Wednesday, July 31, 2013

Great Protector, Motivator & Well Wisher

...

When sorrow rules your life, where can you seek solace?
When you think your life is a calamitous, sorrowful mess, where can you go for refuge?
When righteous endeavors do not bear fruit, where can you turn for help?
When you're not compensated appropriately for your work, who can get you what you rightfully deserve?
When your mental strength declines inspite of your intelligence, who can bless you with fortitude?
When your memory falters, who can help you?
When courage and bravery bid you goodbye, who can protect you?
When you just can not steel yourself to face defeat, who can cradle you?
If you want to march on the path of victory with assurance, who can give you that resolute mind?
If you want peace and love in family life, who can give it to you?
If you want to beget good children who will do good to society, who can ensure that?
If you want a life free of disease, how can you get it?
If you want to defeat the evil effects of black magic and jealousy, who can help you do that?

The answer to all these questions is Sri Sarabesvara, the Lord in His unique manifestation as the Vanquisher of evil forces everywhere. He is the Great Protector, Motivator and Well Wisher of all beings. This Lord of Fearlessness is the One who envelops us with His invincible shield of protection. He destroys negative forces and showers us with positive spiritual energy.

Pray to Him constantly if you want to stay clear off evil.


Tamil version of the 'Kavacham' :

Narasimha uggiram udaitthu vandha
Paramasivam paravaiyaai ezhundha en kóvé
Hara Hara enach cholli aanandhamaakki unnai
urattha kuralil koovi azhaippén Saaluvésaa endré
siram irandum kan moondrum kooriya mookkudané
karam naangaai enaik kaattharulum karunaakarané
param porulé Sarabesaa vaazhi vaazhiyé

Meaning

He who quelled Narasimha's wrath
Paramasivam, My Lord! You took form as a great bird
"Hara, Hara," I say and you fill me with bliss divine
Loudly will I call out for You, O Saaluvesa!
With two heads, three eyes, a sharp beak
And hands four, You protect me, O Lord of Mercy!
You are the Primordial One, the Ultimate Truth! O Sarabesa!
Hail to You! Hail to You!


Sarabeswara Gayatri mantra:

Om Saaluvesaaya vidhmahé
pakshi raajaaya dheemahi
thannó Sarabesvara prachodayaath

Tamil version

Om Vaa Vaa Aiyaa
Varam Tharum Meiyaa
Varam Tharum Ullam Alitthu
Thiram Pada Vaazha Vaippaayey


- Courtesy: Sathguru Sri.La.Sri Venkatarama Siddhar

.....

உண்மையான பாதுகாப்பு கவசம்

1. நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும் அந்த நேரத்திலும்.

2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும் அவர்களும்

3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள் அவர்களும்

4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் .

5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களும்.

6.வயதுக்கு வந்த பெண்ணை படிப்பதற்கு கல்லூரிக்கு(ஹாஸ்டல் ) அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் தகப்பனாரும்

7.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும்


ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "


இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.

அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்.

கோடான கோடி நன்றிகள்: http://www.agasthiar.org/frame3.htm








அகத்தீசர்

...

அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமசெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார்.

அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறியமுடியாதவொரு இரகசியம் ஆகும்.

நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.

...

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.

- மகான் காகபுஜண்டர்

...

அகத்தீசா என்றால் அனைத்தும் பெறலாம்

அன்பு பொருந்திய வாழ்விற்கு அகத்தீசா என்று கூறுங்கள்.
ஆக்கம் பெற்று வாழ அகத்தீசா என்று கூறுங்கள்.
இல்லறம் சிறக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஈகை குணம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
உண்மைப் பொருள் அறிய அகத்தீசா என்று கூறுங்கள்.
ஊக்கம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
எண்ணம் சித்திக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஏற்றம் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஐயம் நீங்கிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஒண்பொருள் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஓங்காரம் கண்டிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஔடதம் அறிந்திட அகத்தீசா என்று கூறுங்கள்.

ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!

ஓம் சிவாய அகத்தீசாய நம:

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

...

குருவணக்கம்

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு.

குருவடி சரணம், திருவடி சரணம். குருவருளே திருவருள்.


..... இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.






கண் திரிஸ்டி விநாயகர்

...

ஓம் ஸ்வாஹா
ஓம் பூ ஸ்வாஹா
ஓம் புவஹ ஸ்வாஹா

ஓம் ஸுவஹா ஸ்வாஹா
ஓம் பூர் புவஹஸ்வாஹ் ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

ஓம் கம் கணபதயே நமஹா அம்ருத பிதான மசி

ऊँ गं गणपतये नम: ‘’Aum Gam Ganapatye Namah’’

...

ॐ तत्पुरुषाय विद्महे
वक्रतुण्डाय धीमहि ।
तन्नो दन्ती प्रचोदयात् ॥

ஓம் தத் புருஷாய வித்மஹி
வக்கிர துண்டாய திமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

Om Tatpurussaaya Vidmahe
Vakratunddaaya Dhiimahi |
Tanno Dantii Pracodayaat ||

...

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

Shukla-Ambara-Dharam Vissnnum Shashi-Varnnam Catur-Bhujam |
Prasanna-Vadanam Dhyaayet Sarva-Vighno[a-U]pashaantaye ||

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தையே

...

மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள்.

...

நல்வழி

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

பொருள்: பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு இவை நான்கையும் கலந்து (பாயஸம்!) நான் உனக்கு தருவேன், உயிர்களுக்கு நல்லது செய்யும், உயர்ந்த யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தா.

...

திருமூலரின் திருமந்திரம் பாடல் ..

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!

விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே
உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்.

...

மணிமாலை

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

- கபிலதேவ நாயனார்

...

திகடச் சக்கர செம்முக மைந்துளான்
சகட சக்கர தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுரை
விகட சக்கர மெய்ப்பதம் போற்றுவோம்.

-தமிழ்மறை



















வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம்

...

அதி சூட்சும முருக மந்திரம்

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின் இவ்வரிகளை உண்மையான பக்தியோடு தொடர்ந்து பாடினால் முருகனின் அருட் காட்சி கிட்டும்.

...

வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம்

ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

(இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபன செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது)

...

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம்

"ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா"

இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!
தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.

...

( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். )







நின்ற திருத்தாண்டகம்

...

சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், " நின்ற திருத்தாண்டகம் " எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - (ஆறாம் திருமுறை)

6.94 - நின்ற திருத்தாண்டகம்


திருச்சிற்றம்பலம்

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.094.1

பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.094.2

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.094.3

மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.


காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.4

காற்றாகியும், கரியமுகிலாகியும், இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவனாகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.094.5

தீயின் வெம்மையாகியும், நீரின் தண்மையாகியும், நிலத்தின் திண்மையாகியும், திசைகள் ஆகியும், அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும், தாயாகியும், தந்தையாகியும், சார்தற்குரிய பற்றுக்கோடாகியும், நாண் மீனாகியும், ஞாயிறாகியும், குளிர் மதியமாகியும், காயாகியும், பழங்கள் ஆகியும், பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும், அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.6

ஆறு அங்கங்கள் ஆகியும், ஆதியாய வேதங்கள் ஆகியும், அரிய மந்திரங்கள் ஆகியும், ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும், புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும், வெள்ளிய மதி ஆகியும், உலகிற்கு முதல் ஆகியும், வினையாகியும், கங்கை, காவிரி, கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும், கடலாகியும், மலையாகியும், கழி ஆகியும், எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கௌதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.094.7

மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும். 'யாது நிகழினும் நிகழ்க' எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிறமுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாதி தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.094.8

பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும், வேள்வித்தீயும், அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும், நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும், நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும், பூவும், அப்பூவிற்குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும், நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும், தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும், செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.094.9

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னையடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும் ஆகியும், புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக்குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப்பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்.


மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.10

மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும், ஆகியும், எட்டுத்திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவலோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்குரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

திருச்சிற்றம்பலம்


Courtesy: http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_6_94.html





சோமசூக்த பிரதட்சணம்



சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.

முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து
அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து,
சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து,
சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,
அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து,
அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று,
பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து
மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து,
சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து
பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும்.
இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.

...

நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த நமகம் பகுதி.”ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ” - रु॒द्राया॑तता॒विने॒ क्षेत्रा॑णां॒ पत॑ये॒ नमो॒ नमः॑ - (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்).
நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.

...

வள்ளலார் ...

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.
அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே.

...

... யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.










தாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்

...

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகம்.

(முதல் திருமுறை) ... திருச்சிராப்பள்ளி ... 1.98.01 to 1.98.11


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே. 1

கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத்து ஈருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. 2

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே. 3

துறைமல்குசாரற் சுனைமல்கு நிலத் திடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவன் எங்கள் பெருமானே. 4

கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே. 5

வெய்யதண் சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன் சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே. 6

வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 7

மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன்தன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவல வேதம் சொலவலகீதம் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே. 8

அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே. 9

நாணாது உடைநீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகலுண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 10

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடு மன்னி வாழ்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

... http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_098.htm


Tuesday, July 30, 2013

ஸ்ரீ மஹா பைரவர்


ஸ்ரீ மஹா பைரவர் மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள். ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம். சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர்.

ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள். தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம்.

மணி,மந்திரம்,ஔஸதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள். சித்தர்கள் பாதையில் இந்த மணி,மந்திரம்,ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி முழுமைபெறாத. அனுகிரகம் வேண்டும்.

ஒட்டக்கூத்தர் புலவரால் இயற்றப்பட்ட ஒரு மிக மிக பழமையான பாடல் ...

உரக கங்கணம் தருவன பணமணி
உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய
கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வருமொரு
கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்.

ஸ்ரீ மஹா பைரவர் தன் கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு கக்கும் மாணிக்கக் கற்களால் உலகம் முழுவதும் துயிலெழ வெயிலெழ. உடை தவிர்ந்த தன் இடுப்பினில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்ப, கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசையும்,சிவந்த சிலம்பின் ஒலியும் சேர்ந்து கலன்,கலன் என்னும் இனிய நாதம் உண்டாகுமாம். இப்படி காட்சி தரும் கரிய ஆடை அணிந்த பைரவர் பாதம் பணிந்து வணங்குவோம்.

...


ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:

துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

மாதங்கள் ... துவாதச ஆதித்தியர்கள் ... ஆதித்தியர்களின் பிராண தேவதை

சித்திரை ... அம்சுமான் ... சண்ட பைரவர்
வைகாசி ... தாதா ... ருரு பைரவர்
ஆனி ... ஸவிதா ... உன்மத்த பைரவர்
ஆடி ... அரியமான் ... கபால பைரவர்
ஆவணி ... விஸ்வான் ... ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி ... பகன் ... வடுக பைரவர்
ஐப்பசி ... பர்ஜன்யன் ... ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை ... துவஷ்டா ... பீஷண பைரவர்
மார்கழி ... மித்திரன் ... அசிதாங்க பைரவர்
தை ...nவிஷ்ணு ... குரோதன பைரவர்
மாசி ... வருணன் ... ஸம்ஹார பைரவர்
பங்குனி ... பூஷா .... சட்டநாத பைரவர்

...

இழந்த பொருட்களை மீண்டும் பெற:

பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

குழந்தைச் செல்வம் பெற:

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:

ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

...

( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )




பரமேசன் உன் மஞ்சம்

...


ஆர் அமுது இன் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவு ஊடே
பார கடம்பு அடர் கானில் அருங்கொடை
பாய் மணி மண்டப வீடு ஊடே
கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம், ஒர்
கூர் பரி அங்கம் எனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர் அருந்துவர் பூமாதே.

...

சிவகோணம் முன்பகர்வது ஒரு நாலு சக்தி நெறி
செறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்
நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு
நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
இவரா நிரைந்த தளம் இருநாலும் எட்டுஇணையும்
ஏழிலாய வட்ட மொடு சதுரமாய்
உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்
உமை பாதம் உற்ற சிறு வரைகளே.





திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்




காப்பு

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன்நால்
வாயைக் கரன்றாள் வழுத்துவாம்-நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.

நூல்-ஆசிரிய விருத்தம்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்:
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதசீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ணகுண்டலமு மதிமுகமண்டலம் நுதற்
கத்தூரிப் பொட்டு மிட்டுக்
கரணிந்திடு விழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் கனி தரமும்
குமிழனைய நாசியும் முத்தநிகர் தந்தமும்
கோடுசோடான களமும்
வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும்
வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினையே மாற்றுவாயே
ஆரமணி வானி லுறை தாரகைகள் போலநிறை
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள்
வரம்பெற்ற பேர்களன்றோ?
செகமுழுமீ வொற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா தனத்தி லுற்றச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு
திகிரியுல காண்டு பின்பு
புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகி நிரை
புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப்புகழ விண்ணில்
புலோமிசை யொடுஞ்சு கிப்பர்:
அகரமுதலாகி வளர் ஆனந்த ரூபியே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

மறிகடல்கள் ஏழையுந்திகிரி இரு நான்கையும்
மாதிறல் கரியெட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும்
மாகூர்மம் ஆனதையு மோர்
பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்
பூமகளை யுந்திகிரி மாயவனை யும் அரையுற்
புலியாடை <உடையானையும்
முறைமுறைகளாயீன்ற முதியவர்களாய்ப் பழைமை
முறைகள் தெரியாத நின்னை
மூவுலகிலுள்ளவர்கள் வாலையென்று அறியாமல்
மொழிகின்ற தேது சொல்வாய்:
அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

வாடாமல் உ<யிரெனும் பயிர்தழைத் தோங்கிவர
அருள்மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர்சிற் றெறும்புமுதல் குஞ்சரக்
கூட்டமுதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக்
குறையாமலே கொடுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலி ! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும்
நீலியென்(று) ஓது வாரோ ?
ஆடாத நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

பல்குஞ் சரந்தொட்டெறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங்கல் விடைப்
பட்டதே ரைக்குகும் அன்றுற்பவித் திருகருப்
பையுறு சிவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கும் மியாவர்க்கும் அவரவர்
மனச்சலிப் பில்லாமலே
நல்குந் தொழிற்பெருமை உண்டோ யிருந்துமிகு
நவநிதி உனக்கிருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனானால் அந்
நகைப்புனக் கே அல்லவோ ?
அல்கலந்தும்பர் நாடளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

நீடுலகங்களுக்(கு) ஆதரவாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத் நிரண்டறம் வளர்க்கின்ற
நீமனை வியாய் இருந்தும்
வீடுவீடுகடோறும் ஓடிப் புகுந்துகால்
வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று)
உன்மத்த னாகி அம்மா !
உன்கணவன் எங்கெங்கும் ஜயம்புகுந்தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும்
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

ஞானத் தழைத்துன் சொரூபத்தை அரிகின்ற
நல்லோர் இடத்தினிற்போய்
நடுவினிலிருந்து வந்தடிமையும் பூண்டவர்
நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம்
இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்து நெஞ்(சு)
இருளற விளக்கேற்றியே
ஆனந்த மானவிழி அன்னமே ! உன்னை என்
அகத்தாமரைப் போதிலே
வைத்துவேறேகவையற்று மேலுற்றபர
வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்:
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற
தாயா கினாலெ னக்குத்
தாயல்லவோ ? யான் உன் மைந்தனன்றோ ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலைசுரந்தொழுகு பாலூட்டி என் முகத்தை உன்
முன்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக் குகந்து கொண்டிளநிலா
முறுவல் இன்புற்றரு கில்யான்
குலவிளையாடல் கொண்டருண் மழைபொழிந்(து) அங்கை
கொட்டி வாவென்(று) அழைத்துக்
குஞ்சரமுகன் கந்தனுக்(கு) இளையன் என்றெனைக்
கூறினால் ஈனம் உண்டோ ?
அலைகடலிலே தான்று மாறாத அமுதமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன்:
கண்போதினாலுன் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்:
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்:
மோசமே போய்உழன்றேல்:
மைக்கடா மீதேறியே
மாகோர காலன் வரும்போது தமியேன்
மனங்கலங்கித்தி யங்கும்
அப்போது வந்துன் அருட்போது தந்தருள்
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி சக்தி மஹா சக்தி பராசக்தி ஓம்







சித்தர்களின் மூல மந்திரங்க்ள் & உத்திகள்



சித்தர்களின் மூல மந்திரங்க்ள்

நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"


அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”


திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"


போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"


கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"


தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"


சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"


புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"


பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"


காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"


இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"


சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"


அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"


கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"


சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"


உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"


குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"


கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

...

சித்தர்களின் உத்திகள் ஆறு ...

1) உயிரின் - உடலின் தன்மைகளையும் இயல்புகளையும் அனுபவ மொழிகளின் மூலம் உருவாக உத்தி மூலமும் எடுத்து சொல்வது.

2) வரைமுறைகளைச் சொல்லி, கதைகளைச் சொல்லி, அதன் உருவக தத்துவங்களைப் பூட்டை திறப்பது போல் திறந்து காட்டுவது. பரம்பொருளின் பேராற்றல், அதனோடு அண்டமும்,பிண்டமும் எப்படி இணைந்திருக்கின்றன என்றும், இயற்கை இயல்புகளை இறையுணர்வு கலந்து விளக்கும் உத்தி.

3) மனம், உயிர் பற்றி விளக்கி மனிதம், விலங்கு வேறுபாடுகள் கூறி, உள்ளத்துக்குள்ளே நிகழ்த்த வேண்டிய தவ ஒழுக்கங்களை பற்பல யோக விளக்கங்கள் மூலம் கூறும் உத்தி.

4) மந்திரங்களைப் பற்றியது. மந்திரங்களுக்குரிய சொற்களும், ஒலிகளும் பற்றி எத்தனையோ நூறாண்டுகளில் பயின்றுபயின்று சித்தர்கள் கண்டுபிடித்த ரகசியங்களாகும். மந்திரங்களை எப்படி யந்திரங்களில் அடைப்பது என்ற உத்தி. ஒலி மாறுபாடுகளால் மனித மனத்திற்கு எப்படி நன்மை, தீமைகள் மற்றும் சொற்கள் மூலம் ஒலிகளை இயக்கி தியான முறைகளைக் கூறி மனித மனத்தை உயர்த்தி மன ஆற்றல்களை உயிர்பிப்பது.

5) சரியை - தொண்டு நெறி, தாச மார்க்கம்; கிரியை - மகன் தந்தையினை வழிபடுவது சத்புத்திர மார்க்கம்; யோகம் - சக மார்க்கம் தோழமை இறைவனை நண்பனாக கருதுதல்; ஞானம் - இம்மூன்றையும் கடந்த பேரின்பச் செவ்வழி.

6) ஆன்ம நிலை. சித்தர்களின் ரகஸ்யம். அன்மாக்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப (ஜீவாத்மா) இறைவனே ஆசிரியனாக வந்து அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்கிறான்.


( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். )



Sunday, July 28, 2013

96 வகை சிவலிங்கங்கள்

...

ॐ नमः शिवाय, शिवाय नमः ॐ

"ஓம் நம சிவாய" என்று நெக்குருகி பிரார்த்திக்கும்போது கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான்.

ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்?
லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.
ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் 'யார் பெரியவர்' என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார்.

அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம்
தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
தெய்வீக லிங்கம்
தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
அர்ஷ லிங்கம்
ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
மனுஷ்ய லிங்கம்
சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம்.

இந்த மனுஷ்ய லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று 'மகுடாகமம்' என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் :
தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் :
வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் :
இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம்.

ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது.

பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது.

இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன.

சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் :
சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.
2. புஷ்ப லிங்கம் :
பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.
3. கோசாக்ரு லிங்கம் :
பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.
4. வாலுக லிங்கம் :
சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் :
இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.
6. சீதாகண்ட லிங்கம் :
இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.
7. லவண லிங்கம் :
உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.
8. திலாப்சிஷ்த லிங்கம் :
எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.
9. பாம்ச லிங்கம் :
சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.
10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் :
வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.
11. வன்சங்குர லிங்கம் :
மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.
12. பிஷ்டா லிங்கம் :
அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.
13. ததிதுக்த லிங்கம் :
பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.
14. தான்ய லிங்கம் :
நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15. பழ லிங்கம் :
பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
16. தாத்ரி லிங்கம் :
நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.
17. நவநீத லிங்கம் :
வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.
18. கரிக லிங்கம் :
விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.
19. கற்பூர லிங்கம் :
கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.
20. ஆயஸ்காந்த லிங்கம் :
காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.
21. மவுகித்க லிங்கம் :
முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.
22. ஸ்வர்ண லிங்கம் :
தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
23. ரஜத லிங்கம் :
வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
24. பித்தாலா லிங்கம் :
பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.
25. திராபு லிங்கம் :
தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.
26. ஆயச லிங்கம் :
கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.
27. சீசா லிங்கம் :
வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.
28. அஷ்டதாது லிங்கம் :
எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.
29. அஷ்ட லோக லிங்கம் :
எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.
30. வைடூர்ய லிங்கம் :
நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.
31. ஸ்படிக லிங்கம் :
ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.
32. பாதரச லிங்கம் :
பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை.

இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!

... இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. பதிவுகள் படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


சர்வமும் சிவமயம், சகலமும் சிவனருள். நடப்பதெல்லாம் ஈசன் செயல்.
எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் பரமேஸ்வரன் இதில் இல்லாமல் போவானா?
- என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்










Friday, July 26, 2013

அருள்மிகு விநாயகர்


விநாயகர் 8 போற்றிகள்

1. ஓம் அகரமென நிற்பாய் போற்றி
2. ஓம் அருகு சூடிய அமலா போற்றி
3. ஓம் ஆனை முகத்தனே போற்றி
4. ஓம் உண்மையர் உள்ளொளியே போற்றி
5. ஓம் ஐந்து கரத்தனே போற்றி
6. ஓம் கற்பக விநாயகா போற்றி
7. ஓம் சங்கத்தமிழ் தருவாய் போற்றி
8. ஓம் வைத்த மாநிதியே போற்றி

காயத்திரி மந்திரம்

ஓம் ஏக தந்தாய வித்மஹே!
வக்ர துண்டாய தீ மஹி!
தன்னோ தந்து ப்ரசோதயாத்!

கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத சர்வ ஜெனம்மே
வசம் ஆன ய ஸ்வாஹா!

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே.

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

...

விநாயகரின் வடிவங்கள்

1. யோக விநாயகர்
2. பால விநாயகர்
3. பக்தி விநாயகர்
4. சக்தி விநாயகர்
5. சித்தி விநாயகர்
6. வீர விநாயகர்
7. விக்ன விநாயகர்
8. வெற்றி விநாயகர்
9. வர விநாயகர்
10. உச்சிஷ்ட விநாயகர்
11. உத்தண்ட விநாயகர்
12. ஊர்த்துவ விநாயகர்
13. ஏரம்ப விநாயகர்
14. ஏகாட்சர விநாயகர்
15. ஏக தந்த விநாயகர்
16. துவி முக விநாயகர்
17. மும்முக விநாயகர்
18. துவிஜ விநாயகர்
19. துர்கா விநாயகர்
20. துண்டி விநாயகர்
21. தருண விநாயகர்
22. இரணமோசன விநாயகர்
23. லட்சுமி விநாயகர்
24. சிங்க விநாயகர்
25. சங்கடஹுர விநாயகர்
26. சுப்ர விநாயகர்
27. சுப்ர பிரசாத விநாயகர்
28. ஹுரித்திரா விநாயகர்
29. திரியாட் சர விநாயகர்
30. சிருஷ்டி விநாயகர்
31. நிருத்த விநாயகர்
32. மகா விநாயகர்


Courtesy : ஸ்ரீ நடராஜ முக்குருணிப் பிள்ளையார்










Thursday, July 25, 2013

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

...

காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்

மூலமந்திரம்

ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய லோகேஸ்வராய
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!

...

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

...

பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.

பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

தை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்றும், சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் பைரவக் கடவுளுக்கு உகந்த நாளாகும்.


..... இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. பதிவுகள் படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.





சனிப்பிரதோஷம்

...
பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.எனவே,சனிப்பிரதோஷம் மிகவும் புண்ணியமான நாள் ஆகும். சிவனை வழிபடுவோருக்கு பாவங்களை விரைவாக அழிப்பதற்கு உகந்த நாளாகும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.எனவே,இந்த ஒன்றரை மணி நேரமும் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை 4 மணிக்கே சென்றுவிடுவோம்.மாலை 6 மணி ஆகும் வரையிலும் சிவ மந்திரங்களை ஜபித்துக்கொண்டே இருப்போம்;

ஒரு முறை "ஓம் அண்ணாமலையே போற்றி" என ஜபித்தால் 3,00,000 முறை 'ஓம் நமச்சிவாய நம' என்று ஜபித்ததற்குச் சமம் என்று அருணாச்சலபுராணத்தில் சிவபெருமானே தெரிவிக்கிறார்.அதை நாம் ஜபிக்கலாம்.

"ஓம் ஆம் ஹவும் சவும்" என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;

அடுத்தபடியாக,ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் அமிர்த நேரமான மாலை 5.30 முதல் 6.00 மணிவரையிலும் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து,(மஞ்சள் நிற துண்டு எனில் மிகவும் ஏற்றது)அதில் நந்திபகவானை நோக்கி அமர்ந்து,ஜபித்துக்கொண்டே இருப்போம்.

ஒரு மந்திரத்தை வாயால் பேசுவது போல் ஒரு முறை சொன்னால்,ஒரு தடவை ஜபித்ததற்குச் சமமாகும்.

மனதுக்குள் உதடு அசையாமல் சொன்னால்,அதன்பலன் பல மடங்கு ஆகும்.

மனதுக்குள் உதடு அசையாமல்,வீட்டில்,அலுவலகத்தில் ஒரு முறை சொன்னால்,பத்துமுறை ஜபித்தமைக்குச் சமமாகும்.

கருங்கல்லால் கட்டப்பட்ட(பழமையான) கோவிலுக்குள் அமர்ந்து மனதுக்குள் ஒரு முறை சொன்னால்,ஆயிரம் முறை ஜபித்ததற்குச் சமமாகும்.

மலைமீதிருக்கும் கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,ஒரு கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.

கடலோரக்கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,இரண்டு கோடி தடவை ஜபித்ததற்குச் சமமான பலன் கிடைக்கும்.இவையெல்லாம் சாதாரண நாட்களில் கிடைக்கும் பலனாகும்.

சனிப்பிரதோஷத்தன்று,இவ்வாறு பழமையான கோவில்களில் மனதுக்குள் ஒன்றரை மணி நேரம் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தால்,மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் நூறு கோடி மடங்காக ஜபித்த பலன்கள் கிடைக்கும் என மந்திர ராஜ பதப்பிரயோகம் என்ற ஆன்மீகநூல் தெரிவிக்கிறது.

ஆக,கலிகாலத்தில் இறை நாம ஜபம் மட்டுமே நமது பாவங்களையும்,நமது முற்பிறவி மற்றும் முன்னோர்களின் பாவங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.

..... ஆன்மீகக்கடலின் அலைகள் : ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர்


ஓம் அண்ணாமலைக்கு அரோஹரா! அண்ணாமலையானுக்கு அரோகரா!

ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!

ॐ नमः शिवाय शिवाय नमः ॐ

। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।।

ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய.

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்

சர்வமும் சிவமயம், சகலமும் சிவனருள். நடப்பதெல்லாம் ஈசன் செயல்.

எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் பரமேஸ்வரன் இதில் இல்லாமல் போவானா?

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.