Thursday, October 13, 2022

ஊட்டத்தூர் (ஊற்றத்தூர்) நடராஜர் கோவில்

 

நம்ப முடியாத அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ள நடராஜர் 

கோவில் தமிழ்நாட்டில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத 

ஒன்று.  பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் 

சிலை கொண்டிருக்கும் கோவில்


சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில்திருச்சிக்கு முன்னதாக 

பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீதூரத்தில் உள்ள 

ஊட்டத்தூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் 

திருக்கோயில் ராஜராஜ சோழன் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாகச்

சொல்லப்படும் இந்தக் கோயில் பலப்பல சிறப்புகளைத் தன்னகத்தே 

கொண்டு விளங்குகிறது இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் 

ஆடல்வல்லான் ஆசியாவிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வ வகை 

பஞ்சநதனக் கல்லால் ஆனவர் கொள்ளை அழகுடன் அருட்காட்சி 

தரும் இந்த நடராஜப் பெருமான் அருகிலேயே சிவகாமி அம்மையும் 

தரிசனம் தருகிறார்.  


நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும் 

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக 

உலக பிரசித்தி பெற்றது பல இடங்களில் இந்த நடராஜர் சிலை 

ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும் ஆனால் இங்குள்ள 

நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல.


இந்த சிலை உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல சித்தர்களின் 

நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்குபின் தானாகவே 

உருவாகிய அற்புதமான சிலை.  இந்த சிலை உருவான பாறை 

பஞ்சநதன பாறை’ என்று கூறுகிறார்கள்.  இது மிகவும் அபூர்வமான 

பாறையாகும்.  10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று 

தான் பஞ்சநதன பாறையாக இருக்கும்.  ‘அந்தக நரிமணம்’ என்கிற 

வேர் பலகோடி கற்களில் ஒன்றை பிளக்கும்.  அப்படி பிளக்கக்கூடிய 

கற்கள்தான் பஞ்சநதன பாறை.  ஆதலால் இவர் ‘பஞ்சநதன நடராஜர்

என்று அழைக்கப்படுகிறார்.  சூரியன் காலையில் புறப்படும்போது 

வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள 

நடராஜருக்கு உண்டுஆதலால் நாம் இவரை என்ன நினைத்து 

வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது


இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து 

மீண்டும் இந்திர பதவியை பெற்றார் பதவியை இழந்தவர்கள் இந்த 

கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை 

பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.


இந்த கோவிலில் பலநோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம்

உள்ளது.பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது

ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.  உலகின் உள்ள 

அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து

பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார்.  இதனால் இந்த பிரம்ம தீர்த்த 

நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் 

அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.  

இதற்கு சான்றாக ராஜராஜசோழன் உடல்நலம் இல்லாமல் இருந்த

போது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து

இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் 

நொடியின்றி வாழ்ந்தார் என்கிறது கதை.   

வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது.


இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் 

ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகள்அடியோடு குணமாகிறது.

சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து

கோயிலிலேயே கிடைக்கும் வெட்டிவேரை ஒருகிலோ அளவில் வாங்கி

அதை 48 துண்டுகளாக்கிமாலையாகக் கோத்து நடராஜருக்கு 

அணிவித்துஅர்ச்சனை செய்து வழிபடவேண்டும்பின்னர்அந்த 

மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டுகோயிலில்

அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை (5 லிட்டர் கொள்ளளவு உள்ள

ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும்இந்த தீர்த்தம் எத்தனை 

நாட்களானாலும் கெடவே கெடாது என்பது சிறப்பு வீட்டுக்குச் 

சென்றதும்தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் 

நிரப்பிஅதில் வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டைஎடுத்து 

அந்தத் தீர்த்தத்தில் போட்டு ஊற விடவேண்டும்மறுநாள் காலையில் 

வெட்டிவேர்த் துண்டை எடுத்துவிட்டுஅந்த தீர்த்தத்தைப் 

பருகவேண்டும்.  இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர

சிறுநீரகக்கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதீகம்


இங்குள்ள கொடி மரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 

15 திதிகள் 12 ராசிகள் 9 கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டு அவை 

பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது.  அதன் அடியில் வைத்து 

செய்யப்படும் யாகபூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் 

கிடைக்கும்எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன்

அடைய முடியும்.  இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது ஜாதகமே 

மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக ஷ்ரிஷ்டிக்கப்படுகிறது என்பது 

காலகாலமாக உள்ள நம்பிக்கை


வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை 

நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்இங்கொன்றுமாக சேர்த்து 

இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.  வலைத்தளம்/வலைப்பூ 

பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். )

No comments:

Post a Comment