Monday, July 19, 2021

ஆஷாட குப்த நவராத்திரி . 2021

10-7-2021சனிக்கிழமை தொடக்கம்


இந்த நவராத்திரி சப்த மாதாக்களுக்குள் வராகத் திருமுகத்துடன் 

உள்ள வாராஹி தேவிக்கு ஒர் முக்கியமானஉகந்த வழிபாடு தினங்கள்.

அதிலும் ஐந்தாம் நாள்பஞ்சமி திதிவழிபாடு செய்வது வளங்கள் 

அனைத்தையும் தந்திடும். (ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாய நம:)


விஷ்ணுசக்தி வகையில் ஒன்பதாக நிற்பவள் வாராகி

இவள் வராகமெனும் முகமும்கூர்மையான கோரை பல்நான்கு 

கரங்களையும் உடையவள்பின் இருகரங்களில் தண்டத்தினையும்,

கலப்பையையும் கொண்டவள் இவள் கருப்பு நிற ஆடையுடுத்தி 

சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கு அன்னை.


அம்பிகையின் சேனைத்தலைவியாகிய அம்ச சக்திக்கு வாராகி என்று

பெயர் உண்டு.  சிவபெருமானப்போல அம்பிகையும் முத்தலைச் 

சூலத்தை ஏந்தியிருக்கிருள்அதனால் அவளுக்குச் சூலினி என்ற 

திருநாமம் வந்தது

சூலாத்யாயுத சம்பன்ன .. லலிதா சகஸ்ரநாம நாமாவளி 506

அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு 

அதாவது அம்பிகையின் நால்வகைப்படைகளுக்கும் சேனாதிபதியாக

திகழ்பவள் என்று அர்த்தம்.  இவளைதண்டினி என்றும் சொல்வர்


'பராசக்தி வராகானந்த நாதர் என்பவருக்கு வராகத் திருமுகத்துடன் 

தரிசனம் தந்தமையின் வாராகி என்னும்பெயர் பெறுகிறாள்என்று 

திரிபுரா சித்தாந்தம் என்னும் நூல் கூறுகிறது.


மகா வராகிஆதி வராகிஸ்வப்னவராகிலகு வராகிஉன்மத்த வராகி,

சிம்ஹாருடா வராகிமகிஷாருடா வராகிஅச்வாருடா வராகி என்போர்

எட்டு வராகிகள் (அஷ்டவராகிஎன்று அழைக்கப்படுகிறார்கள்.


சிறந்த வரப்பிரசாதி.


ஸ்ரீ வாராஹிஇராத்திரி தேவி இரவு 8மணிக்கு மேல் இருள் நன்றாக

சூழ்ந்த பின்பு இவளுக்கு பூஜை செய்யவேண்டும்.


நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது 

அது காரியமாகசெயலாக மாற்றும் சக்திதான்ஸ்ரீவாராஹி தேவி 

ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை 

அறிந்து கொள்வதெல்லாம் எம்மாத்திரம்?


வாராகியை தமிழில் முப்பத்திரண்டு செய்யுட்களால் துதிக்கும்

வராகி மாலை’ என்னும் நூல் ஒன்று உண்டு


ஸ்ரீவாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல்உளுந்து சாதம்வடை

தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக்கொண்டு நைவேத்தியம் செய்து 

(பால் சாதம்திலா அன்னம்எள்ளுருண்டை நைவேத்தியமும் 

செய்யலாம்), மல்லிமுல்லைநீலசங்கு புஷ்பம்கருந்துளசிவில்வம்

மருக்கொழுந்துசெந்தாமரைவெண்தாமரை ஆகியபூக்களால் 

அர்ச்சித்து வழிபட்டால்சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.


ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!


11.7.2021 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாள்


தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி

நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:”

இதுஸ்ரீவாராஹியின் மூலமந்திரம்

இதனை செவ்வாய்வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் 

ஒருமித்துமுடிந்தவரைக்கும் சொல்லிவழிபட்டால்வீட்டில் உள்ள 

பிரச்னைகள் காணாது போகும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும் 

பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் 

பொங்க வாழலாம்!


சியாமளா தேவியின் ரதம் - கேயசக்கர ரதம்.

வாராஹி தேவியின் ரதம் - கிரிச்சக்கர ரதம்.

லலிதா சஹஸ்ரநாம 70-ஆவது நாமாவளி.

இதனை "கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதாஎன்று கூறுகிறது

"கிரிஎன்றால் வராஹம் வாராஹியின் பெயர் தண்டநாதா.


"வாராஹி வீர்ய நந்தனா'- 

"வாராஹி உபாசகனுடன் வாதாடாதேஎன்பர்.   ஏன்?

வாராஹி சேனாதிபதி என்பதால் கோபம்உக்ரம்அகங்காரம் 

கொண்டவள் உபாசகனும் அந்த குணம்பெறுகிறான் ஆனால் 

பக்தர்களை சாந்தமுடன்மகிழ்ச்சியுடன் ரட்சிப்பவள் வாராஹி.


தேவி புராணம்தேவி பாகவதம்வாமன புராணம்லலிதா 

உபாக்யானம் போன்றவை வாராஹி தேவியைப் பற்றி விவரிக்கின்றன.


தாருகாசுரன் யுத்தத்தில் காளிக்கும்சும்பாசுரன் யுத்தத்தில் 

சண்டிகைக்கும்பண்டாசுரன் யுத்தத்தில் லலிதைக்கும் 

உறுதுணையாக இருந்தவள் வாராஹிதேவி.


ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்புநீலம் மற்றும் பச்சை புடவையைச்

சார்த்தி வழிபடுவதுகூடுதல் பலனைத் தரும்.


ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!


12-7-2021 திங்கட்கிழமை மூன்றாவது நாள்


வாராஹிக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும்லலிதா உபாக்யானம் 

12 நாமங்கள் முக்கியமானவை என்றுகூறுகிறது.


பஞ்சமிதண்டநாதாஸங்கேதாஸமயேஸ்வரிவாராஹிபோத்ரிணி,

சிவாவார்த்தாளிமஹாஸேனாஆக்ஞாசக்ரேஸ்வரி ஆகியவை.


நாமங்களின் தத்துவங்கள்.


பஞ்சமி

சிருஷ்டிஸ்திதிசம்ஹாரம்திரோதானம்அனுக்ரஹம் எனப்படும் 

ஐந்து கிருத்யங்களில் (படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்

அருளல் எனப்படும் ஐந்தொழில்களில்ஐந்தாவதான அனுக்ரஹ ரூபம்

இதயம் உடையவள் இவள்.

லலிதா ஸஹஸ்ர நாமம் (949) "பஞ்சம்யைஎன்று கூறும்.

க்ஷிப்ர ப்ரஸாதின்யை நமஅந்தர்முக ஸமாராத்யாயை நமஎன்றும் 

கூறுகிறது.  அதாவதுஇதயத் தாமரையில் உள்ளன்புடன் துதித்தால் 

உடனே அருள்பவள் என்று பொருள்.


ஆக்ஞா சக்ரேஸ்வரி

நெற்றியில் இரு புருவ மத்தியில் நாம் சந்தனம்குங்குமம் இடும் இடமே

ஆக்ஞா சக்கரம்.  உடலைத் தொட்டுதீட்சை தருபவர்கள்

 (ஸ்பரிச தீட்சைஇவ்விடத்தைத் தொட்டே அருளுவார்கள்.

அங்கிருக்கும் வாராஹி தேவியின் ஞாபகமாகவே நாம் சந்தனம்

குங்குமமிட்டு தேவியை வணங்குவதாகஅலங்கரிப்பதாக தத்துவம்.


தண்டநாதாமஹாஸேனா ஆகிய பெயர்கள் சேனாதிபத்தியம்வீரியம்

கம்பீரத்தைக் குறிக்கும்.


ஸங்கேதாஸமயேஸ்வரிபோத்ரிணிவார்த்தாளி ஆகிய பெயர்கள் 

சமயோசிதமாகக் காரிய மாற்றத் தூண்டும்சக்தியைக் குறிக்கும்.


சிவா என்பது மங்களம்வெற்றி அடை வதைக் குறிக்கும்.


வாராஹிதேவியின் அருள்பெற இந்த 12 நாமங்களே போதும்.


ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!


13-7-2021 செவ்வாய்கிழமை நான்காவது நாள்


தேவியை ஸ்வப்ன வாராஹிதூம்ர வாராஹிப்ருஹத் வாராஹி

அஸ்த்ர வாராஹி என நான்கு ரூபங்களில் வர்ணிப்பர்.


வாராஹி விஷ்ணு சக்தியானதால் சங்குசக்கரம் உண்டு 

அபயவரத கரங்கள் உண்டு.  பொதுவாக நான்கு கரங்கள்

ஆறு கரங்கள் இருந்தால் கூடுதலாக கேடயம்வாள் இருக்கும்.

எட்டு கரங்கள் என்றால் வில்அம்பும் இருக்கும்.  

உபாசகனின் தீய எண்ணங்களை அழிப்பவள் வாராஹி


காஞ்சி காமாட்சி கோவிலில்

தேவியின் இடப்புறம் கோஷ்ட தேவியாக வாராஹியைக் காணலாம்.


தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் வாராஹிக்கு தனிச்சந்நிதி உண்டு.  

ராஜராஜனுடைய இஷ்டதெய்வம் வாராஹி.  சோழ மன்னர்கள் 

போருக்குப் புறப்படுமுன் வெற்றியடைய வணங்கிய தேவி இவள்.


காசியில் திரிபுர பைரவி படித்துறையில் தரைமட்டத்திற்குக் கீழே 

பாதாள வாராஹி விளங்குகிறாள் பகலில் இவளை தரிசிக்கமுடியாது.


சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோவிலில் 

வாராஹிக்கு சந்நிதி உள்ளது.


திருச்சிதிருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை வாராஹி என்பர்.  

வாராஹி முகம் அல்ல வாராஹி யந்திரம் பிரதிஷ்டை 

செய்திருக்கவேண்டும் அந்த தேவியின் உக்கிரம்தணிக்கவே 

ஆதிசங்கரர் தேவியின் காதில் ஸ்ரீசக்ர தாடங்கமும்எதிரே 

கணபதியையும் பிரதிஷ்டை செய்தார்.  


ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!


14-7-2021 புதன் கிழமை  ஐந்தாம் நாள்


சாந்திரமான கால கணித முறைப்படி ஆஷாட மாதத்தில் வரும் 

பஞ்சமி திதி ஸ்ரீ வாராஹி தேவியை வழிபட உகந்தது.

ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாய நம:

ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களின் மத்தியில் அமையும் 

ஒரு நாள் - நடு நாள் - ஐந்தாம் நாள் - பஞ்சமிதிதி - ஸ்ரீ வாராஹி 

தேவியை வழிபாடு செய்வது வளங்கள் அனைத்தையும் தந்திடும்


வாராஹி மந்திரம்காயத்ரி …

(இவற்றை குருமுகமாக உபதேசம் பெற்றே ஜெபம் செய்யவேண்டும்.)


ஷடாட்சரம் (6):  ஓம் வாராஹ்யை நம:”

த்வாதசாட்சரம் (12):  ஓம் வ்ரூம்வாம் வாராஹி கன்யகாயை நம:”

காயத்ரி

ஸ்யாமளாயை வித்மஹே ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.

இதனைத் தவிர 114 பீஜாட்சரங்கள் கொண்ட மந்திரம் 

‘ரஸ்மி மாலாவில்’ உள்ளது.


அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம் வரும் இரு துதிகள் …


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச 

சாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சு

வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுக 

நாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்

உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா

வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே 

செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.


ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!


15-7-2021 வியாழக்கிழமை ஆறாம் நாள்


ஸ்ரீ வாராஹி தேவி

ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவள்.

அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவள்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள்.

தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு 

அடைய ஏர்கலப்பையும்உலக்கையையும் ஏந்தியவள்.


நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும்

ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீவாராஹி தேவி.


கால கணிதப்படி - வெள்ளைப் பன்றி உருக்கொண்டு இந்த பூவுலகை

அரக்கர்களிடமிருந்து மீட்ட - ஸ்வேதவராஹ கல்பத்தில்வராஹி தேவி

வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.


பில்லிசூனியம்கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு 

களைபவள் என்று ‘ஸ்ரீ வாராஹி மாலா’ போற்றுகின்றது.


மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் 

அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹிதேவி.


ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் 

(ரங்கோலிஇட்டு வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.  கோலம் போடுவது

என்பது அம்பிகையை (லக்ஷ்மியைமனமார வரவேற்கும் வடிவம்.

லக்ஷ்மியின் வருகை தினமும் நிகழ வேண்டும்நித்யம் வீட்டில் வாசம் 

செய்யவேண்டும் என்பதற்காகத்தான்அதிகாலையில் வாசலில் நீர் 

தெளித்து கோலமிடுவது மரபாக இருந்து வருகின்றது.  கோலமிட்ட 

வீட்டில் அம்பிகை கொலுவிருப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு.


எது பண்ணினாலும் பண்ணவில்லை என்றாலும் தயிர் சாதம் 

நைவேத்யம் மிகவும் முக்கியம்.

சக்ரவள்ளி கிழங்குமுள்ளங்கிகடுமதுர பாயாசம்கடுமதுர சுக்கு 

போட்ட கஷாயம் நைவேத்தியம் பண்ணலாம்


ஸ்ரீவாராஹி தாயே... உன் திருவடி சரணம்!


16-7-2021 வெள்ளிக்கிழமை ஏழாம் நாள்


|| ஸ்ரீ வாராஹி கவசம் ||


அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷிஅனுஷ்டுப் சந்த

ஸ்ரீ வாராஹீ தேவதாஒளம் பீஜம்க்லௌம்சக்திஸ்வாஹா 

இதி கீலகம்மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜபே விநியோக:


தியானம்


த்யாத்வேந்த்ர நீலவர்ணாபாம் சந்தர ஸூர்யாக்னி லோசனாம் |

விதிவிஷ்ணு ஹரேந்த்ராதி மாத்ரு பைரவ ஸேவிதாம் ||

ஜ்வலன்மணி கனப்ரோக்த மகுடாமா விலம்பிதாம் |

அஸ்த்ர சஸ்த்ராணி ஸர்வானி தத்தத் கார்யோசிதானிச ||

ஏதை ஸமஸ்தைர்வி விதம் பிப்ரதீம் முசலம் ஹலம் |

பாத்வா ஹிம்ஸ்ரன் ஹி கவசம் புக்திமுக்திபலப்ரதம் ||


கவசம்


1. படேத்ரிஸ்ந்த்யம் ரக்ஷார்த்தம் கோரஸத்ரு நிவ்ருத்திதம்

வார்தாளி மே சிரபாது கோராஹி பாலமுக்தமம்


2. நேத்ரே வராஹவதனா பாதுகர்ணௌ ததாம்ஜனி

க்ராணம் மே ருந்தினீ பாது முகம் மே பாது ஜந்தினீ


3. பாது மே மோஹினீ ஜிஹ்வாம் ஸ்தம்பினீ கண்டமாதராத்

ஸ்கந்தௌ மே பஞ்சமீ பாது புஜௌ மஹிஷவாஹனா


4. ஸிம்ஹாரூடா கரௌ பாது குசௌ க்ருஷ்ண கிருதூஞ்சிதா

நாபிஞ்  சங்கினீ பாது ப்ருஷ்டதே – சே – து – சக்ரிணீ


5. கட்கம் பாது  கட்யாம் மே மேட்ரம் பாது  பேதினி

குதம் மே க்ரோதினீ பாது ஜகனம் ஸ்தம்பினீ ததா


6. சண்டோசண்ட ஸோருயுகம் ஜானுனீ ஸத்ருமர்த்தினீ


7. ஜங்காத்வயம் பத்ரகாளீ மஹாகாளீ  குல்பயோ:

பாதாத் யங்குலி பர்யந்தம் பாதுசோன்மத்த பைரவி


8. ஸர்வாங்கம் மே ஸதா பாது கால ஸங்கர்ஷணீ ததா

யுக்தாயுக்தா ஸ்திதம் நித்யம் ஸர்வ பாபா ப்ரமுச்யதே


9. ஸர்வே ஸமர்த்ய ஸம்யுக்தம் பக்தரக்ஷண தத்பரம்

ஸமஸ்த தேவதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோல்க புரார்த்தனே


10. ஸர்வ ஸத்ரு விநாஸாய ஸூலினா நிர்மதம் புரா

ஸர்வ பக்த ஜனாஸ்ரித்ய ஸர்வ வித்வேஷ ஸம்ஹதி:


11. வராஹீ கவசம் நித்யம் த்ரி ஸந்த்யம் படேந்நர:

ததாவிதம் பூதகணா  ஸ்ப்ருஸம்தி கதாசன


12. அபத ஸத்ரு சோராதி க்ரஹா தோஷாஸ்ச சம்பவா:

மாதா புத்ரம் யதா வத்ஸம் தேனுபக்ஷ்மேவ லோசனம்


13. ததாங்கமேவ வாராஹி ரக்ஷோரக்ஷதி ஸர்வதா


|| இதி ஸ்ரீ வாராஹீ கவச ஸ்தோத்ரம் ||


ஸ்ரீவாராஹி தாயே... உன் திருவடி சரணம்!


17-7-2021 . சனிக்கிழமை .  எட்டாம் நாள்


ஸ்ரீமஹா வராஹி!”


வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும்.  வராஹியை 

வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.


வராஹம் என்றால் என்னபன்றி தானேவராஹ மூர்த்தி பூமியை மீட்க

அவதாரம் ஏற்ற போது அவருக்குஉதவியவள் இந்த வராஹி தான் 

என்ன உதவி தெரியுமா ?

பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது எப்போதும்

அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி ஆனால் வராஹ 

அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன 

மூக்கி நுனியில் (அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை 

உயர்த்திவைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின்இயல்பை 

(இயற்கையைமாற்ற முடியாதல்லவா ஆக அந்த உந்துதலுக்கு

(உயர்த்துதலக்குஉதவியவள் தான்வராஹி 

ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.


சரி அங்கே உந்துதல்தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரிநாம் மக்கள் 

ஏன் அவளை வணங்க வேண்டும்

நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும் என்றால் பணமா,

புகழாஅந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக 

நுட்பமானது ஆம் நம்முடைய குண்டலினியை (உயிர் சக்தியை

உயர்த்துபவளே ‘வராஹி`.


இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம் 

அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை 

கலப்பையும் (ஏர்மற்றும் தண்டம் கலப்பையின் வேலை என்ன 

மண்ணின் அடியில்(ஆழத்தில்இருப்பதை எடுப்பதற்கு தானே

கிழங்கு முதலானவை எடுக்கநிலத்தை சீர் செய்யஅது போல் நாம்

பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி (இப்பிறவி என்று இல்லை 

கர்ம பயன்களும்வினைப்பயன்என கர்ம மணல்பரப்பின் உள்ளே 

ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே 

கலப்பை ஏந்தியகையினாளாய் விளங்குகிறாள் அன்னை.


எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி 

உயர்த்த கோல் (தண்டம்ஏந்தியவள்அன்னை.


ஸ்ரீவாராஹி தாயே... உன் திருவடி சரணம்!


18-7-2021 . ஞாயிற்றுக்கிழமை . ஒன்பதாம் நாள்


அன்னை லலிதையின் பிருஷ்ட (பின்பாகத்தில் இருந்து 

தோன்றியவள்.  ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்ஆக சரி தானே 

அன்னையின் வடிவமும்அமைப்பும் ஆயுதங்களும்.

குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் என்றால் உண்மையாக 

குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய 

எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும்சொன்ன வாக்கு எல்லாம் 

பொன்னாகும் (ஸ்ரீவாராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்), 

எதிரிகள் குறைவார்கள் (அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – 

ஸ்ரீவாராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது).  மேலும் குண்டலினி 

உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ணமுடியாது.  

துர்தேவதைகள் அண்ட முடியாது.  

வாராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.  


வாராஹீ வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை 

சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த 

நிலைக்கு கொண்டு செல்லும்.  வாராஹீ வழிபாட்டுக்கு முக்கியம் 

உள்ள தூய்மையும் சுத்தமும்சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம்

செல்லுதலாகாது.  வாராஹீ தேவ குணமும் மிருக பலமும் 

கொண்டவள்.  இதனால் தான் உக்கிர தெய்வம் என்று 

சொல்லுவார்கள்.  தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.  

ஆனால் வாராஹீ துடியானவள்.  கூப்பிட்டகுரலுக்கு வருவாள்.


வராஹி காயத்திரி

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே  ஹலஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்

மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லைஎப்போதும் 

ஜெபியுங்கள் அன்னை சடுதியில் மாற்றம்தருவாள்அவளை மனதார 

நினைத்தலே அவளை அடையும் உபாயம்.


ஸ்ரீவாராஹி தாயே... உன் திருவடி சரணம்!


19-7-2021 . திங்கட்கிழமை . பத்தாம் நாள்


வாராஹி அம்மனை வழிபடு!


கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||


அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் 

பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள் 

இவளே ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).

ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம் தருவதோடு

எதிர்ப்புகள்எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும் 

அபிச்சாரம் எனப்படும் பில்லிசூனியம்ஏவல்களை நீக்குவாள் 

இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  

தேவையில்லை எதிரிகளின் வாக்கைஅவர்கள் செய்யும்

தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள் வழக்குகளில் வெற்றி தருபவள்.


மந்திர சாஸ்திரபழமொழி : “வாராஹிக்காரனோடு வாதாடாதே


ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் 

போலவே முதன்மையானவள் எனவே இவளை உபாசிப்பவர்கள் 

யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் 

அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் 

நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க 

மாட்டாள் எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் 

எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி 

வழிபட வேண்டும்.


ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு 

தொடர்பான வியாதிகளும்வாதபித்தவியாதிகளும் தீரும்.

ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.


ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி 

உடையவை சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் 

தெரியாதவர்களும்மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 

32 பாடல்களையும் தினம் படித்து வரலாம் அல்லது அதில் உள்ள 

ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள்

தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர 

தேவை நிச்சயம் நிறைவேறும்.


ஸ்ரீ அச்வாரூடாஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள்அரசாங்ககளில் வெற்றி 

தருவதுடன்எத்தகைய வழக்குஎதிர்ப்புகளையும் தீர்க்கும்.


கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||


இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் 

பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை

அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும்பார்த்தும்

படித்தும்உணர்ந்தும்அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு 

வந்தவை.  மேலும் வலைத்தளம்வலைப்பூமுகநூல் பதிவுகள் 

படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு 

அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து இங்கு

ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

அனனவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment