Wednesday, August 7, 2013

பத்திரங்களும், பலாபலன்கள் விபரங்களும்

...

பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய
பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

முல்லை இலை
அறம் வளரும்

கரிசலாங்கண்ணி இலை
இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

வில்வம்
இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

அறுகம்புல்
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

இலந்தை இலை
கல்வியில் மேன்மையை அடையலாம்.

ஊமத்தை இலை
பெருந்தன்மை கைவரப்பெறும்.

வன்னி இலை
பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

நாயுருவி
முகப் பொலிவும், அழகும் கூடும்.

கண்டங்கத்தரி இலை
வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

அரளி இலை
எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

எருக்கம் இலை
கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.

மருதம் இலை
மகப்பேறு கிட்டும்.

விஷ்ணுகிராந்தி இலை
நுண்ணறிவு கைவரப்பெறும்.

மாதுளை இலை
பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

தேவதாரு இலை
எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

மருக்கொழுந்து இலை
இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

அரசம் இலை
உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

ஜாதிமல்லி இலை
சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்

தாழம் இலை
செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

அகத்தி இலை
கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தவனம் ஜகர்ப்பூரஸ இலை
நல்ல கணவன் மனைவி அமையப்பெறும் .

...

இருபத்தொரு பத்திரங்களுரைக்கும் தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்.

மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை

வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி

ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி

எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி

மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி

மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே

ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்

உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.


Courtesy: Sri Krishna Ravi @ krishnalaya