்மலைக்கு மேற்கேகேளு
விதமான கருமலைதா னோன்றுண்டப்பா
சாரமென் மலைமீதிர் சென்றாயானார்
சஞ்சீவி மெத்தவுண்டு சொல்லப்போகா
பாரமென்ற குகையொன்று வதற்குளப்பா
பாம்பாட்டி சித்தருமுன் டதனிர்பாரே
பார்க்குமென்ற பிள்ளைகளோ வைந்துபத்து
பரிவான கண்ணியொடு கமண்டலமும்வைத்து
ஏற்க்குமென்ற பாம்பாட்டி சித்தருந்தான்
என்னாளு மதிலிருப்பா ரின்னங்க்கேளு
கார்க்குமென்ற கமண்டளநீர் பாலாராகுங்
கன்னிஎலே குமாரகுந்தி மலைதானொன்று
தீர்க்குமென்ற திரவியங்கள் கோட்டயுண்டு
திறமான சித்தர்களும் பதினேழாமே
ஆமென்ற வதன்மேற்கே மலைதானொன்று
வாச்சரிய மெத்தவடா வரையக்கேளு
நாமென்ற சுனையெனக்கு வடுத்துக்கேளு
நல்லசெரு மலையதுதா நிற்க்குனிர்க்கும்
ஓமென்ற மலையொன்று சுன்னயுமொன்று
வுத்தமனே விக்ரங்க லநேகமுண்டு
வேமென்ற குகையொன்று கண்ணிற்கானும்
விளங்குகின்ற குகைக்குள்ளே சென்றுகானே
காணப்பா வழுகண்ணிச் சித்தருண்டு
கமண்டலநீர் தொடிஎலே வந்துபாயும்
தோணப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு
துலங்கிடவே கன்னியொன்று வவர்பாலுண்டு
பூணப்பா வதன்அடிஈர் தெப்பமுண்டு
புகழான திரவியங்கள் அனேகமுண்டு
... Courtesy: krishna ravi (கிருஷ்ணாலயா)
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Wednesday, September 18, 2013
தக்ஷிணாமூர்த்தி தத்துவம் & 12 மாத தெய்வங்களின் மந்திரங்கள்
தக்ஷிணாமூர்த்தி தத்துவம்
பிரம்மத்தால் உண்டாக்கப்பட்ட சகல அறிவையும் தன்னுள்ளே கொண்டவர் என்பதே தக்ஷிணாமூர்த்தி தத்துவம். அந்த தத்துவமே மூர்த்தி சொரூபமாக தக்ஷிணாமூர்த்தியாக சித்தரிக்கப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்தியாகியவர் முற்றறிவுடையவர் என்பவராவர். அறிவு, தெளிவு, ஞானத்தை அரூபமாயிருந்து உலக உயிர்களுக்கு அருள்பவர் என்று கூறுவர் தக்ஷிணாமூர்த்தியை. குரு தக்ஷிணாமூர்த்தியாகிய அஞ்ஞானத்தைப் போக்குபவர். அகோர வெளிப்பாடலான இவர் அஞ்ஞானமான அகோரத்தை அறுத்தெறிபவராவார். அஞ்ஞானத்தை அறுத்தெறியும் எந்த ஒரு தத்துவமும் குரு தத்துவமாகவே கருதப்படுகிறது, அந்தத் தத்துவமே உருவமாக இருந்து வழி நடத்தும்போது அதுவே ஆச்சார்யம் எனப்படுகிறது.
குரு தக்ஷிணாமூர்த்தி எண்ணிலடங்கா வித்தைகளுக்கு ஆதிகுருவாக கருதப்படுபவர். அந்த ஆதி குரு பிரம்ம சொரூபமாகும், அந்த பிரம்மமே பரமேஷ்டிகுருவாகவும் அவரிடமிருந்து பரமகுருவும் அவரிடமிருந்து குருவும் உற்பத்தியாகின்றனர்.
பரமேஷ்டிகுரு, பரமகுரு, குரு என்ற மூன்று தத்துவமும் தக்ஷிணாமூர்த்தியின் அம்சங்களே. உலக உயிர்களுக்கு ஞானத்தைப் வழங்கும் தக்ஷிணாமூர்த்தியின் பலவித ரூபபேதங்கள் பின்வருவன்வாறு கூறப்படுகிறது.
1. மேதா தக்ஷிணாமூர்த்தி - தெளிவு ஞானத்தை பெறுக.
2.வீணாதர தக்ஷிணாமூர்த்தி - இசைஞானம் பெறுக.
3. சாம்ப தக்ஷிணாமூர்த்தி
4.கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி
5. சம்ஹார தக்ஷிணாமூர்த்தி
6. அபஸ்மர நிவர்த்திக தக்ஷிணாமூர்த்தி - புத்தி தெளிவு உண்டாக, வலிப்பு நோய் நீங்க.
7. ஔடத தக்ஷிணாமூர்த்தி - மரணமில்லா பெருவாழ்வு வாழ.
8. லக்ஷ்மி தக்ஷிணாமூர்த்தி - நித்திய பொலிவு பெற.
9. வீர தக்ஷிணாமூர்த்தி
10. யோக தக்ஷிணாமூர்த்தி - பிறவி குருவை அடைய, யோக பலம் பெறுக.
11.சின்மய தக்ஷிணாமூர்த்தி - மெய்ஞானத்தை அடைய.
12. உபதேச தக்ஷிணாமூர்த்தி - குரு உபதேசம் பெற.
13.ஆன்மவியாக்ஞான தக்ஷிணாமூர்த்தி - ஆன்ம தெளிவு உண்டாக.
14. வரத தக்ஷிணாமூர்த்தி
15. சக்தி தக்ஷிணாமூர்த்தி - நெற்றியில் சந்திரன், ஞான முத்திரை, சக்தியுடன் இருப்பர்.
சொல் பிறந்தால் சொரூபம் பிறக்கும், எந்தச் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்கின்றோமோ, அந்தச் சொல்லே தன்னை நினைப்பவனுக்குச் சகலமுமாய் முக்தியை அருள்கின்றது. இவ்வாறு அநுஷ்டிக்கப்படுவது மந்திரயோகம் எனப்படும்.
எனவே நாமும் குரு தக்ஷிணாமூர்த்தியின் நாமத்தை அனுதினமும் அனுஷ்டித்து ஜீவனை அந்த நாதப்பிரம்மத்தோடு ஒன்றாக்குவோமாக.
" குரவே ஸர்வ லோகானாம் பிஷயே பவ ரோகினாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே நம: "
12 மாத தெய்வங்களின் மந்திரங்கள்
சித்திரை- மது:
சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே
வைகாசி- மாதவர்:
கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே
ஆனி- சுக்ரர்:
த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே
ஆடி- சுசி:
த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்
ஆவணி - நபோ:
சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே
புரட்டாசி- நபஸ்யர்:
பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!
ஐப்பசி- கிஷர்:
ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே
கார்த்திகை - ஊர்ஜர்:
த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே
மார்கழி - ஸஹர்:
வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம்
நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்
தை- ஸஹஸ்யர்:
ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்
மாசி - தபோ:
சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ
பங்குனி - தபஸ்யர்:
தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.
இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி' என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த கிப்பிரயோக ராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.
-
ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் Sasithara Sarma தகவல்களுக்கு மிக்க நன்றி.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
விநாயகர் வணக்கம் & கணபதிக்கு பிரியமான 21
அகதியர் தனது "அகதியர் தீட்சாவிதி" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடன் இவ்வாறு ஆரம்பிக்கிறார்.
"பாதிமதி யணிந்த பரமன் எனக்கிசைந்த
பருதிமதி சுழிமூன்றும் நன்றாய்ச் சொல்வேன்
வேதனைவா ராமல் முதற்தீட்சை மார்க்கம்
விளம்புவேன் மஹா கணபதி காப்பாமே"
போகர் தனது "போகர் ஞான சூத்திரம் 100" என்னும் நூலை விநாயகர் வணக்கத்துடனேயே தொடங்குகிறார்.
"பெருமையுள்ள சதநூலைப் படுவதற்கு
கருவூலந் திருமேனி தும்பிக்கையான்
கணபதி செந்தாமரைத்தாள் காப்பதாமே"
உரோமரிஷியும் தனது "உரோம ரிஷி வைத்தியம் 500" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.
"மூலமு தலாதார முடிவினின்ற
மூர்த்தியெனும் கணேசரது பாதங்காப்பு"
நந்தீசரும் தனது "நந்தீசர் நிகண்டு 300" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.
"வெள்ளியங் கிரியான் தந்த
வேழமா முகனே யெந்தன்
உள்ளினுக் குள்ளாய் நாளும்
உரிவினுக் குருவாய் நின்று"
"ஐஞ்சு கரத்தானின் அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்?"
பத்ரகிரியார்
இவற்றை எல்லாம் விட, பகுத்தறிவுக் கருத்துக்களை முகத்தில் அறைந்தாற் போல பாடியவரும், உருவ வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவருமான சிவவாக்கியாரும் கூட தனது "சிவவாக்கியம்" என்னும் நூலை ஆரம்பிக்கும் போது விநாயகர் வணக்கத்தை முன்வைத்தே பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடதக்கது..
"கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே"
கணபதிக்கு பிரியமான 21
கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர்.
அதிலென்ன சிறப்பு?
ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
மலர்கள் 21:
புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.
அபிஷேகப் பொருட்கள் 21:
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.
இலைகள் 21:
மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு. ஜன்பகப்பூ
நிவேதனப் பொருட்கள் 21:
மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்
விநாயகர் சதுர்த்தியால் கிடைக்கும் 21 பேறு
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி.
வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.
எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை. பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.
ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும், தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் இணைந்து "உ'' எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி பெறலாம்.
விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.
விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.
அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மïரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.
பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
விநாயக சதுர்த்தி வழிபாட்டினால்
1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம்
ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும்.
விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.
அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.
இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.
-
இதில் காணப்படுபவை யாவும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Tuesday, September 17, 2013
எதற்கு சதுரகிரி தரிசனம்?
Why Darshan of Sathuragiri Hills?
On dreams I get advices / instructions from my Protector the Karuppu in the form of Marulali. That have shapened my lifepath and it keeps continuing. In line with it, on an one very fine morning I was told that I would be receiving 'Siva Deekshai' on a remote place that too in the precicnt of the Lord Himself. And also was instructed not to cut hair (head & face) till I receive the secret sacred words.
I myself know, I am not that much blessed to receive 'Siva Deekshai'. Hence I thought that was a wild dream. Though I didn't pay attention to the said dream, I started growing hair because I never disobeyed my Master. My family started diiging at me for not shaving.
The days were passing but no further commands from Master. A month has flown.
One day I had a restless sleep. Some peculiar disturbances. Got up from bed, gone to Puja-Shelf, looked at Master and prayed for sound sleep. And back to bed.
I feel spine-chilling air brushing me. And I am wading through a waist-deep running water on barefoot. On climbing a rock, I see a huge tree and a stone look alike the upper portion of a Lingam. Slanding position like Pisa Tower. Then I look around and spot a Nandhi. I sit behind it and start chanting "Om NamaSivaya". I meditate.
On routine, woke up next morning. I used to dream Lingams but this is peculiar, a slanding Lingam in tilted position. While I was surfing for the slanding Lingam, from the Google Images I got into the slanding Sundara MahaLingam picture.
On analysing, it was confirmed that the slanding MahaLingam is on the Sathuragiri Hills. I was told that unless I catchhold of somebody who is well aware of the Hill & surrounding, it would not be possible to trek alone.
I started scanning for a good soul who can help me to reach the Lingam atop the hill. Ten days vanished in this process. Again I was going through the Sathuragiri vocabulary on the web. A name of the town, Vathirairuppu, has attracted my attention. On vague I could recollect that a relative of my wife hails from this place. On verification with my wife, it has been confirmed that my wife's elder brother's wife is a native of this town.
For past three four years, Kumar, my wife's elder bro's son, is in close contact with us. He is a Civil Engineer, doing construction business and living in Madurai. I spoke to him and requested him whether he can find any reliable source who can help me to visit the Hill. What a plesant shock was that he himself volunteered to accompany me to the Hill since he is a regular goer to the Hill-Temple. He said that he would also invite his family friend who is also a native of Vathirairuppu and a regular visitor to the Hill. To get confirmation from that friend, another five days gone.
The D-Day has been set. Train tickets booked for me to go to Madurai and back to Bangalore. Just three hours before the departure time, my ticket got confirmed. Breathed a sigh of relief. Heavy rain lashed while starting.
At Madurai, at Kumar's home. A Civil Engineer's dream-dwelling. At 7 in the evening, we three left for Vathirairuppu by a cab. Reached the Agraharam around 10 in the night. The Welcome-Sign was the powercut. One-and-half hours in the dark, with no air. A battalion of mosquitoes had their field day. Sitting on a wodden bench and fighting with flying-attackers have rekindled my olden-day memoirs during 1960s at Bikshandarkovil Agraharam. Then fan started grinding and had a semi-sleep.
4.30 am, woke up. Morning routines. Hot cup of coffee by Kumar's friend. Left agraharam at 5.30 with barefoot. Instructed by Kumar, who is now my Guru for Sathuragiri Darshan, that since the Hill itself Lord Shiva and moreover innumerous formless Siddha Maha Purushas would be doing their penance right fron the very bottom of the Hill to the toppest tip of the Hill, it would be advisable not to wear footwear as a mark of respect to them.
Since the mini bus that goes to the Thanniparai, from where we have to climb the Holy Hill, didn't turn up, we took a share-auto at 6. The road, for the name-sake only otherwise it is nothing but mini mounds & ruts. But onething, it is better than Bangalore potholes roads. After a 25-minutes off 4KMs Hurdles, with grinding exercise to all the bones from tip to toe, reached the starting point. The very great solace is the nice early morning unpolluted gentle breeze that gave the spiritual spirits to the soul.
சுந்தர மகாலிங்கமாக, சந்தன மகாலிங்கமாக, சிவபெருமான் அருள் பாலிக்கும் மலை சதுரகிரி.
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஈசன் மகாலிங்கமாக வாசம் புரியும் மலை சதுரகிரி.
சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி.
வேதங்கள் போற்றும் இறைவன் பரமேஸ்வரன், சுந்தரலிங்கம் மகாலிங்கம் இராசலிங்கம் சந்தனலிங்கம் என்னும் நான்கு திருமேனிகளைக் கொண்டு இச்சதுரகிரி மலையில் எழுந்தருளியிருக்கிறார்.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
With the blessings of the Remover of all the obstacles, the Family Deity, the Family Protector, the MahaLingaSwamy and the SiddhaPurushas, and with the lead by Guru KumarJi, started walking. At 6.30 in the morning.
For few yards, the path is easily walkable with barefoot. Only rough sand. Then it is not walking, it is trekking. The pathway is only 4-5 feet wide madeup of steep rocks, sharpedged cutstones, waist-deep small streams, mini waterfalls, mysterious caves, quiet lot of medicinal plants, and what not. Thus to climb 12-13 KMs to cross seven hills.
The added attractions are variety of monkeys (almost of bunches of 20s) and peculiar strange animal noises through thick canopies on either side of the path. On the other route that comes from Theni, one can come across all kinds of wild animals except lion. Except forest rangers, none seems to be taking risks to attempt this route.
Just before the rocky pathway starts, there are shrines for Ganapathi, RajaKali Amman, Petchi Amma & KaruppuSwamy. The Hill-Puranam says that the Petchi Amma & the KaruppuSwamy are installed by the Great Siddhars to guard and to protect the southern side of the Hill.
After 3 hours of trek, reached "Eratai Lingam" shrine. Two Lingams with two Nandhis in a sanctum. The History says that it is Sankara Narayana Lingams. ஆனந்த சுந்தரம் என்னும் வணிகனுக்கும் அவனது துணைவி ஆண்டாள் அம்மாளுக்கும் சங்கரநாராயணராகக் காட்சி தந்து எழுந்தருளும் பொருட்டு அருள் வடிவாய் விளங்கும் மூர்த்தி இரட்டைலிங்கர்.
Exhausted and femished, and so made myself flat on shrine itself.
I was told that before this "Twin Lingams", there are two Lingams in two separate caves called Gorakkar Gugai. On studying my climbing pattern, my GuruJi skipped that.
சலசலத்து பாறையின் ஊடே ஓடும் ஓடை, கானகத்தின் குளிர்ச்சி ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது. சுற்றிலும் நாலாபுறமும் மலைகள்தான். மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள். அம்மலைகளுக்கு நடுவில் பயணம் தொடர்ந்தது. போகிற பாதை வலது பக்கம் திரும்புதல், இடது பக்கம் திரும்புதல், மேடு, பள்ளம் என நீண்டு கொண்டுதான் இருந்ததே தவிர, மலை உச்சி வந்த பாடிலில்லை.
Another One-and-Half hour trek. Reached VanaDurga Amman temple and Pillavadi Karuppu & Kali temple. The soul got energised after worshipping Karuppu. It's widely believed that the Great Siddhars of the SathuraGiri have consecrated these three Guardian-Gods to protect and safeguard the entire Hills & MahaLingam temples from evil forces.
Another an hour of strenuous climbing. Touched the first-step of Sri Sundara MahaLinga Swamy temple. At 12noon. Since the Puja schedule is at 1pm, a complete rest. Normally Guru KumarJi & his friend used to take 3 hours to climb. Because of me, they have altered their rhythm and paced with me for 5.1/2 hours. My humble salutations to them.
At the start of the temple, there is a sanctum for SundaraMurthy Swamigal. After crossing 70-steps, the Sanctum for Sri Sundara MahaLingam Swamy. A serene chill calm atmosphere. The very first glance of the Lingam pierced my heart and an air of bloodcurdling swiped me. What I saw in my dream is picture-perfect in the Sanctum.
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஈசன், சுந்தர மகாலிங்கமாக அருள் பாலிக்கும் அரிய காட்சி. பொதிகை மலையிலிருந்து மூலிகை வளம் காண வந்த அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு, தமது திருமணக் காட்சியை அவருக்குத் தந்தருளிய சுந்தரமகாலிங்க ஸ்வாமிகள் அருள் பாலிக்கும் காட்சி.
பச்சைமால் என்னும் ஆயர்குல முதல்வனுக்காகக் காட்சி தந்து லிங்கவடிவாய் எழுந்தருயிருப்பவர் சுந்தர மகாலிங்கர். எண்ணற்ற மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வந்து துதிக்கும் மகாலிங்க ஸ்வாமிகள்.
ஓம் சுந்தரமகாலிங்க ஸ்வாமிக்கு அரோஹரா! சதுரகிரிமலையானுக்கு அரோகரா!
Had a peaceful Darshan of Sri Sundara MahaLingam Swamy. Emptied the tanked unsharable sorrows & grievances at HIS Lotus Feet and sincerely prayed to HIM to wipe them off.
Ganesha is sitting nearby HIS Father. The Lingam is "Suyambu" - Self projection from the earth but the Ganesha idol might have been installed recently, may be 30/40 years back. When I looked at the eyes of Ganesha, I sensed that the Divinity is missing in the idol. நடப்பதெல்லாம் ஈசன் செயல். ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு? There is no traditional temple or sanctum sanctorum, only a wooden shed covered by walls.
Just behind this temple, there is a huge hall and in its centrepoint the formless Anandavalli Amma is seen. The Legend says that only during Navarathiri period She takes a form.
Though free-lunch is being served at the temple, we had Pongal brought from Vathirairuppu. After a brief rest, walk towards Santhana MahaLingam temple. To climb steep 200-steps. Well-laid. No proper temple, only a four-wall structure for Lingam.
The beautiful Lingam was consecrated by the Divine Mother Uma Devi Herself by sandalwood paste. SHE did severe penance for which Maheswara offered left-portion of HIS body to HER. And thus "Ardhanareeswara" formed. The stream, the Aagaya Gangai, created by HER is still flowing beneath this temple. The water is crystal clear and very sweet.
உமையொரு பாகராக அர்த்த நாரீஸ்வரர் என்னும் பெயரில் எழுந்தருளும் பொருட்டு உமையவளால் சந்தனக்குழம்பால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்ட சந்தன மகாலிங்கர்.
And also there are separate sanctums for 18 Siddhars, Lord Ganesha, Lord Muruga, Navagrahas, Santhana Mahadevi (Sakthi). Thsee might have been installed recently.
There is a cave where the Sage Sattanadha Muni did penance. When I was there, I really felt the Divine Vibrations. Just allowed to sit there for few seconds only.
Had half-an-hour rest near Agaya Gangai.
When enquired about the "Thavasi Parai", the people who live there to maintain the two temples say that it is very dangerous to climb there and being a dense forest all kinds of wild animals are freely moving around. Also they clearly pointing out that the Great Siddhars including Agasthya Maharishi assemble there incognito to perform puja to a small SivaLingam somewhere deep inside a cave. Though these people are there for many years, they have not attempted to climb the area. Also understood from my Guru KumarJi and his friend that they have never gone beyond these two temples though they visit these temples for more than 40years.
At 3 pm, the clouds started gathering. Since there is no electricity and no sunlight, we have to reach the Thanniparai before the night peeps in.
ஏறுவதில் ஒரு வகை சிரமம். இறங்குவதிலும், வேறு வகை சிரமம்.
Climbing down is doubly tough than going up. Highly exhausted. Every 15-20 minutes, I had to sit. To keep me moving, my Guru KumarJi & his friend were always out of my sight. I noticed an unusual happening. Whenever I left completly alone, there was a red dog leading me and a white dog following me. At one stage, I was completely drained and simply stretched myslef on a steep rock. I don't know how long I was lying like that.
Hallucination. ஏதோ காட்சி தேரிவது போன்ற தோற்றம். பிரமை.
A big red dog looks at me, and then looks at the rock next to me. I look that rock. Someone has drawn the SivaLingam on chalkpiece. I look back the dog. That dog looks at a huge rock on the other side of the path. I look that area. I see five 5-lettered Tamil words side by side. I am able to read and understand the first word. But I could not understand the other four words. The beauty is the same 5 letters in the first word are seen in the remaining four words but not in a chronicle order. All are juggling algorithms.
I faintly heard KumarJi's shouting noise. I got up and moved. I was able to keep going only for 10 minutes. I could not move my legs at all. Here came the Saviour. Guru KumarJi friend has asked me to hold his shoulders. Then both started moving. For two-and-half-hours I kept moving by holding his shoulders. Just imagine. He is climbing down the steep rocks with my both the hands on his shoulders. He has just seen me the previous night only. What kind of human gesture he exhibited. No doubt at all, He is none but the God in the human form. Even if I take 'Erazhu Janma' this indebtedness cannot be nullified.
இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு -
இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி.
At last, at 7 pm we touched the plains. Guru KumarJi did a very wonderful thing. He arranged the Hyundai Verna to pick up us at the foothill itself. After spending sometime at Vathirairuppu, we reached Madurai around 10 in the night. Straight to the bed. Kumar put on both airconditioner and fan. Flat. When woke up, it was 9 in the morning. Could not move my legs at all. Somehow reached the downstairs. Kumar's 'SivaLinga' abishekam & puja. Again sleep upto 5 in the evening. Then an affectionate goodbye to Kumar and his family.
Madurai Junction, Train, sleep, Bangalore City. It took 45 minutes to reach Majestic from platform 6. Breeze @ Oasis.
As usual Marulali on the dreams in the night. He asks me,
" Naai padara padu enru solluvanga, aana oru Naai padam nadathi eruke? SivaLingam pakathula paduthundu anjuezhuthe anju thara sonniya? "
Aaha! SivaDeekshai. சிவகடாட்சம்.
சர்வமும் சிவமயம், சகலமும் சிவனருள். நடப்பதெல்லாம் ஈசன் செயல்.
எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் பரமேஸ்வரன் இதில் இல்லாமல் போவானா?
"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே".
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Posts (Atom)