Wednesday, August 11, 2021

சிவ தாண்டவம்

காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது.

தலம் – நெல்லையப்பர் கோவில்திருநெல்வேலி.

ஆடிய இடம் – தாமிர சபை 


சந்தியா தாண்டவம் – காத்தல் செய்யும் போது.

தலம் - மீனாட்சி அம்மன் கோவில்மதுரை

ஆடிய இடம் – வெள்ளி அம்பலம் 


சங்கார தாண்டவம் – அழித்தல் செய்யும் போது.

தலம் - மதுரை 


திரிபுர தாண்டவம் – மறைத்தல் செய்யும் போது.

தலம் - குற்றாலநாதர் கோவில்குற்றாலம்.

ஆடிய் இடம் – சித்திர சபை.


ஊர்த்தவ தாண்டவம் – அருளல் செய்யும் போது.

தலம் - ஊர்த்தவதாண்டவர் கோவில்திருவாலங்காடு.

ஆடிய இடம் –இரத்தின சபை.


ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் போது.

தலம் - நடராஜர் கோவில்சிதம்பரம்.

ஆடிய இடம் – கனக சபை.


கௌரி தாண்டவம் – பார்வதிக்காகஆடிய போது.

ஆடிய தலம் - திருப்பத்தூர்.


அஜபா தாண்டவம் - சிவபெருமான் மேல்மூச்சில்கீழ்மூச்சில்

(தவளை போல்அசைந்தாடிய தாண்டவம்.

ஆடிய தலம் - திருவாரூர்.


உன்மத்த தாண்டவம் சிவபெருமான் பித்தனைப் போல் தலை

சுற்றி ஆடுவது.

ஆடிய தலம் - திருநள்ளாறு.


தரங்க தாண்டவம் - கடல் அலைபோல் அசைந்து ஆடுவது.

ஆடிய தலம் - நாகப்பட்டின


குக்குட தாண்டவம் - கோழி போல் ஆடுவது.

ஆடிய தலம் – திருக்காறாயில்


பிருங்க தாண்டவம் வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது.

ஆடிய தலம் திருக்கோளிலி


கமல தாண்டவம் - காற்றில் அசைவது போல் ஆடுவது.

ஆடிய தலம் - திருவாய்மூர்.


ஹம்சபாத தாண்டவம் - அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது.

ஆடிய தலம் - திருமறைக்காடு (வேதாரண்யம்)


…..


மானாடமழுவாடமதியாடபுனலாட

மங்கை சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட

மறை தந்த பிரம்மனாட,

கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட

குஞ்சர முகத்தனாட,

குண்டலம் இரண்டாடதண்டைபுலி உடையாட

குழந்தை முருகேசனாட,

ஞான சம்பந்தரோடு  இந்திரர் பதினெட்டு முனி 

அட்ட பாலகருமாட,

நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட 

நாட்டியப் பெண்களாட,

வினையோட உனை பாடஎனை நாடி இதுவேளை

விருதோடு ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற 

தில்லைவாழ் நடராஜனே.



வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் 

அறிந்தவைகளோடு அங்கொன்றும்இங்கொன்றுமாக சேர்த்து 

இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் 

தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் நன்றி: “கூகுள் படங்கள்

ஆடிப்பூரம் …. வளையல் வழிபாடு


ஆடிப் பூர நாளில் ஸ்ரீஅம்பிகை நிறை வளையாம்பிகையாகப் பூவுலகில்

தரிசனம் தந்தமையாலும்கையில் தேவகங்கணங்களுடன் 

ஸ்ரீஆண்டாள் தோன்றியமையாலும்ஆலயங்களில் இறைவிக்கு 

வளையல் சார்த்தி ஆற்றும்பூஜை அதியற்புத வழிபாடாகக் 

குடும்பத்திற்குப் பல விதங்களிலும் நல்வரங்களை அளிக்கும்.


மோஹினி அவதாரத்தின்போது பெருமாளின் கங்கண வளையல்களில்

அமிர்தம் வழிந்து திவ்யமான சுமங்கலித்வ சக்திகளை 

வளையல்களுக்குப் பெற்றுத் தந்தது.


ஆடிப்பூரம் அன்று அபிஷேக ஆராதனைகளுடன் நாம் அம்பிகையைத் 

தொழும்போதுஆழ்ந்த யோகத்தில் இறைவனைப் 

பூஜித்துக்கொண்டிருக்கின்ற ஈஸ்வரியையே வழிபடுகின்ற

கிடைத்தற்கரிய ஒரு பாக்யமாகஅமைகின்றது 


ஆடிப் பூர நாளில் சென்னை - காவேரிப்பாக்கம்வேலூர் மார்கத்தில்  

உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில்அருளும் ஸ்ரீவாலீஸ்வரர் சமேத 

ஸ்ரீநிறைவளையாம்பிகைக்கு வளையல் சார்த்தி வழிபடுதல் வாழ்வில்

பெறுதற்கரிய பாக்யமாகும்


வளையல்களில் சூரியசந்திர சப்தாமிர்த சக்திகள் உண்டு 

பெண்கள் கைகளில் வளையல்கள் நிறைந்திருந்தால்தான் 

குடும்பத்தில் சாந்தம் பூரிக்கும்.


ஆடிப்பூரம் அன்று அம்பிகையின் அருள் பெருங்கடாட்சம் அருவி

போல் பொழிகின்ற சில திருத்தலங்கள்உண்டு,  அவற்றுள் ஒன்றே 

திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திருபக்தவத்சலேஸ்வரர் ஆலய 

ஸ்ரீதிரிபுரசுந்தரி தாயார் சந்நதியாகும் வருடம் முழுவதும் இங்கு 

அம்பிகைக்குப் பாத பூஜை நிகழ்கின்றது.


ஆடிப்பூரம்பங்குனி உத்திரம்நவராத்திரியில் வருகின்ற நவமி திதி 

ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே அம்பிகைக்கு முழுமையான 

அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன.


ஆடிப்பூரம் அன்று இத்தலத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரிக்கு மஞ்சள் வஸ்திரம்

சார்த்திப்பாதங்களில் பச்சைக் கற்பூரம்வில்வம்சந்தனம் வைத்து 

அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்அபிராமி 

அந்தாதிஸ்ரீ அகஸ்தியர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை போன்ற

வடமொழிமற்றும் தமிழ்மொழி துதிகளை ஓதி அம்பிகைக்குச் 

சார்த்தப்பட்ட புனித வஸ்திரங்களைஆடிவெள்ளிக்கிழமைகளில் 

ஏழைப் பெண்களுக்குத் தானமாக அளிக்க வேண்டும்இயலாதோர் 

இங்கு இயன்ற அளவு அகல் விளக்கு தீபங்களை ஏற்றிடல் வேண்டும்.  

தீப தானமும் இங்கு வழங்குவது புண்ணியத்தை அபரிமிதமாகப் 

பெற்றுத் தரும்.


பலன்கள்

கணவனின் தீய ஒழுக்கம்குழந்தைகளின் மந்தம்இல்லறத்தில் உள்ள 

பல சொல்லொணாத துன்பங்கள்கர்ப்பசிறுநீரகமாத விலக்குக் 

கோளாறுகள் போன்ற இன்னல்களால் வருந்தி வாடுகின்ற இல்லறப்

பெண்களின் இன்னல்கள் தீரும்

அம்பிகையின் பிரசாதத்தை (வில்வம்சந்தனம்பச்சைக் கற்பூரம்), 

மிகக் குறைந்த அளவில் தினமும் உண்டுவருதல் வேண்டும்.


அபூர்வமாகச் சில ஆலயங்களில் ஸ்ரீ ஆடிப் பூரத்தம்மன் …


பெரும்பாலும் ஆடிப்பூரம் அம்மன் வடிவம் பஞ்சலோக விக்ரஹ வடிவில்

இருக்கும்.  மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.  கன்னிப் பெண்களுக்கு 

நல்ல ஒழுக்கமுள்ளநற்குணவான்கள் கணவனாய்க்கிடைத்திட அருள்

புரியும் அம்மன்.


ஆடிப்புர அம்மன் எழுந்தருளி உள்ள சில தலங்கள்:-


திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி 

அருகேயுள்ள திருச்சிற்றேமம் (சிற்றாய்மூர்சித்தாய்மூர்

மாயவரம் - பூந்தோட்டம் அருகே உள்ள அம்பர் பெருந்திருக்கோயில் 

(அம்பல்அம்பர்அம்பர் மாகாளம்)

ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில்

திருப்பனந்தாள்

தில்லையாடி 

நாகப்பட்டினம்


ஆடிப்பூரம் அம்மனைத் தரிசிக்க இயலாதவர்கள்  தனித்து அருளும் 

அம்பிகையை ஆடிப்பூரத்தம்மனாக பாவனைசெய்து வழிபடலாம்.

ஆடிப்பூர  நாளில்  அவதரித்த ஸ்ரீ ஆண்டாளுக்கு  கண்ணாடி 

வளையல்கள் சார்த்திப் பூஜித்திடுதல்.

இந்நாளில் அம்பிகைக்கு  மஞ்சள் பாவாடைமஞ்சள் புடவை  சார்த்தி,

நல்ல குங்குமத்தால்  அர்ச்சித்து வழிபடுதல் வேண்டும்.


ஸ்ரீ ஆடிப் பூரத்தம்மன் வழிபாடு பலன்களில் சில... 


ஸ்ரீ ஆடிப்பூரம் அம்மன் எழுந்தருளியுள்ள தலங்களில் பால் 

காவடியெடுத்துநடந்து வந்து சமர்ப்பித்துஅபிஷேக ஆராதனை 

செய்துபால் தானம் செய்திட முறையான வாகன ப்ராப்தி.


ஸ்ரீ ஆடிப்பூரம் அம்மன் எழுந்தருளியுள்ள தலங்களில் கணவன் மனைவி

இருவரும்பலாப்பழத்திற்கு மஞ்சள்குங்குமமிட்டுத்தலையில் சுமந்து

பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்துபலாப்பழத்தை நைவேத்யம் 

செய்துஏழைகளுக்குத் தேன் கலந்த பலாப்பழத்தை தானமாக 

அளித்திடில் பிணக்குகள் நீங்கிஇல்லற வாழ்வு இனிமைபெறும்.


இந்நாளில் பலா சமித்துகள் (குச்சிகள்கொண்டு எளிய ஹோமம் 

செய்வதால் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்ற மனைவி 

கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழும் இனிய வாழ்க்கையைப் 

பெற்றிடலாம்.


ஆடிப்பூரம் வழிபாடுகள் 

  

ஸ்ரீகோமதி அம்மன் ஆலயத்தில் வேர்க்கடலைப் பாயசம் நைவேத்யம் 

செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்


இந்நாளில் கருட தரிசனம் நிறைந்த பாக்யங்களைத் தரும்

ஸ்ரீ கருட பகவான் பெருமாளை ஸ்ரீ சங்கர நாராயணனாக தரிசித்த 

திருநாளிது.


இந்நாளில் ஸ்ரீ ஆண்டாளுக்கு பூக்கள்மாலைகள்துளஸியால் நன்கு 

அலங்கரித்துக் கொண்டை கட்டிச்சேவிக்க வேண்டும் 

இப்புஷ்பங்களை ஏழைக் கன்னிப் பெண்களுக்குப் பிரசாதமாக 

அளித்திட அவர்களுக்கு நற்பாக்கியங்கள் கிட்டுவதோடு

அளிப்பவருடைய இல்லத்திலும் திருமண தோஷங்கள் நிவர்த்தியாகும்


முத்தோஷ நிவர்த்திக்கு ஆடிப்பூரம் அன்று வளையல் சார்த்தி வழிபாடு 

மற்றும் தானமுறைகள்


பொதுவாக வாழ்க்கையில் தொடுதோஷம்காழ்ப்பு தோஷம்தீட்டு 

தோஷம் போன்ற தோஷங்கள் யாவும் பெண்கள் அணிகின்ற 

வளையல்களில் சேரும் ஆகவே வளையல்களை அடிக்கடி முறைப்படி

சுத்தம் செய்தல் வேண்டும் இந்த மூன்று தோஷங்களும் நம்மைத் 

தாக்காமல் இருக்க பல வழிகள் உண்டு.  அவ்வாறு இருந்தாலும்

ஆடிப்பூரத்தன்றுகண்ணாடி வளையல்களை வாங்கி சுடுநீரில் சிறிது 

நேரம் வைத்து ஆறிய பிறகு அந்த வளையல்களை எடுத்து சுடாத 

மஞ்சள் நீரில் ஊற வைத்துப் பிறகு  21, 51, 32 போன்ற கணக்குகளில்

சேர்த்து அம்மன் கைகளில் கட்டியோதொங்க வைத்தோ ஆடிப்பூரம் 

அன்று  தானமாய் அளித்திடில் மேற்கூறிய முத்தோஷம் விலகும்.   

குடும்பம் நலம் அடையும்.  அன்று தேங்காய் சாதத்துடன் மிளகு கலந்த 

உருளைக் கிழங்கு சிப்ஸ் தானம் நலம் தரும்

பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று 

வலிசோர்விலிருந்து நிவாரணம் கிட்டும்.


எப்போதும் வட்டமான பொருளுக்குத் தெய்வீக சக்திகளை ஈர்த்து 

விருத்தி செய்து வளம் கூட்டும் சக்திகள் உண்டு 

வட்டமான வளைவான பொருட்களுக்கு ஆகர்ஷண சக்திகள் அதிகம்.

இதனால்தாம் பூஜ்யம் எனப்படும் 0 (zero)  பெரும் சக்தி வாய்ந்த 

எண்ணாக விளங்குகிறது.


ஆனால் உலகிலேயே மிகவு சக்தி வாய்ந்த வடிவம் எது தெரியுமா?

பாண லிங்க வடிவமே (ஆவுடை இல்லாத லிங்க அமைப்புமிகவும் 

ஆத்ம சக்திஆன்ம சக்தி பொதிந்த வடிவாகும் இதனை அம்பிகை 

உலகிற்கு உணர்த்திய தலங்களுல் ஒன்றே திருப்பாற்கடல்ஆகும்

சுப மங்கள சக்திகளைச் சமுதாயத்தில் விருத்தி செய்வதில் 

வளையல்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன.


திருப்பாற்கடல் ஸ்ரீவளையல்நாயகி ஆலய மகிமை.


உத்தம பக்தனாகிய வாலி தன் குடும்ப சகிதம் வழிபட்ட மிகவும் 

தொன்மையான ஆலயம்.

அக்காலத்தில் ஸ்ரீகரம்கரபுரம் என்றே பெயர் பெற்றிருந்தது

இங்கு ஸ்ரீகரபுரீஸ்வரர் ஆலயமும்ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயமும் உண்டு.

கரவானக் கற்பம் என்ற யுகக் காலத்தில் அம்பிகை இங்கு மானுட 

வடிவில் லக்ஷ்மிசரஸ்வதியுடன் இணைந்து நவராத்திரி விரதம் பூண்டு

இல்லறப் பெண்களுக்கு வளையல்களைத் தானமாக அளித்துத் தவம்

புரிந்த தலம்.  

இறைவன் தாமே வளையல்களையும்கங்கணங்களையும் 

அளித்தமையால் ஸ்ரீமங்களேஸ்வரர்ஸ்ரீ கங்கணநாதர் என்ற 

நாமங்களைப் பூண்டு அருள்பாலித்தவர் ஆவார்.

அம்பிகைக்கு வளையல் இட்டு வழிபட வேண்டிய மற்றொரு 

அற்புதத் தலம்


ஸ்ரீ ஸ்வர்ண கங்கணாம்பிகை - 

ஸ்ரீ நிறை வளையாம்பிகையின் மற்றொரு திவ்ய நாமம்.


ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரம் தோறும் இங்கு அம்பிகைக்கு 

1008 வளையல்கள் சார்த்திஜாதிமதகுலஇன பேதமின்றி ஏழைச் 

சுமங்கலிகளுக்கு வளையல்களைத் தானமாக அளித்து வருவதால் 

பெண் பிள்ளைகள்நல் ஒழுக்கத்துடன் வாழ்ந்துபுனிதமான 

கற்புக்கரசியாய் நல்ல சாந்தமான திருமண வாழ்வைப் பெற்றிட 

அருள் சுரக்கும் தலமிது.

கன்னிப் பெண்கள் தக்கப் பருவத்தில் பூப்படைந்து கற்புக் காப்பு 

சக்திகளைப் பெற்றிடவும் உதவும் தலம்.

பெண் பிள்ளைகளைப் பற்றிக் கவலையுடன் வாழும் தாய்மார்களின் 

கவலைகள் தணியவும்துணை புரியும்மகத்தான அம்பிகைத் தலம்.


வெள்ளிசெவ்வாய் மற்றும் பண்டிகை தினங்களில் கை நிறைய 

வளையல்களை அணிந்து பூஜித்து ஆலயதரிசனம் செய்வதாலும்

ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்தலாலும்வளையல்களில் காப்பு 

ரட்சா சக்திகள் பதிந்து அவ்வப்போது துணையாகக் காத்து நின்று 

வந்து உதவுகின்றது.


இல்லறப் பெண்கள் கைகளில் வளையல்கள் இல்லாது இருத்தல்

வலதுஇடது கையில் ஒரு தங்க வளையலை மட்டும் 

அணிந்திருப்பதைத்  தவிர்க்கவேண்டும்.

நன்கு கலகலவென்று ஒலிக்குமாறு கை நிறைய கண்ணாடி 

வளையல்கள் அல்லது இயற்கையான ரப்பர்வளையல்களை 

அணிந்திருத்தல் வேண்டும்பிளாஸ்டிக்கைக் கண்டிப்பாகத் 

தவிர்க்கவேண்டும்.

கண்ணாடி வளையல்கள் இயற்கையாக வருவதாலும்வட்டப் 

பொருட்களில் திரளும் இயற்கை ஒலிகள் நல்ல ஆன்மீகச் 

சக்திகளைப் பெற்று இருப்பதாலும்கண்ணாடி வளையல்களை 

அணிவதே சிறப்பானது.

கண்ணாடி வளையல் அணிந்திருக்கையில் மிகவும் கவனமாக 

இருக்க வேண்டும் என்ற இயற்கையான கவனமும்ஞாபக சக்தியும் 

மனதில் நன்கு பதிவதற்காகவே கண்ணாடி வளையல்கள் அணிதல் 

தெய்வீக நியதியாகவே அமைந்துள்ளது

வளையல்களுக்கு தோஷங்களை ஈர்த்துநற்சக்திகளை நிரவும் 

தன்மைகள் உண்டு.  தோஷங்கள் நிறையச் சேர்ந்தால் தாங்க 

இயலாது வளையல் தானாகவே உடையும்


ஆண்டிற்கு 100, 2002 என வளையல்கள் நிறைய வாங்கி வைத்து

மாதப் பூர நாளில் அம்பிகைக்குச் சார்த்திப் பிரசாதமாக 

வளையல்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டுஅவ்வப்போது 

அணிந்து வருதல் வேண்டும்.


பால் விருட்சங்கள்புன்னை போன்ற மரங்களிலும் பூர நட்சத்திர 

நாளில் வளையல்களைக் காணிக்கையாகக்கட்டுதலால் கற்பு ரட்சா 

சக்திகள் பெருகும்.


ஆடிப்பூரம் வழிபாட்டிற்குரிய மேலும் சில திருத்தலங்கள்


வடக்கு முகமாகச் செல்கின்ற புண்ணிய நதிகளிலும்

நதிக்கரைகளிலும் , இத்தகைய நதிக்கரைகளில் உள்ள

கோயில்களிலும் ஆடிப்பூரம் அம்மனை எண்ணி தியானித்து 

வழிபடுவது சிறப்புடையதாகும் இவ்வகையில் சிலதலங்கள்,


மதுரையருகில் திருப்பூவனம் (வைகை வடக்கு முகமாக)

திருமழபாடி - காவிரி வடக்கு முகமாக (கொள்ளிடம் - பொன்னி)

திருமாந்துறை - திருச்சியருகில் - ஸ்ரீ காயத்ரீ நதி வடக்கு முகம்

வடரங்கம்

ஆச்சாள் புரத்துக்குக் கிழக்கு பகுதி

திருமங்கலக்குடி

கஞ்சனூர்

திருக்கோடிக்கா

குற்றாலம்

மாயவரம்

சுவேதாரண்யம் - 

குறுக்குக் காவேரி - வடக்கு முக நதி ஓட்டம்


பூர நட்சத்திர / ஆடிப்பூரத் துதிகள் …


காயத்ரி மந்திரம்


ஓஃம் மஹா தேவ்யைச வித்மஹே

பார்வத்யைச தீமஹி

தந்நோ பூர்வ பல்குனீஸ்வர்யை ப்ரசோதயாத்


ஓஃம் அரியம்நாய வித்மஹே

பசுதேஹாய தீமஹி

தன்னோ பூர்வபல்குனீ ப்ரசோதயாத்


சித்தர்கள் அருளிய தீந்தமிழ் மந்திரம் (ஆஹீதி அளித்திட)


மஞ்சள் தன் மஹிமை பூண்டு

மஹேசனின் அம்சம் கொண்டு

மஞ்சுள வல்லி தந்த 

மகத்தான பூரத்தம்மன்

மங்களம் தந்திடுவாளே

மஞ்சள் நல் ஆகுதியாலே


வேறு சில பூரத் துதிகள்


ஆடிப் பூரத்தாள் அகிலாண்ட தேவியிவள்

பாடிப் பணிந்திடவே பரஞ்ஜோதி காணிடவே

மூடிப் பழவினைகள் ஓடிப் பறந்து விடும்

கூடிப் பரமோதிக் கோலத்தால் காதிடுவோம்

கோடிச் சுடரொளியாய்க் கொத்தாகத் தொழுதிடுவோம்

பாடிப் பணிந்திடுவோம் பரமேஸ்வரி வரதேவி!


பூரதாரா பூரண சக்தி மந்திரம்

பூரணமாம் பூரணமாய்ப் பூரணத்தில் பூரணித்து

பூரணத்துள் பூரணத்தால் பூரணத்துப் பூரணத்தே

பூரணத்தைப் பூரணத்தின் பூரணத்தாள் பூரணித்த

பூரணத்தாய்ப் பூரணமே பூரணியே பூரணி!


பூரம் நட்சத்திரத் திருத்துதி 

(ஆவுடையார் கோயில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணி வழிபாடு)

பூரத் திருநாராயண புவனத் திருக்கோலம்

சாரத் திருச்சேறைச் சத்தியமாத் தவத்தாரை

மூரல் முத்தவமா மெய்திருமார் பகத்தாளே

வார நாராயணீ வரமாக்கல் பெருந்துறையே.  


கிருஷ்ணார்ப்பணம்.


… சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா 

சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீதேவி பக்தாய‌ 

ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அருளுரை


நன்றி: “அக்னிசிக்‌ஷா”, “ஸ்ரீ அகஸ்திய விஜயம்


இன்று ( 11-8-2021 புதன் கிழமை ) ஆடிப்பூரம்.  

இந்த மங்களகரமான நல்லநாளில்படித்து அறிந்த விஷயங்களை 

நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்இங்கொன்றுமாக 

சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.