பிரதோஷம் …
சகல நன்மைகளையும் தரும் பிரதோஷ வழிபாட்டின்
பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர்
சிவகணங்களின் முதல்வரும், அம்மை அப்பரின்
வாகனமுமான நந்தி தேவர்.
தஷனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன்
சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும்
சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார்.
ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து.
சிவன் தேய ஆரம்பித்தார்.
இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை
சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி
பிரதோஷ பூஜை செய்தார்.
இதன் பலனாக சிவனும் சாப விமோசனம் பெற்றார்.
நந்திதேவர் செய்த பூஜையானது கொடிமரத்தையும்,
பலிபீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற்
பூஜை செய்து, பின் பிரதஷணமாக தக்ஷிணாமூர்த்தி வரை
சென்று பின் அப்பிரதஷணமாக நந்திக்கு பின்புறமாக
சண்டிகேஸ்வர் வரை சென்று பின் மீண்டும்
பிரதஷணமாக நந்தி தேவர் வரை வந்து நந்திக்கு வலது
புறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும்
செலுத்தி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம்
சௌம் நமோ பகவதே என்ற சக்தித்
தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்தார்.
இந்த மந்திரத்தினை “சிவாலயத்தில் 108 தடவைக்கு
குறையாமல், 48 நாட்கள் தொடர்ந்து, ஜெபித்து வந்தால்
நாம் நமது ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும்
நீங்கும். நமக்கு முன் ஏழு தலைமுறையினர் அதாவது
பித்ருக்கள் செய்த பாபத்தினால் ஏற்பட்ட சாபம், பாவம்
அனைத்தும் நீங்கும்” என்பது நந்தி தேவர் வாக்கு.
நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால்
ஒரு திரிசூலம் அமையும்.
பிரதோஷ சூக்ஷமம்
14 நாட்கள் - வளர்பிறை (தேவர்கள்)
14 நாட்கள் - தேய்பிறை (அசுரர்கள்)
மீதி இருக்கும் 2 நாட்கள் முறையே பௌர்ணமி மற்றும்
அமாவாசை ஆகும். நமது தின உணவு சுழற்சியை
பாற்கடலை கடைவதற்கு ஒப்பிடலாம். அந்த உணவு
சுழற்சியில் (வளர்பிறை மற்றும் தேய்பிறையில்) வரும்
12 நாட்களில் உண்ட உணவிலிருந்து உருவான,
வெளியேற்ற முடியாத நச்சுகளை உடல் சேகரித்துக்
கொள்ளும். அந்த நச்சுகளை உடலில் இருந்து
வெளியேற்ற, 13வது நாளான திரயோதசியில் விரதம்
உபசரிப்பத்தற்கு பெயரே பிரதோஷ விரதம். இந்த விரத
காலத்தில் அனுஷ்டிக்கப்படும் பிரதஷணத்தின் பெயர்
ஸோமஸூக்த பிரதஷணம் எனப்படும்.
இது உடலில் உள்ள நஞ்சை வெளியேற்ற உதவும்.இதுவே ஆலகாலவிஷத்தை சிவபெருமான் உண்டதாக
கூறப்படும் பிரதோஷ சூக்ஷமம்.
அவ்வாறு நஞ்சு வெளியேற்றப்பட்ட உடல், பௌர்ணமி
மற்றும் அமாவாசை அன்று பொலிவு பெறும், இதனால்
நீண்டநாள் நோயின்றி உயிர்வாழ முடியும். இதுவே
பாற்கடலில் அமிர்தம் கிடைத்ததாக சொல்லப்படும்
உவமை. இந்த பிரதோஷ விரதம் உடலை தூய்மை
செய்யும் என்பதே உண்மை.
பிரதோஷத்தின் மகிமை
சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நேரம்தான்
பிரதோஷ வழிபாடாக செயல்படுகிறது.
ஒரு பிரதோஷம் பார்ப்பது 15 நாட்கள் கோவிலுக்குச்
சென்று வந்த பலனைக் கொடுக்கும்.
11 பிரதோஷம் பார்ப்பது ஒரு கும்பாபிஷேஹம் பார்த்த
பலனைக் கொடுக்கும்.
120 பிரதோஷம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி
முதல் 6.30 மணி வரை நடைபெறும். பிரதோஷ விரதம்
கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து
சேரும் என்பது திண்ணம். துன்பங்கள் [ விக்கினங்கள் ]
அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எம்பெருமான்
விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார்.
இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும், அறியாமலும்
செய்யும் பாபமாகிய தோஷங்கள் அனைத்தையும்
போக்கும் வழிபாட்டிற்கு பிரதோஷகால வழிபாடு அதாவது
பிரதோஷம் எனப் பெயர் வழங்குகிறது.
அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோஷமாக
இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும்
ஆற்றல் கொண்டதுதான் பிரதோஷ வழிபாடு.
பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான்
விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார்.
நந்தியெம்பெருமானுக்கு அபிஷேஹ ஆராதனை செய்து
விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய
பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு
நித்திய ஆனந்தம் அளிக்கின்றார்.
பிரதோஷ காலத்தில், விரதமிருந்து வழிபடும்
அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை,
மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம்
போன்றவைகளால் வரும் தோஷங்கள் அனைத்தும்
அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம்
இயம்புகின்றது.
பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக்
காட்டிலும் பல்வகையிலும் மேன்மையுடையதாகும்.
இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம்
மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில்
உள்ளது. அக்காலந்தொட்டு வீட்டுவாசலை அதிகாலையில்
பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவதால் லக்ஷ்மி கடாஷம்
நிறைந்திருக்கும் என பெரியோர் கூறுவர். ஆகவே,
தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி
வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோஷ காலத்தில்.
தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில்
தாங்கி நஞ்சுண்டகண்டனாக அருள்பாலித்து அமிர்தத்தை
அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோஷ காலமாகும்.
இப்பிரதோஷ நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன
அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப்
பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க
இயலாத உண்மையாகும்.
ஸகல பாவங்களையும் போக்கும் ஸோம வார பிரதோஷம்.
உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான
‘ருணவிமோசன’ செவ்வாய்க்கிழமை பிரதோஷம்.
அனைத்து வித அஷ்ட வரங்களையும் அள்ளி வழங்கும்
ஸவும்ய வாஸர புதன் கிழமை பிரதோஷம்
வாழ்வை வளமாக்கும் வியாழக்கிழமை பிரதோஷம்
கடன் தொல்லை தீர்க்கும் ஸுபிக்ஷம் தரும்
வெள்ளிக்கிழமை பிரதோஷம்
ஸகல வினைகளையும் தீர்க்கும், ஸகல பாவங்களையும்
போக்கும், ஸகல ஸௌபாக்யங்களையும் கொடுக்கும்,
சிவபெருமானின் அருட்கடாக்ஷத்தை நமக்கு
பெற்றுத்தரும் சக்திமிக்க சனி மஹா ப்ரதோஷம்.
பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும்
விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே:
புவியுறை, சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெற
ப்ருஹந்நாயகி யுறை தக்ஷிணமேரு தன்னை
கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே.
“இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும்
உன் கழல் தொழுதெழுவேன்
கடலினில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினுள்
அடக்கிய வேதியனே’
ஒரு தென்னங்கன்றை நட்டு பிரதோஷ மகிமையைப்
பற்றிப்பேச ஆரம்பித்தால், அது நீண்டு வளர்ந்து மரமாகி
இளநீர்க் காய்களை உருவாக்கி அந்த இளநீரால்
ஈசனுக்கு அபிஷேகம் செய்யும்போது ஓரளவு முடிக்கலாம்.
- அகத்தியர்
நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்
நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்.
சிவ குருநாதனான நந்தியின் திருவடி வாழ்க.
பரமகுருவான நந்திதேவர் திருவடிகள் சரணம்.
சிவாய நம ஓம், சிவாய சிவ ஓம்,
சிவாய வசி ஓம், சிவ சிவ சிவ ஓம்.
ஓம் சிவய சிவ சிவ சிவ நமசிவாய சிவாய நம
ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்
ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய
ஸிவாய நமஹ
ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய, மஹாதேவாய,
த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாலாக்கினி காலாய
காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய,
ஸர்வேஸ்வராய, ஸதாசிவாய, ஸ்ரீமன் மஹாதேவாய நம:
பிரதோஷ ரிஷப வாகன உலா வரும் அம்மை அப்பன்.
அருள்மிகு அன்னை லலிதா மஹாதிரிபுரசுந்தரி உடனுறை
அருள்மிகு அய்யன் சந்திரமௌலீஸ்வரர்.
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ பிரதோஷ நாளில்
அவசியம் விரதமிருந்து சிவ வழிபாடு செய்யவும்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி
ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்



